Friday, January 11, 2008

விடுதலைப் புலிகளே உலகின் மிக மோசமான கடும்போக்காளர்கள் - FBI



அமெரிக்க உளவு அமைப்புக்களில் ஒன்றான FBI அதன் இணையத்தளத்தில், அல்குய்டை.. கமாஸ்.. கிஸ்புல்லா போன்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை விட மிக மோசமான பயங்கரமான அமைப்பு விடுதலைப்புலிகள் என்று தனது செய்திக் குறிப்பொன்றில் கூறியுள்ளது.

புலிகளின் கரும்புலிப்படையை முதன்மைப்படுத்தி இந்த நிலையை வெளியிட்டிருக்கும் எவ் பி ஐ..

* புலிகளே தற்கொலைத்தாக்குதல் மூலம் உலகத் தலைவர்களில் இருவரைக் கொன்றுள்ளனர்

* மிகவும் நேர்த்தியாக தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்

* உடலில் கட்டி வெடிக்கச் செய்யும் தற்கொலைப் பட்டியை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளனர்

* பெண்களை தற்கொலைப்படைக்கு பயன்படுத்தியதில் முதன்மையானவர்கள்.

* கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 4000 பேரைக் கொன்றுள்ளனர் (சிறீலங்கா அரச படைகள் கொல்லவில்லையாம்..!)

என்று காரணங்களை அடுக்கியுள்ளனர்.

அதுமட்டுமன்றி அமெரிக்காவில் "பிறாட்" செயல்களில் ஈடுபட்ட பல புலிகளை தாம் கைது செய்துள்ளதாகவும் எவ் பி ஐ அறிக்கை தெரிவிக்கிறது.

-----------------------

இந்த அறிக்கைக்குப் பின்னால் அமெரிக்காவின் சர்வதேசக் கொள்கைகள் சில அது எதிர்பார்த்த வடிவில் நிறைவேறாததன் தாக்கம் இருக்கிறது.

அமெரிக்காவின் ஈராக் மீதான் படையெடுப்பின் எண்ணமும்.. ஆப்கானிஸ்தானில் தான் நினைத்ததைச் செய்ய முனைந்த திட்டங்களும்.. பாகிஸ்தானில் தான் சாதிக்க நினைத்தவையும்.. தற்போது தற்கொலைத் தாக்குதல் என்ற தீவிரவாதிகளின் முதன்மைத் தாக்குதல் யுக்தியால் முழுமையாக எட்டப்பட முயவில்லை என்ற ஆதங்கமே மேற்குலகு புலிகளின் போராட்ட நியாயத்தை மறைத்து புலிகளின் தாக்குதல் யுக்திகளை முதன்மைப்படுத்தி அவர்களைப் பயங்கரவாதிகள் என்று உச்சரிக்க காரணமாகும்..!

அமெரிக்க எவ் பி ஐ வெளியிட்ட தகவலின் படி பார்த்தால் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கொலைகளுக்கு றோ மற்றும் சிறீலங்கா உளவு அமைப்பினர் மட்டுமன்றி அமெரிக்க உளவு அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. காரணம்.. சர்வதேச மன்னிப்புச் சபை.. மனித உரிமைகள் அமைப்புக்கள் இக்கொலை தொடர்பில் சிறீலங்கா படைகளையும் குற்றம் சாட்டி வரும் வேளையில் அமெரிக்க எவ் பி ஐ மட்டும் புலிகளின் மீது இக்கொலைகளுக்கான பழியைப் போட முனைவதும்.. அதனையும் ஒரு காரணமாக்கி அவர்களைப் பயங்கரவாதிகள் என்று காட்ட முனைவதும்.. இக்கொலைகளின் பின்னணியில் அமெரிக்க உளவு அமைப்புக்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது செய்துள்ளது..!

இந்த அறிக்கை தொடர்பில் உலகத் தமிழ் மக்கள் தங்கள் கண்டனங்களை தெரிவிப்பதோடு.. அமெரிக்காவின் செயற்பாடுகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருப்பதும் அவசியமாகிறது..! அமெரிக்கா புலிகள் அமைப்பின் சகல சர்வதேச நகர்வுகளையும் செயற்பாடுகளையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்து தசாப்தம் (10 ஆண்டுகள் - 1998 இல் அமெரிக்கா புலிகளைப் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் இட்டது.) கடந்த பின்னர் தான் இவ்வறிக்கை வெளிவந்துள்ளது. புலிகள் மிகவும் தந்திரமான வகையில் அமெரிக்காவின் சவாலை எதிர்கொள்ள உலகத் தமிழ் மக்களும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு சகல வழியிலும் ஒத்துழைக்க வேண்டும். அமெரிக்க உளவு அமைப்புக்கள் தமிழ் மக்களுடன் கலந்து தமிழ் மக்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை முறியடிக்கும் தந்திரோபாய வழிவகைகளை மக்கள் இனங்கண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டும். தமது செயற்பாடுகளின் ரகசியங்களை காக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.


-------------------------

LTTE is the Most Dangerous Terrorist Outfit in the World - FBI

The United States' top intelligence agency, Federal Bureau of Investigations (FBI) says that the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is the most dangerous and deadly extremist organization in the world. The official website of FBI in its tops story yesterday said that LTTE is far more dangerous terrorists outfit than al Queda, Hezbullah or even HAMAS. Following is the full text of the article published on the website, www.fbi.gov

TAMING THE TAMIL TIGERS

From Here in the U.S.

As terrorist groups go, it has quite a r,sum,:

* Perfected the use of suicide bombers;

* Invented the suicide belt;

* Pioneered the use of women in suicide attacks;

* Murdered some 4,000 people in the past two years alone; and

* Assassinated two world leaders-the only terrorist organization to do so.

No, it's not al Qaeda or Hezbollah or even HAMAS. The group is called the Liberation Tigers of Tamil Eelam (LTTE) or the Tamil Tigers for short.

Needless to say, the Tamil Tigers are among the most dangerous and deadly extremists in the world. For more than three decades, the group has launched a campaign of violence and bloodshed in Sri Lanka, the island republic off the southern coast of India.

Its ultimate goal: to seize control of the country from the Sinhalese ethnic majority and create an independent Tamil state. Along the way, it has launched suicide attacks, assassinated politicians (including a government minister this week and even the Sri Lankan President), taken hostages, and committed all of kinds of crimes to finance its operations. The resulting civil war has taken the lives of nearly 70,000 Sri Lankans on both sides of the conflict since 1983 alone.

Why should you care? Certainly because of the suffering and bloodshed that the Tamil Tigers have caused. And because its ruthless tactics have inspired terrorist networks worldwide, including al Qaeda in Iraq. But also because the group has placed operatives right here in our own backyard, discreetly raising money to fund its bloody terrorist campaign overseas, including purchases of weapons and explosives.

The U.S. government has designated the Tigers a foreign terrorist organization, so their activities here are illegal. And we're determined to stop them, using the full range of our investigative and intelligence capabilities.

In April, for example, we struck an important blow when our Joint Terrorism Task Force in New York arrested the alleged U.S. director of the Tigers. The man supposedly held several fundraising events at a church and various public schools in Queens and in northern New Jersey in 2004. He is also accused of arranging high-level meetings between the group's leaders and U.S. supporters.

We've also arrested another 11 Tamil Tiger-related suspects in the New York City region. And in Baltimore, following a multi-agency investigation, a pair of Indonesian men pled guilty and were sentenced recently for working with others to export surface to air missiles, state-of-the-art firearms, machine guns, and night vision goggles to the Tigers in Sri Lanka.

You can help by being careful with your donations. Like other terrorists, the Tigers have raised funds under a variety of cover organizations, often by posing as charities. A great deal of money, for example, was raised for the Tigers following the 2004 tsunami that devastated Sri Lanka and many other countries.

- FBI (USA)


- தமிழில் யாழிணையம்.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 3:42 PM

6 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

உலகின் மிகப்பெரிய கொலைகாரன் அமெரிக்கா தான் ஆனால் அது சட்டம் அரசு என்ற போர்வையில் உள்ளது அவ்வளவு தான்.

விடுதலைப்புலிகளின் போராட்டம் வாழ்க்கைக்கானது. தவிர்க்க இயலாதது. ஆயுத வியாபாரிகள் இந்த போரை முடிக்காமல் தொடர்ந்து நடத்தச் செய்வதன் மூலம் தனது வியாபாரத்தை சிறப்பாக நடத்திக்கொள்கின்றனர். இதனை அவர்கள் எழுதுவார்களா?

Fri Jan 11, 04:31:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

அமெரிக்கா என்ற ஆக்கிரமிப்பு உலகப் பயங்கரவாதியிட்டப் போய் நியாயம் கேட்க முடியுமா..??!

Fri Jan 11, 04:44:00 PM GMT  
Blogger இவன் செப்பியவை...

FBI அறிக்கையைவைத்து பார்க்கையில் அமெரிக்காவின் பார்வை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விழஆரம்பித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். புலிகள் அதிபயங்கரவாதில் அவர்கள் உலகத்தை இரண்டாக பிளந்துவிடுவர் என்று கட்டியம் கூறிக்கொண்டு அது இலங்கையில் காலடி எடுத்துவைக்க தாயராகிறது என்றே இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வறிக்கை தமிழனுக்கான் உடனடி தலைவலி, இந்தியா, சினாவிற்கான எதிர்கால தலைவலி. இலங்கையை தளமாக பயன்படுத்தி சினாவையும், இந்தியவையும் மிரட்ட எத்தனிக்கின்றதோ என்னவே?

Sat Jan 12, 12:05:00 AM GMT  
Blogger இவன் செப்பியவை...

http://www.fbi.gov/page2/jan08/tamil_tigers011008.html

இந்த சுட்டியில் சென்று, கட்டுரையின் கிழே கொடுக்கபட்டுள்ள "report any suspicious activities" தொடுப்பில் உங்கள்ளது கருத்துகளை தெரியப்படுத்துங்கள். அமெரிக்காவில் பொது மகனின் கருத்துக்கும் மதிப்புண்டு.

Sat Jan 12, 01:20:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி இவன். உங்கள் கருத்துக்கும் இணைப்புக்களுக்கும்.

ஏலவே சி ஐ ஏ வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே ஈராக் மீதான வன்பறிப்புப் போரை அமெரிக்கா செய்தது. பின்னாடி அது உலகின் கண்களுக்கு தெரிய வந்து.. புஷ் தலை குனிந்து நின்றார்.

உண்மையில் உலகில் அல்குய்டா என்ற ஒரு அமைப்பே இல்லை. அமெரிக்க உளவு நிறுவனங்கள் தனது வல்லாதிக்க கடும்போக்குக்கு எதிராக அமையத்தக்க இஸ்லாமியக் கடும்போக்கு இயக்கங்களை ஒருங்கிணைத்து தாமே வழங்கிய பெயர்தான் அல்குய்டா. அதன் தலைவர் அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் செல்லப்பிள்ளை..! அமெரிக்க உளவு அமைப்புக்களின் தவறான பார்வைகள்.. உலகில் பேரழிவுகள் பலவற்றுக்குக் காரணமாகியுள்ளன.

எவ் பி ஐ.. ஒரு சம்பவத்தின் பின்னணி.. அதன் நோக்கம் என்பதையிட்டு தெளிவான பார்வைகளைக் கொண்டிருக்கும். இருந்தும் அதை மறைத்து புலிகளைச் சாடியுள்ளது.

அதே நேரம் கிலாரி கிளிங்கடனோ.. புலிகள் அல்குய்டா போன்ற பயங்கரவாதிகள் அல்ல என்றிருக்கிறார்.

இது புஷ் நிர்வாகத்துக்கு புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பதில் சிக்கலை தோற்றுவித்திருக்கும்.

அமெரிக்க மக்களின் பார்வையில் கிலாரியின் கருத்து புலிகள் தொடர்பான அமெரிக்கா காட்டி வரும் பொய்த் தோற்றத்தை இனங்காட்டி இருக்கும்.

இந்த நிலையில்.. எவ் பி ஐ.. புலிகளைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் என்று இனங்காட்டவும்.. அமெரிக்கா சர்வதேசப் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற புதிய உச்சரிப்பின் கீழ் செய்துவரும் உலக வல்லாதிக்க விரிவாக்க இராணுவப் பரவலாக்கத்துக்கு புலிகளையும் பயன்படுத்த முனைவதையுமே இது காட்டி நிற்கிறது.

ஆனால் எவ் பி ஐ.. தந்த அறிக்கை.. பொய் என்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் புலிகளே தனித்து 4000 பேரைக் கொன்றனர் என்ற வாசகம் சான்று பகர்கிறது.

சர்வதேச அரங்கில் அமெரிக்காவே சிறீலங்கா அரசு மனித உரிமைகளை மீறிவருகிறது என்று குற்றம் சாட்டியுள்ள வேளையில்.. எவ் பி ஐ மட்டும் புலிகளை சாடி இருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

ஐ நா உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கண்காணிப்புக்குழு போன்றன யாழ்ப்பாணத்தில் நிகழும் படுகொலைகளுக்கு அரச படையினரை குற்றம் சுமத்தியுள்ள போது எவ் பி ஐ மட்டும் புலிகளைக் குற்றம் சுமத்தியதானது.. எவ் பி ஐ இட்டுக்கட்டி.. இவ்வறிக்கையை தயார் செய்துள்ளது என்பதுடன் தோற்றுப் போய்க் கொண்டிருக்கும் அமெரிக்க வல்லாதிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் பாதிப்புக்களை புலிகளின் மீது பயங்கரவாதத்தின் பெயரால் அவர்களின் மீது மறைமுகமாக நடவடிக்கைகளை இராணுவ ரீதியில் தூண்டி விட்டு தவிர்த்துக் கொள்ளலாம் என்று அமெரிக்கா கனவு காண்கிறது.

ஈராகில் சதாம் நினைவு நாளில் ஆயிரம் ஆயிரம் மக்கள் அவருக்கு அஞ்சலி செய்ததை இருட்டடிப்புச் செய்த அமெரிக்க சார்பு மேற்குலக ஊடகங்கள்.. புலிகள் பற்றியும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு.. அமெரிக்க எவ் பி ஐக்கு ஒத்துழைக்க பிந்நிற்கா..!

அதேபோல்.. தனது பிராந்திய நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ள புலிகளை அமெரிக்காவோடிணைந்து சமாளிக்க இந்தியா முனையினும்.. அமெரிக்காவுக்கு இந்தியாவின் மேண்மை குறித்த பிராந்தியத்தில் ஏற்படுவது அவ்வளவு விருப்புக்குரியதல்ல. எனவே இந்தியாவுடனான ஒத்துழைப்பு என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை பிராந்தியத்தில் தனது இருப்பை செல்வாக்கை உயர்த்த என்று அமையுமே தவிர.. புலிகளை ஒடுக்க என்று அமையுமா..??!

எதுஎப்படி இருப்பினும் ஈழத்தமிழர்களின் வாழ்வுக்காகப் போராடும் புலிகள்.. ஈழத்தமிழர்களின் பலம். அதை ஈழத்தமிழர்கள் இழப்பின்.. பூண்டோடு அழிவதே நிகழும்.

அந்நிய சக்திகளின் நலனுக்காக ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை அவர்கள் கைவிட முடியாது. ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையைப் பெற்றுக் கொடுக்கும் வழிவகைகளை அமெரிக்க மேற்குலக சக்திகள் சிறீலங்கா அரசை இராணுவ ரீதியில் அச்சுறுத்தி செய்ய பின்னடிக்கின்றனர். ஈழத்தில் ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பெறுகின்ற போது விடுதலைப்புலிகள் பூரணமான ஜனநாயக வழிக்குத் திரும்பத் தயார் என்பதை அவர்கள் பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளதை இங்கு இனங்காட்டுதல் சாலப் பொருந்தும்.

எனவே பொய் அறிக்கைகள்.. சோடிப்பு அறிக்கைகளால்.. ஈழத்தமிழரின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதம் ஆக்கின் அதன் விளைவு மனிதப் பேரவலம் தொடர்வதற்கு வழிவகுக்குமே தவிர பிரச்சனைகளுக்கு தீர்வைத் தராது.

ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை மறுக்கும் சிறீலங்காவை பணிய வைத்து.. ஈழத்தமிழர்கள் வேண்டி நிற்கும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க திராணி அற்ற வல்லாதிக்க சக்திகள்.. பயங்கரவாத அரசுக்கு ஆயுத சப்பிளை செய்வது மோசமான காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதமே ஆகும்.

இவற்றை இவ்வாறான அறிக்கைகால் நியாயப்படுத்தாமல்.. ஈழத்தமிழ் மக்கள் கோரும் நியாயமான வாழ்வுரிமையைப் பெற்றுக் கொடுத்து விடுதலைப்புலிகளின் ஆயுதப்பாவனைக்கும்.. இராணுவ யுக்திகளுக்கும் பயன்பாட்டு அவசியத்தை இல்லாமல் செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டாலே.. போதும். மனிதப் பேரவலமற்ற தீர்வை.. சமாதானத்தை.. ஈழத்தில் உருவாக்கலாம். அதற்கு ஈழத்தமிழர்களும் அவர்களின் போராடும் சக்திகளான புலிகளும் தயாராகவே உள்ளனர்.

அதை மேற்குலகமும் அமெரிக்காவும் செய்யுமா... இல்ல பயங்கரவாதம் என்று கொண்டு.. தனது வல்லாதிக்க கோரத்தனத்தை.. மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தும் மோசமான உலக அரச பயங்கரவாதத்தை தூண்டுமா..?! விடை.. அமெரிக்காவின் இதய சுத்தியில் தங்கியுள்ளதே தவிர.. அமெரிக்காவின் நலன்களில் அல்ல.

Sat Jan 12, 10:04:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

LTTE, the most dangerous, deadly, says FBI

[TamilNet, Saturday, 12 January 2008, 03:09 GMT]

In a campaign "celebrating a century," U.S.'s Federal Bureau of Investigations (FBI) said of the Liberation Tigers: "Needless to say, the Tamil Tigers are among the most dangerous and deadly extremists in the world. For more than three decades, the group has launched a campaign of violence and bloodshed in Sri Lanka, the island republic off the southern coast of India." The website added that LTTE's "ultimate goal is to seize control of the country from the Sinhalese ethnic majority."

"The U.S. government has designated the Tigers a foreign terrorist organization, so their activities here are illegal. And we’re determined to stop them, using the full range of our investigative and intelligence capabilities," the FBI said.

On the achievements as part of war of terror, the FBI said, "we’ve also arrested another 11 Tamil Tiger-related suspects in the New York City region," and also added Baltimore arrest, sentencing of Indonesian men on conpiracy to provide material support to the Tigers, and the April arrest of the Leader of LTTE in New York, as part of the FBI's achievements.

The website cautioned the readers: "You can help by being careful with your donations. Like other terrorists, the Tigers have raised funds under a variety of cover organizations, often by posing as charities. A great deal of money, for example, was raised for the Tigers following the 2004 tsunami that devastated Sri Lanka and many other countries."

"And please report any suspicious activities to your local field office or anonymously through this website," the statement said.

The U.S. judicial system has given FBI only checkered success in prosecuting other terrorism cases. Two recently concluded terrorism cases in Florida and in Texas, produced hung juries.

Speaking on the Texas case, David D. Cole, a professor of constitutional law at Georgetown University, said the jury’s verdict called into question the government’s tactics in freezing the assets of charities using secret evidence that the charities cannot see, much less rebut. When, at trial, prosecutors “have to put their evidence on the table, they can’t convict anyone of anything,” he said. “It suggests the government is really pushing beyond where the law justifies them going,” New York Times report said.

“I thought they were not guilty across the board,” said the juror, William Neal, a 33-year-old art director from Dallas. The case “was strung together with macaroni noodles,” Mr. Neal said on the Texas case. “There was so little evidence.”

In the Florida case, one of seven defendants was acquitted and a mistrial was declared for the other six defendants accused of of plotting to destroy Chicago's Sears Tower. Defense lawyers contended that the informant and an overzealous FBI were responsible for pushing the alleged conspiracy along. "This was all written, directed and produced by the FBI,'' defense attorney Albert Levin was quoted as saying by Florida daily, Sun-sentinel.

President Bush's doctrine of "war on terror" has provided the required legal pretext for the FBI to investigate and prosecute members who have provided material support to organizations listed as Foreign Terrorist Organizations (FTOs).

However, the Democratic contenders for U.S. Presidency, Sen.Clinton and Barack Obama, have expressed reservations on the effectiveness of the Bush doctrine. Privacy advocates spectulate that a Democratic Presidency is likely to modify the emphasis on FBI's aggressive approach to prosecutions, and restore the erosion to fundamental rights on privacy and freedom that have marked Bush Presidency.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24267

Sat Jan 12, 10:22:00 AM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க