Thursday, October 11, 2007

சொட்டும் விழி நீர் சொல்லும் கீதம் கேளடி..!



காத்திருந்த கணங்களுக்காய்
அழவில்லை
அக மகிழ்ந்தேன்..
அன்னைக்கு நிகர்த்தவளாய்
அன்பினில்
நீ அகத்தினில் இருப்பதால்..!
நீயே அறியாத
உறவடி அது எனக்கு..!

நீர் நிலையில்
நீச்சலடிக்கவில்லை...
கண்மணிகள் கொண்டு
உன் கூந்தல் நதியில்
நீச்சலடித்தேன்...
நீயே அறியாத
நீச்சலடி அது எனக்கு...!

நர்த்தனம் என்பதை
மேடையில் தேடினேன்
உன் வெட்டும் இமைகளின்
நர்த்தனம் காணும் வரை..!
நீயே அறியாத
நடனமடி அது எனக்கு...!

டாக்டர் பட்டம்
வாங்கவில்லை
உன் விழிகளில் படித்தேன்
உன் உடல்நிலை...!
நீயே அறியாத
தகுதியடி அது எனக்கு..!

கூந்தலில் அல்ல
உன்னில் உணர்ந்தேன்
ஆத்ம வாசம்
நீயே அறியாத
வாசமடி அது எனக்கு..!

தேனினும் இனியது
உண்டோ உலகினில்
எண்ணியதுண்டு...!
கண்டேன்
உன் எச்சில் பண்டத்தை
நானுண்ட போது..
நீயே அறியாத
சுவையடி அது எனக்கு...!

தாயை விஞ்சி
அன்னமிடக் கையும் உண்டோ..?!
கண்டேன்
உன் கரங்கள் அள்ளிய
அமுதுண்ட போது..!
நீயே அறியாத
அதிசயம் அது எனக்கு..!

அன்னை
அடிப்பது வலிக்கும்
அழுவது கண்ணாகும்..
அடித்தாலும் வலித்தாலும்
ஆனந்தம்
உன் கரங்கள்
தந்த குட்டுகள்..!
நீயே அறியாத
ஆனந்தமடி அது எனக்கு..!

கனவுகள் எனக்கு
இனிமையானதில்லை..!
கனவே இனித்தது
உன்னோடு உறவாடிய
நினைவுகளை அது சுமந்த போது..!
நீயே அறியாத
உண்மையடி அது எனக்கு..!

நானாய் உணவிட்டு
மகிழ்ந்தது கொஞ்சம்...
உனக்காய் உணவு சுமந்து
மகிழ்ந்தது அதிகம்..!
நீயே அறியாத
மகிழ்ச்சியடி அது எனக்கு..!

கடன் வாங்குவதலை
வெறுத்தவன்
உன்னிடம் கடனாளியாய்
ஆன போது
பெருமை உணர்ந்தேன்
நீயே அறியாத
நிலையடி அது எனக்கு..!

கட்டளைக்குப் பணிவதை
அருவருத்தவன்
உன் கட்டளைக்குள்
கட்டுண்டேன்..!
நீயே அறியாத
மாற்றமடி அது எனக்கு..!

குனிந்து நடந்தவன்
இன்று நிமிர்ந்து
நடக்கின்றேன்
நேற்றுக் கண்டும் இன்று..
காணாத உன் முகத்தை
தேடியடி...
நீயே அறியாத
என்னிலையடி அது எனக்கு..!

நீளம் என்பற்கு எல்லை
முடிவிலி..!
கவிதைக்கே
முடிவிலியைக் காட்டியவள்
நீயடி.!
நீயே அறியாத
கணக்கடி அது எனக்கு..!

உணர்வுகளால்
குறுகி நின்றவன்
இன்று..
ஆணாகி
நீ தந்த உணர்வுகளால்
வாழ்கிறேன்...!
நீயே அறியாத
வாழ்வடி அது எனக்கு...!

வாழ்ந்து அறியாதவன்
உன்னோடு வாழ
வழி தேடுறேன்..
என் தேடல் தொடரும்
உயிர் உள்ளவரை
உன் நினைவுகள் தாங்கி..!
நீயே அறியாத
உறுதியடி நீ எனக்கு..!


மீள்பதிப்பு: பிரதான மூலம் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 3:25 PM

5 மறுமொழி:

Blogger நளாயினி செப்பியவை...

காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால் இளைஞர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என சும்மாவா சொன்னார்கள். நல்ல வித்தியாசமான கவிதை

Thu Oct 11, 05:00:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

இப்படிச் சொல்லிச் சொல்லியே எத்தனை பேரின்ர வாழ்க்கையை கவுத்திட்டாங்க..! இன்னும் நின்றபாடா இல்ல.

அக்கா பிசி இல்லப் போல.. வலைப்பூவில மிணக்கடுறியள்.

Thu Oct 11, 05:17:00 PM GMT+1  
Blogger நளாயினி செப்பியவை...

ம்.. புதன் வியாழன் லீவுநாள்.

அது சரி நீங்களா கவுளவேண்டியது பிறகு கவுத்திட்டாங்களென கதைவேறா. இந்த குசும்புதானே வேண்டாம் எண்டிறது. சொந்த புத்தியே கிடையாதா.

Thu Oct 11, 06:12:00 PM GMT+1  
Blogger நளாயினி செப்பியவை...

அழகிய ஓவியத்திற்கு நிகர்த்த படம். எங்கே சுட்டியள்.

Thu Oct 11, 06:15:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

சொந்தப் புத்திய செயலிழக்கச் செய்யுற வாய் ஜாலம் பெண்கள் கிட்ட இருக்கே.. அதை நம்பி ஏமாறிறதுதான் ஆண்கள். பாவங்கள்.

படமா.. கூகிளில தேடினன் கிடைச்சிச்சு. சுட்டிட்டன்.

நான் என் புளக்கை அப்டேட் பண்ணுறன். இன்று லீவு நமக்கு.

Thu Oct 11, 06:24:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க