Friday, November 02, 2007

பாலியல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் நாடுகடத்தப்படும் சிறீலங்காச் சிப்பாய்கள் - ஐநா அறிக்கை.



கெயிட்டியில் ஐநா அமைதிப்படையில் பணியாற்றச் சென்ற சிறீலங்காப் படையினர்.

கெயிட்டியில் ஐநா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த சுமார் 108 சிறீலங்கா சிங்களப் படைச் சிப்பாய்கள் (அமைதிகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்ட சிறீலங்காப் படையினரின் மொத்தத் தொகையில் 9க்கு ஒருவர்) அவர்களின் தவறான பாலியல் நடத்தைகளால் கெயிட்டிய பெண்களைத் துன்புறுத்திய குற்றச்சாட்டுகளின் பெயரில் கெயிட்டியை விட்டு நாடுகடத்தப்பட ஐநாவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

சிறீலங்காப் படைகளின் பாலியல் வக்கிரத்தனத்துக்கு கெயிட்டிய சிறுமிகள் கூட இலக்காகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சுமார் 3 தசாப்த கால ஈழப்போரின் போது பல்லாயிரம் தமிழ் பெண்கள் சிறீலங்காப் படைகளின் பாலியல் வக்கிரங்களுக்கு பலியாகினர் என்பதை உலகத்துக்கு சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசு மறைத்திருப்பினும் இன்று ஐநா சபையே சிறீலங்காப்படையினரை கீழ்த்தரமான படை என்று வர்ணிக்கும் அளவுக்கு அவர்களின் சர்வதேசச் செயற்பாடு அமைந்துள்ளமை சிறீலங்காவை உலக அரங்கில் வெட்கித் தலைகுனியச் செய்துள்ளது.

சிறீலங்காப் படையினருக்கு அமெரிக்கா இந்தியா பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் கூலிக்குப் பயிற்சி அளித்து வருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 11:22 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க