Thursday, November 08, 2007

உலகப் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்க செயற்பாட்டின் கீழ் சிறீலங்காவுக்கு ஆயுத உதவி.U.S. Ambassador Robert O. Blake, Jr. and Vice Admiral Wasantha Karannagoda, Commander of the Sri Lanka Navy at the November 8 ceremony in Trincomalee to turn over equipment that will support Sri Lanka’s maritime security.

U.S. radars and dinghies to fight LTTE

"Radar-based maritime surveillance system and several Rigid Hull Inflatable Boats (RHIBs) were donated to Sri Lanka Navy by U.S. Ambassador to Sri Lanka Robert O. Blake in a ceremonial function at Trincomalee on Thursday. Ambassador Blake expressed U.S. Government's hope that the radar system and the inflatable boats would help the Sri Lankan Navy to interdict arms shipments to the LTTE. The donation was part of U.S. programme to assist partner nations to deter global terrorist activity.Mr. Blake also urged Colombo to pursue a negotiated settlement and respect human rights, a press release issued by the U.S. Embassy in Colombo said.."

"சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கள்" இப்படித்தான் உலக வல்லாதிக்க சக்திகள் தங்கள் சர்வதேச வல்லாதிக்க விரிவுபடுத்தல் செயற்பாடுகளுக்கு இடைஞ்சலாக உள்ள அமைப்புக்கள் அனைத்தையும் உச்சரித்து வருகின்றன.

2001 செப் 11 க்குப் பின்னர் சர்வதேசப் பயங்கரவாதத்துக்கு எதிரான நேரடிப் போரை அமெரிக்கா ஆரம்பித்து ஆப்கானிஸ்தான் ஈராக் என்று தனது நலனுக்கு ஒத்திசையாத நாடுகளை தனது இராணுவ இயந்திரத்தின் பலத்தைப் பிரயோகித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் தொடர்சியாக பல இலட்சம் அப்பாவி மக்களும் பல்லாயிரம் அமெரிக்கப்படையினரும் தங்கள் உயிர்களை இழந்தனர். பலர் ஊனமுற்றனர்.

இன்று அதே அமெரிக்க புஷ் நிர்வாகம் கொடிய இனவாத அரசும் தமிழினப் படுகொலையை தெரிவு செய்து மேற்கொண்டு வரும் சிங்களப் பேரினவாத அரசுக்கு நவீன கடற்கலங்களை சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை திருகோணமலை துறைமுகத்தில் ஒழுங்கு செய்து அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

சர்வதேசப் பயங்கவாததுக்கு எதிரான யுத்தத்தின் ஓரங்கமாக இந்த உதவி சிறீலங்காவை வந்தடைந்திருக்கிறது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் ஆயுத வழங்கல் கடற்கலங்களை கண்டறியவும் அவற்றை அழிக்கவும் என்று இவை அமெரிக்காவால் இலவசமாக அதாவது அன்பளிப்பாக சிங்களப் பேரினவாத அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக அமெரிக்க றோனால்ட் ரேகன் நிர்வாகத்தில் இருந்து இன்றைய புஷ் நிர்வாகம் வரை மாறாத கொள்கையையே கொண்டிருக்கின்றன என்பதையும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த அரச நிர்வாகங்கள் முதலைக்கண்ணீர் மட்டும் வடித்து உலகை ஏமாற்றி வருகின்றன என்பதும் இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது..!The rugged, seaworthy, versatile 36-foot RIB has a 200 nautical miles range at 32 knots, with a 45 knot top speed. It can carry 3,200 lbs payload, and is C-130 transportable.

தமிழ் மக்களின் தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்டமானது இதன் மூலம் புதிய பரிமானத்துக்குள் நுழைந்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. சிங்களப் பேரினவாத சக்திகளை மட்டும் எதிர்கொள்ள வேண்டிய நிலையைக் கடந்து இந்தியா போன்ற பிராந்திய மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதை உலகத் தமிழ் மக்கள் இத்தருணத்தில் உணர்ந்து, தமிழினம் இந்த ஆதிக்க சக்திகளின் ஒரு பக்கச்சார்பான தமது சுயநலன் நோக்கிய நகர்வுகளுக்குள் சிக்கி உலகில் இருந்து சிதைந்து விடாது பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு உலகத் தமிழனுக்கும் உள்ளது என்பதை கண்டறிந்து தங்கள் தங்கள் பங்களிப்புகளால் இவர்களின் கபடத்தனமான நகர்வுகளை முறியடிக்க ஒத்துழைக்க வேண்டும்.

எனவே தமிழ் மக்களை நோக்கி வீசப்பட்டுள்ள இந்தச் சவாலை எதிர்கொண்டு அனைத்து வல்லாதிக்க சக்திகளின் கபடத்தனமான நகர்வுகளையும் முறியடித்து சுதந்திர தமிழீழத்தை நிர்மாணிப்போம் என்று இத்தருணத்தில் உலகத்தமிழ் மக்கள் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்..! இந்த வல்லாதிக்க சக்திகளை எதிர் கொள்ள சர்வதேச அளவில் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய தேவையும் இதனால் உலகில் எழுந்துள்ளது..!U.S. Navy Rigid-hulled inflatable boats are high-speed, high-buoyancy all weather boats specifically designed to transport fully equipped team of eight Naval personnel.

பிரதான செய்தி இங்கு.

தமிழ் வடிவமாக யாழ் இணையத்தில் இருந்து பெற்றது.

பதிந்தது <-குருவிகள்-> at 3:25 PM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க