Friday, December 26, 2008

தமிழ் தேசியம் புலம்பெயர்ந்த கனடிய தமிழர்கள் சிலரின் உயிர் மூச்சா..??!CTC - Canada based Yarl.com Tamil Crows taking part in Their Relax Programme.

கனடாவில் யாழ் இணைய ஆதரவில் ஒன்றுகூடுபவர்களின் நிலை. யதார்த்தம்.

தமிழ் இணைய உலகில் யாழ்.கொம் ( www.yarl.com )உம் அதன் கருத்துக்களமான ( http://www.yarl.com/forum3/ )உம் புலம்பெயர் தமிழர்கள் சிலரை வைத்து தமிழ் தேசிய வளர்ப்பதாகக் கூறிக் கொள்கின்றது.

ஆனால் அதே யாழ் களத்தில்.. புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் செய்யும் சமய நிகழ்வுகளை.. கலாசார பண்பாட்டு நிகழ்வுகளில் சில விடயங்களை தற்போதைய ஈழத்தின் சூழ்நிலை கருதி தவிர்க்கச் சொல்லி வருவதை.. அங்குள்ள உறுப்பினர்கள் சிலர் மதரீதியான (குறிப்பாக சைவர்களை அல்லது இந்துக்களை) இழிவுபடுத்தல்களுக்குப் பாவித்தும் வருகின்றனர்.

இத்தலைப்பை பாருங்கள்.. http://www.yarl.com/forum3/index.php?showtopic=44336

அதுமட்டுமன்றி அதே யாழ் களம்.. அதனது கனடிய தமிழ் உறுப்பினர்கள் சுமார் 20 தொடக்கம் 25 பேரை (ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளடங்க) இவ்வாண்டின் (மார்கழி 27,2008 வாக்கில்) இறுதியில் தனிப்பட்ட முறையில் கூடி தம்மை அறிமுகம் செய்து வைக்க தூண்டி வருகிறது... விளம்பர ஒத்துழைப்பும் செய்து வருகிறது.

உண்மையில் அவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வில் எந்த தமிழ் தேசிய அல்லது ஈழத்தமிழர் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரலும் இடம்பெற்றிருக்கவில்லை.அது முகமறியாதவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைக்கவும் (டேற்றிங் போவது போன்றது) தம்மை மனதளவில் நெகிழ்விக்கவும் என்று செய்யப்படும் Relax Programme என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

உண்மையில் அதில் கலந்து கொள்ள இருப்பவர்களில் பலர் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் மட்டுமன்றி இவ்வாறான Relax Programme என்று கூறி.. தனிப்பட்ட நலன் சார்ந்து களியாட்டத்தனமான விடயங்களில் ஈடு்பட்டும் வந்திருக்கின்றனர்..! அவற்றை பொது ஊடகமான யாழ்.கொம்மில் விளம்பரப்படுத்தியும் வந்துள்ளனர்.அதுமட்டுமன்றி யாழுக்கு வெளியே எம் எஸ் என் (MSN messenger) போன்றவற்றூடும் அவர்கள் தொடர்புகளை பேணி வருபவர்கள். இருந்தும் யாழ் இணையத்தையே தமது தனிப்பட்ட களியாட்ட நோக்கங்கள்.. அல்லது சுயவிளம்பரப்படுத்தல்களுக்காகப் பாவித்தும் வருகின்றனர்.

யாழ் கள நிர்வாகத்தில் இருக்கும் வலைஞன் என்ற பெயர்வழி நபரும் இவ்வாறான விடயங்களை ஊக்குவித்து வருவதோடு.. ஏனைய புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அவர்களின் மத வழிபாட்டு முறைகளை மையப்படுத்தி இழித்துரைக்க உறுப்பினர்களை ஊக்குவித்தும் வருகிறார்.

உண்மையில் யாழ் களமும்.. அதன் சில உறுப்பினர்களும் தமிழ்தேசிய.. ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டு தான் செயற்படுகின்றனரா.. அல்லது.. தமிழ் தேசிய சாயத்தைப் பூசிக்கொண்டு.. அதற்கு எதிரான செயற்பாடுகளை ஊக்குவிக்கின்றனரா என்பதுதான் இன்றைய கேள்வியாக இருக்கிறது.

தமிழ் தேசிய நலனுக்காக.. ஈழத்தில் தமது உறவுகளுக்காக குரல் கொடுப்பதாகச் சொல்லும் கனடிய யாழ் கள உறுப்பினர்கள் சிலர் இன்றைய சூழ்நிலையில் பயனற்ற நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட இவ்வாறான தேவையற்ற விளம்பரப்படுத்தப்பட்ட ஒன்றுகூடல்கள் அல்லது களியாட்டங்கள் மூலம் எவ்வாறு ஈழத்தமிழரின் நலன் காக்க முயல்கின்றனர் என்பது கேள்விக்குரியதாகவே இருக்கிறது.

கனடாவில் வாழும் தமிழர்கள் சிலரின் செயலாலும் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த அவப்பெயராலும் ஈழத்தமிழர்களின் போராட்ட சக்திகளாக விளங்கும் விடுதலைப்புலிகளை கனடா பயங்கரவாதியாக இனங்காட்டித் தடை செய்தது. சிறீலங்கா அரசின் மற்றும் இதர வெளிநாட்டு அரசுகளின் அழுத்தங்கள் அதில் இருந்திருந்தாலும் கனடிய அரசுக்கு ஆதாரங்களை அளித்தவர்களாக கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினரும் அவர்களில் சிலர் செய்த செயற்பாடுகளுமே அமைந்திருந்தன. அவர்களில் பலர் விடுதலைப்புலிகளோடு தொடர்பற்றவர்கள். கனடா சென்று அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள். ஆனால் குற்றச்சாட்டுக்களை கனடியப் பொலீஸார் அவர்கள் மீது வைத்த போது தாம் தப்பிக்க விடுதலைப்புலிகளின் பெயரை உச்சரித்தவர்கள்.

அதுமட்டுமன்றி கனடாவில் அகதி அந்தஸ்துப் பெற விடுதலைப்புலிகளால் தாம் துன்புறுத்தப்பட்டதாக பொய் கூறிய தமிழர்கள் பலர் கனடாவில் நிரந்தர வசதிவிட உரிமை பெற்று தம்மைத்தாமே கனடியத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். இவர்கள் கொடுத்த வாக்குமூலங்களும், விடுதலைப்புலிகளின் பெயரை அவர்கள் தங்கள் சுயநலத்துக்காக தவறாகப் பயன்படுத்திக் கொண்டதுவும்.. இன்றைய ஈழத்தமிழரின் நிலை இவ்வளவு இடர் மிகக் காரணமானது என்பதும் மறுக்கப்பட முடியாதது.

இப்போ அவர்கள் (தம்மைத் தாமே கனடியத் தமிழர் என்போர்) தாம் போராட்டத்துக்கு பங்களிப்பதாகச் சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் பங்களிப்பு என்பது அவர்கள் ஈழத்தில் வாழும் அவர்களின் சொந்தங்களுக்கு ஏற்படுத்தி்ய அவலச் சூழலை நிச்சயம் ஈடுசெய்யப் போதாது..!

அமெரிக்கா உட்பட்ட நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதப்பட்டியலில் போட்டதுவும் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான போரை ஆரம்பித்தததுவும் அதைச் சிறீலங்கா அரசு தமிழர்களின் போராட்டத்தை நசுக்க கையில் எடுக்கவும்.. புலம்பெயர்ந்த சில தமிழர்கள் செய்த கைங்கரியங்களும் உதவியே நின்றிருக்கின்றன.

ஒருபுறம்.. கனடா வாழ் ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் கனடிய அரசை நோக்கி ஈழத்தமிழர்களின் துன்பத்தை பல்வேறு வகைகளிலும் வெளிப்படுத்தி அவர்களுக்கு உதவ ஆர்ப்பாட்டங்கள்.. ஊர்வலங்கள்.. கூட்டங்கள் நடத்தி கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில் யாழ் களம் போன்ற தமிழ் தேசியம் வளர்ப்பதாகச் சொல்லி இயங்கும் இணையத்தளங்கள்.. தங்களின் உறுப்பினர்களைக் கொண்டு களியாட்டத்தனமான.. Relax Programme நடத்துவது எந்த வகையில் நியாயமானது. அதுவும் தற்போதைய ஈழத்தமிழரின் சூழ்நிலையில். என்பதுதான் அநேக யாழ் இணைய வாசகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

இது யாழ் இணையமும் இரட்டை வேடம் போடுகின்றனதா என்ற கேள்வியையும் எழுப்பச் செய்கிறது.

இவ்வாறான நிலைகள் தான் உலகில் ஈழத்தமிழரின் நியாயங்கள் மதிப்பிழந்து போக காரணமாக அமைகின்றன. சில புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் சுயநலத்துக்காக தமிழ் தேசிய ஊடகங்களை பயன்படுத்தி இவ்வாறான களியாட்டச் செயற்பாடுகளை இக்கட்டான காலக்கட்டங்களிலும் நடத்த அனுமதிப்பதானது ஈழத்தமிழர்கள் மீதான அனுதாபப் பார்வையை உலகம் கண்ணுறுவதில் இருந்தும் தாமதப்படுத்தும் அல்லது தாமதப்படுத்துகிறது எனலாம்..!(களியாட்ட நோக்கோடு வடிவமைக்கப்பட்ட ஒன்றுகூடல் மற்றும் Relax Programme விளம்பரம். யாழ் இணையத்தில் சாதாரண வாசகர்களுக்கு தெரியாத வகையில்.. அவர்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படாத இடங்களில் இணைக்கப்பட்டுள்ளன.)

தமிழகம் போன்ற தமிழர்கள் வாழும் தேசங்கள் எங்கணும் மக்கள் ஈழத்தமிழரின் துயர் கண்டு கண்ணீர் வடிக்கும் நிலையில் தமிழ் தேசியம் வளர்த்து ஈழத்தமிழர்களுக்கு உதவுவதாகச் சொல்லும் யாழ் இணைய உறுப்பினர்கள் சிலர்.. இவ்வாறான ஒன்றுகூடல்கள் மூலமான களியாட்டத்தனமான Relax Programme ங்கள் மூலம் என்னத்தை உலகுக்குச் சொல்ல விளைகின்றனர்...??!

உண்மையில் இவர்கள் ஈழத்தமிழர்களின் நலன்காக்கும் உள்ளம் படைத்தவர்களா என்ற பெரிய வினா தற்போது எழுந்திருக்கிறது. உலகத் தமிழ் மக்கள் இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு சரியான வழிநடத்தல்களை வழங்க முன்வருதலே தற்போதைய சூழலில் அவசியம்..! இவர்களால் உருவாகக் கூடிய ஈழத்தமிழர்களின் நலன்சாராத நெருக்கடிகளில் இருந்தும் மக்களைப் பாதுகாக்க அவ்வாறான வழிகாட்டல்களே உதவும்.!

நன்றி.

யாழ் வாசகன்.

(இதனை இங்கு பதிய உதவிய குருவிகளுக்கு நன்றிகள்.)

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:52 AM

14 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

வலைப் பதிவு எழுதுபவர்கள் பலர் இவ்வாறான ஒன்று கூடல்களை நடாத்துகிறார்கள்.இதற்கும் தமிழ்மணதிற்கும் என்ன சம்பந்தம்?யாழ்க் களம் மூலம் அறிமுகமாவர்கள் சந்திகிறார்கள்.இதற்கும் யாழ்க் களத்துக்கும் என்ன சம்பந்தம்?
ஏன் உமக்கு நண்பர்கள் கிடையாதா அவர்களை நீர் சந்திப்பது இல்லையா?
உமக்கு ஏன் இப்படி வயிறு எரிகிறது என்று தெரியவில்லை.

Fri Dec 26, 12:04:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

முதலில் இந்த ஆக்கம் குருவிகளாகிய எனதல்ல. எனக்கு மின்னஞ்சல் வழி அனுப்பப்பட்ட ஒரு யாழ் வாசகனின் ஆதங்கம் இது என்பதைச் சொல்வது கடமை.

வலைப்பூப்பதிவர்கள் வெறும் அந்த வாசகன் ஆதங்கப்படுபவது போல டேற்றிங் தேவை போன்ற ஒன்றுக்காகவோ அல்லது களியாட்ட நோக்கம் மட்டும் கருதியோ ஒன்று கூறவில்லை என்பதை வலைப்பூப்பதிவுகள் திறம்படச் சொல்கின்றன.

அவர்கள் பல இலக்குகளை தீர்மானிக்க ஒன்றுகூடி அதில் அறிமுகமும் ஆனார்கள். அது வரவேற்கக் கூடியதே.

வலைப்பூபதிவர்களுக்கு உதவப் பயிற்சிப்பட்டறைகளை எல்லாம் செய்திருக்கிறார்கள். அதில் அறிமுகங்களும் நடந்திருக்கின்றன.

ஆனால் தமிழ் தேசிய நலனுக்காக உழைப்பதாகச் சொல்லும் யாழ் களம், தமிழ் தேசிய நலன் சார்ந்த எந்த நிகழ்ச்சித்திட்டத்தையும் கொண்டிராத இந்த நிகழ்வுகளை யாழ் இணையத்தின் பெயரால் அங்கு விளம்பரப்படுத்தி ஒழுங்குசெய்ய அனுமதிப்பது உறுத்தலான செயலே ஆகும் என்பது எனது பார்வை..!

நன்றி குருவிகள்.

Fri Dec 26, 12:17:00 PM GMT  
Blogger Thooya செப்பியவை...

பல விடயங்கள் தெரியாமல் எழுதப்பட்ட ஆக்கம் என்பது என் கருத்து..

Fri Dec 26, 12:29:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

தூயா பாப்ஸ் கருத்துரிமை என்பது எல்லோருக்கும் உரியது. அந்த வாசகன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். தேவையான ஆதாரங்களையும் தந்திருக்கிறார்.

அதேபோல் நீங்கள்

//பல விடயங்கள் தெரியாமல் எழுதப்பட்ட ஆக்கம் //

இவ்வாறு குறிப்பிட இருக்கும் அவரின் கருத்தில் இல்லாத விடயங்களையும் பட்டியலிடுங்கள். அது உங்கள் கருத்துரிமையாகும்..!

நன்றி குருவி பாப்ஸ்.

Fri Dec 26, 12:53:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

உண்மையை உள்ளபடி சொல்லி இருக்கிறீர்கள். நிச்சயம் இதற்கு கண்டனங்கள் வந்தே சேரும்.

உண்மை உறைக்கத்தான் செய்யும்.

உங்கள் துணிவுக்கு பாராட்டுக்கள்.

பெயரரியா நண்பன்.

Fri Dec 26, 01:23:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

பெயரரியாவா அல்லது பெயரறியாவா, நண்பன்

உங்கள் கருத்தும் வரவேற்கப்படுகிறது. பக்கச்சார்பான மனிதர்களின் பார்வை ஒருவகையிலும் நடுநிலை நிற்பவனின் பார்வை இன்னொரு வகையிலும் இந்த விடயங்களை இந்த ஆக்கத்தின் மூலம் அறிபவனின் பார்வை இன்னொரு வகையிலும்.. இப்படி பார்வைகள் கருத்துக்கள் பலவகைப்படும்.

உண்மை உறங்காது என்பது உண்மை.

Fri Dec 26, 01:28:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

புலம்பெயர்ந்த தமிழர்கள் பல வகையில் புலம்பெயர்ந்திருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டதுபோல எமது போராட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ சுயநலத்தை முன்னிலைப்படுத்தியோ காட்டிக் கொடுத்தவர்கள் பலர் என்பது உண்மைதான்.

எமது போராளிகளின் தியாகங்கள்,மக்களின் தியாகங்களின் முன் தமது சுயநலத்தை சொந்த வாழ்க்கையைப் பற்றி சிந்திந்தவர்களே அதிகம். அதனால் போராட்டம் பல இடர்களை சந்தித்ததும் உண்மை.

உங்கள் கருத்தில் நேர்த்தியும் உண்மையும் இருக்கிறது.

சிலர் உங்களை திட்டலாம். ஏனெனில் நீங்கள் அவர்கள் பற்றிய உண்மையைச் சொல்வதால். எனவே தொடர்ந்து உண்மைக்காக எழுதுங்கள்.

அதே நேரம் தவறு செய்துவிட்டவர்களை தொடர்ந்து திட்டிக் கொண்டும் இருப்பது நல்லதல்ல. அவர்களை திருத்தி அவர்களின் மனச்சாட்சியை தட்டி எழுப்பி அவர்களை எமது ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் பால் ஈர்த்து வரவும் பங்களிப்புச் செய்யவும் இந்த பதிவைப் பயன்படுத்தினீர்கள் என்றால் நன்று.

நிச்சயம் இந்தப் பதிவு பலரின் மனச்சாட்சியை தட்டும். பலரை நீங்கள் எதிர்பார்க்கும் போராட்டத்தின் பாலான உண்மை அக்கறையின் வழிக்கு நகர்த்தி வர அது உதவும் என்றும் நான் நம்புகிறேன்.

திட்டுபவர்களை கவனத்தில் எடுக்காதீர்கள். அவர்கள் திட்டுத்திட்டியே சீரழிபவர்கள். மாற்றங்களையோ உண்மைகளையோ மனச்சாட்சியை தட்டிக்கேட்பதையே அதனால் உருவாகக் கூடிய நல்ல நோக்கங்களையோ அவர்கள் எதிர்பார்ப்பதில்லை.

உங்களுக்கு என் ஆதரவு என்றுமுண்டு. எழுதுங்கள் நண்பரே. சோர்ந்திடாது.

Fri Dec 26, 05:50:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

அனோனிமஸ் உங்கள் விரிவான பார்வைக்கும் கருத்துக்கும் நன்றிகள். எல்லாம் அந்த யாழ் வாசகனைப் போய் சேரட்டும்.

Fri Dec 26, 06:12:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

அண்ண இதெல்லாம் சுட்டுப்போட்டாலும் எங்கட சனத்துக்கு மூளையில ஏறாது. சாவு வீட்டிலையே திருடிற கூட்டமண்ண எங்கட சனம்.

Sat Dec 27, 02:37:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

அனானி, உங்கள் கருத்து யாழ் வாசகனை சென்றடையட்டும்.

நன்றிகள்.

Sat Dec 27, 10:51:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

இக்கட்டுரையை எழுத உதவியமைக்காக நெடுக்காலபோவனுக்கு யாழ் இணையத்தால் 10 நாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ் நெடுக்காலபோவனை தடை செய்வதன் மூலம் தான் குற்றவாளி என்பதை ஒத்துக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் யாழ் தனது தவறை திருத்தும் போது நெடுக்காலபோவனும் தனது கருத்தியலில் மாற்றங்களை கொண்டு வரலாம்.

நன்றி.

யாழ் வாசகன்.

(குருவிகள் உங்களுக்கு எங்களால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகின்றோம். உங்கள் வலைப்பதிவில் கருத்துச் சுதந்திரத்துக்கும் தாயக மக்கள் நோக்கிய உண்மையான அக்கறையை வெளிப்படுத்த இடமளித்ததற்கும் கோடான கோடி நன்றிகள்.)

Sun Dec 28, 12:11:00 AM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

யாழ் வாசகன்,

வலைஞன் என்ற நபர் தடைக்குச் சொல்லி இருக்கிற காரணங்களையும் போடுங்கள்.

அப்பதான் யாழ் களம் மறைச்சு சில பொது விசயங்களைக் கையாளுறது தெரிய வரும்.

வெளில ஒன்று சேரினமாம். அதுவும் யாழ் களத்தைக் காட்டி. ஆனால் அதை மறைச்சு வைச்சுத்தான் செய்வினமாம். அதை வெளியில் சொல்வது குற்றமாம்.

அதிலும் நெடுக்காலபோவன் வலைஞன் என்பவருக்கு இப்படிப் போடப் போறன் என்று சொல்லிவிட்டுத்தான் போட்டிருக்கிறார்.

அதற்கான தனிமடல் பிரதி நெடுக்காலபோவனிடம் இருக்கிறது.

அப்போதெல்லாம் அவற்றைப் புறக்கணித்துவிட்டு வலைஞன் தனது விலாசத்தைக் காட்ட யாழைப் பாவித்திருப்பது மீண்டும் யாழ் செல்லும் பாதை சரியானதா என்றே கேட்க வைக்கிறது.

ஆதாரங்கள் சில..

?//ருத்துக்கள உறுப்பினர் நெடுக்காலபோவான் என்பவருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், 10 நாட்களுக்கு கருத்துக்களத்தில் எழுதுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கருத்துக்கள உறுப்பினர்களுக்கான பகுதியிலிருந்து தகவல்களை வெளியில் காவிச் சென்றமை மற்றும் கருத்துக்கள விதிமுறைகளை மீறும் வகையிலும், கருத்துக்கள உறுப்பினர்களைச் சீண்டும் வகையிலும் செயற்பட்டமை காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி
கருத்துக்கள நிர்வாகம்


--------------------
வலையில் கலைஞன்
வலைஞன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32911&pid=473146&st=760&#entry473146

-----------//

நெடுக்காலபோவனின் தனிமடல் (பி எம்) பார்க்க முடியாமல் தடைசெய்யப்பட்டுள்ளதால் அவர் வலைஞனுக்கு அனுப்பிய செய்தியின் பிரதியை இங்கு ஆதாரமாக நெடுக்கிடம் இருந்து பெற்றுத்தர முடியவில்லை.

நன்றி.

நண்பன்.

Sun Dec 28, 05:25:00 AM GMT  
Blogger A N A N T H E N செப்பியவை...

:(

Sun Dec 28, 05:58:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி நண்பர்களே. ஒரு பூரணத்துவமாக இப்பதிவை கொண்டு செல்ல உதவுவதற்கு.

நாம் தகவலை வழங்குவோம் மக்கள் தீர்மானிப்பவர்களாக விளங்கட்டும்.

நாம் தவறுசெய்திருந்தால் தான் வசைகளுக்கு அஞ்ச வேண்டும். அவர்களின் வசைகள் எம்மை எதுவும் செய்யாது. பொய்கள் உண்மையாகாது எப்போதுமே.

குருவிகள்.

Sun Dec 28, 07:01:00 AM GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க