Monday, November 05, 2007

தமிழ்செல்வன் அண்ணா புனித விதைகுழியில் விதைக்கப்பட்டார்.



தமிழ்செல்வன் அண்ணாவின் துணைவியார் சசிரோஜா அவர்கள் கணவரின் வித்துடலுக்கு விளக்கேற்றும் நிகழ்வு.



தமிழ்செல்வன் அண்ணாவின் துணைவியார் மஞ்சள் நூலால் அமைந்த மங்கள நாணை கணவருக்கு மீளளிக்கும் நிகழ்வு.



தமிழீழ காவல்துறை தலைவரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளருமான நடேசன் தமிழ்செல்வன் அண்ணாவின் வித்துடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செய்யும் நிகழ்வு.



போராளிகள் தாங்க தமிழ்செல்வன் அண்ணாவின் வித்துடல் விதைப்புக்காக புனித விதைகுழி நோக்கி கொண்டு செல்லப்படுதல்

தமிழ்செல்வன் அண்ணாவின் வித்துடல் சகல மரியாதைகளுடன் சுமார் 25,000 மக்கள் கூடி இருந்து கதறியழ புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. இறுதி நிகழ்வில் தளபதிகள் போராளிகள் அரசியல் தலைவர்கள் மதத் தலைவர்கள் பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விடுதலைப்புலிகள் உளவுப்பிரிவுத் தளபதி பொட்டம்மான் மற்றும் காவற்துறை, அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

தமிழ்செல்வன் அண்ணாவுக்கு அலைமகள் (வயது 7) ஒளிவியந்தன் (வயது 4) ஆக இரு பிள்ளைகள் உள்ளனர்.


மேலதிக படங்களும் செய்தியும் இங்கு.

இது தொடர்பான செய்திகள் மற்றும் படங்களை தாங்கி வந்துள்ள புதினம் தளத்துக்கான இணைப்பு

பதிந்தது <-குருவிகள்-> at 3:24 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க