Thursday, October 11, 2007

ஆணியம்.



மாதா பிதா குரு தெய்வம்
முன்னிலை இழந்தது ஆணியம்
தாய் நாடு
தன்னிலை இழந்தது ஆணியம்
கருப்பையில்லா உடல்
உயிரின் உன்னத
இயல்பு இழந்தது ஆணியம்
தாயைப் போல சேய்
அடையாளம் இழந்தது ஆணியம்
மொத்தத்தில்...
தங்கு நிலையில்
தொங்கி வாழுது ஆணியம்.

திடம் படு தோள்
திமிரிரு ஆண்மை
வீர வசனங்கள் குறைசலின்றி..
தோளின் வலு
சுமையோ தாங்க முடியாது
திணறியே போகுது
திறனிழந்த நெம்பாக
துணையிழந்த
ஆணியம்.

பூமிதனை மிதிக்காமல்
பெண்ணினந்தான் வாழ்ந்திடுமோ?
பூப்பாதம் என்ன
பூம் பஞ்சால் ஆனதுவோ
தசையும் எலும்பும்
45 முதல் 100 கிலோ....
பெண்ணே பெண்ணை மிதிக்கும்
கொடுமை காண மறுக்கும்
குருட்டு
ஆணியம்.

கங்கை
சரஸ்வதி
காவேரி
வற்றுதல் உயிர்க்கு இழப்பு
பூமிக்கு வறட்சி.
பெண்ணின் அன்பு
பெண்ணிய மமதையில்
மங்குதல் வற்றுதல்
மனிதர்க்கு அழிவு.
உண்மை உணராது
பேதமையில் ஊளையிடும்
கொல்லை நரிகளாய்
இன்னும்
ஆணியம்.

அறிவுப் பசிக்கு
அறிவூட்டும் அப்பாவும்
அம்மா அடிக்கையில்
இழுத்தணைக்கும் தந்தையும்
பாசமலர்களாய்
அண்ணனும் தங்கையும்
பெண்ணியப் பார்வையில்
கொடுமைகள்.
பூம் பூம் தலையாட்ட
துணை போகும்
ஆணியம்.

தன்னிலையிழந்து
துணையவளே தூண் என்று
வாழும் கணவனும்
தானே அவளென்று
தன்னவளில்
தன்னையே அர்ப்பணித்த
காதலனும்
பெண்ணியப் பாசையில்
வேஷங்கள்.
கோலங்கள் அறிந்தும்
பெண்ணியக்
கொடுமைதனை உணராத
உணர்விலிகளாய் இன்னும்
ஆணியம்.

கருவறுக்கும் செயலும்
விபச்சாரக் களவொழுக்கமும்
கற்பென்ன நெறியா
மண்ணாங்கட்டி
ஆணுக்கெங்கே கற்பு
இல்லையே என்று
போலியாய் சாதித்து,
பெண்ணின் மிருக உணர்வுகள்
வழிந்தோட வழிவிடு....
கலாசாரம் என்று
தடைகள் ஏன் அதற்கு??!
தறிகெட்டு கூத்தடிக்க
தா சுதந்திரம்...
பெண்ணியப் பாசையில்
இவையெல்லாம் விடுதலை.
விடுதடையில்
குளிர்காயக்
காத்திருக்கும் கழுகுகளாய்
கேடு கெட்ட ஆணியம்.

சமூகத்தில்
வீட்டில்
மூலைக்கு மூலை
வன்முறைகள்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அங்கே சம பங்கு.
மனிதராய்
பெண்ணுக்கும் ஆணுக்கும்
மனித உரிமைகள் சமம்.
பாவம் உணர்விருந்தும்
அறிவிழந்த பெண்ணியம்
உண்மைகள்
உணர மறுக்கிறது.
அன்பிழந்து
புரிந்துணர்விழந்து
தாண்டவக் கோலம் போடுது
துணையாக ஊழியக் கூத்து
ஆடுது ஆணியம்.


வீரியம் பேசியே
வீணடிக்கும் காலம்
வீணாப் போகுது வாழ்க்கை
தொலைத்ததை எண்ணி
கலங்காத ஆணியம்
பெண்ணியம் என்ற
மமதைக்கு மகுடி ஊதுது.
சீறிப்பாயும் நச்சுப் பாம்பை
அடக்க நினைக்கும்
அற்ப சிந்தனை.

ஆணிற்கு ஆதிக்கம்
பெண்ணிற்கு அடிமைத்தனம்
இது காலத்தால் புனைந்த
அழகிய புனை கதை.
உயிர்க்குள் எங்கே
ஆண் என்றும் பெண்ணென்றும்
வேற்றுமை
உடலால் மட்டும் சில மாற்றங்கள்
கண்டுணர்ந்து புரிந்து கொள்வீர்.
உரிமைகள் மதித்து
உணர்வுகள் புரிந்து
வாழப் பழகுவீர்.
ஒழுக்கமும் நீதியும்
உயிர்க்கு இரு நாடிகள்.
நாடிகள் தானிழந்து
மனிதராய் வாழுதல் முடியுமோ??!
அன்பைத் தொலைத்து
ஒரு மனிதமா?
பெண்ணியமே ஆணியமே
தமிழகராதி கொண்டிராத
அற்ப பதங்களே
சிந்திக்க..ஓர் கணம்...!

பதிந்தது <-குருவிகள்-> at 5:45 PM

4 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

பென்ணியத்துக்கு போட்டியோ?

Thu Oct 11, 05:58:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

போட்டியெல்லாம் இல்லை. இரு நிலைப்பாடுகள் உள்ளது என்பதை இனங்காட்டுதல்.

Thu Oct 11, 06:19:00 PM GMT+1  
Blogger நளாயினி செப்பியவை...

இப்பிடியே புலம்பாமல் செயல்படுற வழியை பாக்கிறது.

"சிந்தனை செய்
செயல் கொள்
உன்னத வாழ்வு. "


இல்லையேல் ஆண்கள் எல்லாம் கொத்தடிமைகள் ஆக வேண்டியது தானோ..?

Thu Oct 11, 10:30:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

அக்கா இது புலம்பல் என்றால் பெண்கள் காலங்காலமா புலம்புறதை அதுதான் "பெண்ணியம்" பேசி கொண்டு தங்கள் இயலாமையை.. களையாமல் இருக்கிறதை என்னாங்கிறது..??!

Fri Oct 12, 05:52:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க