Friday, February 06, 2009

மகிந்த யுத்த வெறி பிடித்த பைத்தியம் - சிங்கள வழக்கறிஞர்.Nimalka Fernando

மகிந்த தன்னை ஒரு சிங்கள அரசனாக எண்ணிக்கொண்டு யுத்த வெறி பிடித்து யுத்த வெற்றிக்காக அலையும் ஒரு பைத்தியம் என்று சொல்கிறார் NIMALKA FERNANDO எனும் கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை வழக்கறிஞர். மகிந்த கூட்டமே ஒரு சைகோ கூட்டம் எங்கிறார் இந்த வழக்கறிஞர்.

சம்பூர் மற்றும் மன்னாரில் இருந்து இராணுவ நடவடிக்கையை தொடங்கி வெற்றிகளை பெற அவர்கள் சில வருடங்களாகவே திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் எப்போதுமே தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கக் கூடிய தீர்வை முன் வைக்கும் எண்ணம் இருந்ததில்லை. அவர்கள் எந்த அரசியல் தீர்வையும் முன் வைக்கப் போவதில்லை. அப்படி ஒன்றே அவர்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல..

சிங்கள மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்தல், மனித உரிமைகளை மதித்தல் மற்றும் ஊடக சுதந்திரத்தையும் அவர்கள் வழங்கப் போவதில்லை.

தற்போதைய நிலங்களை அபகரிக்கும் இந்த யுத்த வெற்றியால் தமிழ் தேசிய போராட்டத்தை தமிழ் மக்களின் அபிலாசைகளை வெல்ல முடியாது. அது வேறோரு வடிவத்தில் தொடரும். அதுமட்டுமன்றி இந்த வெற்றிகள் தற்காலிகமானவை. பொறுத்திருந்து பாருங்கள் இன்னும் சில காலத்தில் வன்முறைகள் அடுத்த சுழற்சிப் புள்ளியை சுற்றி இவர்களுக்கு எதிராக சுற்ற ஆரம்பிக்கும்.

கொழும்பில் வெடி கொழுத்துகிறார்கள். அவை பாதுகாப்பு அமைச்சினால் உருவாக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு குழுவினரால் இலவசமாக மக்களிடம் திணிக்கப்பட்ட வெடிகள். என்னால் தாங்களாகவே வெடிகளை கடையில் வாங்கி கொழுத்தக் கூடிய ஏழை சிங்கள மக்களை காண முடியவில்லை.

இந்த யுத்த வெற்றியால் நாட்டுக்கு நன்மை ஏற்படப் போவதில்லை. இவை தற்காலிகமானவையே. இந்த இராணுவ வெற்றிகளும் அணுகுமுறைகளும் இந்த நாட்டில் இனப்பிரச்சனைக்கு தீர்வைத் தரப்போவதில்லை. இவ்வாறு உண்மைகளை அப்படியே போட்டுடைத்திருக்கிறார் இந்த சிங்கள மனித நேயமுள்ள வழக்கறிஞர்.

-------------------------

NIMALKA FERNANDO, HUMAN RIGHTS LAWYER, COLOMBO

From the manner in which the Sri Lankan government developed its military strategy over the past few years, it was very clear that they were not interested in coming to any political negotiation.

There was never any hope from my side that President Mahinda Rajapaksa would deliver any political solution to the ethnic conflict because the whole psyche of the Rajapaksa regime is a psycho of being a victor.

If you look at the songs that were written about him during his election campaign - they were calling him the king. If you have a king, you must have a kingdom.

The latest developments can be described as a geographical victory. But this is not the end of the struggle for Tamil nationalism in Sri Lanka.

Nor will this provide a solution to the aspirations of the Tamil people as well as the aspirations of the Sinhala people who want a democratic country, democratic values, media freedom, human rights protected.

The actual struggle for Tamil nationalism will take a different form. Those who are lighting crackers in celebration have been given crackers for free by the civil defence corps. I am yet to find a poor Sinhalese family go into a shop to buy crackers.

This will definitely not bring security to Sri Lanka. This is a short-term military strategy that has gained access to certain territories that the army couldn't go hitherto. That has not given a solution to the ethnic conflict in this country.

We will see another cycle of violence.

bbc.com - opinion about current situation in Sri Lanka.

தமிழில் யாழ் இணையம்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:27 AM

3 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வந்த சிங்களப் பேராசிரியர் Professor Sisira Jayasuriya ன் பேட்டி (மற்றைய சிங்களவர்கள் போல இவர் பொய் பேசாமல் உண்மையைச் சொல்லி இருக்கிறார்)

http://www.abc.net.au/reslib/200901/r334759_1514920.asx

இவரின் பேட்டியில் இருந்து

1) விடுதலைப் புலிகள் பலமிழக்கவில்லை.

2) சிறிலங்காப் படையின் எறிகணையினால் அதிகளவு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

3) சிறிலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்தபின்பு சிறிலங்கா அரசினால் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிங்களவர்கள் இவருக்கு இப்பேட்டி காரணமாக கண்டனங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். யாழ்கள உறுப்பினர்கள் இவருக்கு நன்றி சொல்ல விரும்பினால் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.(s.jayasuriya@latrobe.edu.au)

Fri Feb 06, 07:16:00 AM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

பிரபாகரனையும் யுத்த வெறி பிடித்தவர் என்று பல தமிழர்கள் சொல்கிறார்கள்

Fri Feb 06, 09:21:00 AM GMT  
Blogger kuruvikal செப்பியவை...

பிரபாகரனை யுத்த வெறி பிடித்தவர்கள் என்று சொல்பவர்கள்.. தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்த துரோகிகளே.

பிரபாகரன்.. தனது போராட்ட ஆயுதமாக வெறும் சுடுகலன்களை நம்பி இருக்கவில்லை..

1. திம்புவில் நிராயுதபாணியாக புலிகளை பேச்சுக்கு அனுப்பினார்.

2.தமிழ் இயக்கங்களை ஒன்றுபடுத்தும் பேச்சுக்களில் தமிழகத்தில் தானே பேச்சில் கலந்து கொண்டார்.

3. சிறீலங்கா - இந்திய ஒப்பந்தத்தின் போது தானே நேரடியாக இந்திய நடுவன் அரசுத் தலைமைகளோடு பேசினார்.

4. இந்திய நடுவன் அரசு அவரைக் கட்டாயப்படுத்தி பணிய வைக்க முற்பட்ட போது சாத்வீக வழியில்.. காந்திய வழியில் உண்ணா நோன்பிருந்து போராடினார்.

5. பிரேமதாச அரசுடன் பேச்சில் இதய சுத்தியோடு புலிகளை பங்கேற்க வைத்தார். பிரேமதாச அவரைக் கொல்ல போட்ட சதித்திட்டத்தை கண்டே பின்னர் அதிலிருந்து விலகினார்.

6. சந்திரிக்காவோடும் பேச்சில் ஈடுபட்டார். சந்திரிக்காவும் முதுகில் குத்த முனைய பேச்சுக்களில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

7. ரணிலோடு போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். சர்வதேச சமூகத்தோடு சீருடையின்றி பேசினார்.

இப்படிப் பல..!

ஆனால் மகிந்த..???!

சிந்தியுங்கள்.. எதனையும் எழுத முதல்..!

Fri Feb 06, 10:19:00 AM GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க