Tuesday, December 11, 2007

பிரிட்டனின் தமிழீழ அக்கறையும் இந்தியாவின் அதிகாரப் பரவலாக்கமும்.



விடுதலைப்புலிகள் முன்வைத்துள்ள தனிநாட்டுக் கொள்கையான ஈழக் கோரிக்கை சட்டவிரோதமானதல்ல. ஆனால் விடுதலைப்புலிகள் அதை அடைய கையாளும் சில வழிமுறைகள் சரியானதாகத் தென்படவில்லை என்று தெரிவித்துள்ள சிறீலங்காவுக்கான பிரிட்டன் தூதுவர் சிறீலங்கா அரசு மனித உரிமைகள் விவகாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த மறுப்பின் அனைத்துலகத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று மேலும் எச்சரித்துள்ளார்.

UK: "Eelam demand not illegitimate, but LTTE tactics unacceptable"

[TamilNet, Monday, 10 December 2007, 22:10 GMT]

The British High Commissioner to Sri Lanka, Dominick Chilcott, said Monday that whilst his country condemned the tactics of the Tamil Tigers, it did not consider the demand for an independent Tamil Eelam as illegitimate. He also warned the Sri Lankan government it risked international sanctions if Colombo did not improve its human rights record.

மேலதிக தகவல் இங்கு.

பிரிட்டன் தூதரின் உரையின் படி அமைந்த தமிழ் வடிவச் செய்தி.

சிறீலங்காவுக்கான பிரிட்டன் தூதுவரின் இப்பேச்சில் இந்திய சார்பு என்பது நிலையெடுத்திருக்கிறது இருப்பினும் பிரிட்டனின் நிலைப்பாடு இந்தியாவினதும் அமெரிக்காவினதும் ஐக்கிய இலங்கை என்ற நிலைக்கு அப்பாலும் சென்று தீர்வைப் பற்றிச் சிந்திக்கத் தயங்கவில்லை. அது தனிநாடு என்ற எல்லை வரை விரிவது முக்கியமான ஒரு விடயமே..!

சிறீலங்காவின் அரசியலமைப்பின் 13வது சரத்துத் திருத்தத்தை பகுதியாக பெயரளவில் அமுல்படுத்தி மட்டுப்படுத்திய பெயரளவிலான அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணத்தை (சட்ட ரீதியாக ஏலவே பிரிக்கப்பட்டாயிற்று) மிதவாதத் தமிழர்கள் (இந்திய அரசின் மிதவாதம் என்பது புலியெதிப்பு என்பதே. புலியை எதிர்ப்பவர்கள் பலர் முழு நேரக் கொலைக் கும்பல்களை நடத்தும் தமிழின இனத் துரோகிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) என்று நாமம் சூட்டப்பட்ட அரசு ஆதரவுக் குழுக்களிடம் கையளித்தல் என்ற இந்தியாவின் திட்டத்தை பிரிட்டன் தூதுவரும் தனது பேச்சில் உள்வாங்க தயங்கவில்லை.

வரவிருக்கும் இந்திய தயவு தீர்வில்... வடக்குக் கிழக்கு பெயரளவில் இணைந்த மாகாணமாக இருக்க.. நிர்வாகம் பிரிக்கப்பட இருக்கிறது. வடக்கு நிர்வாகம் டக்கிளசிடம் போக கருணா நாட்டை விட்டு ஓடிவிட்டதால் கிழக்கின் முதன்மைப் பொறுப்பை பிள்ளையானிடம் ஒப்படைத்து இவர்களுக்கு தலைவராக ஆனந்த சங்கரியை நியமிப்பதும் முஸ்லீம்களையும் சிங்களவர்களையும் இவர்களுக்கு கைத்துணைக்கு வைத்து விட்டு தங்கள் இராணுவ ஆதிக்கத்தின் கீழ் பேரினவாத அதிகாரங்களை தமிழர் தேசத்தில் நிலைநிறுத்த முனைகிறது சிங்களப் பேரினவாத அரசு. இதற்கு பெயர் மிதவாதத் தமிழர்களுடன், அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய ஆட்சி அதிகாரத்தைப் பரவல் செய்து தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் ஆட்சியை ஒப்படைத்தலாகும்.

பிரிட்டனுக்கு என்ன உலகுக்கே தெரியும் விடுதலைப்புலிகளை நேரடியாகப் பகைத்துக் கொண்டு இந்தியாவும் தாங்களும் விரும்புவதை நிறைவேற்ற முடியாது என்று. எனவே விடுதலைப்புலிகளுக்கும் சில விடயங்களைச் சொல்லி உங்களை இக்காரணங்களால் தான் நாம் மிதவாதத் தமிழர்களாகக் கருதவில்லை எனவே நீங்கள் மிதவாதிகளாக மாறினால் நாம் அப்புறம் உங்களின் ஈழம் பற்றியும் அக்கறை செய்யலாம் என்பது போல ஒரு அறிக்கையை விடுவது. மிதவாத நிலைக்கு விடுதலைப்புலிகள் மாறின் ஈழத்தை வலியுறுத்தும் நிலையை அவர்கள் இழப்பார்கள் என்பது இந்தியாவின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.

எது எப்படி இருப்பினும் இந்த உரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய விடயம் அது இந்தியாவால் நிராகரிக்கப்பட்டு வரும் விடயம். அதுதான் தமிழீழக் கொள்கையும் தமிழீழத்துக்கான சாத்தியப்பாடும். இது பிரிட்டனும் இந்தியாவும் ஒரே விடயத்தில் இரண்டு வேறுபட்ட பரிமானங்களூடு நகரக் கூடிய நிலைகளை கொண்டுள்ளன என்பதை தெளிவாக எடுத்துச் சொல்கிறது. பிரிட்டனின் இந்த அறிவிப்பை.. எமக்கு வலுவாக்குவதன் மூலம் எமது ஈழக் கோரிக்கையை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்த நாம் வழிவகை செய்யலாம். சர்வதேசம் எதிர்பார்க்கும் சில மாற்றங்களை (தமிழ் தரப்பின் பாதுகாப்பு மற்றும் பேரம் பேசும் பலத்தை பாதிக்காத வகையில்) முன்னெடுத்து பிரிட்டனின் கூற்றுக்கள் தொடர்பில் ஒரு பரீட்சை வைத்துப் பார்க்கலாம். அதனூடு பிரிட்டனின் அணுகுமுறையை தெளிவாக இனங்காட்டவும் இனங்காணவும் செய்ய முடியும்.

இதனால் தமிழர் தரப்பு எதிர்பார்க்கும் தீர்வு தனிநாடு என்பதை உலகம் ஏற்கக் கூடிய வகையில் நாம் அவர்களின் முன் நியாயங்களை சொல்ல வலுவான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இது விடயமாக உலகின் கரிசணையை ஈழக் கோரிக்கைக்கு சார்பாக காட்டுகின்ற நிலை தோன்றின் இந்திய சார்பு, அரச சார்பு தமிழ் துரோகக் குழுக்களை மிதவாத குழுக்கள் என்று இனங்காட்டியபடி இந்தியா செய்யும் நகர்வுகளை முறியடிக்கலாம்.

அண்மையில் இலங்கையின் கிழக்கில் பிள்ளையான் குழு நடத்திய மக்களை வற்புறுத்தி செய்த ஆர்ப்பாட்டம் என்பது கூட பிள்ளையானை மிதவாதியாகக் காட்ட இந்திய உளவுத்துறையும் சிறீலங்கா அரசும் மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கையே அன்றி வேறல்ல..! இது மீண்டும் 1987 இந்திய ஆக்கிரமிப்பின் பின்னான சூழலை ஞாபகப்படுத்துவது மட்டுமன்றி சிங்கள இனவாதத்தின் பெரும் சூழ்ச்சிக்குள் மீண்டும் தமிழரின் தாயகத்தை சிக்க வைக்கப் போகிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

பிரிட்டன் தூதுவரின் பேச்சு.. தமிழர் தரப்புக்கு ஒரு சிக்னலாக வந்துள்ளதே தவிர.. அது எதனையும் உத்தரவாதமளித்துச் சொல்லவில்லை. ஆனால் சிறீலங்கா அரசின் இந்திய சார்பு அணுகுமுறைகளை பிரிட்டன் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நாம் இப்பேச்சில் இருந்து இனங்காண முடிவதுடன் இந்தியா நிராகரிக்கும் விடுதலைப்புலிகள் முன்வைக்கும் தனித் தமிழீழத்தை பிரிட்டன் ஏற்கிறது என்பது பிரிட்டனும் இந்தியாவும் இரண்டு முனைகளூடு நகரக் கூடிய நிலைப்பாட்டை எமக்கு இனங்காட்டி நிற்கிறது.

விடுதலைப்புலிகளிடம் அதிகம் ஜனநாயகப் பண்புகளை சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறதே தவிர அவர்களை ஆயுதக்களைக் கைவிடச் சொல்லவில்லை. விடுதலைப்புலிகளின் சில வன்முறை வடிவங்கள் உள்ளிட்ட சில ஜனநாயக விரோதப் பண்புகள் (தற்கொலைத் தாக்குதல்கள்.. பொதுமக்கள் மீதான இலக்கு வைத்த தாக்குதல்கள்.. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மீதான அக்கறை.. பல கட்சி அரசியலுக்கான உத்தரவாதம் (துரோகக் கும்பல்களின் செயற்பாடுகளை அரசியலாகக் கருத முடியாது என்பதை உலகுக்கு சரிவரச் சொல்ல வேண்டும்)மற்றும் பிரிட்டனுக்கு வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் அமையும் சிறுவர் படையணிக்கு ஆட்சேர்ப்பு.. கட்டாய நிதி சேகரிப்பு)தொடர்பில் பிரிட்டன் மட்டுமன்றி சர்வதேச சமூகம் கவலைகளை அடிக்கடி வெளியிட்டு வருவது வெளிப்படையானது. இவை விடுதலைப்புலிகளுக்கும் தெரியும். இது தொடர்பில் விடுதலைப்புலிகள் சர்வதேசத்துக்கு விளக்கமளிப்பதுடன் அவர்கள் நம்பும் படி மாற்றங்களை அல்லது உறுதிமொழிகளை வழங்கும் போது.. சர்வதேசத்தின் இந்த அறிவிப்புக்களின் பின்னணியில் அமையக் கூடிய அணுகுறை மாற்றங்கள் உண்மையானவையா அல்லது வெறும் அறிக்கைக்குரியவையா என்பதை இனங்காண முடியும்.

எந்த வகையிலும் சிறீலங்காவையோ இந்தியாவையோ சர்வதேசத்தையோ 100% நம்பி காரியங்களில் இறங்கக் கூடாது. விடுதலைப்புலிகளின் பலம் என்பது குன்றாத நிலை இருக்கும் வரையே அவர்களின் மீதான அக்கறை இத்தரப்புகளிடம் இருக்கும். விடுதலைப்புலிகளிடம் மாற்றங்களை எதிர்பார்க்கும் சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளைப் பலவீனப்படுத்தக் கூடிய நகர்வுகளையும் ஒருங்கே கொண்டு செல்வதானது சர்வதேச சமூகத்தை இலகுவில் நம்ப முடியாது என்பதை தெளிவாகக் காட்டி நிற்கிறது. இந்தியாவுடனான கடந்த காலப் பாடங்கள் இதில் புலிகளுக்கு இராஜதந்திரக் காய்நகர்த்தலைச் செய்ய உதவும்.

தலைவரின் மாவீரர்தினப் பேச்சுக்கு முதன்மை அளிக்கப்பட்டிருப்பது பிரிட்டனின் தூதுவரின் பேச்சில் அடங்கி இருப்பினும் தூதரின் பேச்சுக் குறித்த நம்பிக்கை என்பது தமிழர் தரப்பை திருப்திப்படுத்தும் படி முழுமை பெறவில்லை..!

மொத்தத்தில் சர்வதேச சமூகம் தமிழர்களின் தனிநாட்டு நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது. ஐக்கிய இலங்கை என்ற நிலைக்கு வெளியில் அவர்கள் தங்கள் பார்வையை முதன்முறையாக நகர்த்தி வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்திருப்பதை வரவேற்க வேண்டும். அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை இதர (பிராந்திய நாடுகளின், சிங்களப் பேரினவாதத்தின்) அரசியல் இராணுவ நகர்வுகளுக்கு ஏற்பவே விடுதலைப்புலிகளாலும் வழங்க முடியும் என்பதை சர்வதேசத்துக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் சாரும்.

உலகில் எமக்கென்றான நேரம் எனித் தோன்றலாம். அதற்கான வாய்ப்பும் சூழலும் எழுகின்ற போது அதைப் பயன்படுத்த பிந்நிற்கக் கூடாது. தமிழ் மக்களும் விடுதலைப்புலிகளின் நகர்வுகளுக்கு முழுமையான ஆதரவையும் பங்களிப்பையும் அளிக்க வேண்டியது இவ்வேளையில் புலிகளைப் பலவீனப்படுத்த நினைக்கும் நகர்வுகளை முறியடித்து உலக அங்கீகாரமுள்ள சுதந்திர தமிழீழத்தை தமிழர்கள் பெற வழி செய்யும் என்றால் அது மிகையல்ல..!

தமிழில் யாழ் இணையம்.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 6:39 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

காலத்துக்குகந்த நல்ல பதிவு.

Tue Dec 11, 07:25:00 AM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க