Monday, October 22, 2007

அநுராதபுரத்தில் "எல்லாளன் போர் நடவடிக்கை" வெற்றி.



தமிழீழ தேசிய தலைவரும் கரும்புலிகளும்.

வரலாற்றின் பழம் பெரும் சோழ தமிழ் மன்னனான எல்லாளன் அநுராதபுரத்தில் வைத்தே துட்டகைமுனு என்ற சிங்கள மன்னனால் தோற்கடிக்கப்பட்டான். ஆனால் இன்று எல்லாளன் வழியில் வந்த தமிழர் படையான தமிழீழ விடுதலைப் புலிகள் அநுராதபுரத்தில் மேற்கொண்ட வான் மற்றும் தரை கூட்டு எல்லாளன் அதிரடி இராணுவ நடவடிக்கையின் மூலம் சிறீலங்கா வான்படையின் அநுராதபுர தளத்தை தாக்கி 9க்கும் மேற்பட்ட சிறீலங்கா வான் படை விமானங்களை அழித்துள்ளனர்.பல சிறீலங்கா விமானப்படையினரும் உயிரிழந்துள்ளனர்.



தாக்கியழிக்கப்பட்ட உலங்குவானூர்திகளில் ஒன்று.

இந்த வெற்றிகர எல்லாளன் போர் நடவடிக்கையில் 21 கரும்புலிகள் வரை தங்கள் இன்னுயிர்களை தமிழீழ தேசத்துக்காக அர்ப்பணித்துள்ளனர்.

வித்தாகி வீழ்ந்த வீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 11:27 AM

4 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

'எல்லாளன்' என்று படைநடவடிக்கைக்குப் புலிகள் பெயர்சூட்டினார்களா என்பது இதுவரை தெரியவில்லை.
அப்படியிருந்தால் எல்லாளன் போர் நடவடிக்கை என்று தலைப்பையும் மாற்றினால் நன்று.
பிறகு 'எல்லாளன் படை' தான் அனுராதபுரத்தில் தாக்கியது என்று ஆய்வாளர்கள் கதைகட்டத் தொடங்கிவிடுவார்கள்.

Mon Oct 22, 12:11:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

//Tigers claim "Operation Ellaa'lan" success, say 8 aircrafts destroyed in Anuradhapura//

விடுதலைப்புலிகள் இன்றைய நடவடிக்கைக்கு "எல்லாளன் போர் நடவடிக்கை" என்றே பெயர் சூட்டியுள்ளனர். கரும்புலிகளின் பெரிய நடவடிக்கையாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தலைப்பில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சுட்டிக்காட்டுதலுக்கு நன்றிகள்.

Mon Oct 22, 12:27:00 PM GMT+1  
Blogger yazh செப்பியவை...

வித்தாகி வீழ்ந்த வீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Mon Oct 22, 01:48:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

ஆம் வெற்றியின் பின்னால் எம் கண்ணீரும் இருக்கிறது என்பதை.. உலகம் உணர்ந்து எமது மக்களின் தேசத்தின் விடுதலைக்கு உதவ வேண்டும்.

Mon Oct 22, 03:03:00 PM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க