Sunday, December 02, 2007

இந்தியாவை மலேசியத் தமிழ் மக்கள் நம்பலாமா..??!



நீண்ட காலமாக சிறுகச் சிறுக வளர்ந்து வரும் மலேசியப் பொருளாதாரம். அதில் தமிழர்களின் பங்களிப்பும் கணிசமான அளவில் உண்டு.

தென் ஆசிய நாடுகளுக்கும் (இந்தியா உட்பட்டவை) தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் (மலேசியா சிங்கப்பூர் உட்பட்டவை) எப்பவும் கொள்கை அளவில் ஒத்துப் போறதில்லை. காரணம் ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பொருளாதாரப் போட்டா போட்டியே.

மலேசியாவில் தமிழர் விவகாரத்தை இந்தியா தனது பொருளாதார நலன் கருதி தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறதே தவிர அங்குள்ள தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் அதற்கு எள்ளளவும் கரிசணை கிடையாது என்பதே உண்மை. எப்படி ஈழத்தமிழர் விவகாரத்தில் ஆரம்பத்தில் தனது பிராந்திய நலன் வேண்டி ஆதரவளித்ததோ அப்படி.. இதையும் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சாதமாக்கும் வகையிலும் மலேசியாவை ஒரு அரசியல் சாதகமற்ற தளமாக்கி சர்வதேசத்துக்குக் காட்டவும் முதலீட்டாளர்களுக்குக் காட்டவும் இந்தியா இதை கையாள எண்ணியுள்ளது. அதை தமிழக சாக்கடை அரசியல்வாதிகளூடு செய்ய முனைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள தமிழர் அக்கறையில்லாத கட்சிகளே அதாவது காங்கிரஸ் கட்சி கூட இது விவகாரத்தில் முண்டியடித்து அறிக்கை விட்டதும் இந்திய மத்திய அரசின் சூழ்ச்சி வெளிப்பட்டது.

அண்டை ஈழத்தில் தமிழர்கள் சிங்களப் பயங்கரவாத அரசின் வன்முறைக்கு தினமும் இறக்கிறார்கள்.. இலங்கை மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்கள் சிறீலங்கா அரச படைகளால் வகைதொகையின்றிக் கைதாகிறார்கள்.. அங்கெல்லாம் மெளனம் காத்ததுடன் சிறீலங்கா அரசுக்கு ஆயுத மற்று பொருளாதார உதவி செய்யும் இந்திய மத்திய அரசுக்கு என்னடா திடீர் பாசம் மலேசிய தமிழ் மக்கள் மீது என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டு மயங்கி விழும் நிலைக்குப் போய்விட்டார்கள்..!



சமீப காலமாக அசுர வளர்ச்சி கண்டு வரும் இந்தியப் பொருளாதாரம். முதலீட்டாளர்களை தன்னை நோக்கி இழுக்க வேண்டிய அதிக தேவை.

ஆனால் இந்தியாவின் சூழ்ச்சி என்பது அதன் பொருளாதார போட்டியாளர்களின் சரிவை வேண்டுவதும் தன்னை நோக்கி முதலீட்டாளர்களை இழுப்பதும் தான். இந்திய மத்திய அரசும் ஏதோ தான் இந்த விவாகரத்தில் அக்கறையற்றவர் போல ஆரம்பத்தில் காட்டிக் கொண்டதும்.. பின்னர் தமிழகத்தில் இருந்து எழும் அழுத்தம் காரணமாக தான் தலையிடுவது போலவும் நல்ல நாடகம் ஒன்றை அரங்கேற்றியது.

மலேசிய தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அவர்கள் இந்தியாவை நம்பி நிச்சயம் பெற முடியாது. தமிழகத்தில் உள்ள ஒரு சில தமிழுணர்வு மிக்க அரசியல்வாதிகளைத் தவிர மிகுதியானோரின் ஆதரவுக் குரலென்பது மத்திய அரசின் சொல்லுக்கு ஏற்ப எழுவதும் அடங்குவதும் ஆகும். அவை போலியானவை. இந்திய அரசியல் மயமானவை. இவற்றை நம்பி மலேசிய தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பின் இந்தியா தனது நலன் பூர்த்தியாகும் வேளையில் மலேசிய தமிழர்களையும் ஈழத்தமிழர்களைப் போல பாவித்துவிட்டு தூக்கி எறிவது நிச்சயம் நடக்கும். இறுதியில் உள்ள உரிமைகளையும் இழந்து மலேசிய தமிழ்மக்கள் மலேசிய அரசிடம் சரணாகதி அடையும் நிலையையே இந்தியா தோற்றுவிக்கும். இதற்காக மலேசிய அரசுடன் நெருங்கிச் சென்று வியாபாரம் பேசவும் இந்தியா தயங்காது. தன்னை நோக்கி பொருளாதார முதலீடுகளைக் கவர மலேசியாவுடன் ஒப்பந்தங்களை இயற்றவும் அதற்கான சந்தர்ப்பங்களை தேடவும் அதன் மூலம் தனது பொருளாதார வளர்ச்சிக்கு இவ்விவகாரத்தைப் பயன்படுத்தவுமே இந்தியா முயற்சிக்கும்.

எனவே மலேசிய தமிழ்மக்கள் தங்கள் உரிமைகளை தாங்களே போராடிப் பெற முனைவதுடன் யாரையும் முழுமையாக நம்பி அவர்களின் வழிநடத்தலின் பெயரில் போராட்டங்களை தீர்மானிக்கக் கூடாது. மலேசிய அரசை விட இந்தியா ஆபத்தானது என்பதை மலேசிய தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவு கூட மலேசிய தமிழ் மக்கள் இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் என்ற நிலையில் நின்று எழுந்ததிலும் இந்திய மத்திய அரசின் ரகசிய குரலுக்கு அமைய எழுவதே அதிக சாத்திமானது. எனவே மலேசியத் தமிழ் மக்கள் தங்கள் போராட்டத்துக்கான ஆதரவை இந்தியாவை முழுமைக்கும் நம்பி ஏற்படுத்திக் கொள்வது மலேசிய அரசிடம் சரணாகதி அடைவதற்குச் சமனானது.

மலேசிய மக்கள் தமது அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை சர்வதேச மயப்படுத்துவதுடன் உலகத்தமிழினத்தின் ஆதரவை அதற்கு வேண்டிச் செயற்படுவது இந்தியாவையும் மலேசியாவையும் இவ்விடயத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் அக்கறை செய்ய அதிகம் வறுபுறுத்தும். இன்றேல் அவர்கள் தங்கள் சுயநலன்களை கவனிப்பதற்காக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது போல நாடகமாடிக் கொண்டே அவற்றைச் சீரழித்துவிடுவார்கள்..! இதுவிடயத்தில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடக்கும் அறிக்கைப் போரை நம்பி.. மலேசிய தமிழ் மக்கள் ஏமாந்தும் விடக் கூடாது. இந்தியா மலேசியாவை விட சூழ்ச்சி மிக்க நாடு..! இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்கு விரோதமான அரசு. அதை அவர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் தெளிவுறக் காட்டிவிட்டுள்ளனர்...!

மலேசிய தமிழ் மக்களின் போராட்டம் நியாயமானது. அதை சர்வதேச அரங்கிற்கு உலகத் தமிழர்களின் ஆதரவுடன் வெளிப்படுத்தும் அதேவேளையில் எந்த அரச சக்திகளையும் முழுமையாக நம்பி விடயங்களைத் தீர்மானிக்காமல் தங்களின் உரிமைகள் தொடர்பில் தேவைகள் தொடர்பில் தாங்களே விடயங்களைத் தீர்மானிப்பதே சிறந்தது. போராட்ட வெற்றிக்கு வகை செய்யும். அரசுகளுக்கு உண்மையான அழுத்தங்களை வழங்கும்.

யாழ் இணையத்தில் இருந்து பெற்றது.

பதிந்தது <-குருவிகள்-> at 9:28 AM

8 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

நல்லதொரு அலசல்.

Sun Dec 02, 09:51:00 AM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

கலைஞரின் ஒரு கடிதத்திற்கு இத்தனை பில்ட்டப் தேவையில்லாதது....

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது மாதிரியிருக்கிறது உங்களின் பதிவு...

Sun Dec 02, 09:56:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

இரண்டாம் சொக்கன்.. இந்தியாவின் தமிழ் மக்களுடனான உறவு என்பது மிகப் பலவீனமானதாகவே உள்ளது. அதுமட்டுமன்றி இந்தியாவின் நகர்வுகள் அமெரிக்க வல்லாதிக்கத்தின் நகர்வுகளை ஒத்தது என்பதை பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு அது அளித்த ஆதரவும் பின்னர் அதனை ரகசியமாக முடக்கி வைத்ததும் அடங்கும். இதையே ஈழத்தமிழர் விவகாரத்திலும் செய்தது. மலேசியத் தமிழ் மக்களின் விவகாரத்திலும் செய்யப் பின் நிற்காது.

எனவே பெறுமதி மிக்க ஒரு போராட்டத்தை மக்களின் அடிப்படை உரிமைகளை வேண்டி நடக்கும் ஒரு போராட்டத்தை இந்தியாவை நம்பி சீரழிப்பது நல்லதல்ல என்பதனை நோக்கிய மேற்குறித்த பதிவு அமைகிறது என்று நினைக்கிறேன்.

இந்தச் செய்தியையும் பாருங்கள்..

------------

மலேசியர்கள் குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை - மலேசிய அமைச்சர்

கோலாலம்பூர்: இந்தியர்களைப் பற்றி மட்டுமே இந்தியா கவலைப்பட வேண்டும். மலேசியர்கள் குறித்து அது கவலைப்படக் கூடாது, அது தேவையற்றது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் கூறியுள்ளார்.

மலேசியத் தமிழர்கள் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதைக் கண்டித்து மலேசிய அமைச்சர் ஒருவர் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், மலேசிய தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து மலேசிய அரசுடன் பேசப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.

இந்தியாவின் இந்த கருத்துக்கு மலேசியா வெளியுறவு அமைச்சர் அல்பார் கண்டனம் ெதரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தி ஸ்டார் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியா தனது உள்நாட்டு விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தினால் நல்லது. மலேசியர்கள் குறித்தும், மலேசிய விவகாரங்கள் குறித்தும் அது கவலைப்படத் தேவையில்லை.

எங்களது நாட்டுப் பிரச்சினைகள் குறித்து, எங்களது நாட்டுச் சட்டப்படி நாங்கள் தீர்த்துக் கொள்வோம்.

இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்திய அரசு, இந்தியர்கள் குறித்துக் கவலை தெரிவித்தால் அது பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அவர்கள் மலேசிய குடிமக்கள் குறித்துக் கவலைப்படுகிறார்கள். அது தவறானது.

மலேசிய குடிமக்களாக இருப்பவர்கள் - அவர்கள் எந்த நாட்டைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் சரி - மலேசியாவின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும்.

இந்தியாவில் இருப்பவர்களை விட மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் நன்றாக வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை.

சட்டத்தை மீறி நடக்க முயன்றால், நாங்கள் அதை தடுக்கத்தான் செய்வோம்.

தட்ஸ் தமிழில் வந்திருக்கிறது.

Sun Dec 02, 10:05:00 AM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

மலேசிய அமைச்சரின் பேட்டி நியாமானதும், வரவேற்க தக்கதுமாகும்.

அதே நேரத்தில் மலேசிய போராட்ட குழுவின் பிரதிநிதிகள் கடந்த இரு தினங்களாய் தமிழக அரசியல்வாதிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவதாக செய்திகள் வருகின்றனவே அதை தடுத்திருக்கலாமே...

Sun Dec 02, 12:32:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

"இவற்றை நம்பி மலேசிய தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பின் இந்தியா தனது நலன் பூர்த்தியாகும் வேளையில் மலேசிய தமிழர்களையும் ஈழத்தமிழர்களைப் போல பாவித்துவிட்டு தூக்கி எறிவது நிச்சயம் நடக்கும். இறுதியில் உள்ள உரிமைகளையும் இழந்து மலேசிய தமிழ்மக்கள் மலேசிய அரசிடம் சரணாகதி அடையும் நிலையையே இந்தியா தோற்றுவிக்கும். "



இது மலேசியத் தமிழருக்கு சொல்லப்பட்ட வைர வரிகள்.

மலேசியத்தமிழர்களே!! இந்தப் போராட்டத்தை உங்களால் தனித்து எடுத்துச் செல்ல முடிந்தால் தொடர்ந்து போராடுங்கள்!!.
இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் (பெரும்பாலும் மலையாளிகள்)
தமிழர்களின் நலன் குறித்து அதிகம் அக்கறைப்படப் போவதில்லை.

புள்ளிராஜா

Sun Dec 02, 01:17:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

அனானிமஸ் என்ற நிலையில் வந்து தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து எழுதப்பட்ட பின்னூட்டல் தமிழ்மண விதிக்கமையவும் எமது வலைப்பூ விதிக்கமையவும் அகற்றப்பட்டுள்ளது.

இரண்டாம் சொக்கன் மற்றும் அனானிமஸின் கருத்துக்களுக்கு நன்றிகள்.

Sun Dec 02, 07:52:00 PM GMT  
Blogger சீனு செப்பியவை...

மலேசிய தமிழ் மக்கள் இந்தியாவை நம்ப வேண்டாம். இப்பொழுது மட்டும் என்ன தேவை இந்தியாவின் கரிசனமும் / உதவியும்.

Mon Dec 03, 07:12:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

......பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு அது அளித்த ஆதரவும் பின்னர் அதனை ரகசியமாக முடக்கி வைத்ததும் அடங்கும்....

அண்மையில் இந்திய றோ உளவுத்துறையில் இருந்து இளைப்பாறிய பி.ராமன் எழுதிய புத்தகத்தில் தாம் இந்திரா காந்தி காலத்திலேயே இஸ்ரேலுடன் உறவு (கள்ள) வைத்திருந்த்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறார்!!!!!
மலேசியத்தமிழர்களே இந்தியாவை நம்பவேண்டாம்!!!!

Wed Dec 05, 07:29:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க