Thursday, November 08, 2007

"காதலியை" கொன்று தின்றான் "காதலன்".



காதலனால் கொன்று தின்னப்பட்ட காதலி (2004 இல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்)

மனிதன் தன்னை அடிக்கடி மோசமான விலங்கு என்று நிரூபிக்கத்தவறுவத்தில்லை.

அந்த வகையில் பிரித்தானிய நாட்டில் காவல்துறையின் பிடியில் இருந்து தப்பி ஸ்பெயின் சென்ற காதலன் - Paul Durant (வயது 47) அங்கு சந்தித்து தனது காதலியாக்கிக் கொண்ட கிழக்கு லண்டன் இல்பேட் என்ற இடத்தைச் சேர்ந்த காதலியை- Karen Durrell (வயது 41)விளையாட்டு உபகரணம் கொண்டு அடித்துக் கொன்று விட்டு அவளின் உடற் பாகங்கள் சிலவற்றை உண்டு மகிழ்ந்து மீதியை குப்பைக்குள் போட்டுள்ளான்.

குறித்த பெண்ணைக் காணாது ஸ்பெஸின் காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட காதலன் தற்போது சிறையில் இருந்து கொண்டு பத்திரிகைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தான் காதலியைக் கொன்று அவளின் உடற்பாகங்கள் சிலவற்றை தின்ற செய்தியை வெளியிட்டுள்ளான்.

இப்படியெல்லாம் செய்ததாகச் சொன்ன காதலனுக்கு நீதிமன்ற விசாரணை முடிவில் அவன் காதலியை கொலை செய்யும் நோக்கில் தாக்கவில்லை என்று கூறி வெறும் 12 வருடங்களும் 9 மாதங்களும் சிறைத்தண்டனை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

விநோதமானதும் பயங்கரமானதுமான உலகமாப் போச்சு.

செய்தி ஆதாரம் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 9:58 PM

2 மறுமொழி:

Blogger துளசி கோபால் செப்பியவை...

கொன்னாப்பாவம் தின்னாப்போச்சு......


இங்கே ஆஸியிலேயும் மனைவியை ஒருத்தர் இப்படிக் கொன்னுட்டார். அவர் மகன் 'துண்டுகள்'போட உதவுனாராம்(-:

Thu Nov 08, 10:42:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

பழைய படி மனிதன் கற்காலத்துக்குப் போறானோ...??! நரமாமிசம் உண்ணப்பழகுகிறான்..??! :)

Fri Nov 09, 07:38:00 AM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க