Friday, October 12, 2007

அமைதிக்கான நோபல் பரிசு



அல்கோர்

அமைதிக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர், அல்கோர் அவர்களுக்கும் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவுக்கும் வழங்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடுவதற்காக இவர்களால் போடப்பட்ட அத்திவாரத்துக்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதாக, நோர்வேயின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

புவி வெப்பமடைதல் தொடர்பில் அல்கோர் அவர்கள் தயாரித்த விவரணப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த விவகாரத்தில் உலக மட்டத்திலான புரிதலுக்காக மிகவும் அதிகமாகப் பங்காற்றியவர் இவரே என்றும் அந்த நோர்வே நாட்டுக் குழு கூறியுள்ளது.

இந்த விருதைப் பகிர்ந்து கொள்வதில் தான் பெருமையடைவதாக அல்கோர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பால் தாம் மிகுந்த பெருமிதம் கொள்வதாக ஐ.நாவின் காலநிலை மாற்றம் குறித்த குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

பிபிசி தமிழ்.கொம்

பதிந்தது <-குருவிகள்-> at 11:04 PM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

காலம் காலமாக,தாடிக்காரன் காட்டிய வழியில் உலக சமாதானத்துக்காக பாடுபட்டு பணம் சேர்த்த மஞ்ச துண்டுக்கு நோபல் பரிசு கொடுக்காமல் வஞ்சனை செய்த நோபல் பார்ப்பன கமிட்டிக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க கருப்பு சட்டை கும்பல் முன்வர வேண்டும்.

Sat Oct 13, 01:02:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க