Friday, August 08, 2008

ஜோர்ஜியாவில் சண்டை.



சண்டை இடம்பெறும் பகுதி வரைபடத்தில்.

முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவில் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான South Ossetia வின் தலைநகரை (Tskhinvali) நோக்கி அமெரிக்கா பக்கம் சாய நினைக்கும் ஜோர்ஜிய அரசு ஆட்லறிகள்.. பல்குழல் வெடிகணைகள், விமானங்கள் மற்றும் தாங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தியபடி இன்று நள்ளிரவில் இருந்து முன்னேறி வருகிறது.

South Ossetia இல் உள்ள போராளிகளுக்கு ரஷ்சியா நேரடியாக உதவி வருவதுடன்.. ஜோர்ஜியாவை அமெரிக்கா தனது நேட்டோ உறுப்புக்குள் இணைத்துக் கொள்வதன் மூலம் ரஷ்சியாவை பலவீனப்படுத்த எண்ணி இருப்பதால்.. ஜோர்ஜியாவின் இத்தாக்குதலுக்கு அது பச்சைக் கொடி காட்டியுள்ளது.

தென் Ossetia பிரதான ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறது என்பதும்.. அதற்காக அங்கு போராளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போராளிகளுக்கு ரஷ்சியா ஆதரவளிப்பதால் அமெரிக்கா கொசவோ போன்று அதற்கு சுதந்திரமளிக்க மறுக்கிறது. மாறாக அப்போராளிகளை அடக்கி ஜோர்ஜிய அரசை தனது கைக்குள் போட்டுக் கொண்டு பிராந்தியத்தில் ரஷ்சியாவை நெருங்கி தனது இராணுவ திட்டங்களை நகர்த்த அமெரிக்கா முனைகிறது.

இதற்கிடையே சர்சைக்குரிய பகுதியில் ரஷ்சிய அமைதிகாப்புப் படையினர் நிலை கொண்டிருப்பதுடன் சண்டை ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னர் தான் ஜோர்ஜிய அரசும் போராளிகளும் ரஷ்சியாவின் மேற்பார்வையின் கீழ் போர் நிறுத்த சமரசத்துக்கு உடன்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் அச்சமரசத்திட்டத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்துக் கொண்ட ஜோர்ஜிய அரசு.. போராளிகளின் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான அரசு நடப்பதாகக் கூறி படை எடுப்பை செய்கிறது. அதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் மெளனமாக இருந்து ஆதவளித்து வருகின்றன.

இதுவரை நடந்த சண்டைகளில், வெடிகணை, ஆட்லறி மற்றும் விமானத்தாக்குதல்களில் பொதுமக்கள் உள்ளடங்க 15 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ரஷ்சிய அமைதிப்படையினரும் ஜோர்ஜியத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.



ஜோர்ஜிய பல்குழல் வெடிகணை செலுத்தியில் இருந்து பறக்கும் வெடிகணை.

ஜோர்ஜியா போன்ற முன்னாள் சோவியத் அரசுகளே..ஐரோப்பிய ஒன்றிய விதிகளையும் மீறி சிறீலங்கா போன்ற நாடுகளுக்கு இவ்வாறான ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய முன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் மறைமுக ஆதரவையும் அளித்து வருகின்றன.

பிரதான செய்தி இங்கு.

ஜோர்ஜியப் படைகளின் கண்மூடித்தனமான வெடிகணை வீச்சுகளின் காணொளியுடன் கூடிய செய்தி இங்கு.

நன்றி யாழ் இணையம்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:29 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க