Wednesday, July 16, 2008

முதலிரவு.

வசந்திக்கு மனசெல்லாம் ஒரே படபடப்பு. இந்த இரவுக்குள்ள, இருட்டுக்குள்ள என்ன நடக்கப் போகுதோ என்ற ஏக்கமும் பீதியும் அவளிடம் குடி கொண்டிருந்ததே படபடப்புக்கு காரணமாயிருந்தது.

"வசந்தி.. ரெடியா இரும்மா.. துணிவோட இரு.. அப்பதான் இந்த உலகத்தில பெண்கள் நாங்கள் நினைச்சதைச் சாதிக்கலாம்." சக தோழியின் வார்தைகள் தெம்பாய் காதில் இறங்கினும் படபடப்புத் தீரவே இல்லை.

அதற்குள்.. அவனிடமிருந்து சிக்னல் வந்தது. இஞ்ச வாங்கோ என்று வாயசைக்காது கைகளால் சைகை செய்து வசந்தியை அழைத்தான்.

ஆரம்பத்தில் தயங்கியவளாய் பின் துணிவை வரவழைத்துக் கொண்டு அவனை நோக்கி நகர்ந்து சென்றாள்.

அவளின் தயக்கத்தை உணர்ந்தவனாய், என்ன பயப்பிடுறீங்கள் போல... முதல் அனுபவம் எல்லோ.. ஆரம்பத்தில கொஞ்சம் படபடப்பும் பயமும் இருக்கத்தான் செய்யும். போகப் போக எல்லாம் பழகிடும்.

அவனின் அந்த வார்த்தைகள் மனசுக்கு தெம்பைத் தர அவனை நெருங்கிச் சென்று அருகில் நின்றாள்.

பயப்பிடாம நான் சொல்லுறதை மட்டும் செய்யுங்கோ அது போதும்.

தயக்கத்துடன்.. "ஓம்" என்றாள்.

அடுத்த கணமே.. துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின.

எதிரியின் காவலரணில் இருந்தும் ரவைகளும் ஆர் பி ஜி கணைகளும் தொடராக கிளர்ந்தெழும்பத் தொடங்கின.

வசந்தி அந்த பொயின்ருக்கு இந்தப் பக்கத்தில இருந்து இப்ப அடியுங்கோ. அங்க இருந்துதான் ஆர் பி ஜியால அடிக்கிறாங்கள்...

"ஓம் அடிக்கிறன்...."

வசந்தியின் கையில் இருந்த எல் எம் ஜி முழங்குகிறது. முதற் தடவையா.. முதலிரவுத் தாக்குதலில்.. வசந்தி நேர்த்தியாக எதிரியின் நிலை நோக்கி தாக்குதலைத் தொடுத்தாள்.

சிறிது நேரத்திலேயே எதிரியின் ஆர் பி ஜி நிலை அமைதியாக, போராளிகள் முன்னேறி அதைக் கைப்பற்றி ஆயுதங்களோடு மீள்கின்றனர்.

புன்சிரிப்போடு வசன்.. வசந்தி நீங்கள் தான் இந்த தாக்குதலின் கதாநாயகி. மிக அருமையா அடிச்சீங்கள். இங்க இருந்து சரியா அடிச்சிராட்டி.. எங்கட போராளிகளுக்குத்தான் இழப்பு வந்திருக்கும். இப்ப இழப்பில்லாம ஒரு வெற்றிகரமான அதிரடித் தாக்குதலை செய்து முடிச்சிருக்கிறம்.

"எனக்கும் பெருமையா இருக்குது வசன்."

பின்ன பயந்து கொண்டு எல்லோ வந்தனீங்கள்.

"ஓம். இப்ப நல்ல தெம்பா இருக்கு. இன்னும் நாலு காவலரணை அடிச்சு வீழ்த்தனும் போல இருக்குது."

அப்படித்தான் இருக்கும். எங்களுக்கு தலைவர் இதை ஒரு பயிற்சிக் களமாத் தான் நடத்தச் சொன்னவர். அதால இதோட நிறுத்திட்டு... இதில நின்று கன நேரம் கதைச்சுக் கொண்டிருக்காம.. எதிரி உசாராகி செல் இறக்க முதல்.. எல்லாரும் பழைய நிலைக்குப் போவம் நடவுங்கோ.

நடந்து கொண்டே.. எல்லாரும் தலைவரின் உத்தரவு வரும் வரை இதே வீரத்தோட காத்திருப்பம். சரியோ என்றான் வசன்.

"ஓம்.." என்றபடி நெஞ்சை நிமிர்த்தி, வெற்றிப் பெருமிதத்துடன் பயிற்சிக்காலத்தில் கூட உணராத புதுவித துணிச்சலை உணர்ந்தவளாய் எல் எம் ஜியை உயர்த்திக் காட்டியபடி.. சக போராளிகளோடு வசந்தியும் பாசறை நோக்கி நடந்தாள்.

(யாவும் கற்பனை)

யாழ் இணையத்தில் இருந்து.....

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:59 PM

3 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

தலைப்புத்தான் எங்கையோ நினைக்க வைச்சிட்டுது. கதை சூப்பர்.

Wed Jul 16, 10:23:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

தலைப்புத்தான் தட்டுத்தடுமாற வைச்சிட்டுது. குட்டிக்கதை சூப்பர்.

Wed Jul 16, 10:24:00 PM GMT+1  
Blogger Chandravathanaa செப்பியவை...

நல்ல கதை

Mon Aug 31, 09:44:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க