Friday, December 07, 2007

இராமர் மற்றும் அனுமர் எங்கிருந்தாலும் கோட்டுக்கு வரவும்.



இராமரும் அனுமரும் - அடையாள அட்டை.

இராமர் மற்றும் அனுமரை வழிபடும் கோயில்கள் இருக்கும் நிலம் மற்றும் அந்தக் கோயில்களின் சொத்துரிமை தொடர்பான வழக்கு ஒன்றின் படி இராமருக்கும் அனுமருக்கும் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு அவர்கள் மதிப்பளிக்கத் தவறியதால் அவர்கள் இருவரையும் தனித்து நீதிமன்றத்துக்கு சமூகமளிக்க பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

நவ பாரத தேசத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இந்த அதிசய நீதித்துறை அணுகுமுறை நடந்தேறியுள்ளது..!



இதுதான் இராமருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் இராமர் குடியிருக்கும் கோயில்.

"You failed to appear in court despite notices sent by a peon and later through registered post. You are herby directed to appear before the court personally", Judge Singh's notice said

மேலதிக தகவல் இங்கு.

-------------

இலட்சக் கணக்கான வழங்குகள் நிலுவையில் இருக்க.. மக்கள் நீதிக்கு இடமின்றி தவிக்க.. இப்படியான அதிசய வழங்குகளை மட்டும் இந்திய நீதித்துறை விரைந்து விசாரிக்கும் நீதிமன்றங்களின் கீழ் விசாரிக்கிறதாம்..!

ஒருவேளை இராமரும் அனுமரும் பத்திரிகை விளம்பரத்துக்கும் மசியல்லைன்னா என்னாகும். இருவரும் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கோவில்களில் குடியிருப்பது உட்பட இந்தியாவில் குடியிருக்க தடை வரலாம் போலிருக்கே.

எங்கையோ போயிட்டுக்காங்கப்பா நம்ம இந்தியக் குடிமக்கள்...!

தமிழில் யாழ் இணையம்.

பதிந்தது <-குருவிகள்-> at 12:00 PM

4 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

மக்களுக்குத்தான் சிந்தனை இல்லைன்னா நீதிபதிக்குமா?!

Fri Dec 07, 12:30:00 PM GMT  
Blogger புரட்சி தமிழன் செப்பியவை...

இதுதான் மக்களை சிந்திக்க வைக்க ஒரு சிறந்த வழி நீதிபதி இங்கதான் சிந்திச்சி இருக்கார் எல்லா பக்த்தர்களும் ராமன கேப்பாங்க இல்லையா ஏன் கோர்ட்டுக்குவரலைனு ராமன் இருந்தா கோர்ட்டுக்கு வந்து சொல்லப்போறார் வரலைனா ராமன் என்று ஒருவரே இல்லைனு முடிவுப்ண்ணிடுவாங்க

Fri Dec 07, 03:03:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

//இதுதான் மக்களை சிந்திக்க வைக்க ஒரு சிறந்த வழி நீதிபதி இங்கதான் சிந்திச்சி இருக்கார் எல்லா பக்த்தர்களும் ராமன கேப்பாங்க இல்லையா ஏன் கோர்ட்டுக்குவரலைனு ராமன் இருந்தா கோர்ட்டுக்கு வந்து சொல்லப்போறார் வரலைனா ராமன் என்று ஒருவரே இல்லைனு முடிவுப்ண்ணிடுவாங்க//

ஏதோ இப்ப மக்கள் கூப்பிட ராமர் வாறது போலவும் நீதிபதி புதிசா சுட்டிக்காட்டித்தான் கூப்பிட்டாலும் ராமர் வரமாட்டார் என்று சொல்லனும் என்பது அப்பாவித்தனமா இருக்குது.

தாங்க வணங்கேக்கையே எப்பவுமே நேரில வராத இராமர் அவதாரம் எடுக்கேக்க தான் வருவார் என்பதை மக்கள் சர்வ சாதாரணமாவே அறிஞ்சிருக்கேக்க.. அந்த மக்கள் சிந்திப்பார்கள் நீதிபதிக்குத்தான் லூசு என்று. இல்லையா புரட்சித் தமிழன்.:)

Fri Dec 07, 03:52:00 PM GMT  
Blogger சீனு செப்பியவை...

அட ராமா!

Fri Dec 07, 05:13:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க