Thursday, December 25, 2008

கனடா ரொரண்டோ குஞ்சர் - அலட்டல்கள்.

என்ன குஞ்சண்ண.. ரொரண்டோவில.. இந்தக் குளிருக்கையும் சறத்தை மடிச்சுக் கட்டிட்டு சந்தியில.. நிக்கிறியள்.

ஊரில மாசிப் பனிக்கு.. துவாயால போத்திட்டு... சுருட்டடிச்சுக் கொண்டு.. வரப்போரம் நடந்து உந்த வயலெல்லாம் சுத்திப் பார்த்த எனக்கு.. இது ஒரு குளிரோடாப்பா.

அதென்ன குளிரண்ண.. இது நாடி நரம்பெல்லாம் விறைச்செல்லே போகுது.

அதுதானே நீ.. உத்துனை உடுப்புப் போட்டிருக்கிறாய் இருந்தும்..

என்னத்தைப் போட்டு என்னத்தை அண்ண.. குளிர் அடங்குதில்ல.
எதுக்கும்.. உந்த கோனர் கடையில போய் இரண்டு பியர் அடிச்சிட்டு வருவம் வாறியளே..

விரதமா இருக்க.. விடமாட்டானே. எதுக்கும் வேண்டு. பிறகு கணக்கை என்ர எக்கவுண்டில் மட்டும் சேர்த்துப் போடாத..

-----------

(கடையடியில்)

அண்ணே இரண்டு.. பியர் கான் தாங்கோ.. தனியத் தனிய கடதாசி பாக்கில சுத்தித் தாங்கோ..

ஏண்டா சின்ராசு.. உவனட்ட சின்ன கொக்கக்கோலா போத்தல் இருக்கோண்டு கேளு..

ஏன் குஞ்சண்ண. எதுக்கு.

உவள் பாவி இன்றைக்கு ஏதோ விரதம். உங்கிணை குடிச்சுக் கிடிச்சிட்டு இங்க வந்தா.. நாறல் வாய்க்கு பொரியும் கிடையாது என்று திட்டி அனுப்பினவள். நான் வேற கானோட நிண்டு எவனாச்சும் கண்டு போட்டுக் கொடுத்திட்டாலும்.. கொக்கக்கோலா போத்தலுக்க ஊத்தி அடிக்கத்தாண்டாப்பா.

அப்படியே சங்கதி. பொறுங்கோ எதுக்கும் கேட்டுப் பாக்கிறன்.

அண்ண.. உங்கிணை எம்ரி கொக்கக்கோலா போத்தல் கிடக்கே..!

டேய் தம்பி. உதுக்க எம்ரி போத்தல்கள் ரீசைக்கிலுக்கு போட்டனான். சின்ன கொக்கக்கோலா போத்தல் கிடந்தா ஒன்று கொண்டுவா.. (கடைக்காரர் வேலையாட் பையனை நோக்கி)

குஞ்சண்ணா இந்தாங்கோ போத்தல். கானை உடைச்சு ஊத்தித் தரட்டே.

எதுக்கும் ஜக்கட்டுக்க மறைச்சு வைச்சு உடைச்சு ஊத்தடாப்பா.

(இருவரும் பியர் அருந்தியபடி)

அண்ணே ஊர்ப்புதினம் கேட்டியளே. எல்லாப் பக்கத்தாலும் விட்டிட்டாங்கள் போல.

ஓமடாப்பா. ஊரெல்லாம் காசு வாங்கினாங்கள். இறுதியா அடிக்கப் போறம் எண்டு. ஆனால் அடிவாங்கிறதா எல்லோ கிடக்குது.

நீங்கள் எவ்வளவண்ண குடுத்தனீங்கள்.

நான் எங்க வீட்டில இருக்கிறது. உவள் பாவிட்டத்தான் போய் கேட்டவையாக்கும். அவள் சொல்லிட்டாள்.. அவருக்கும் உழைப்பில்ல.. பிள்ளைகளும் பார்க்கிறதில்ல உதவிறதில்ல எங்களட்ட என்ன இருக்கு கொடுக்க என்று. வந்தவை பேசாமல் போயிட்டினமாம்.

கெட்டிக்காரனண்ண நீங்க. நானெல்லோ மாட்டுப்பட்டுப் போனன்.

அதுசரி எல்லாத்தையும் விட்டுப்போட்டு என்ன செய்யப் போகினண்டா.

காட்டுக்க மறைஞ்சு கரந்தடிப்படையா இருப்பினமாக்கும். எதுஎப்படி என்றாலும் அண்ண உந்த மாவீரரான பிள்ளையளின்ர கனவு பலிக்கனுமண்ண. அதுதான் என்ர பிரார்த்தனை.

உப்படிச் சொல்லிட்டியெல்லே எனி நீ தமிழ் தேசியவாதிதான் போ.

-----------------------

அண்ண குஞ்சண்ண.. அங்க பாருங்க.. அதில காரால இறங்கிறது யாரண்டு தெரியுமே.

அது அப்பக்கடை சுந்தரத்திண்ட பொடியும்.. இடியப்பக்கடை கனக்கற்ர பெட்டையும் போல எல்லோ இருக்குது.

ஓமண்ண.. உவைட சங்கதி தெரியுமோ.

இல்லையடாப்பா.

உவன் சுந்தரத்தின்ர பொடி முதலில ஒரு வெள்ளைக்காரியோட சுத்தினான் அண்ண. அவள் பெட்டை ஒரு மெக்சிக்கனோட திரிஞ்சாள். இப்ப சோடி மாத்தித் திரியுறாங்கள்.

அதையேண்டா கேட்கிறா.. உவன் ஊரில சங்கக்கடை மனேச்சரா இருந்தான் பசுபதி.. அவன்ர பொடியெல்லே.. உவர் எங்கட கொம்பர் புரபெசற்ர பெட்டையோட டேற்றிங் செய்து கூட்டிக் கொண்டு ஓடிட்டானாம்.

உதெல்லாம் இப்ப கனடாவில சகஜமாப் போச்சண்ண.

பொறு பொறு.. மொபைல் அடிக்குது யார் என்று பார்த்திட்டு வாறன்.
அட உவள் பாவி கோல் பண்ணுறாளடாப்பா. இப்ப கதைச்சன் என்றால் பியர் குடிச்சிட்டு உளறுவதைக் கண்டுபிடிச்சிடுவாள். பேசாம விடுவம்.

எதுக்கண்ண.. உவா கோல் பண்ணுறா.

உவன் கனடா ரிசிப் பொடி ஒரு பேப்பர் விடுறானில்ல. புதிசு வந்திருந்தா வேண்டிக் கொண்டு வா என்று சொல்லிவிட்டவள்..!

ரிசி எங்க ஒரு பேப்பர் விடுறான். அது பரபரப்பண்ண. பேப்பர் எப்படியண்ண..?!

வாசிக்க திகில் கதையள் படிக்கிறது போல சுவராசியமா இருக்கடாப்பா.
உவன் ரிசி உங்கின.. வெப்சைட்டுகளில சுட்டு தானாம் பரபரப்பா எழுதிறதாச் சொல்லுறாங்கள் உண்மையே.

இருக்கும் அண்ண. கொஞ்சம் புளுகும் இருக்குப் போல.

எவண்டா இஞ்ச புளுகாம இருக்கிறான். புளுகினாத்தானேடாப்பா புகழ் கிடைக்கும். நீ வேற..!

அண்ண உங்களுக்கு யாழ். கொம் என்று ஒரு வெப்சைட் இருக்கு தெரியுமோண்ண?!

ஏண்டாப்பா கேட்கிறா.. அதுகும் புளுகுதோ.

புளுகிறது எண்டில்லையண்ண.. அங்க எங்கட கனடாக்காரர் அடிக்கிற லூட்டி சொல்லி வேலையில்லையண்ண.

அப்படி என்னடா லூட்டி அடிக்கினம்.

கனடாவுக்கு வந்த தமிழர்கள் எல்லாம் கனடா தேசிய கீதமாம் எல்லோ அண்ண பாட வேணும். கேட்டியளே சங்கதி. அப்பதானாம் தமிழ் தேசியம் வளரும். அதுமட்டுமே அண்ண அங்க... கருத்து எழுத என்று ஒரு இடமிருக்கண்ண. அங்க உங்கட சொந்தக் கருத்தை ஒரு விசயம் தொடர்பா எழுதனும். அதில உங்களுக்குப் படுற நியாயம், அநியாயம் எல்லாம் சொல்லலாம்.
உதென்ன நடக்குது தெரியுமோ.. கொஞ்சப் பேர்.. அங்க போய்த்தான் அண்ண.. பிரன்சிப் பிடிக்கினமாம் என்றால் கேளுங்கோவன் கூத்தை.

ஏண்டாப்பா உங்க கண்முன்னால தான் உத்தினை கூத்தென்றால்.. கணணியிலுமா.. உவங்களுக்கு வேற வேலையில்லையே. உங்க தானே பிரன்சிப் பிடிக்க எஸ் எம் எஸ்.. எம் எஸ் என்.. டேற்றிங் என்று.. கனக்க வழி இருக்கே. பிறகென்னத்துக்கு கருத்து எழுதிற இடத்திலும் போய்.. டேற்றிங் செய்யுறாங்கள்.

சும்மா இருங்க குஞ்சண்ண. டேற்றிங் அதுஇதொண்டு கொண்டு. உதுகள் கிழடுகளுக்கு என்ன தெரியும். பிற்போக்கான யாழ்ப்பாணத்து புளுக்கொடியல்களுக்கு தங்கட முற்போக்கைக் கண்டு வயிற்றெரிச்சல் என்று எழுதத் தொடங்கிடுவாங்கள்.

ஏண்டாப்பா எனக்கொரு சந்தேகம். உந்த.. டேற்றிங் செய்யுறது தப்பாடாப்பா. தப்பென்றால் ஏன் கவண்ட்மென்ற் விடுகுது செய்ய.

தப்பென்று யாரண்ண சொன்னது. அதை தப்பா பாவிக்கிறதுதானே அண்ண நடக்குது. அதுதான் தப்பண்ண.

அதுவும் சரிதாண்டாப்பா. எதைத்தான் எங்கட ஆக்கள் சரியாப் பாவிக்கினம்..! பாவிச்சிருந்தா எங்கையோ போயிருக்குமே எங்கட இனம்.

அப்படிச் சொல்லக் கூடாதண்ண.. ஊரில.. பூவரசம் இலையால.. பன்னாடையால துடைச்சவை.. இப்ப ரொயிலட் ரிசுவால எல்லோ அண்ண துடைக்கினம். அது முன்னேற்றம் தானே.

அதென்னவோ உண்மை தாண்டாப்பா. அதுவும் எங்க சீப்பான ரிசு கிடைக்கும் என்றெல்லோ தேடிப்பார்த்து வாங்கிப் பாவிக்குதுகள். எதுக்கும் பூவரசம் இலையை இறக்குமதி செய்து அதையும் இலவசமாக் கொடுத்தா.. விழுந்துகட்டி.. பாவிப்பினமடாப்பா.

அண்ண.. கான் காலியாகிட்டுது. எனி என்னால உந்தக் குளிருக்க நிக்க முடியாது. மனிசி தேடப் போறாள். அப்ப நான் வரட்டே.

சரியடாப்பா. பிறகு சந்திப்பம். உவள் பாவி.. கோல் பண்ணினன் எங்க கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தனி என்று திட்டப்போறாள்.. பரபரப்போட போய் பரவசப்படுத்த வேண்டியதுதான்.

பாய் ரேக் கெயர் அண்ண.

சேம் ரு யு டா (same to you da)

(இந்த ரொரண்டோ குஞ்சரின் அலட்டடல்ககளுக்குள் யதார்த்தமும் இழையோடியே உள்ளது..! நகைச்சுவையும் உள்ளது..!)

(மின்னஞ்சல் வழி கிடைத்த ஆக்கம்..!)

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:19 AM

5 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

கிகிகிகிகிகக

Thu Dec 25, 12:35:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

நல்லத்தான் அலட்டி இருக்கிறீங்க.

Thu Dec 25, 01:59:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

ஹாய் தூயா பாப்ஸ், நலமா. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ம்ம்.. குஞ்சற்ற அலட்டலைக் கேட்டு.. நல்லாத்தான் சிரிக்கிறீங்க. :) :)

Thu Dec 25, 02:05:00 PM GMT  
Blogger பழமைபேசி செப்பியவை...

நல்ல பகிடியாத்தான் கதச்சி இருக்கினுமென்ன... இஃகிஃகி!

Thu Dec 25, 02:51:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

வாங்க.. பழமைபேசி.. குஞ்சரின் அலட்டல்கள் உங்களையும் கவர்ந்திருப்பது மகிழ்ச்சி.

Thu Dec 25, 06:21:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க