Saturday, November 17, 2007

ஈழத்தமிழர்களை இரையாக்கத் துடிக்கும் அமெரிக்கக் கழுகு..!



தமிழர் புனர்வாழ்வுக்கழகம் எனும் ஈழத்தமிழர்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்பினை விடுதலைப்புலிகளுக்கு பணம் சேர்க்கும் அமைப்பு என்று குற்றம்சாட்டி அதன் நிதியை,அமெரிக்கா சிறீலங்கா பேரினவாத அரசைத் திருப்திப்படுத்த முடக்கி இருப்பது குறித்து சிறீலங்காவுக்கான அமெரிக்கத்தூதுவர் வெளியிட்ட கருத்தை அடுத்து எழுந்துள்ள சந்தேகங்கள் அமெரிக்காவின் அநியாயமான அணுகுமுறைகள் உலகின் பிறபகுதிகளில் இருந்து ஈழத்தமிழர்களை நோக்கியும் விரிவுபடுகிறது என்பதை இனங்காட்டிச் செல்கின்றன..! தொடர்ந்து படியுங்கள்...

அமெரிக்கத் தூதரின் வழியிலேயே சொன்று நோக்கினால் கூட அமெரிக்காவின் தர்க்கம் தவறானது சுயநலத்தோடு நகர்கிறது என்பதை இலகுவாகக் கண்டறியலாம்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி இராணுவ நடவடிக்கைகள் மூலம் பிரதேசங்களைப் பிடித்ததும் அதற்காக மக்களை வலிந்து இடம்பெயரச் செய்ததும் சிறீலங்கா அரசு... இதை எப்போதாவது அமெரிக்கா கண்டித்திருக்கிறதா..??! அல்லது இதைத் தடுத்து நிறுத்த சிறீலங்கா அரசுக்கு பகிரங்கமாக அழுத்தங்கள் அல்லது தடைகளைக் கொண்டு வந்திருக்கிறதா..??! மியாண்மாரிலும் ஈரானிலும் அமெரிக்காவின் செயற்பாடு மின்னல் வேகத்தில் இருக்க ஏன் இலங்கைத் தீவில் சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள் மீது மட்டும் அக்கறை காட்ட மறுக்கிறது..??!

தமிழர் பிரதேசங்களில், ஐநாவின் அவதானிப்புக்கு இணங்கக் கூட ,மனித உரிமைகள் உருப்படியாக இல்லை. அதற்கு இராணுவம் ஆயுதக்குழுக்களும் முதன்மை பங்களிக்கின்றன என்பது வெளிப்பட்டும்.. அமெரிக்கா மெளனம் காக்கிறதே ஏன்...??!

அமெரிக்கா மூச்சுக்கு முந்நூறு தரம் உச்சரிக்கும் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான ஜோசப் பரராஜசிங்கம்.. அரிநாயகம் சந்திரநேரு.. ரவிராஜ் இவர்களின் படுகொலைகள் தொடர்பில் உண்மையைக் கண்டறிய அமெரிக்கா என்ன நடவடிக்கை அல்லது அழுத்தம் கொடுத்தது சிறீலங்கா அரசுக்கு..??!

கொழும்பில் காணாமல் போதல் கைதிகள் சித்திரவதை என்று அமெரிக்கத் தூதரின் கண் முன்னாலே தமிழர்கள் சித்திரவதைப்படும் போது ஏன் அமெரிக்கா அதையிட்டு சிறீலங்கா அரசுக்கு தமிழர்களுக்கு தகுத்த பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல் வழங்க முன் வரவில்லை..??!

அமெரிக்காவுக்கு உண்மையில் இலங்கைத் தீவின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வில் அக்கறை இருப்பின் விடுதலைப்புலிகளின் தடையை நீக்கி அவர்களுடன் நேரடிக் கலந்தாலோசனைகளைச் செய்து வன்முறைகளை நிறுத்தி இரண்டு தரப்பையும் சமனாக மதித்து பேச்சு மேடைக்கு கொண்டு வரலாம் தானே. ஏன் அமெரிக்கா அப்படிச் செய்யாமல் சிறீலங்கா அரச படைகளின் பலத்தை அதிகரிப்பதிலும் அவர்களின் ஆக்கிரமிப்பை அங்கீகரிப்பதிலும் சிறீலங்கா அரசின் விருப்புக்கு ஏற்ப புலிகளை ஒடுக்கவும் முன்னின்று செயற்படுகிறது. இது எந்த வகையில் பலவீனமான தமிழர் தரப்பை, பலமான சிங்கள அரச தரப்புடன் நியாயமான தீர்வுகளை எட்ட,பேச்சுக்களில் பேரம் பேச தமிழர் தரப்புக்கு உதவியாக அமையும்..??!

சிறீலங்காவின் இனப்பிரச்சனையே இனங்கள் ஒன்றாக வாழ முடியாத நிலையில் எழுந்த ஒன்று. அப்படி இருக்க எங்கோ இருக்கும் அமெரிக்கா இனங்களின் ஐக்கியத்தோடு எப்படி என்ன வகையான தீர்வை, தமிழர்கள் எதிர்பார்க்கும் நியாயபூர்வ உரிமைகளை வழங்கத்தக்கதாக சிறீலங்கா அரசூடு அளிக்க இருக்கிறது என்பதை தெளிவுபடுத்திக் கூறக் கூடிய நிலையில் இருக்கிறதா..??!

விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் வன்முறைவாதிகள் என்றால் அவர்களை விட மோசமான இன அழிப்பு வன்முறையில் ஈடுபடும் சிங்களப் படையினருக்கு அமெரிக்கா இராணுவ உதவிகளை அளிப்பது எந்த வகையில் நியாயம். இப்படி ஒருதலைப்பட்சமாக சிறீலங்காவின் இராணுவ வெறித்தனத்தை ஊட்டி வளர்க்கும் அமெரிக்கா எப்படி சிறீலங்கா அரசை இதய சுத்தியுடன் அதுவும் இராணுவ மேலாதிக்க நிலையில் உள்ள ஒரு சந்தர்ப்பத்தில் தமிழர் தரப்புக்கு நியாயம் வழங்க அழுத்தம் கொடுக்க முடியும்..??! வெறுமனவே விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நினைப்பது இராணுவ மேலாதிக்கத்தை விரும்பும் அரசுக்கு சாதகமாகத்தானே அமையும்.. இது வெளிப்படை உண்மைதானே. ஏன் இதை அமெரிக்கா கருத்தில் கொள்ளாது நாடகம் ஆடுகிறது..??!

அமெரிக்காவின் செல்வாக்கை நிலை நிறுத்தவும் இதர நாடுகளின் இராணுவத்தலையீட்டைத் தவிர்க்கவும் அமெரிக்கா மட்டுப்படுத்திய இராணுவ உதவிகளை சிறீலங்காவுக்குச் செய்ய வேண்டிய கட்டாய நிலை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு நோக்கினும் சிறீலங்கா அரசின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை அமெரிக்கா கண்டிக்காதது ஏன்..??! இராணுவ உதவிகளை எந்த எச்சரிக்கைகளுக்கும் இடமின்றி அள்ளி வழங்குவது சிறீலங்கா தனது பக்கத் தவறுகளை உணர எவ்வகையில் உதவும்..??!

சீனா மியாண்மார் ரஷ்சியா ஈரான் என்று மனித உரிமைப் பிரச்சனைகள் பூதாகரம் இல்லாத இடங்களில் எல்லாம் அவற்றைப் பூதாகரம் ஆக்கும் அமெரிக்கா ஏன் சிறீலங்கா தொடர்பில் ஐநா மற்றும் அமெரிக்காவையே தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை அமைப்புக்களின் குரலை செவி மடுக்காமல் இருக்கிறது..??!

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணிகளை தீவிரமாகக் கண்காணிக்கக் கூடிய புலனாய்வு வசதிகளை அமெரிக்கா கொண்டிருந்தும் ஏன் அதற்குத் தடை விதிக்க வேண்டும்..??! இது சிங்கள ஆளும் தரப்பை மேலாதிக்க நிலையில் வைத்துக் கொண்டு தமிழர் தரப்பை பலவீன நிலையில் வைத்திருக்க செய்யும் செயலாகத்தானே தென்படுகிறது..??! அதுவும் சுனாமி பாதிப்பின் பின்னர் சர்வதேசத்தின் உதவி தமிழர் தரப்புக்கு சரியான வககயில் போய் சேரவில்லை என்று முன்னால் ஐநா பொதுச் செயலர் கொபி அனான் கோடிட்டுக் காட்டிய பின்னும் அமெரிக்கா இப்படி ஒரு நகர்வைச் செய்வதன் உள்நோக்கம் தமிழர் தரப்பின் மீது சிங்கள அரசின் இன அழிப்பை ஊக்கப்படுத்துவது தானே..??!

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் வேறு எந்த நடுநிலைத்தரப்பின் ஊடு அமெரிக்கா தமிழ் மக்களுக்கு உதவி செய்யப் போகிறது. அதையேன் அமெரிக்கா இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை..??!

தமிழர் தரப்பை சிறீலங்கா அரசுக்கு ஏற்ப பேச்சுக்களத்தில் சமதரப்பு நிலையில் வைத்திருக்க அமெரிக்கா செய்த நகர்வுகள் என்பது இவை தானா..??!

இராணுவ மேலாதிக்கம் உள்ள ஒரு அரசு எப்படி இராணுவ அடக்குமுறைக்குள் பலவீனப்பட்டுள்ள ஒரு இன மக்களுக்கு நியாயம் வழங்கும்..??! அமெரிக்கா இதை எவ்வகையில் தமிழர் தரப்புக்கு நம்பத்தகுந்த வகையில் வெளிச் சொல்லப் போகிறது. அதற்காக அது செய்யும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய நகர்வுகள் என்ன..??! அப்படி எதுவும் இருந்ததாக கடந்த 3 தசாப்தகால போராட்டமே சாட்சியாகி நிற்கிறது..!

ஆக அமெரிக்காவின் நகர்வுகள் சிறீலங்காப் பேரினவாதத்தின் செயற்பாடுகளை அங்கீகரித்தபடி தமிழர் தரப்பை மட்டும் குறை காண்பதிலும் ஒடுக்குவதிலும் தான் குறியாக இருக்கிறது. காரணம் தமிழர் தரப்பு பலவீனமான தரப்பு என்பதால் தனது அச்சுறுத்தல்களால் அத்தரப்பை மிரட்டி இலகுவாகப் பணிய வைக்கலாம் என்றும் ஆனால் அதை சிங்களத் தரப்போடு செய்வது தனக்கு அனுகூலமாக அமையாது என்றும் கருதியே அமெரிக்கா இலங்கைத் தீவில் சமீப காலமாக தனது நகர்வுகளைச் செய்து வருகிறது. இது தமிழர் தரப்பு எதிர்பார்க்கும் எந்த அரசியல் தீர்வையும் சிங்களவர்களிடமிருந்து பெற்றுத்தர எள்ளளவும் தமிழர்களுக்கு உதவாது. மாறாக அமெரிக்க நலங்களை பிராந்தியத்தில் நிலைநிறுத்தவும் அதற்கு வெகுமதியாக தமிழர் போராட்டத்தை நசுக்கி சிங்கள அரசின் மேலாதிக்கத்தை தமிழர் தாயகத்தில் நிறுவி, தமிழர் தாயகத்தை சிங்கள இராணுவ மயப்படுத்தல் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து.. சிங்களவர்களின் ஜனநாய முலாம் பூசப்பட்ட அரைகுறைத் தீர்வை பலவீனப்பட்டுப் போயிருக்கும் தமிழர் மீது திணிப்பதன் மூலம் தனது நலனுக்காக இலங்கைத் தீவை நீண்டகால முதலீடாக்கிக் கொள்வதும் அதை நிலைநிறுத்திக் கொள்வதுமே அமெரிக்காவின் திட்டம்..!

பிரதான மூலம் யாழ்.கொம்

----------

தொடர்புபட்ட செய்தி..

த.பு.கழகத்தின் பண முடக்கம் தமிழர்களுக்கு எதிரானது அல்லவாம் - பிளேக் கூறுகிறார்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கம் தமிழ் மக்களிற்கு எதிரான செயலல்ல என, சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் புதிய விளக்கமளித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு நிதி சென்றடைவதைத் தடுப்பதற்கே தமது அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், இதனை தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கையாகக் கொள்ள வேண்டாம் எனவும், நிதி முடக்கம் தொடர்பாக இன்று கேட்டபோது அவர் கூறினார்.

அமெரிக்கத் தூதுவரின் இந்தக்கூற்று தொடர்பாக கருத்துரைத்த கொழும்பின் பிரபல ஆய்வாளர் ஒருவர், தமிழ் மக்களிற்கான பிரதான மனிதநேய அமைப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இயங்கிவரும் நிலையில், பிளேக்கின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனச்சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு, உள்நாட்டு மனிதநேய அமைப்புகள் பணியாற்ற முடியாத பல இடங்களில் தமிழ் மக்களிற்கான பணியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆற்றி வருகின்றது.

இதேவேளை, இனப்பிரச்சினைக்கான தீர்வை சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலமே காண முடியுமெனவும், சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் இன்று மீண்டும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியுமெனக்கூறும் அமெரிக்கத் தூதுவர், விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவின் தலைவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டபோது எந்தவித கண்டனத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பதிவு.கொம்

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:39 AM

9 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

உலக பயங்கரவாதி அமெரிக்காவிற்கு எதிராக எதிரிகள் அதிகரித்து செல்கின்றன, முஸ்லீம் சகோதர்களுடன் இணைந்து தமிழர்களும் இப்போராட்டத்தில் விரைவில் இணைவார்கள்.

Sat Nov 17, 01:37:00 AM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

during ceasefire time
Army didn't start blowing landmines....

Sat Nov 17, 04:48:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

"during ceasefire time
Army didn't start blowing landmines...."

சிறீலங்காவின் நிலவரம் புரியாமல் கருத்துச் சொல்லுறீர்களா அல்லது மறைத்துக் கருத்துச் சொல்கிறீர்களா..??!

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் கீழ் துணை இராணுவக் குழுச் செயற்பாடுகள் வடக்குகிழக்கில் நிறுத்தப்பட வேண்டும். அதை இராணுவம் செய்யவில்லை. கடல் மற்றும் விமானத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தியது. கடலில் பல வலிந்து தாக்குதலைச் செய்தது. மீனவர்களைக் கூட புலிகள் என்று தாக்கிச் சிறைபிடித்தது.தேசிய பாதுகாப்பென்று சொல்லி விமானத்தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியற்துறைப் போராளிகளை சுட்டுக் கொன்றது. அதற்கு துணை இராணுவக் குழுக்களின் பின்னணியில் இராணுவம் செயற்பட்டது என்பது வெளிப்படை. காரணம் நடந்த சம்பவங்கள் அனைத்தும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நிகழ்ந்தன. போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவும் இவை தொடர்பில் அரசை சாடி இருக்கின்றது.

கண்ணி வெடிகள் தானாக வெடிக்கவில்லை. அரசின் யுத்த நிறுத்த மீறல்கள் எல்லை மீறிய போது அதற்கு சர்வதேசமோ சிறீலங்காவோ அமைதியான வழியில் சரியான வகையில் பதிலளிக்க மறுத்ததால் தான் கண்ணிவெடிகள் பதிலளிக்க வேண்டிய தேவை எழுந்ததே தவிர கண்ணிவெடிகள் தாங்களாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மிறவில்லை. அரசு தனது இராணுவ மற்றும் துணை இராணுவச் செயற்பாடுகளை மக்கள் படுகொலைகளை, கடல் மற்றும் வான் தாக்குதல்களை நிறுத்தும் போது கண்ணிவெடிகளும் வெடிக்காமல் நிற்கும்

Sat Nov 17, 10:02:00 AM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

This comment has been removed by a blog administrator.

Mon Nov 19, 09:16:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

மேலே அனானிமஸ் என்ற பெயரில் பதிந்தவர் உலகில் மனிதனின் போரியல் வரலாற்றை கொஞ்சமும் அறியாத வகையில்.. தமிழின விரோதப் போக்கில்.. தமிழீழத் தமிழ் மக்களின் நியாயபூர்வக் கோரிக்கைகளின் பின்னால் உள்ள நியாயங்களை அலசி ஆராயாமல்..கடந்த கால நிகழ்வுகளுக்கு தனது சுயவிசாரணை முடிவிட்டு கருத்து எழுதி இருந்தமையால் குறித்த கருத்து நீக்கப்பட்டுள்ளது.

கருத்தை நீக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதற்காக எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.

Mon Nov 19, 10:29:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

can you please tell when did SLArmy bombed by air during ceasefire times?

ltte also "cleanesed traitors" during ceasefire time..can you deny it???

in my opinion it is ltte's greediness that is killing Tamils,,not Singalese nor Americans..(this is purely my view)

Tue Nov 20, 01:42:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

"can you please tell when did SLArmy bombed by air during ceasefire times?

ltte also "cleanesed traitors" during ceasefire time..can you deny it???

in my opinion it is ltte's greediness that is killing Tamils,,not Singalese nor Americans..(this is purely my view)"

யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் கடலில் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. அவைதான் முதல் நிகழ்வுகள். அதன் பின்னர் தொடர்சியாக நடந்தவை தொடர்பில் விரிவான பார்வை அவசியம்.

சிறீலங்கா கடற்படை வலிந்து மேற்கொண்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள்.. குரங்குப்பறிச்சான் விவகாரம்.. ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்தத் தவறியமை என்று சிறீலங்கா அரசுதான் முதலில் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு மாறாக நடக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் தொடர்சியாக பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.

தமிழ் மக்களைக் கொலை செய்வதற்கு புலிகள் காரணமாக இருக்க முடியாது. புலிகள் இராணுவ இலக்குகளைத் தவிர பொதுமக்கள் இலக்குகள் எதனையும் போர் நிறுத்த காலத்தின் பின் தாக்கவில்லை.

இராணுவம் புலிகள் தாக்கினால் புலிகளைத் தாக்க வேண்டுமே தவிர தமிழ் மக்களையல்ல. அப்போ இராணுவம் தாக்குதென்று சிங்கள மக்களைப் புலிகள் தாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா..??! அதையேன் பயங்கரவாதம் எங்கிறீர்கள்..??!

சிறீலங்கா அரசின் அனைத்து கடல் மற்றும் வான் தரை வழி தாக்குதல்கள் அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனையின் கீழ் நடத்தப்படுகின்றன. போர் நிறுத்த காலத்திலேயே அமெரிக்க இராணுவ அதிகாரிகள் வந்தனர். கடற்படைக் கப்பல்கள் வந்தன. சமாதானத்தை வேண்டி நிற்கும் பூமிக்கு எதற்கு இராணுவ அதிகாரிகள் வர வேண்டும். ஆயுத சப்பிளை செய்ய வேண்டும்..??!

போருக்கு ஓய்வு கொடுத்து இராணுவத்தைப் பலப்படுத்தி புலிகளை அழிக்கிறமென்று தமிழ் மக்களையும் அவர்களின் பாதுகாவலர்களான புலிகளையும் அழிப்பதுதான் சிறீலங்காவின் திட்டம். தென்னிலங்கையில் உள்ள தமிழர்களையும் இறுதியா விரட்டி அடிக்க தமிழர்களை இலங்கைத் தீவில் இருந்து துரத்தியே அடித்திடலாம் என்பதுதான் சிங்களப் பேரினவாதத்தின் கொள்கையே..!

அமெரிக்கா தனது பிராந்திய நலனுக்காக இதற்கு துணை போகிறது. சிறீலங்காவில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் பின்னும் அமெரிக்காவின் பங்களிப்பு இருக்கிறது. அதுதான் தமிழர்களின் அழிவுக்கு இன்னும் வித்திட்டுக் கொண்டிருக்கிறது..!

Tue Nov 20, 12:12:00 PM GMT  
Blogger சீனு செப்பியவை...

//அமெரிக்காவுக்கு உண்மையில் இலங்கைத் தீவின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வில் அக்கறை இருப்பின்//

இருந்துட்டாலும்...ரெண்டு பேர் முட்டிகிட்டா நடுவுல பூந்து ரத்தம் குடிக்கத்தான் ஆசைப்படுமே தவிற, அக்கரையாவது மண்ணாவது.

//மேலே அனானிமஸ் என்ற பெயரில் பதிந்தவர் உலகில் மனிதனின் போரியல் வரலாற்றை கொஞ்சமும் அறியாத வகையில்.. தமிழின விரோதப் போக்கில்.. தமிழீழத் தமிழ் மக்களின் நியாயபூர்வக் கோரிக்கைகளின் பின்னால் உள்ள நியாயங்களை அலசி ஆராயாமல்..கடந்த கால நிகழ்வுகளுக்கு தனது சுயவிசாரணை முடிவிட்டு கருத்து எழுதி இருந்தமையால் குறித்த கருத்து நீக்கப்பட்டுள்ளது.//

ஐ! அப்போ உங்களுக்கு உடன்பட்டு கருத்து சொன்னாத்தான் அதை பப்ளிஷ் செய்வீங்களா? பேசாம அனானி ஆப்ஷனையே எடுத்துடுங்களேன்...

Tue Nov 20, 01:37:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

//ஐ! அப்போ உங்களுக்கு உடன்பட்டு கருத்து சொன்னாத்தான் அதை பப்ளிஷ் செய்வீங்களா? பேசாம அனானி ஆப்ஷனையே எடுத்துடுங்களேன்...//

நாங்கள் கருத்தியல் சுதந்திரத்தை மதிக்கும் அதேவேளை அதைப் பயன்படுத்தி ஆதாரங்களின்றி கற்பனைகளை உண்மைகளாக்க விளைவதை அனுமதிக்க முடியாதுதானே..??!

சிறீலங்காவில் நடந்து முடிந்த பல வன்செயல்களுக்கு உண்மைக் காரணமானவர்களை இனங்காணும் நிலை அங்கு இன்னும் உருப்படியாக இல்லை.

அரசும் வன்முறைகளைச் செய்கிறது தூண்டி விடுகிறது.துரோகக் கும்பல்களும் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டு உளவு அமைப்புக்கள் வன்முறைகளைச் செய்கின்றன அல்லது தூண்டி விடுகின்றன. போராளிகளும் வன்முறைகளைச் செய்கின்றனர்.அப்படி இருக்கும் போது ஒரு வன்முறைக்கு, எப்படி இவர்கள் தான் காரணம் என்று ஒரு தரப்புச் சொல்லும் அல்லது விடும் அறிக்கைகளை மையமாக வைத்து உண்மைகளை உணர்த்த முடியும். இவை திசை திருப்பல்களுக்காகக் கூட செய்யப்படலாம். அதனால் ஆதாரமற்ற நடுநிலை விசாரணைகளுக்கு அப்பாலான எந்தக் குற்றச்சாட்டுக்களையும் நாம் இங்கு ஒரு தரப்பின் மீது குற்றம் சாட்ட அனுமதிக்க முடியாது தானே.

விடுதலைப்புலிகள் மீதே அநேக வன்முறைகளுக்கு உடனடியாக குற்றம் சுமத்தப்பட்ட போதும் பின்னர் பல வன்முறைகளுக்கு பின்னால் அரசக் கூலிக்கும்பல்கள் மற்றும் புலனாய்வுத்துறையின் செயற்பாடுகள்.. வெளிநாட்டு உளவு அமைப்புகளின் செயற்பாடுகள் இனங்காணப்பட்டுள்ளன. குறிப்பாக சிங்கள அரசியல் தலைவர்கள் பலர் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி அரச கூலிக் குழுக்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்..! ஏன் ராஜீவ் காந்தி கொலையில் கூட வெளிநாட்டு உளவு அமைப்புக்களின் உள்ளூர் அரசியல்வாதிகளின் பங்களிப்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன..! எனவே ஒரு சம்பவம் தொடர்பில் இதுதான் உண்மை என்று சொல்ல முற்படும் போது அவை தொடர்பான ஆதாரங்களை இங்கு முன்வைத்து எழுதின் அதை நாம் அனுமதிக்கத் தயங்கோம்.

ஆனால் உண்மை என்று ஒரு சிலர் தங்கள் தேவைகளுக்கு என்று தாங்களே தீர்மானித்ததை இங்கு எழுதி தங்கள் காழ்புணர்ச்சிகளைக் கொட்ட அனுமதிப்பது கருத்தியல் சுதந்திரம் என்பதற்கு அப்பாலானது..!

நன்றி சீனு உங்கள் பதிவுக்கு.

Tue Nov 20, 02:51:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க