Sunday, November 04, 2007

தமிழ்செல்வன் படுகொலை பழிவாங்கல் அல்ல. சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கம்.பிரிகேடியர் தமிழ்செல்வன்கேர்ணல் கெளசல்யன்பத்திரிகையாளர் டி. சிவராம்பத்திரிகையாளர் அ.நடேசன்தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறீலங்கா நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதி அ.சந்திர நேருதமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறீலங்கா நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதி ஜோசப் பரராஜசிங்கம்தமிழ் தேசிய ஆதரவாளர் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தவர் கலாநிதி ரவீந்திரநாத்.

சிறீலங்காவுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 6 வருட காலங்கள் கடந்துவிடப்போகின்றன.

இந்த 6 வருட காலங்களில் சிங்கள பேரினவாத தேசம் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் எந்த நியாயபூர்வமான கோரிக்கையையும் அரசியல் ரீதியா பரிசீலிக்க முன்வரவில்லை. மாறாக அது சாதித்தது என்ன..???!

தமிழ் மக்களின் போராட்ட நியாயங்கள் சர்வதேச அரங்குக்கு வருவதை தடுப்பதிலேயே அது தன்னை முழுமூச்சில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அதற்காக தெளிவான நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்து அவற்றை தொடர்சியாக அரங்கேற்றி வருகிறது. அவற்றுள் முதன்மையானவை..

1. தன்னை இராணுவ ரீதியில் பலப்படுத்திக் கொண்டமை.

2. சர்வதேச அரங்கில் தமிழர்களின் அரசியல் மற்றும் இராணுவ பலமான தமிழீழ விடுதலைப்புலிகளைத் தனிமைப்படுத்தி பயங்கரவாதிகளாக இனங்காட்டி அவர்களுக்கு எதிரான சர்வதேசத் தடைகளை தீவிரப்படுத்தியமை.

3. தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு அடிப்படையான தமிழர் தேசம் என்ற பூர்வீக நில அலகின் இருப்பை அடையாளப்படுத்தும் வடக்குக் கிழக்கு இணைப்பை இல்லாமல் செய்தமை. கிழக்கை வடக்கில் இருந்து துண்டாடும் வண்ணம் இராணுவ மற்றும் அரசியல் நகர்வுகளைக் கைக்கொண்டமை.

4. தமிழீழ விடுதலைப்புலிகளால் உலக அரங்குக்கு கொண்டு வரப்பட்ட தமிழீழ தேசத்துக்கான தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லும் அரசியல் இராஜதந்திர பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாக அழித்தமை.

இதில் தமிழ் தேசிய கொள்கைப் பற்றுள்ள, சர்வதேசத்துக்கு சிங்களப் பேரினவாதத்தின் தமிழர்களுக்கு எதிரான அரசியல் மற்றும் இராணுவ அட்டூழியங்களை இனங்காட்டிக் கொண்டிருந்த தலைவர்களைப் படுகொலை செய்தமை இன்னும் இன்றும் முதன்மை பெறுகிறது.

இப்படுகொலைகளின் மூலம் சர்வதேச அரங்கிற்கு தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்த தமிழ் மக்களின் நியாயமான அரசியல் எதிர்பார்ப்புக்கள் தொடர்ந்து சொல்லப்படாது தடுக்கப்படவும், தமிழ் மக்களின் அரசியல், இராணுவ பலமாக விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து அதை அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் ஓர் இலக்காக்கி அதன் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி தனது இராணுவ ஆதிக்கத்தை தமிழர் தாயகத்தில் நிறுவி, இலங்கைத் தீவில் தமிழினத்தின் மீதான தனது மேலாதிக்கத்தை நடைமுறைப்படுத்தி, அதன் மூலம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் தாயகக் கோட்பாடுகளையும் சிதைத்துவிட கங்கணம் கட்டி நிற்கிறது சிங்களப் பேரினவாதம். இதனைச் செயற்படுத்துவது நோக்கியே அதன் நிகழ்ச்சித் திட்டங்கள் அமைந்துள்ளன. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை போராட்ட நியாயங்களை அது தானும் கவனத்தில் கொள்ளவில்லை சர்வதேசம் கவனத்தில் கொள்வதை விரும்பவும் இல்லை.

இதற்காக சிங்களப் பேரினவாதம் அரங்கேற்றிய தமிழீழ, தமிழ் தேசியவாதிகளின் கொலைப்பட்டியல் கடந்த 6 ஆண்டுகளில் மிக நீண்டதாக அமைந்துள்ளது.

சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களின் இராணுவ பலத்தை இட்டு அஞ்சவில்லை அதை சமாளிக்க பல தேர்வுகளை அது சாதுரியமாக தனக்குச் சாத்தியமாக்கியுள்ளது. அதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை அது தொடர்சியாக திட்டமிட்டு செயற்படுத்தி வருகிறது. இவற்றுள் ஒன்று மிக முக்கியம் பெறுகிறது. அது.. இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் அரசியல் நியாயப்பாடும் அதற்காக குரல் கொடுக்கும் சக்திகளாக தமிழீழ விடுதலைப்புலிகள் இனங்காணப்படுதலும் அவை சர்வதேசத்தின் கருசணைக்கு இலக்காகிவிடக் கூடாது என்பதுவும் தான். இதனடிப்படையிலேயே தமிழ்செல்வன் அண்ணாவின் படுகொலை இடம்பெற்றுள்ளது.

இது ஒரு பழிவாங்கல் தாக்குதல் அல்ல. மாறாக இது இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாதிகளால் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதையும் தமிழ் மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன என்பதையும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட நியாயங்களையும் சர்வதேசம் உணர ஆரம்பிக்கும் வேளையில் அதை உணர்த்த பாடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழர் தலைமைகளை சிங்களப் பேரினவாத தேசம் கொஞ்சம் கொஞ்சமாகக் காலி செய்து வருகிறது என்பதையே காட்டிநிற்கிறது. இது தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிக ஆபத்தானது மட்டுமன்றி இலங்கைத் தீவில் அவர்களின் இருப்புக்கு வீழ்ந்துள்ள சுருக்குக் கயிறு போன்றது.

இந்த நோக்கத்துக்காக சிங்கள தேசம் தெரிவு செய்த கொலைப்பட்டியல் என்பது மிக முக்கியமானது.

மேலும் கருணா போன்ற பலவீன உறுப்பினர்களின் பிளவையும் இதற்காக சிங்கள தேசம் பயன்படுத்த பிந்நிற்கவில்லை. டக்கிளஸ், சித்தார்த்தன் போன்ற சுயநலவாத போட்டி ஆயுதக் குழுக்களின் ஆசைகளையும் அது தனக்குப் பயன்படுத்தப் பின்னிற்கவில்லை. ஆனந்தசங்கரி போன்ற மிதவாத ஆனால் தமிழ்மக்களின் நலனுக்கு முன்னால் புலியெதிர்ப்பை முன்னிலைப்படுத்தும் அரசியல்வாதிகளின் இருப்பையும் அது தனக்கு சாதமாக்கி சர்வதேச அரங்கிற்கு தனது கோரமுகம் தெரியாமல் மறைத்துக் கொள்ளவும் பாடுபடுகிறது.

சிங்களப் பேரினவாதத்தின் தமிழின சுத்திகரிப்பு என்பது அதன் முன்னைய தலைவர்கள் போட்ட அதே தளத்தில் இருந்து எந்தத்தளம்பலும் இன்றி சாதுரியமாக விஸ்வரூபம் எடுத்து ஆடிக் கொண்டிருப்பதையே அதன் நிகழ்ச்சி நிரல்கள் இடையூறுகளுக்கு அப்பால் சாத்தியமாவது எடுத்துக்காட்டுகிறது.

சிங்களப் பேரினவாதத்தின் இந்தக் குரல்களின் பின்னணியில் உள்ள விடயங்களை ஆராய்ந்தால் இந்த எளிமையான உண்மை புலப்படும்...

If we want we can take them one by one, so they must change their hideouts - Defence Secretary Gotabaya Rajapaksa

Sri Lanka’s main opposition United National Party (UNP) has hailed the killing of LTTE Political Head and Chief Negotiator, S. P. Thamilchelvan, in a Sri Lanka Air Force (SLAF) airstrike on his official residence Friday as "a victorious moment." Praising the Air Force, UNP spokesman Lakshman Kireiella said it was not possible to talk peace with the LTTE.

பின் இணைப்பு:

22.02.2002 இற்கு பின்னர் சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சித் திட்டத்தில் இடம்பெற்ற தமிழ்த் தலைவர்களின் கொலைப்பட்டியல்.(முக்கியமான தலைவர்கள் மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.)

தமிழ் தேசிய ஆதரவுப் பத்திரிகையாளர்கள் - மாமனிதர் சிவராம், மாமனிதர் நடேசன்

தமிழ் தேசிய உள்ளூர் சமூக ஆர்வலர்கள் - மாமனிதர் சிவமகாராசா, மாமனிதர் விக்னேஸ்வரன்

தமிழ் தேசிய பா.உ உறுப்பினர்கள் - மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், மாமனிதர் ரவிராஜ், மாமனிதர் சந்திரநேரு

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை - கேர்ணல் கெளசல்யன், பிரிகேடியர் தமிழ்செல்வன் மற்றும் பல அரசியற்துறைப் போராளிகள்.

தமிழ் தேசிய ஆதரவு கல்விமான்கள் - கலாநிதி ரவீந்திரநாத்( உபவேந்தர் கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை.), விரிவுரையாளர் த.குமாரவேல் (கிழக்குப் பல்கலைக்கழகம்)

இவர்களுக்கு மேலதிகமாக தமிழ் தேசிய ஆதரவு மாணவ தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று பல நூறு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தகவல் மூலம் யாழ் இணையம் - மேலதிக தகவலும் இணைக்கப்பட்டுள்ளது.

பதிந்தது <-குருவிகள்-> at 6:55 AM

2 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

நல்லதொரு பார்வை. பதிவுக்கு நன்றி.

Sun Nov 04, 08:13:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

இதைத்தான் சிங்கள தேசம் காலங்காலமாக செய்து வருகிறது.

நன்றி அனோனிமஸ் உங்கள் பின்னூட்டலுக்கு.

Mon Nov 05, 02:40:00 PM GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க