Tuesday, August 26, 2008

என் திருமணம்.

அள்ளித் தெளிக்கும் அழகு
அளவாய் கொண்டு
ஆடம்பரமில்லா அலங்காரமிட்டு
ஆரவாரமில்லா பேச்சொடு
இரவலற்ற புன்னகை தந்து
இரங்கும் பார்வை கொட்டி
ஈயும் இதயம் காட்டி
ஈர்ந்தாள் என்னை
உருளும் கரு விழி கொண்டு.

உள்ளத்தில் உவகை பொங்க
ஊரின் சாயலில் பேசி
ஊடலற்ற பொழுதுகள் தந்து
எழிமை நடை பயில
எழில் கொண்டு வந்தாள்
ஏடு தூக்கும் கரத்தால்
ஏக்கம் தீர
ஐயுறவின்றித் தழுவி
ஐக்கியமாகும் எண்ணத்தில்..!

ஒரு தரம் என் கரம் பற்றினாள்
ஒரு பெரும் பொறி பிறந்தது
ஓராயிரம் உணர்வுகள் பொங்க
ஓரமாய் உடலெங்கும் பற்றியெரிந்தது
ஒளடதம் தேட
ஒளவையின் அடுக்குமொழி தந்தாள்.

அடுத்து என்ன..
அகேனம் விதி வழி சேர
அடுக்கிய கனவுகள்
அனைத்தும் ஒடிந்தன
விழிகள் விழிக்கையில்..!


சுட்டது யாழ் இணையத்தில்..!

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 11:58 PM

4 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

நல்லாயிருக்கு குருவிபபா

Wed Aug 27, 02:24:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

வாங்கோ தூயாபபா. நலமாக இருக்கிறீங்களா. என் நண்பனின் கவிதையிது. யாழில் சுட்டேன்.

உங்களைக் கண்ட மகிழ்ச்சியுடன்.. குருவிபபா. :))

Wed Aug 27, 07:23:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

நல்லாயிருக்கேன் குருவிபபா. நீங்க?
எங்கெ நெடுக்ஸ் கவிதை தானே? ;) யாழிலும் படித்தேன்.
நீங்க ரெபரர் உங்க வலைப்பூவிற்கு போடுங்க

Wed Aug 27, 10:23:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றிகள் தூயாபபா. :)

Wed Aug 27, 11:08:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க