Thursday, October 11, 2007

மகளிர் மட்டும்.



சிறகிருந்தும்
சித்தமிருந்தும்
சிறை கிடந்து
சிக்கற்படுகிறாள்
"சிந்தனைச் செல்வி"
சிட்டு.

பள்ளி இருந்தும்
படிக்க இருந்தும்
படிதாண்ட
பக்குவமற்று
பதறுகிறாள்
"பழங்காலப்"
பட்டு.

மனை இருந்தும்
மாட்சியின்றி
மண்டியிட்டே
மாழுகிறாள்
"குல விளக்கு"
மருமகள்.

கண்ணிருந்தும்
காட்சியற்று
கலையிழந்து
கவலையில் தொங்குகிறாள்
"கட்டுப்பெட்டி"
கலை.

உயிருந்தும்
உடலிருந்தும்
உற்றவன் உணர்சியறியா
ஊருக்கு உபதேசிக்கிறாள்
"உபதேசி"
ஊர்மிளா.

விபரீதம்
வில்லங்கம்
விலைக்கு வாங்க
வீதியில் அலைகிறாள்
"வீதி
விபச்சாரி".

விடுப்புப் பேச
விபரம் தேடி
வீணாகிறாள்
வீட்டுக்கும்
விடுதலைக்கும் உதவா
"விடுப்புக்காரி".

விஞ்ஞானம்
மெய்யானம்
மெய்யாய் அறியா
மெழுகு பொம்மையாய்
செதுக்கப்படுகிறாள்
"செருக்குப் பிடிக்க"
செம்பருத்தி.

கருவூலக் கதை தொடர
கரு வளர்க்க
கருப்பை இருந்தும்
கல்லறை சமைக்கிறாள்
"கருக்கலைப்பு"
கமலா.

காதலன் இருக்க
கண் கவர் கண்ணாளன்
கண் முன் இருக்க
கை கோர்த்தபடி...
கடைக்கண்ணால்
கடைசிக் காலக்
கணவன் தேடுறாள்
"கலிகாலக்" கோதை.

"மகளிர் மட்டும்"
மாராப்புப் பறக்க
மாரடித்துப் பேசியவள்
கழுத்தில்
மாலை விழுந்ததும்
மனையோடு அடங்குகிறாள்
"மயங்காத" மங்கை.

விடுதலை விடுதலை
விடுதலைக்குள்
வீர முழக்கமிட்டவள்
"செமிஸ்ரர்" தொடங்கியதும்
வீச்சிழந்து பேச்சிழந்து
மேசையோடு விழுகிறாள்
"வீரப்பேச்சு" விமலா.

கலியாணம்
கட்டாமல்
காட்டுவன் என் திமிர்
கங்கணங்கட்டியவள்
அப்பா அம்மா சாட்டுச் சொல்லி
கட்டியதும்...
கடிவாளமிட்ட குதிரையாய்
கட்டுண்டே போனாள்
காலமெல்லாம்
"கன்னிகாப்பன்" கண்மணி.

பொட்டழிப்பேன்
தாலியறுப்பேன்
கலாசாரம் தான் அணியேன்
பேசியதெல்லாம்
புஸ்வாணமாக
புகைத்தே போக...
புகைவண்டியில்
20 பவுண் கொடியணிந்து
குங்குமப்பொட்டு அழங்கரிக்க
புடவையில் போகிறாள்
"பெண்ணியவாதி" புஸ்பா.

வீட்டுக்குள்
அக்காள் சித்திரவதைப்பட
தங்கச்சி கட்டிறாள்
அத்தானை...
இது என்ன
"பொத்தானை" அழுத்த
முளைக்கும் காதலா..
திக்குமுக்காடி
சுருக்குச் சேலைக்கு
உயிரைக் கொடுக்கிறாள்
"அக்காள்" கனகா.

என்னை மிஞ்சி
அம்மாவா..?!
உறுக்கிக் கேட்கிறாள்
ஊர் சுத்தும் சிங்காரி.
அடி போடி
தாயில்லாமல் நானில்லை
நீயில்லாமல் உலகில்லை
சமாளிக்க நினைக்கும்
ஆண் மனசை...
சரிக்கட்டச் சொன்னால்
"இரவைக்கு வா
வைச்சிக்கிறன்"
உடலோடு அடங்கும்
ஆசைக்கு
பாசத்தை விலை பேசும்
"பாதகி" பார்வதி.

"பெட்டை பிள்ளை
நீயடி
நட்டநடு நிசியில்
தனியே எங்கே புறப்பாடு..?!"
மட்டமாய் பேசிய
கிழவியை
கராட்டிப் பார்வையாள்
வெட்டிச் சென்றவள்
வெறி பிடித்த
நாய்களின் குதறளில்
பூங்காவடியில்
பிணமாகிக் கிடந்தாள்
"பேத்தி" குமாரி..!

பட்டுப் புடவைக்கு
பதறி அடித்தவள்
கிடைக்காத புடவைக்காய்
படியேறி வாங்கினாள்
விவாகரத்து..!
வங்கிக்காரனைக் கைவிட்டு
புடவைக் கடைக்காரனை
கரம் பிடிக்க..!
சட்டம் படித்த அவள்
சந்திரா.

மொத்தத்தில்
இந்த மகளிர் தினம்
மனங்களுக்குள்
விட்டுச் செல்லட்டும்
உலகின்
உண்மைக் கோலத்தை..!
மகளிரும் அங்கே
திறக்கட்டும்
தம் ஊனக்கண்ணோடு
அறிவுக் கண்ணை..!
காணட்டும்
தம்மறிவால்
மனித ஒழுக்கம் தனை..!
ஒழுகட்டும் அதன்படி
வாழட்டும்
உயிரினும் மேலாம்
ஒழுக்கம் ஓங்க
மனிதம் காத்து..!


(மேலுள்ள ஆக்கத்தில் உள்ள பெயர்கள் எவையும் தனிப்பட எவரையும் சுட்டவில்லை.. என்பதையும் அவை யாவும் ஆக்கத்ததுக்குள் கற்பனைப் பெயர்களாகவே இடப்பட்டுள்ளன.)
_________________

பதிந்தது <-குருவிகள்-> at 12:20 PM

6 மறுமொழி:

Blogger நளாயினி செப்பியவை...

நல்லாத்தான் சீரியலுகள் பாக்கிறியள்.

Thu Oct 11, 05:04:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

நீங்களும் பாக்கிற படியாத்தானே தெரியுது நானும் பாக்கிறன் என்று.

ஏதோ.. நடக்கட்டும்.

Thu Oct 11, 05:18:00 PM GMT+1  
Blogger நளாயினி செப்பியவை...

அரசி மட்டும் பாப்பன் தவறாது. நானும் அரசியாச்சே. அதுதான். (இணையத்தில்தான் பார்ப்பது)

http://www.londontamilvideo.com/?cat=3

Thu Oct 11, 10:22:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

"நானும் அரசியாச்சே"

பாவம் அரசின் கணவர். பாவம் தாமரைச் செல்வன் அண்ணா. எதிர்காலத்தில அவருக்கு ஒரு புகழிட மையம் அமைச்சுக் கொடுக்கனும். கடைசிக் காலத்திலையாவது நிம்மதியா மூச்சு விடட்டும். அரசிட கணவர் போல..! :)

சும்மா பகிடிக்கு. அப்புறம் ரென்சன் ஆகி திட்டுறதில்ல என்னை. :)

அரசிடம் அதிகாரம் இருக்கென்ற திமிர். மனிதம் இல்ல. எதிரியோட சண்டை பிடிக்கிறது ஓகே. பட்.. மனிசரோடையும்... மனிதம் தான் மனிதர்க்கு மனிதரா வாழ அவசியமக்கா.

Fri Oct 12, 06:05:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

good..
மனித ஒழுக்கம் தனை..!
ஒழுகட்டும் அதன்படி
வாழட்டும்
உயிரினும் மேலாம்
ஒழுக்கம் ஓங்க
மனிதம் காத்து..!

this is v.very important...
ithu illai ental ontum illai..
unarnthu eluthi irukireerkal sakothariyae

Fri Oct 12, 06:55:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Fri Oct 12, 11:28:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க