Wednesday, May 28, 2008

மாற்றுக் கருத்து என்பது தமிழீழ தேச துரோகமே. ஜனநாயகம் அல்ல.



ஜனநாயகம் எதிர்க்கட்சியை அனுமதிக்கிறது. மாற்றுக் கட்சியை அனுமதிப்பதில்லை. உலகில் எந்த நாட்டிலும் ஒரு கட்சிக்கு மாற்றுக் கட்சி என்று ஒன்றில்லை. ஆனால் உலகில் தமிழீழத்தில் அந்த தேச இருப்புக்கு எதிரான செயற்பாட்டுக்கு, துரோகத்தனத்துக்கு எதிரியானவன் இட்டுள்ள பெயர் மாற்றுக் கருத்து, மாற்றுக்கட்சி அவற்றைச் சொல்பவன், நடத்துபவன் மாற்றுக் கருத்தாளன். அவர்களின் துரோகத்தனத்துக்கும் அவர்களின் துரோகக் கொள்கைகளுக்கும் பூசப்பட்டுள்ள முலாம் ஜனநாயகம்.

ஒரே கொள்கைக்காக நாலு கட்சிகள் வைப்பதையும், ஒரே கருத்தை.. நாலு பேர் வேறுபட்ட வடிவத்தில் சொல்ல நிற்பதையெல்லாம் ஜனநாயகம் என்று சொல்வதில்லை. அதுமட்டுமன்றி...

ஒரு தேசத்துக்குரிய கட்சிகளுக்கு.. அவர்கள் என்ன தான் தமக்கிடையே வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பினும், தேசத்தின் இறையாண்மை.. அதன் தேசியம்.. தேச நலன்.. தேச அங்கீகாரம்.. போன்ற அடிப்படைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயம். அதுமட்டுமன்றி அவர்கள் இவற்றை ஏற்றும் மதித்தும் நடக்கும் பட்சத்திலே தான்.. அவர்கள் அங்கு ஜனநாயகம் என்பதன் கீழ் செயற்பட அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய இறையாண்மையை மதிக்காத ஒரு கட்சியை இந்தியா ஜனநாயகம் என்று அங்கு செயற்பட அனுமதிக்குமா. இல்லை..!

உதாரணத்துக்கு.. அமெரிக்காவின் இறையாண்மையை அல்லது அமெரிக்காவின் தேசியத்தை.. அல்லது அதன் தேச நலனை அல்லது தேசத்தை எதிர்க்கும் கட்சி அங்கு இருக்க வாய்ப்பில்லை..! அமெரிக்க தேசத்தை தற்போதைய நிலை வரையான அதன் கட்டமைப்பின் எல்லைகளின் கீழ் அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட கட்சிகள் தான்.. அதனை அரசாள என்று அமையும் கொள்கைகள் அளவில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் என்று இருக்கின்றன. அவை ஒரு போதும் அமெரிக்க தேசம்.. தேச நலன்.. அதன் இருப்பு.. அதன் தேசியக் கூறுகள்.. அதன் பொது வெளிவிவகாரக் கொள்கை வகுப்புக்கள் இவற்றில் எல்லாம் எந்த செல்வாக்கும் செய்ய முடியாது.

தமிழ் மக்களின் தேசம்.. தமிழீழம். தேசியம்.. தமிழ் தேசியம்.. தேச நலன்.. தேசத்தின் இருப்பு... அதன் இறையாண்மை.. இவற்றை அங்கீகரிக்காத எவரும் தமிழ்மக்களை ஆள தகுதியற்ற ஜனநாயகவாதிகளே.

அந்த அடிப்படையில்.. இவர்கள் பேசுவதனைத்தும் ஜனநாயகமே அன்று. இவை தேசத்துரோகங்கள். அமெரிக்க தேசத்தின் இறையாண்மையை காட்டிக் கொடுப்பவன்.. அல்லது விற்பவன்.. அமெரிக்க தேசத்துரோகி. அமெரிக்க தேசத்தின் இருப்பை அதன் தேசியத்தை நிராகரிப்பவன்.. அந்த தேசத் துரோகி.

அதேபோன்றதுதான்.. தமிழீழம் என்பதும். அது விடுதலைப்புலிகளின் கோரிக்கையல்ல. ஒவ்வொரு தமிழீழத் தமிழனின் பூர்வீக உரித்து. அந்த வகையில் அதனை நிராகரித்துவிட்டு.. தமிழ் மக்களுக்கு மாற்றுக் கருத்துச் சொல்வது என்பது.. தேசத் துரோகம். தமிழீழம்.. தமிழ் தேசியம்.. தேச இறையாண்மை.. தமிழ் மொழி இவற்றை அங்கீகரிக்காத.. எந்த பேடிகளும் துரோகிகளும்.. ( அவர்கள் கல்வியில் ஒரு சில துறைகளில் பெற்ற பட்டங்களை வைத்துக் கொண்டு.. அவர்களுக்கு தேவையற்ற சமூக முன்னுரிமை அளித்து..) மாற்றுக் கருத்தாளர்கள் என்ற தோறணையில் கருத்துக்களை விதைப்பதை அனுமதிப்பது தமிழீழ தேசத்துக்கு எதிராகச் செய்யப்படும் துரோகமாகவே கருத வேண்டும்.

தமிழர்கள் எம் ஒரே இலட்சியம். தமிழீழ தேசம். அது கனவல்ல. அது வரலாற்று உண்மை. ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தை விடிவிப்பது என்பதற்கும்.. அதன் இறையாண்மையை மீள நிலைநாட்டுவதற்கும் என்று அங்கு ஒரு மாற்றுக் கருத்தில்லை. தமிழீழம் என்றது ஒரு கருத்துத்தான். அது இலங்கைத் தீவில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடக்கிய தேசம். அதற்கு மாற்றுக் கருத்து என்ற ஒரு மண்ணாங்கட்டி அங்கில்லை...!

அப்படி தமிழீழத்துக்கு மாற்றுக் கருத்து வைத்திருப்பவர்கள்.. புலிகளின் துரோகிகள் அல்ல. தமிழீழ பூர்வீகத்தைக் கொண்ட தமிழர்களின் தேசத் துரோகிகள். அவர்களை எல்லாம்.. ஜனநாயகவாதிகளாகவோ.. தமிழீழ தேசத்தின் எதிர்கால எதிர்க்கட்சிகளாகவோ இனங்காண்பது மிகப்பெரிய தவறு. அவர்களைத் தெளிவாக தமிழீழத் தேசத்துரோகிகளாக அடையாளம் காணலாம்..! அப்படி அடையாளம் காண்பதில் எந்தத் தவறும் இல்லை.

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை விமர்சிப்பது வேறு. தமிழீழத்தை நிராகரிப்பது, காட்டிக்கொடுப்பது என்பது வேறு. தமிழீழத்தை அங்கீகரித்து நின்று கொண்டு.. தமிழீழ மக்களின் உரிமைகளை பாதுகாத்து நின்று கொண்டு... தமிழீழத்தை அங்கீகரித்து நிற்கும் புலிகளோடு.. ஜனநாயக ரீதியில் தமிழீழ தேசத்தில் எதிர்க்கட்சி வரிசையில் மக்களை ஆள.. தமிழீழ தேசத்தை திறம்பட நிர்வகிக்க என்று போட்டிக்கு நிற்கலாம். அது ஜனநாயகம். ஆனால்... அப்படியன்றி.. தமிழீழத்தை அங்கீகரிக்காது.. சிறீலங்காவுக்கு தமிழீழத்தைக் காட்டிக் கொடுத்து.. விலை பேசி விற்கும்.. தேசத்துரோகக் கருத்துக்களாக முன் வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்கள்.. எனப்படுபவை.. தமிழீழத் தேசத் துரோகங்களே..! அது மரண தண்டனைக்குரிய குற்றங்கள். இது தமிழீழத்துக்கு மட்டுமானதல்ல. உலகெங்கும் தமக்கென்றான இறைமையுள்ள தேசத்தில் வாழ விரும்பும் சுதந்திரத்தை விரும்பும் மக்களின் அவர்களை நிர்வகிக்கும் சக்திகளின் நிலைப்பாடும் இதுவே.!

தமிழீழம் என்ற தேச இருப்பையே அங்கீகரிக்காதவன்.. தமிழீழத்தில் எப்படி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆக முடியும். தமிழீழ தேசம்.. அதன் மொழி.. அதன் எல்லைகள்.. அதன் இறையாண்மை.. அதன் தேசியம்.. அதன் நலன்.. இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு அவற்றை எல்லாம் பாதுகாக்க உறுதி பூணுபவனுக்கே தமிழீழத் தமிழர்களை ஆளும் தகுதியும் தமிழீழத்தை நிர்வகிக்கும் தகுதியும்.. அவர்கள் ஜனநாயக வழியில் தமிழீழத் தாயகத்தில் செயற்படவும் வழி இருக்கும்.

அந்த வகையில் தமிழீழத்தை ஏற்றுக் கொண்டுள்ள.. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கும்.. இன்னும் தமிழீழத்தை அங்கீகரிக்கக் கூடிய வகையில் இருக்கும்.. ஆனால் தமிழீழத்துக்கு எதிராக மாற்றுக் கருத்தோ துரோகச் செயலோ செய்யாதவர்களும் சொல்லாதவர்களும்.. இதற்குள் அடக்கப்படலாம்.

தமிழீழ தேசத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்கியவன்.. கூறுபோட்டவன்.. தமிழ் மொழியை.. தமிழ் தேசிய அடையாளங்களை.. மக்களை சிதைத்தவன்... தேசத்தை சிறுக சிறுகச் சிதைக்கும் எதிரிக்கு துணை போனவன்.. தமிழீழத்துக்கு எதிராக செயற்படுபவன்.. அல்லது கொள்கை வகுப்பவன்.. அல்லது பேசுபவன்.. தமிழீழத்தை எதிர்க்கும் எதிரியுடன் சேர்ந்து இயங்கி தேசத்தின் இருப்பை அழிக்க நிற்பவன்.. எவனும் தமிழீழத்தில்... ஜனநாயகத்தின் படி.. எதிர்க்கட்சியாளனாகவோ.. அல்லது ஆளும் கட்சியாளனாகவோ ஆக முடியாது. அவர்கள் தெளிவாக உலக நியதிப்படி.. தேசத் துரோகிகள் என்று தெளிவாக இனங்காணப்பட்டு.. ஒன்றில் அழிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது தேசத்தை விட்டு நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்.

1972 இல் சிறீலங்காவின் இறையாண்மையை, தேச நலனை மதிக்காது செயற்ப்பட்டதற்காக 1978ல் அன்றைய சிறீலங்கா ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா முன்னாள் சிறீலங்கா பிரதமரான சிறிமாவோ அம்மையாரின் குடியுரிமையைப் பறித்தார். நாடு கடத்தவும் திட்டமிட்டார்.

தங்கள் நாடுகளை குட்டிச் சுவராக்கிய குற்றத்துக்காக ஜேர்மனியின் முன்னாள் அதிபர் கிட்லர்.. உகண்டாவின் முன்னாள் அதிபர் இடியமீன்.. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மார்க்கோஸ்.. போன்ற பல தலைவர்கள்.. தங்கள் சொந்த தேசத்தின் இருப்பை.. இறையாண்மையை சிதைக்க விளைத்தது என்பதன் அடிப்படையில் நாட்டை விட்டு மக்களால், மக்கள் படைகளால் விரட்டி அடிக்கப்பட்டனர்.

மாறாக சொந்த தேசத்தைப் பாதுகாத்து.. அதன் எல்லைகளை எதிரியின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து.. ஒரு நாட்டை அதன் தேசிய இனத்திடம் கையளித்த எந்தப் போராளிகளும் மக்களால் விரட்டி அடிக்கப்படவில்லை. அந்த வகையில் தமிழீழ தேசத்தின் எல்லைகளை மீள நிறுவி.. அதனை மீட்கவும் பாதுகாக்கவும் போராடும் விடுதலைப்புலிகளும் எப்போதும் விரட்டி அடிக்கப்படமாட்டார்கள்.

தமிழீழத்துக்கு மாற்றாக ஒரு தாயகம் இலங்கைத் தீவில் தமிழருக்கு இல்லை. அங்கு மாற்றுக் கருத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த வகையில்.. தமிழீழத்தை எவ்வெவ்வழிகளில் எல்லாம் எதிர்க்கின்றனரோ.. அது தேசத்துரோகமே அன்றி.. அதை, தமிழீழத்தை ஏற்றுக் கொண்டு.. அதற்குள் நின்று கொண்டு மக்களை ஆள, தேசத்தை நிர்வகிக்க.. ஜனநாயக வழிமுறையில் ஆளும் கட்சி.. எதிர்க்கட்சி அமைத்து செயற்படுவதற்கான, ஜனநாயக அரசியலுக்கான அடிப்படையாக கருத முடியாது. இதை புலம்பெயர் தமிழ் ஊடகங்கள், மக்கள் மற்றும் உறவாளர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் பட்டம் கொடுப்பது.. அந்தத்துறைக்கு. தமிழருக்காக தமிழீழத்துக்கு மாற்று தேசம் கண்டு பிடித்தத்ததற்காக அல்ல. எனவே அந்தப் பட்டதாரி புடலங்காய் தாரிகளைக் கொண்டு போய்.. குப்பையில் போடுங்கள் அல்லது தேவையான கல்வி சார் கூடங்களில் பாவியுங்கள். தமிழீழம் என்ற தேசத்தை அங்கீகரிக்க.. அதன் வரலாற்று பூர்வீக இருப்பே போதும். அங்கு வாழ்ந்த எம் சந்ததியினரின் அடையாளமே போதும். அதற்கு மாற்றுக் கருத்தில்லை. எனவே தமிழீழம் சார்ந்து வரும் மாற்றுக் கருத்து என்பது.. தமிழீழ தேசத் துரோகக் கருத்து. தமிழீழத்தை துண்டாடும் கருத்து என்பது.. தமிழீழ தேசத்துக்கு எதிரான துரோகக் கருத்து. அவற்றை அங்கீகரிப்பது.. அல்லது பரப்புரை செய்வது.. பேசுவது.. தமிழீழ தேசத்துரோகமே.. அன்றி ஜனநாயக அரசியல் அல்ல...!

மூலம் இங்கு

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:08 PM

4 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

நல்ல தெளிவான கருத்து. மாற்றுக் கருத்தென்று தமிழீழ தேசத் துரோகக் கருத்துக்களை விதைத்து எதிரிக்கு விலை போனவர்களுக்கு நல்ல விழிப்புணர்வை இப்பதிவு ஏற்படுத்தும்.

மிக்க நன்றிகள்.

Wed May 28, 07:09:00 PM GMT+1  
Blogger ஈழபாரதி செப்பியவை...

தமிழீழம் கிடைத்தால் இந்த மாற்றுகருத்தாளர் வேடமிட்ட களைகளை என்ன செய்வது என சிந்தித்தேன், சரியான தீர்வை சொல்லி இருக்கிறீர்கள். களைகள் களையப்படவேண்டும் அல்லது நாடுகடத்தப்படவேண்டும் என்று சரியான நெத்தியடி, படிப்பவர் வயிற்றில் அமிலத்தை கரைக்கும்.

Thu May 29, 01:56:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றிகள் ஈழபாரதி.

தாயின் மானத்தை விற்பவனை/விற்பனவளை.. மனிதனாகக் கருத வேண்டியதில்லை..!

அவன் விலங்கிலும் கடை. அதேபோல் தான் தாய் மண்ணின் இருப்பை.. உரிமையை.. எதிரிக்கு தாரைவார்க்கும் எவனும்.. அதற்காக குரல் கொடுப்பவன் எவனும்.. மனிதனே அல்ல..!

நாம் எமது பூர்வீக தேசத்தின் விடுதலைக்காய் ஏங்கி நிற்கும் மக்கள் கூட்டம். எமக்குள் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்பதை எமது மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். எமக்குத் தேவை.. எமது தேசத்தின் விடுதலை..!

Thu May 29, 07:40:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

very good post.

Thu May 29, 10:56:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க