Thursday, October 11, 2007

இராணுவ மயமாகும் இலங்கை.



பாதுகாப்பு செலவினத்தை 20 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை அரசு உத்தேசம்

இலங்கை அரசாங்கம் தனது அடுத்த வருடத்துக்கான பாதுகாப்பு செலவினங்களை 20 வீதத்தால் அதிகரிக்க உத்தேசித்துள்ளது.

அடுத்த வருடத்துக்கான உத்தேச வரவு செலவுத் திட்டத்தில், பாதுகாப்புக்கான செலவினங்கள் ஐந்தில் ஒரு பகுதியாக, அதாவது, 166.44 பில்லியன் ரூபாய்களாக இருக்கும் என்று இன்று அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கூறுகிறது.

அடுத்த ஆண்டுக்கான இலங்கை அரசாங்கத்தின் மொத்த செலவினமாக 925 பில்லியன் ரூபாய்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன.

அடுத்த வருடத்துக்கான அரசாங்கத்தின் உத்தேச வருமான நிதிச் சட்டமூலம், அடுத்த மாதம் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

செய்தி: பிபிசி.தமிழ்

பதிந்தது <-குருவிகள்-> at 4:55 AM