Tuesday, January 22, 2008

யார் இந்த சர்வதேசம்.. யார் இந்த சர்வகட்சிக் குழு..?!சிங்கள மயமாகும் தமிழர் தாயகப் பிரதேசங்கள்.

முதலில் யார் இந்த சர்வதேச சமூகம் என்பதை கருத்தில் எடுத்தால்..

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளுமே சர்வதேச சமூகம் என்றாகின்றனர்..!

இவர்களின் அங்கீகாரம் கிடைத்த எல்லா இடமும் நீதி நிலைத்திருக்கிறதா..???!

ஏன் பலஸ்தீன தேசம் இன்னும் பிரச்சனைக்குள் இழுபடுகிறது..??!

வியட்நாமில்.. ஈராக்கில்... ஆப்கானிஸ்தானில்.. சோமாலியாவில்.. அமெரிக்கப்படைகள் செய்த மனிதப் படுகொலைகளை சர்வதேசம் விசாரித்து ஏதாவது தீர்ப்பு வழங்கி இருக்கிறதா...???! அப்படி வழங்கப்படும் தீர்ப்புக்களுக்கு அமெரிக்காவை கட்டுப்பட வைக்கும் சக்தி ஏனைய உலக நாடுகளுக்கு உண்டா...???!

இந்திய அமைதிப்படைக்கு அவர்களின் பணிக்காக இன்று சிங்கள தேசம் சிலை வைக்கிறது. இதே சிங்கள அரசுதான் 1990 இல் இந்திய அமைதிப்படையை.. கொலைகாரப்படை என்று ஆக்கிரமிப்புப் படையென்று நாட்டை விட்டு வெளியேறு என்றும் சொல்லியது..??!

இந்திய அமைதிப்படை செய்த தமிழின அழிப்பு என்பது நியாயமானதா....???! இல்லை அநியாயமானதா.. அதை எந்த சர்வதேசம் விசாரணைக்கு உட்படுத்தி.. இந்தியப் படைகள் செய்தவற்றுக்கு தண்டனை வழங்க முன் வந்தது..??! எவ்வளவு நட்ட ஈடுகளைப் பெற்றுத் தந்தது..??!

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின்னர் 2 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதை அமெரிக்கா பிரச்சாரப்படுத்த விடாமல் தடுக்கிறதே...??! இந்தக் கொலைகளை இட்டு ஏன் சர்வதேசம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை..?? நீதி விசாரணை செய்யவில்லை.. கொலைகளுக்கான பின்னணியில் உள்ள காரணிகளை இனங்காணவில்லை..?? கொலைகாரர்களை (அமெரிக்கப்படைகள் அதன் உளவாளிகள் தூண்டிவிட்ட கொலைகள் உள்ளடங்க) ஏன் நீதியின் முன் கொண்டு வரவில்லை..??!

சதாம் குசைன் அணு ஆயுதம் வைத்திருக்கிறார் படு பயங்கர இரசாயன ஆயுதம் வைத்திருக்கிறார் என்று பிழையான தகவல் வழங்கி செய்யப்பட்ட ஒரு வன்பறிப்பு நகர்வை சர்வதேசம் அடையாளம் கண்டும்.. ஏன் அது தொடர்பில் அமெரிக்காவை தண்டிக்க முன்வரவில்லை..??!

இதே நிலை கொங்கோவில்.. இல்ல ஒரு ஐரோப்பிய நாட்டில் ஏற்பட்டிருந்தால் அமெரிக்க சார்பு ஊடகங்கள் சும்மா இருக்குமா..??!

உலகில் நீதி என்பது அமெரிக்கா விரும்பும் வடிவில் தான் இருக்க வேண்டும் என்ற நியாயமில்லை..!

தமிழ் மக்கள் 30 வருட காலத்துக்கும் மேலாக அநீதிகளை சந்தித்து வருகின்றனர். 1983 கலவரத்தின் பின் சிறீலங்கா தந்த தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வுகள் என்ன..??!

அப்படி இருக்கும் போது அண்மையில் இந்தியா வந்த பிறவுன் இலங்கை அரசை நோக்கி காத்திரமான தீர்வை முன் வையுங்கள் என்று மட்டும் அறிக்கை விடுவது உண்மையான அக்கறையின் வெளிப்பாடா..??!

பிரிட்டனின் இயன் பொக்ஸின் வரவை எதிர்த்தவர்களே இன்று தீர்வுப் பொதியை செய்கின்றனர் எனும் போது எப்படி காத்திரமான தீர்வு பெறப்படும்..???!

சர்வதேச நலனுக்கு ஏற்பதான் தீர்வென்றால்.. தமிழ் மக்கள் என்ன அமெரிக்க அடிமைகளா...??! அமெரிக்கா விரும்பும் வடிவில் தான் தீர்வை பெற முடியும் என்பது என்ன.. ஜனநாயகமா..???!

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குரிய உரிமையை அவனே தீர்மானிக்க உரிமை உண்டு. தமிழர்கள் தங்கள் உரிமையை தங்கள் நிலத்தில் தீர்மானிப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது..! தமிழர்கள் அடுத்தவரின் உரிமையை தட்டிப்பறித்து தமது உரிமையைப் பெறுவது என்பது அநீதியானது. ஆனால் தமிழர்கள் அப்படிச் செய்யவில்லை. தமிழர்கள் தங்கள் உரிமையை தங்கள் நிலத்தில் தக்க வைக்க எவருக்காகவும் எந்த சர்வதேசத்தின் அங்கீகாரத்துக்காகவும் மண்டியிட்டுக் கிடக்க வேண்டும் என்ற தேவையில்லை.

சர்வதேசத்துக்கு தமிழர்கள் மதிப்பளிக்கின்றனர் என்று காட்டத்தான் சர்வதேச உறவாடல்களே ஒழிய சர்வதேசம் தமிழர்களின் உரிமையை பெற்று தங்கத் தட்டில் வைத்து தமிழர்களிடம் ஒப்படைக்கும் என்பது முழு முட்டாள் வாதம்..!

அதேபோல் நாம் சர்வதேசத்துக்கு அஞ்சி எமது போராட்டத்தில் நாம் உறுதியற்று இருக்கவும் முடியாது. சர்வதேசத்தின் நகர்வுகளுக்கு ஏற்ப தந்திரோபாயமாக நகர்ந்து எமது போராட்டத்தை உறுதிப்படுத்தி சர்வதேசம் முன் வைக்கும் சவாலை முறியடிக்கும் போதே எமது பலத்தை இட்டு சர்வதேசம் தனது பார்வையை மாற்றும்..!

இன்றைய மகிந்த அரசு கொண்டு வரவுள்ள தீர்வுத் திட்டம் என்பது ஒரு போலியானது. சர்வதேசமும் சிறீலங்காவும் சேர்ந்து போடும் நாடகம். கிழக்கை ஆக்கிரமிக்கும் போது அப்பட்டமாக மீறப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்டிக்காத சர்வதேசம் செத்துப்போன ஒப்பந்தத்தில் இருந்து சிறீலங்கா விலகப் போகிறது என்றதும் குரல் கொடுத்தது.. வெறும் பாசாங்கு. கிழக்கை ஆக்கிரமிக்க உதவியதே இதே சர்வதேசம் தான்.

கிழக்கு ஆக்கிரமிக்கப்பட்ட பின் தனது தூதுவர் குழுவை அமெரிக்கா அனுப்பியது. ஜப்பான் அனுப்பியது. இந்தியா அனுப்பியது. ஏன்..????! அங்கு யுத்த நிறுத்த ஒப்பந்தம் படுமோசமாக மீறப்பட்டத்தை சர்வதேசம் அறியவில்லையா..??! அப்போ ஏன் கண்டிக்கவில்லை..!

கிழக்கின் முக்கியத்துவம் கருதி.. அதனை புலிகளிடம் இருந்து ஆக்கிரமிக்க சர்வதேசம் சிறீலங்காவுக்கு உதவியது. தங்கள் நலனுக்காக கிழக்கு மண்ணைப் பாவிக்க அங்கு இன்று ஆயுதக் குழுக்களை அப்பட்டமாக அரசியல் குழுக்களாகப் பதிவு செய்து களத்தில் இறக்கிவிடுவதை அமெரிக்கா தூதரம் உட்பட சர்வதேசம் கண்ணை மூடிக் கொண்டு அங்கீகரித்து நிற்கிறது..??!

இதுதான் ஜனநாயமா..??! இல்லை. அமெரிக்காவின் நலனுக்கு எது அவசியமோ அதுதான் ஜனநாயகம்.

இப்படிப்பட்ட சர்வதேசத்திடம் தமிழரின் உரிமையை எதிர்பார்க்க முடியுமா..??! இவர்களுக்கு அஞ்சி தமிழர்கள் தங்கள் போராட்டத்தை உறை நிலையில் வைக்க முடியுமா..??!

தமிழர்களின் போராட்டம் என்பது அமெரிக்காவால் தீர்மானிக்கப்பட்டதல்ல. இந்தியாவால் தீர்மானிக்கப்பட்டதல்ல. சிறீலங்கா அரசின் தமிழர் உரிமைப் பறிப்பால் தீர்மானிக்கப்பட்டது. சிங்கள அரசு அதன் கொள்கையில் உறுதியாகவே இருக்கிறது. அதையேன் சர்வதேசம் உணராதபடி நடிக்கிறது.

சர்வதேசத்துக்கு மகிந்த அரசை 50% பிடிக்கும் என்றால் ரணிலின் அரசை 90% பிடிக்கும். எனவே சிறீலங்கா சிங்கள அரசியலில் குழப்பங்களை உண்டு பண்ணும் நகர்வுகளையும் சர்வதேசம் இந்தியா போன்றன எடுக்காமல் இருக்கா.. அதற்கேற்ப மகிந்தவை சிக்கலில் மாற்றவும் அவை பின்னிற்கா. இதை எல்லாம் புலிகளிடம் செய்ய முடியல்ல என்ற கவலைதான் புலிகளைப் பயங்கரவாதிகளாக்கி மோதிகிட்டே இருப்பதன் பின்னணியும்..!

சர்வகட்சி குழுவின் தீர்வுப்பொதியை ஏதோ பெரிய எதிர்பார்ப்புடன் சமர்பிக்கச் சொல்கிறது சர்வதேசம். இதுவும் அதன் நாடகம் தான். சர்வகட்சிக் குழு என்பது பெயரளவில் தான். பிரதான எதிர்கட்சியே அதில் இடம்பெறவில்லை. ஜே வி பி இல்லை. தமிழர் தரப்பில் பலமான சக்தியான விடுதலைப்புலிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் இல்லை. இப்படியான ஒரு சர்வகட்சிக் குழு சமர்பிக்கும் தீர்வு என்பதில் எப்படி சர்வ தேச சமூகம் நியாயமான தீர்வை எதிர்பார்க்கும். இந்த சர்வகட்சிக் குழுவும் சர்வதேசமும் ஒன்றுதான். அமெரிக்காவும் அதன் வல்லாதிக்க ஆதரவு வால்களும் எப்படி சர்வதேசம் என்றாகினதோ அப்படித்தான் மகிந்த அரசும் அதன் பேரினவாத வால்பிடிகளும், தமிழர் விரோத சிங்களப் பேரினவாத ஆதரவுத் தமிழ் ஆயுதக் கும்பல்களும் அதில் இடம் பிடித்துள்ளன.

இதில் எப்படி நீதி பிறக்கும். இந்தத் தீர்வுப் பொதியினூடு எப்படி சமாதானம் வரும் என்று இந்தியாவும் கோடன் பிறவுனும் அமெரிக்காவும் ஜப்பானும் எதிர்பார்க்கின்றன. இந்த ஒன்றே போதும் சர்வதேசத்தை தமிழர்கள் தெளிவாக இனங்காண.

இவை எல்லாம் சுத்துமாத்து நாடகங்கள். அவர்கள் தெரிந்து கொண்டே தமிழர்களை ஏமாற்றுகின்றனர். அப்படியான ஒரு நிலையில்.. தமிழர்கள் மட்டும் 100% சர்வதேசத்தை நம்பி.. அவர்கள் எங்களை அங்கீகரிக்கனும் என்று நடக்கச் சொல்வது.. குழந்தைக்கு அரசில் சொல்லிக் கொடுப்பது போன்றது. இது தமிழ் மக்களை அகல பாதாளத்துக்குள் தள்ளிவிட்டு.. அதுதான் சுதந்தரம் என்று காட்டுவது போன்றுள்ளது.

விடுதலைப்புலிகள் சர்வதேசத்தை எப்படிக் கையாளனும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளதாகவே தெரிகிறது. எப்படி சர்வதேசம் எம்மை ஏமாற்ற முனைகிறதோ அப்படி நாமும் அதனை அணுக வேண்டும். எப்போ சர்வதேசம் எம்மை நோக்கிய நியாயத்தோடு வருகிறதோ அப்போ நாமும் நியாயத்தோடு அதனை நோக்கிச் செல்ல வேண்டும். மற்றும் படி.. இராஜதந்திரத்துக்கு இராஜதந்திரமாகத்தான் பதிலளிக்க வேண்டும்..! தமிழர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்காதவரை தமிழர்களுக்கு யாரும் உரிமை பெற்றுத்தர அக்கறை செலுத்தப் போவதில்லை..!

எனவே தமிழ் மக்கள் எங்கிருப்பினும் ஒருங்கிணைந்து ஒற்றுமையோடு செயற்பட்டு விடுதலைப்புலிகள் பலத்தை சர்வதேசம் உணர அதிகரிப்பதும் தக்க வைப்பதுமே தமிழர்கள் உலகில் உரிமை பெற்ற நிலத்தில் வாழ வகை செய்யும்..!

இரத்தம் சிந்தாமல் தமிழர்களுக்கு விடிவில்லை என்பது துரதிஸ்டவசமான உண்மை..!

கொழும்பில் நடக்கும் குண்டு வெடிப்புக்கள் உட்பட இன்றைய மொன்றாகல வரை.. அமெரிக்கத் தூதரகம் விட்ட அறிக்கைகள் புலிகளை வசைபாடியதன் பின்னணி இருக்க.. மகிந்த எப்படிச் சொல்கிறார் என்று பாருங்கள். இப்படி நிலை இருக்க.. அமெரிக்க சர்வதேசத்தையும் இந்திய பிராந்தியத்தையும் நம்பி தமிழர்கள் எப்படி உரிமை பெற முடியும்..???!

---------------

Colombo bombs not work of LTTE - President

President Mahinda Rajapaksa told media heads and editors today that recent blasts in Colombo was not the work of the LTTE, but some ‘other group’ with political and business interests.

-----------------

Armed group registering as political party "historical" - Ranil

Opposition Leader Ranil Wickremesinghe today called for the establishment of independent Commissions immediately to ensure a free and fair local government election in the East. He also charged that an armed group is for the first time being registered as a political party.

டெயிலிமிரர்.

தகவல்: யாழ் இணையம்

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:45 PM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

நல்ல காத்திரமான அலசல்.

நன்றி.

Wed Jan 23, 07:51:00 AM GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க