Monday, December 29, 2008

வன்னிப் போர்க்களக் காட்சிகள் - குற்றவாளிகள் யார் ..?!அண்மையில் ஈழத்தின் வன்னிப் போர்க்களத்தில் நடந்த சம்பவமொன்றில் வீரமரணமடைந்த பெண் போராளிகளின் உடலங்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று.. பார்த்துச் சிரித்து கொக்கரித்து மகிழ்ந்து கொண்டது சிங்கள இனவெறி இராணுவம். அதை வீடியோ பதிவு செய்து சிங்களவர்களுக்கு காட்டியும் மகிழ்ந்தது.

இதேபோன்று 2006ம் ஆண்டு போர்க்களத்தில் வீரமரணமடைந்த பெண் போராளிகளின் உடலங்களை நிர்வாணப்படுத்தி இணையத்தளங்கள் சிலவற்றில் பிரசுரித்து பெருமை கண்டனர் சிங்கள இனவெறியர்கள். அதைப் பார்த்து மகிழ்ந்தவர்களில் தமிழர்களும் அடங்குகின்றனர்.

இது இன்று நேற்றல்ல.. உண்மையில் சிறீலங்கா 1948 இல் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல், சிங்கள இனவெறியர்கள் காலத்துக்குக் காலம் செய்து வந்த ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனங்கலவரங்களின் போதும் அவர்கள் தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி ரயரூட்டிக் கொழுத்தி வந்ததன் தொடர்ச்சியே ஆகும்.

இவற்றை எல்லாம் தவிர்க்க, தடுத்து நிறுத்த தமிழர்களுக்கு தமிழீழம் அமைவது தான் தீர்வென்று தீர்மானித்தே தமிழ் மக்கள் சிங்கள இனவெறியர்களுக்கு எதிராகப் போராட ஆரம்பித்தனர்.

போர்க்களத்தில் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து போராளிகளின் உடலங்களை கைவிட்டு விட்டு வரும் நிலை அதிகரித்து வந்திருக்கிறது. மணலாறுக் களமுனையில் 1995 வாக்கில் போராளிகளுக்கு தோல்வியில் முடிந்த தாக்குதல் ஒன்றில் பல பெண் போராளிகளின் உடலங்களைக் கைப்பற்றிய சிங்கள இனவெறி இராணுவம் அவற்றை நிர்வாணப்படுத்தி மக்களுக்கு காட்சிப்படுத்தியது.

அதை வவுனியாவில் வாழ்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினரும் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தனர். ஏன் இராணுவத்துடன் இணைந்து செயற்படும் புளொட் போன்ற தமிழ் ஒட்டுக்குழு உறுப்பினர்களும் இராணுவத்துடன் இணைந்து அவ்வுடலங்களை நிர்வாணமாகக் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்திருந்தனர். சில தமிழ் பத்திரிகைகள் உட்பட பத்திரிகைகள் அப்படங்களை பிரசுரித்து காசு பார்த்தும் கொண்டன. இனவேறி சிங்களப் பத்திரிகைகள் தமிழிச்சிகளை நிர்வாணப்படுத்திக் காட்டுவதில் தனிக் கெளரவம் பெற்றதாக இறுமாந்தும் கொண்டன.

சிங்கள இனவெறி இராணுவம் மட்டுமன்றி.. இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்த காலப்பகுதியில் தமிழ் ஒட்டுக்குழுக்கள் தமிழ் பெண்களைக் கடத்திச் சென்று இந்தியப் படையினர் பாலியல் வல்லுறவு செய்த உதவினர். பாலியல் வல்லுறவின் பின் பல பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஓட்டுமடம் சந்தியில் இருந்த இந்திய இராணுவம் மற்றும் ஈ என் டி எல் எவ் ஒட்டுக்குழு கூட்டுப்படைத் தளத்தில் இருந்து பல தமிழ் இளம் பெண்களின் எலும்புக்கூடுகள் இந்தியப் படையினர் வெளியேறிய கையோடு மீட்கப்பட்டிருந்தன.

அதன் பின்னர் 1995 இல் சிறீலங்கா சிங்கள இனவெறி இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி பள்ளி மாணவியான கிருசாந்தி குமாரசாமியை பாலியல் வல்லுறவு செய்து பின் படுகொலை செய்து புதைத்தது. அப்படி கொல்லப்பட்டு பெண்கள் பலர். அவற்றைச் செய்தவர்கள் மற்றும் அவற்றைச் செய்யத் தூண்டிய இராணுவத் தலைமைகள் இன்று வரை முழுமையாக தண்டிக்கப்படவோ நீதியின் முன் நிறுத்தப்படவோ இல்லை.

சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்த காரணத்தால் கிருசாந்தி பாலியல் வல்லுறவுப் படுகொலை தொடர்பில் அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக் கூறி.. கீழ் மட்ட அளவில் போலி விசாரணை ஆணைக்குழுக்களும் சில போலி நீதி விசாரணைகளும் நடத்தப்பட்டு தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யப்படுவதாக தோற்றம் காட்டப்பட்டு வந்தது.

சர்வதேசத்தை ஏமாற்ற ஆடப்பட்ட அத்தகைய கண்துடைப்பு நாடகங்களும் பின்னர் சிங்கள இனவெறியர்களின் ஆட்சி மாற்றங்களோடு காலவோட்டத்தில் கரைந்து காணாமல் போய்விட்டன.இறுதியில் தமிழருக்கான.. தமிழிச்சிகளுக்கான நீதி செம்மணியில் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டுப் போனது தான் உண்மை.

அதே போல் கிழக்கிலங்கையில் பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் பிறப்புறுப்பில் கிரனைட் வெடிகுண்டை வெடிக்க வைத்து ஒரு பெண்மணியை கொடூரமாக சிங்கள இராணுவம் கொன்று தள்ளியது. இப்படி கிழக்கில் நடந்த சம்பவங்கள் பல. அவையும் நீதியின்றி செத்தே போயின. செய்தவர்கள் இன்று உயர் இராணுவ பதவிகளை அலங்கரிக்கின்றனர்.

அதுமட்டுமன்றி 2004/5 ஆண்டு காலப்பகுதியில் கிழக்கிலங்கையில் கருணா ஒட்டுக்குழு கும்பல் தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்களான தமிழ் பெண்களை கடத்திக் கொன்றது.

தமிழ் பெண்கள் அதிகம் கொல்லப்பட இராணுவங்களை தூண்டியவர்களாக தமிழ் ஒட்டுக்குழுக்களே அதிகம் இருந்து வந்துள்ளன.

இன்றும் பல தமிழ் பெண்கள் பாலியல் ரீதியாக தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இனவெறி இராணுவத்தினருக்கு வழங்கப்படுவதில் இந்தக் கும்பல்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. பல தமிழ் பேசும் பெண்கள் மகிந்த அரசின் கிழக்கின் விடியலுக்கு அப்புறமாகக் கூட கடத்தப்பட்டு, பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டும் உள்ளனர். இதனை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமும் (HRW) உறுதிப்படுத்தியுள்ளது.

போர்க்களத்தில் போராளிகளின் மரணங்களைக் கட்டுப்படுத்த சில சந்தர்ப்பங்களில் உடலங்களைக் கைவிட்டு வர வேண்டிய நிலை தோன்றுவது ஈழத்தில் மட்டுமல்ல சர்வதேச அரங்குகள் எங்கனும் போர்க்களத்தின் போக்கோடு நிகழ்கின்ற சம்பவங்கள் தான்.

ஆனால் சில தமிழ் ஊடகங்கள் மற்றும் சில வலைப்பதிவர்கள் சமீபத்திய சிறீலங்காப் படையின் செயற்பாட்டைக் கொண்டு விடுதலைப்புலிகள் மீது அவதூறான ஒரு கருத்தை உண்டு பண்ண விளைவது தெரிகிறது.

உண்மையில் அதில் எந்த வித அர்த்தமும் இல்லை. ஈராக் போர்க்களத்தில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களை ஈராக்கியர்கள் சிலர் நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற காட்சிகளும் இணையத்தளங்களில் பதிவுகளாக இடப்பட்டிருந்தன. அதற்காக அமெரிக்க இராணுவம் அதைச் செய்ய அனுமதித்தது என்பது ஆகாது.

விடுதலைப்புலிகள் இயன்ற வரை போராளிகளின் வித்துடல்களை மீட்டு வரவே முனைப்புக்காட்டி வந்திருக்கின்றனர். சண்டைகளின் தீவிரம் சில சந்தர்ப்பங்களில் போராளிகள் மத்தியில் இழப்பைக் குறைக்க உடலங்களைப் போர்க்களத்தில் கைவிட்டு வரும் நிலையை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.

அவ்வாறான உடலங்களை எதிரி வீரன் அல்லது வீராங்கணை என்றாலும் கண்ணியத்தோடு நடத்த வேண்டும் என்பதே ஜெனீவா போரியல் விதியாகும். விடுதலைப்புலிகள் தாம் கைப்பற்றும் சிங்கள இனவெறி இராணுவத்தினரின் உடலங்களை எப்போதுமே ஜெனீவா போரியல் விதிக்கேற்பவே கையாள்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் அவர்கள் ஐநா- வால் பகிரங்கமாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பினர் அல்ல.

ஆனால் சிறீலங்கா என்ற தேசம் இவ்வாறான விதிகளுக்கு அமைய நடப்பது கட்டாயமானதாகும்.இருந்தும் அவர்கள் அவற்றை மதிப்பதில்லை.

அதேவேளை விடுதலைப் புலிப் போராளிகள்.. ஒழுக்கமும், சர்வதேச விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் உள்ள போராளிகள். அவர்கள் தமது சகாக்களின் உடலங்களை எதிரி எள்ளி நகையாட விட்டு வருகின்றனர் அல்லது அவர்கள் விட்டுவிட்டு வந்ததை மறைக்கின்றனர் என்று அர்த்தப்பட பதிவிடுவது மோசமான சிந்தனையாகும்..!

போர் களத்தில் விடப்படும் போர் வீரர்களின் உடலங்கள் ஜெனீவா போரியல் விதிக்கமைய நடத்தப்பட வேண்டும் என்பதையே இங்கு வலியுறுத்த வேண்டும். அதை மீறிய சிறீலங்கா படையினரை சர்வதேசத்துக்கு தெளிவாக இனங்காட்ட வேண்டும். அதைவிடுத்து போராளிகள் மீது வசைபாட இச்சம்பவத்தை திசை திருப்புவது தவறாகும்..! அது சிங்கள இனவெறி இராணுவம் இன்னும் துணிச்சலுடன் இவ்வாறான செயல்களைச் செய்யவே வகை செய்யும்..!


Geneva conventions from ICRC


ஜெனீவா போரியல் விதிகள் - போர் கைதிகள் தொடர்பிலானது இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:47 PM

10 மறுமொழி:

Blogger Thooya செப்பியவை...

கேவலமான சிந்தனைகளையும், நடத்தைகளையும் கொண்டவர்கள் இவர்கள்....இவர்கள் யார் எனினும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்

Tue Dec 30, 02:13:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

சிறீலங்காவில் தமிழர்களுக்கு நீதி வழங்க யார் இருக்கிறார்கள்..??!

வெறுமனவே இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் அவர்களின் செய்கைகளை நிறுத்த முடியாது.

இவர்களைத் திட்டிக் கொண்டிருப்பதால் அவர்கள் திருந்தப் போவதும் இல்லை.

இவர்களை அழிக்க வேண்டும். நீதியின் முன் நிறுத்தவில்லை என்றால்.. நீதிக்காகப் போராடுறவங்க மக்களின் உரிமைக்காகப் போராடுறவங்க இவர்களை அழிக்க வேண்டும்.

அப்போதுதான் எதிர்காலத்திலாவது இவை தொடராது இருக்கும்..

அண்மையில் சன் தொலைக்காட்சியில் ஒரு அறிவிப்பாளர் அழகாக சில வரிகள் சொன்னார்...

"சகோதரி கற்பழிக்கப்பட்டாள் என்பதற்காக நான் கத்தியத் கையில் எடுக்கவில்லை. இன்னொரு !சகோதரி கற்பழிக்கப்படக் கூடாது என்பதற்காகவே." என்று..!

இந்த நிலையில் தான் ஈழத்தில் தமிழ் மக்களுக்கான நீதி இருக்கிறது. அவர்களே தம்மைத் தாமே பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

தூயா உங்களுக்கு இவற்றுள் பெரும்பான்மையான விடயங்கள் தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் அறியாத பலருக்காக நாம் இதைச் சொல்ல வேண்டும். ஏனெனில் இச்சம்பவங்களை வைத்து போராளிகள் மீது தவறான கண்ணோட்டங்களை சில காண்பிக்க முனைவது சிங்கள இனவெறியனை விட மோசமானதாகத் தெரிகிறது.

நன்றி தூயா பாப்ஸ் உங்கள் ஆதங்கம் நிறைந்த கருத்துக்களுக்கு.

Tue Dec 30, 06:11:00 AM GMT  
Blogger Sakthy செப்பியவை...

நன்றிகள் தோழரே .. சற்று முன்பு தான் இந்த வீடியோவை ஒரு தோழர் அனுப்பி வைத்தார் .. இதைப் பற்றியும் வலைப்பூவில் எழுதுங்கள் என்று ...
மிருகத்துக்கு கூட இத்தகைய ஈனப் பண்பு இருக்காது ... சிங்களவனுக்கு மட்டுமே சாத்தியமாகி போனது இது...

என் ஆதங்கங்கள் ,கோபங்கள் ,இயலாமை எல்லாவற்றையும் எழுத முடியும் என்று தோன்றவில்லை ... நீங்கள் அதை செய்தமைக்கு நன்றிகள்

முக்கியமாக இதை வைத்து பல விமர்சங்கள் போராளிகளின் மீது பரப்பும் பணியில் எம்மவர்களே தொடக்கி விட்டனர்... அதை எம்மால் தடுக்க முடிய விட்டாலும் ,தெளிவு படுத்தலாம் மற்றவர்களுக்கு...

Tue Dec 30, 10:32:00 AM GMT  
Blogger இவன் செப்பியவை...

இந்த ஆவணத்தை வைத்து போராளிகள் மீது குற்றம் சுமத்துவது என்பது 'அரண்டவனுக்கு இருண்டது எல்லாம் பயம்' என்பது போல் போராளிகளின் மீது குற்றம் சுமத்துபவர்கள் சுமத்திக் கொண்டுதான் இருக்கீன்றனர்.

போராளிகளின் நன்னடத்தை பற்றி அறியாதவர்கள் கீழேயுள்ள சுட்டிக்கு சென்று, அவர்களின் நன்னடத்தையை பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் எழுத்து மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

http://ivanpakkam.blogspot.com/2008_03_01_archive.html

http://ivanpakkam.blogspot.com/2008_06_01_archive.html

Tue Dec 30, 01:23:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

சக்தி.. இவன்,

சத்தியம் தோற்பதும் இல்லை வீழ்வதும் இல்லை. போராளிகள் சத்தியத்தின் வழி நடப்பவர்கள். அவர்களுக்கான உண்மையான பொதுமகன் நிச்சயம் சாட்சியாகி நின்று பேசுவான்.

நான் அதையே செய்தேன்..!

நன்றி சொந்தங்களே. இவன் தந்த இணைப்புகள் ஆக்கத்துக்கு இன்னும் வலுவூட்டும்.

குருவிகள்.

Tue Dec 30, 01:58:00 PM GMT  
Anonymous மண்ணின் மைந்தன் செப்பியவை...

தம்பி! அந்தப் பதிவிட்டதும் ஒரு சிறிலங்காவின் அல்லக்கை தான் என்று நோக்கு புரியலையோடா தம்பி

Tue Dec 30, 03:04:00 PM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி மண்ணின் மைந்தன்.

வெட்டு வேத்து உங்களின் கருத்தை நான் அனுமதிக்க முடியவில்லை. ஏனெனில் நீங்கள் அவ்வாறு குற்றம் சுமத்தின் சகோதரப்படுகொலையை ஒரு குறிப்பிட்ட இயக்கம் மட்டும் செய்யவில்லை. எல்லோரும் தான் செய்தார்கள்.

விடுதலைப்புலிகள் சகோதரப் படுகொலையை விரும்பியவர்கள் அல்ல. இலட்சியப் பாதைவிட்டு தவறிச் சென்றவர்களுக்கு மன்னிப்பளிக்கவும் தயாராகவே இருந்தனர். ஆனால் துரோகத்தனங்களை அவர்களோ உலகின் எந்த இராணுவக் கட்டமைப்புமோ மன்னிக்காது. அதுதான் உலக நியதி.

எனவே நீங்கள் ஒருதலைப் பட்சமாக அது தொடர்பில் விடுதலைப் புலிகளைக் குற்றம் சொல்ல முடியாது. விடுதலைப்புலிகளை சீண்டியவர்கள்.. சீண்டத் தூண்டியவர்கள்.. அதன் பின்னால் இயங்கிய இந்திய மற்றும் சிறீலங்கா உளவு அமைப்புக்கள் என்று பல விடயங்கள் தொடர்ச்சியாக எழுத வேண்டி இருக்கும்.

அதுவல்ல இன்றைய எமது தேவை. தமிழீழ இலட்சியத்தை அடைவதன் மூலமே தமிழ் மக்களுக்கு விடிவு என்று புறப்பட்டுவிட்டு.. அதைக் கைவிட்டு ஓடியவர்களும்.. காட்டிக் கொடுத்து அமைச்சர் பதவிகளை.. எம்பிப் பதவிகளை.. முதலமைச்சர் பதவிகளை வாங்கிக் கொண்டோரும்.. ஈட்டிக் கொடுத்தது என்ன. சிங்களவர்களோடு.. செளஜன்னிய சகவாழ்வா...??! எங்கே தமிழீழம். அவர்கள் பலியிட்ட போராளிகளின் தியாகங்களுக்கு என்னானது...??! கனவுகளுக்கு என்னானது..??!

வேண்டாம் ஐயா அதுகளை கிளறினீர்கள் என்றால்.. இங்கு உங்களால் தாக்குப் பிடிக்கவே முடியாது.

Tue Dec 30, 11:16:00 PM GMT  
Anonymous ஓவியா செப்பியவை...

அங்கு எங்கள் சகோதரிகள் இப்படி அவமானப்பட்டுக் கொண்டிருக்கும்போது இங்கு நான் என்னத்தை கிழிக்கிறேன் என்று எனக்கு புரியிவ்லை.. என்னால் ஒன்றுமே பண்ணமுடியவில்லையே என்று நினைக்கும்போது அழுகைதான் வருகிறது.

Wed Dec 31, 12:41:00 AM GMT  
Blogger வெத்து வேட்டு செப்பியவை...

Kuruvi:
I really don't care about Tamil Eelam..in my opinion (and calculation) it will never be acchieved by LTTE..
here all ltte supporters are just whitewashing LTTE and you want others to believe all LTTE's versions of stories..
will ever ltte admit they are doing something not right?
in their believe what they do is right...and for their supporters also same case..
in my opinion noone (in cluding ltte) is telling the truth to DIEING TAMIL
i am just sick to see the white washing of ltte...or the portrayal of saviors of tamils...
can you list what ltte acchieved for tamils?
tamils are the next palestinians in my opinion..
let's see who is right...
you definitely a different kind of person than other moronic ltte supporters
i tell this to all that ltte and tamil cause is lost now..now we are going to be at the mercy of Singalese :)

Wed Dec 31, 01:36:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி ஓவியா.

வெட்டு வேத்து,

உங்கள் இக்கருத்து மேற்படி தலைப்புக்குப் பொருத்தமில்லை ஆயினும் உங்களுக்குள் இருக்கும் எண்ணத்தில் மாற்றம் அவசியம் என்பதற்காக.. அதற்கான சரியான பதில் கருத்தை நான் முன் வைப்பதைவிட வாசகர்கள் முன் வைப்பின் அதுவே அவர்கள் தொடர்பான உங்கள் குற்றச்சாட்டுக்கள் தவறென உணர்த்தும் அதேவேளை உங்கள் எண்ணவோட்டத்திலும் நல்ல மாற்றங்கள் உருவாக்கும் என்று நம்புகின்றேன்.

உங்களின் எண்ணங்கள் கருத்துருப் பெறுவதை நான் தடுக்க முடியாது. ஆனால் அது தவறா சரியா என்பதை சிந்திக்க சில பல ஆதாரங்களை சமர்ப்பிக்க இந்த தலைப்பை பாவிக்கலாம் என்பதால் உங்கள் குறிப்பிட்ட கருத்தை மட்டும் அனுமதிக்கிறேன்.

ஆனால் அடைய முடியாத இலட்சியம் என்று ஒன்றில்லை.

தமிழீழம் என்பது விடுதலைப்புலிகள் வரைந்த இலட்சியம் அல்ல.

1977/8 ஆண்டு காலப்பகுதியில் ஜனநாயக வழியில் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டை என்ற யாழ்ப்பாண நகருக்கு அருகில் இருக்கும் இடத்தில் வரிந்து கொண்டது.

தந்தை செல்வா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து சாத்வீகப் போராட்டங்களும் தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தவறிய நிலையில்.. சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்கு உரிமையை எப்போதும் சாத்வீக வழியில் வழங்காது என்பதை உணர்ந்த தந்தை செல்வா அவர்களால் முன் மொழியப்பட்ட ஒன்றே தமிழீழம் என்ற தமிழர்களின் தாயகம்.

நீங்கள் சொல்வது போல தமிழீழம் அடையப்பட முடியாததல்ல. அடையப்பட்டே இருந்தது. ஆனால் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து தமிழீழம் அடைந்து விடப்படக் கூடாது என்று நினைக்கும் வல்லாதிக்க சக்திகளே அதை அடைய விடாமல் தடுக்கின்றனர்.

அவர்களையும் மீறி தமிழீழம் மலரும். இழப்புக்கள் இன்றி விடுதலை இல்லை. ஒரு இலட்சம் மனிதர்கள் பூகம்பத்தால் இறந்தால் இரங்கல் கூட விடுவதில்லை. ஆனால் போர்க்களத்தில் தாய் மண் காக்க மரணிக்கும் வீரன் என்றும் போற்றப்பட்டதுதான் வரலாறு. அவன் பிணமாக வீழ்வதில்லை. வித்தாகிறான்.

அதனால் தான் அவன் வீரனாகிறான். வீரனாக வாழவும் ஒரு தகுதி வேண்டும். தமிழர்களின் வீரம் வெறும் வரலாற்றுப் பதிவிலல்ல. நடைமுறையிலும் உண்டு என்று காட்டுபவர்கள் புலிகள். நிச்சயம் அவர்களின் தியாகமும் இலட்சிய உறுதியும் எந்த சக்திக்கும் அடிபணியாத இலட்சிய வேட்கையும் அவர்களின் தமிழீழக் கனவை நனவாக்கும்.

அதற்கு உலகத் தமிழ் மக்கள் நாம் எமது தார்மீக ஆதரவையும் ஒற்றுமையையும் வழங்கி அவர்களின் இலட்சிய உறுதியை இன்னும் இன்னும் பலப்படுத்த வேண்டுமே தவிர.. இத்தனை தியாகங்களின் பின்னும்.. தமிழீழம் ஒரு கனவு என்று கொண்டிருப்பது... உண்மையில் நாம்.. இலட்சியப்பற்றுள்ள மனிதர்களா என்பதையே கேட்க வைக்கிறது.

சாதாரண வாழ்க்கையிலையே எத்தனையோ துன்பங்கள் துயரங்கள். அதற்காக வாழ முடியாது என்று தீர்மானிக்க முடியுமா. வாழ்க்கையில் வரும் ஒரு சிறிய இன்பமாவது எம்மை வாழத்தூண்ட வில்லையா. அதேபோல்.. தமிழீழம் என்பது ஒரு எதிர்பார்க்கப்படும் வாழ்க்கை. அதை அடைய பல துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பது.. வாழ்க்கையை வாழ முடியாது என்ற அர்த்தப்படுத்தலைத் தரக்கூடாது. வாழ முடியும் என்ற இலட்சிய வேட்கையையே அது தர வேண்டும். அதுதான் மனிதனுக்கு அழகு.

குருவிகள்.

Wed Dec 31, 06:50:00 AM GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க