Sunday, October 14, 2007

இலங்கை மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா உயர்ஸ்தானிகர் வேதனை



ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர்

இலங்கைக்கு தற்போது விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் அவர்கள், இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக சட்டத்தினை அமுல்படுத்துவதில் இருக்கின்ற பலவீனமும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பதும் வேதனைக்குரிய விடயம் என்று கூறியிருக்கிறார்.

இலங்கைக்கு ஒருவாரகால விஜயத்தினை மேற்கொண்டுள்ள லூயிஸ் ஆர்பரும், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் இடம் முகாமைத்துவ அமைச்சருமான மஹிந்த சமரசிங்கவும் இணைந்து கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதன் போது நாட்டில் மனித உரிமை மீறல்கள் விசாரணைகள் தொடர்பில் இருவரும் மாறுப்பட்ட தகவல்களைத் தந்தனர்.

இந்தச் சந்திப்பில் இலங்கையில் ஐ.நாவின் மனித உரிமை கண்காணிப்பு போன்ற ஒரு அமைப்பின் அவசியமான பிரசன்னத்தை மறைமுகமாகத் தொட்டுக்காட்டிப் பேசினார் உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர்.

ஆனால் இலங்கையில் ஐ.நாவின் மனித உரிமை கண்காணிப்பு போன்ற ஒரு அமைப்பின் அவசியமான பிரசன்னத்திற்கான வேண்டுகோளை முற்றாக நிராகரித்தார் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அரசின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்திய மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க.

bbc.tamil

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 12:14 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க