Thursday, October 18, 2007

சொன்னாலும் சொல்லாட்டிலும் இது தாண்டா இப்ப "காதல்"



நியூயோர்க் ஜம்பரில்
லண்டன் ஸ்ரைலில்
பி எஸ் 3 வாங்க
பிளாசா போனேன்
பிற்சாவோடு நிற்கையில்
லப்டப் அடக்கமாய்
நீ இருந்தாய்.
திறி டி விசனில்
உன்னைக் காண
ஐ ஆர் கொண்டு
ஸ்கான் செய்தேன்
எக்ஸ் பொக்ஸ் கேம் போல
திறில்லாய் இருந்தாய்..!
புளூருத் சிக்னலாய்
என்னைத் தந்தேன்
மொபைல் போன் கமராவாய்
நீ என்னைப் பார்த்தாய்.
ஐபொட் ஒன்று வாங்கியே
அருகில் வந்தேன்
எம்பி 4இல் இசைதேடி
எம்பி 3 இல் இசைந்தாய் என்னோடு.
ஜி பி எஸ் நவிகேற்றராய்
நீ வந்ததால்
கை வேயில் ரவுண்டெபவுட் தேடி
அலையும் நிலை களைந்தேன்.
டிஜிற்றல் கமராவாய்
நீ அருகில்
காணும் காட்சிகளோ
பல மெகா பிக்சல் அளவுகளில்.

என்ன மாயமோ
நானறியேன்
சடின்லி..
பென்ரியம் 4
காட்டிஸ்க் போல
ஸ்ரக்கானாய்...
டீபக் செய்து
சீர் செய்ய
ஸ்ரெயின்னர் போல
சூடானாய்.
கோலா ஒன்று வாங்கி
ஸ்ரோவால் தந்தேன்
லிப்ஸ்டிக் கரையும் என்று,
கன்னத்தில் தந்தாய்...
யூரா ஸ்ரார் வேகத்தில்
காட் அடிக்க..
வின்ரர் ஜக்கட் போல
இதமானாய்.

சென்றல் லண்டனில்
கை பார்க் கோர்னரில்
பெஞ்சில் இருக்க
ஈசி ஜெட் போகும்
சத்தத்தில்
மெய்மறந்து கேட்டாய்..
நியீசிலண்ட் ரூர் போவமா என்று,
சுப்பர் கொம்பியூட்டர்
புறசெசர் வேகத்தில்
கணக்குப் போட்டே
கிரடிட் ஸ்கோர்
சரி பார்த்தே..
கூகிளில் தேடி
வேர்ஜினில் ரிக்கற் பதிவு செய்தேன்.
கில்ரன் கொட்டலில்
லக்சறி றூம்
ஒன்லைனில் புக் செய்தேன்.
சற்றிங் மூலம்
நாளும் சொல்லி
பென்சில் எயார்போட் போனோம்.
பட்....
ஜெள்ளுடன் ஒருத்தன்
சிமாட்டா வர
கொலிபூட் ஸ்ரார் என்று
செல்போன் போலச்
சிரித்தவளாய்
லிப் கிஸ் அடித்தபடி
கேம்போயாய் அடைக்கலமானாய்
அவன் கையில்..!

மைண்ட்..
இந்தியன்
கிரிக்கெட் ஸ்கோர் போல
அப்செட் ஆக
பக்கத்தி பாரில்
ஜக்டானியல் ஒரு பெக் தள்ளிட்டு
ஜோன் பிளேயர
ஊதியபடி..
பென்ஸை முறுக்கியவன்
டெல்ரா ரொக்கட் வேகத்தில்
லக்சறி பிளட்டில்
என் றூமில்
சோபாவை
கட்டியணைத்தபடி
பி எஸ் 3 யோடு
ஐக்கியமானேன்..!


சுட்டது யாழ் இணையத்தில்..

பதிந்தது <-குருவிகள்-> at 11:50 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க