Friday, January 16, 2009

கிட்டு மாமா.

1993 தைத்திங்கள் 16ம் நாள் இந்திய மத்திய அரசின் நயவஞ்சகச் சதிக்கு வங்கக்கடல் நடுவே தன்னை அர்ப்பணித்த கிட்டு மாமா உள்ளிட்ட வேங்கைகள் நினைவாக..!



வெடியோசை எழுந்தது
எங்கள் நெஞ்சோசை அழிந்தது
களத்தோடு களமாடி
கோட்டைக்குள் அடித்தெழுந்த
அந்தப் புயலும் ஓய்ந்தது...!
தங்க தமிழீழ வேங்கையது
வங்கக் கடல் நடுவே சரிந்தது...!

அசோகச் சக்கரத்தின்
அகோரத் தாண்டவம் - எங்கள்
மாமாவின் உடல் கிழித்தது...!
ஆதிக்க வெறி பிடித்த
அகிம்சா தேசமது
அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...!
தமிழீழ அன்னையவள்
கொடிதனைச் சுமந்தவன்
ஆழி தன் அலையோடு
மீண்டிட்டான் தமிழ் மண்ணை...!

குரலோசை எழுந்தது - அது
அவன் புகழோசை சொன்னது
விடியலின் தாய் மகன்
விடிவெள்ளியான கதை
முடிவின்றிச் சொன்னது....!
தர்மம் வெல்லும் என்பது
காலத்தின் கோலம் என்றது
சரியாகி நின்றது
எங்கள் நெஞ்சங்கள் அவன் நினைவுகள்
அலையலையாய் சுமந்தது...!


- தேசப்பிரியன்

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:38 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க