Monday, February 09, 2009

குண்டு வெடித்ததும் வந்தன கண்டனங்கள்.



வைத்தியசாலைகளை சிங்கள இராணுவம் தாக்கி அழித்துவிட்டதால்.. அவர்களின் எறிகணைத்தாக்குதல் மற்றும் விமானத்தாக்குதலில் காயமடையும் மக்கள் வீதியில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இறுதியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் வன்னியை விட்டு வெளியேற சிங்கள அரசு கேட்டுள்ளது.

--------------

இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது ஆயிரக்கணக்கான எறிகணைகளையும் கிளஸ்ரர் குண்டுகளையும் வீசி பள்ளிகள் வைத்தியசாலைகள் என்று பொதுமக்கள் காணப்பட்ட இடமெல்லாம் தாக்குதல் நடத்தி பொதுமக்களைக் கொன்றுவிட்டு அவற்றை புலிகளின் இலக்காக பிரச்சாரம் செய்து வந்த இராணுவத்தைக் கண்டிக்க வழியில்லாதவர்கள்.. இன்று இராணுவத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் பிரகாரம்.. அது வெளியிட்ட காணொளிப்படங்களின் பிரகாரமும் விடுதலைப்புலிகள் மீது கண்டனங்களை அமெரிக்கா என்ற வல்லாதிக்க சக்தியும் அதற்கு வால் பிடிக்கும் ஐநாவும் விட்டுள்ளன.

வன்னியில் இன்று இராணுவத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இராணுவம் பொதுமக்கள் மீது கைக்குண்டுகளை வீசித் தாக்கிவிட்டு.. தற்கொலைத்தாக்குதலில் பொதுமக்கள் பலி என்று கதை விட்டுள்ளது.

இராணுவம் வெளியிட்ட காணொளியில் பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பது காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அதுவிட்ட அறிக்கையில் 15 படையினர் கொல்லப்பட்டது சொல்லப்படுகிறது. அக்காணொளியில் கொல்லப்பட்ட.. அல்லது காயப்பட்ட இராணுவத்தினர் காணப்படவில்லை. அச்சம்பவம் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையிலேயே நிகழ்ந்துள்ளது. ஆனால் இராணுவம் பதில் தாக்குதல் நடத்தி மக்களை கொன்றுவிட்டு.. பழியை புலிகள் மீது சுமத்தி.. தனது இனப்படுகொலையை மறைக்க பிரச்சாரம் செய்து வருகிறது.

புதுக்குடியிருப்பில் எறிகணை வீழ்ந்து வெடித்தால் அது எங்கிருந்து வருகின்றது என்பதை அறிய முடியாதவர்களுக்கு.. இன்றைய குண்டுவெடிப்பின் அனைத்து விடயங்களும் உடனடியாக விசாரணைகள் மூலம் நிரூபிக்கப்பட்டு.. புலிகள் குற்றவாளிகளாகவும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

வன்னிப் பகுதியில் இருந்து வரும் மக்களை கிளிநொச்சியில் வைத்துப் பராமரிக்காமல்.. ஏன்.. வவுனியாவுக்கு அனுப்ப வேண்டும். அதுமட்டுமன்றி.. வன்னியில் இருந்து வரும் மக்களை அவர்களின் அரசாங்க அதிபர்களிடம் ஒப்படைப்பதுதானே நடக்க வேண்டும். ஏன் அப்படிச் செய்யவில்லை. இவற்றையெல்லாம் கேட்க நாதியற்ற சர்வதேசம்.. இராணுவம் விட்ட ஒரு அறிக்கையின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் மீது கண்டனம் வெளியிட்டுள்ளனர். ஆனால் வன்னியில் கிளஸ்ரர் குண்டு வீசப்பட்ட போதும்.. ஆட்லறிகள் வீசப்பட்ட போதும் கண்டிக்க எவரும் முன்வரவில்லை.

ஏ9 பாதையை மூடி மக்களின் சுதந்திர நடமாட்டத்தை தடுக்க இராணுவம் செயற்பட்ட போது.. அதை திறக்க எவரும் குரல் கொடுக்கவில்லை. இன்று கூட பாதை திறந்து யாழ்ப்பாண மக்களின் சுதந்திர பயணத்துக்கு அனுமதியில்லை. அதைக் கேட்க எவரும் இல்லை.

பொதுமக்கள் மீது தாமே தாக்குதலை நடத்திவிட்டு இராணுவம் செய்யும் பொய் பிரச்சாரத்தை தூக்கிக் கொண்டு அலைவோர்.. இராணுவம் மக்களை தாக்கி அச்சுறுத்தி இடம்பெயர வைப்பதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்க மறுக்கின்றனர்..???! ஆக இராணுவத்திற்கு மக்களை கொல்லலாம்.. அச்சுறுத்தலாம்.. பாதையை மூடலாம்.. எல்லாத்திற்கும் அனுமதியுண்டு. புலிகள் மட்டும்.. மனிதாபிமானம் மிக்க இராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அல்லது ஆயுதத்தை விட்டு.. சரணடைய வேண்டும்.

முதலில் அமெரிக்காவும்.. இதர நாடுகளும் ஆயுதத்தை ஒப்படைத்து விட்டு.. ஈராக்.. ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறட்டும். அவர்களின் வன்முறைவாத ஜனநாயக அமுலாக்கம்.. உலகில் மக்களால் வெறுக்கப்படும் நிலையே தோன்றிவிட்டுள்ளது. அதன் காரணமாகவே மக்கள் தம்மைத் தாமே அழித்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். பாரபட்சமான அணுகுமுறைகளை ஒட்டுமொத்த மனித சமூகமும் கைவிட்டால் அன்றி இவ்வுலகில் அமைதி வராது. ஆயுதங்களால் நிகழும் சாவும் ஓயாது.

--------------

இச்செய்தி தொடர்பான இன்னொரு ஆக்கம்..

Tragedy of civilians as international mechanism backs out

[TamilNet, Monday, 09 February 2009, 12:33 GMT]

Eight died and forty injured among fleeing civilians, reportedly caused by a human bomb according to news released by Sri Lankan military Monday. 15 military personnel also died and 24 injured in an 'IDP rescue centre' north of Visuvamadu, the military said. There were children among the dead as seen in the video released by the Sri Lankan military. The US Embassy in Colombo was quick to condemn the LTTE, based entirely on the Sri Lankan military version of the story.

What exactly happened is difficult to be asserted since no independent source is available in the war frontier to verify the claims or the sequence of the tragedy.

There are reports that nearly 4000 civilians were forcibly chased towards the side of the military by a unit of SLA which came near the side of the safety zone.

Everyone including the civilian side, international humanitarian agencies, international media and several countries, except only the Colombo government, have been demanding all these times for an International Rescue Mission and independent monitoring agencies.

However, no power in this earth is being able to materialise that.

"Such a tragedy of the already suffering civilians could have been averted easily by the presence of an effective International Rescue Mission," said a Colombo based NGO official.

For nearly three weeks now, when the Sri Lanka Army has been deliberately firing artillery at civilian targets and at hospitals, using cluster shells and killing even patients to the full knowledge of the ICRC, the international agencies didn't know 'from where the shells were coming'.

There were no comments or condemnation from the US Embassy either for the virtual genocide that was going on and is continuing to this hour.

நன்றி: யாழ் இணையம்.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:00 PM

1 மறுமொழி:

Blogger kuruvikal செப்பியவை...

Civilians killed by SLA gunfire after bomb blast
[TamilNet, Monday, 09 February 2009, 19:48 GMT]
Reports from Vanni indicate that the civilian casualties at the military checkpost claimed as 'IDP rescue centre' by the Sri Lanka Army (SLA) was in fact due to gunfire at the civilians by the SLA after a bomb blast, according to civilians who escaped the scene back to LTTE territory.

A perusal of the video clippings released by the SLA would show that the civilian casualties are not due to bomb blast, analysts said.

The SLA didn't release any pictures of its own casualties amidst civilians.

Claims are unable to be verified in the absence of independent monitors or credible sources.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28355

Mon Feb 09, 09:48:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க