Sunday, April 12, 2009

சிறீலங்கா அறிவித்திருப்பது யுத்த நிறுத்தம் அல்ல.சிறீலங்கா அரசால் சிங்கள பயங்கரவாத இராணுவத்தினர் சிங்கள பெளத்த புத்தாண்டைக் கொண்டாட என்று வரும் 13ம் 14ம் நாட்களில் அறிவிக்கப்பட்டுள்ள நின்று கொண்டு தாக்குதல் முன்னேறித் தாக்குவதில்லை (Military Ops to be restricted )என்ற அறிவிப்பு யுத்த நிறுத்தம் (Cease fire) அல்ல.

இதனை இந்திய மற்றும் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் யுத்த நிறுத்தம் என்று விளக்கமளிப்பது அல்லது செய்தி விடுவது தவறாகும்.

இது தற்காலிக கட்டுப்பாட்டுத் தாக்குதல் நடைமுறை ஆகும். இதன் போது சிங்கள இராணுவம் முன்னேறித் தாக்காது. ஆனால் நின்று கொண்டு தாக்கிக் கொண்டிருக்கும்.

புவியியல் ரீதியில் இராணுவம் பாதுகாப்பு வலத்தைச் சுற்றி நிற்கிறது. மக்களை நகர்ந்து சென்று தாக்கவோ கொல்லவோ வேண்டியதில்லை. நின்ற இடத்தில் இருந்து கொண்டு புலி வருகுது புலி பதுங்குது புலி ஓடுது புலி பாயுது என்ற போலிக் காரணங்களை காட்டிக் கொண்டு துப்பாக்கிகளால் எறிகணைகளால் தாக்கிக் கொல்ல முடியும்.

இந்த அறிவிப்பு சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களின் போராட்டங்களை ஒடுக்கவும் வன்னி மக்களை சர்வதேச கவனத்தை திசை திருப்பி தாக்கி அழித்தொழிக்கவும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கை ஆகும்.

இந்த அறிவிப்பின் போது வன்னி மக்கள் எவ்வாறு எவ்வழியில் பாதுகாப்பாக வெளியேறுவது.. அதை எந்த பன்னாட்டு அமைப்பு கண்காணிப்பது.. வெளியேறும் மக்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் யார் தருவது.. வெளியேற விரும்பாத மக்களுக்கு செய்யப்படும் மாற்று ஏற்பாடுகள் என்ன.. உணவின்றியும் காயப்பட்டும் இயங்க முடியாதுள்ள மக்களுக்கும் வாகன வசதியற்று இருக்கும் மக்களும் வெளியேற வழி செய்து கொடுப்பது யார்.. மாதக்கணக்காக உணவின்றி பசியால், காயத்தால் வாடும் மக்களுக்கு மனிதாபிமான உதவி அளிக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த எந்தத் தகவல்களும் இன்றி.. வெறும் கண்துடைப்பாக இந்த நின்று கொண்டு தாக்குதல் ஆனால் முன்னேறித் தாக்குவதில்லை என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அடிப்படையில் சிங்கள இராணுவத்தினருக்கு ஓய்வையும்.. சர்வதேச சமூகத்தை திசை திருப்பவும்.. பகுதியாக திருப்திப்படுத்தவும் அதில் குளிர்காயவும் சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நின்று கொண்டு தாக்குதல் அறிவிப்பாகும். இது போலியான தமிழ் மக்களுக்கு உபயோகமற்ற அறிவிப்பாகும்.

இதனை நிரந்தர யுத்த நிறுத்தம் மற்றும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்புக்களை மனிதாபிமான உதவிகளோடு வன்னிக்கு அனுப்பும் நடவடிக்கையின் ஆரம்பமாக மாற்ற சர்வதேசம் எங்கும் வாழும் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

செய்தி ஆதாரம்:

Military Ops to be restricted for Avurudu

The president has directed troops to restrict military operations in the North on April 13th, 14th and remain in defensive positions.

President Mahinda Rajapaksa has ordered the armed forces to restrict their operations to those of a defensive nature during the Sinhala & Tamil New Year. The President, deeply conscious of the need to give the civilian population, trapped in the No Fire Zone(NFZ), the opportunity to celebrate these festivities in a suitable atmosphere, has taken this decision, which would also enable their uninhibited freedom of movement from the NFZ to the cleared areas.

The Government, in a Statement has noted that the Sinhala & Tamil New Year is symbolic of the amity prevailing among all communities in Sri Lanka. It further stated that in the true spirit of the season, it was timely for the LTTE to acknowledge its military defeat and lay down its weapons and surrender.It also called upon the LTTE to renounce terrorism and violence permanently.

Foreign Minister, Rohitha Bogollagama commenting on the Government decision today said that he believes that it is the overwhelming desire of all peace-loving Sri Lankans, both in the country and abroad to see that their brothers and sisters, who are undergoing untold hardship and suffering, will be freed soon from the brutal terror of the LTTE.

He also observed that Sri Lanka’s valiant security forces are poised to embark upon this noble endeavour as the remaining part of the humanitarian mission launched by them to eliminate terrorism from the country and restore freedom and democracy to a section of the people, who have been long enslaved by the LTTE. The Minister emphasized that the Sri Lankan armed forces bear an exemplary record of according the highest respect for human rights and upholding International Humanitarian Law in the conduct of their operations to combat terrorism. He highlighted the utmost restraint and high degree of discipline of the armed forces, which have contributed in no small measure to the resounding success of the entire campaign to eliminate terrorism, with great effort to avoid civilian casualties. This is highly commendable when compared to other armed forces in the world, which, in their operations, have clearly failed to even come close to these standards.

Minister Bogollagama recalled that when the President declared a 48-hour temporary pause in military operations in late January this year, to enable civilians to move into the government declared No-Fire Zone, the LTTE cynically exploited this opportunity to shift its artillery mortar launchers and heavy weapons into this area, and began attacking the security forces. He said that Government troops have paid a heavy price in exercising maximum restraint by not retaliating, in order to avoid causing civilian casualties. Moreover,he stated that the Government is aware that the LTTE has fortified the entire No-Fire Zone with its remaining armaments and heavy weaponry, jeopardizing the lives of innocent civilians entrapped in that area.

With the President’s directive to the armed forces to restrict their operations to those of a defensive nature during the Sinhala & Tamil New Year, the Government expects the LTTE to allow the people to leave the No-Fire Zone. At the same time, it is incumbent on the international community and Sri Lankan Tamils abroad to prevail upon the LTTE to release the civilians who are being held hostage.

It is the fervent desire of the Government of President Rajapaksa that the New Year will herald an era of lasting peace and prosperity for all the people of Sri Lanka, free of terror that has long plagued the motherland.

டெயிலிமிரர்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:36 PM

4 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

Meanwhile, Sri Lankan President Mahinda Rajapaksa said the SLA would continue "defensive" fighting.

Stating that he had instructed his armed forces to "restrict their operations during the New Year to those of a defensive nature," Mr. Rajapaksa said "it is timely for the LTTE to acknowledge its military defeat and lay down its weapons and surrender." There was no announcement of ceasefire as some news services interpreted Rajapaksa's message.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29022

Sun Apr 12, 09:01:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

காகிதப்புலிகளின் புதிய ஒப்பாரி.

- யஹியா வாஸித்

பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள காஸாவின் ஓலம் கேட்ட முஸ்லீம் சகோதரர்களுக்கு 100 மைல்களுக்கப்பால் உள்ள வன்னித்தமிழனின் ஓலம் கேட்கவில்லை. !!

ஆமை சுடுவது மல்லாத்தி.அதை நாம சொன்னாப் பொல்லாப்பு. என்று எங்கட உம்மம்மா ஓரு கதை சொல்லுவா.அப்படி இருக்கிறது சாணக்கியர்களின் ஓலம்.

ஆம். 3500 மைல்களுக்கு அப்பால் இருக்கும் காஸாவுக்காக கூக்குரல் இடுகின்றீர்களே ! 100மைல்களுக்கப்பால் இருக்கும்; எங்களுக்காகவும் கொஞ்சம் அழுவுங்களேன் ! ? என்கின்றனர் எமது ஜாம்பவான்கள்.

என்னத்தை சொல்வது.
எப்படி சொல்வது.
எங்கிருந்து ஆரம்பிப்பது.
எப்படி ஆரம்பிப்பது.
அழுதழுது எழுதுவதா ?
வெம்பி வெடித்து எழுதுவதா ?

1991இல் மன்னார் முருங்கன் பள்ளிவாசலில் இறந்த முஸ்லீம்களின்; உறவினர்களும், எரிக்கப்பட்ட கடைகளின் சொந்தக்காறர்களும் இன்னும் அக்குறணை, மாத்தளை, மடவளையில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதைச் சொல்வதா ? அல்லது அப்போது சிறிலங்காவின் முதலாவது முஸ்லீம் உதவி அரசாங்க அதிபராக இருந்த “மகுறுப்”; உங்களால் சுட்டுக் கொல்லப்பட்டும் இதுவரை விட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கும் அக்குடும்பத்தின் அவலத்தைச் சொல்வதா ?

காத்தான்குடி பள்ளிவாசலுக்குள் நுழைந்து தொழுது கொண்டிருந்தவர்களைச் சுட்டுக்கொன்று சப்பாத்துக்கால்களால் குரான்களை எட்டி உதைத்து எள்ளி நகையாடியதைச் சொல்வதா ? அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலுக்குள் நுழைந்து அப்பாவி முஸ்லீம்களைக் கொன்று வீதியில் சென்று கொண்டிருந்த 16 முஸ்லீம்களை கைகளை கட்டி சுட்டும் , பசியடங்காமல் வெட்டியும் கொன்றஅந்த சூரசம்ஹாரத்தைச் சொல்வதா ??

பொத்துவில் பாணமை முதல் மூதுர்,கிண்ணியா,தோப்புர் வரை உள்ள முஸ்லீம்களை அவர்களது வயல்நிலங்களைவிட்டு விரட்டியடித்து அவர்களை சோத்துக்கு வழியில்லாதவர்களா க்கி வெறும் வயிற்றுக்காறர்களாக்கிய அந்த சோகத்தைச் சொல்வதா ?

கடந்த 15 வருடங்களாக உங்களிடம் வயல்நிலங்களை இழந்த அந்த ஏழை முஸ்லீம் விவசாயிகள் வயிற்றுப்பசியைப் போக்குவதற்காக வளைகுடா நாடுகளில் “அரபிக்களின் கக்கூசுகளைக்” கழுவிக்கொண்டிருக்கும் அகோரத்தைச் சொல்வதா ?

யாழ் மாவட்டத்தில் இருந்த 91ஆயிரம் முஸ்லீம் குடும்பங்களை உடுத்த துணியுடன் வெளியேற்றி அந்த அப்பாவி மக்களை புத்தளம் முதல் கொழும்பு ,வேருவளை வரை பிச்சை எடுக்க வைத்து சிறிலங்கா வாழ் மொத்த சோனியையும் பைத்தியக்காறர்களாக்கிய அந்ததான்தோன்றித்தனத்தைச் சொல்வதா ?

எதைச் சொல்வது ! எதை விடுவது !!

“அயல்வீட்டாரையும் உன்குடும்பத்தார் போல் நேசி” என்று சொல்கின்ற மதம் இஸ்லாம்.அடுத்த வீட்டுக்காறன் பசித்திருக்கும் போது நீ உன்னிடம் உள்ள உணவில் ஒரு பகுதியை அடுத்த வீட்டுக்காறனுக்கு கொடு என அறுதியிட்டு சொன்ன மதம் இஸ்லாம்.

நீ எந்த அரசின் கீழ் வாழ்கின்றாயோ, அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நட என உறுதிபட சொன்ன மதம் இஸ்லாம்.அதற்காக கொத்தடிமையாக வாழச்சொல்லவில்லை. உனது தொழில்,உனது மார்க்கக் கடமையைச் செய்ய ஒரு இடம் (பள்ளிவாசல் ) இருந்தால் போதும் என்று உறுதிபடவும் சொன்ன மதம் இஸ்லாம்.

அந்த புண்ணிய மதத்தை தழுவிய முஸ்லீம்கள்தான் சிறிலங்காவில் வாழ்கின்றனர். நாம் சிறிலங்காவில் எந்தப்பகுதியில் வாழ்கின்றோமோ அந்தப் பகுதி மக்களுடன் கைகோர்த்து சகஜமாகத்தான் வாழ்கின்றோம்.வாழ்ந்தோம்.

காலியில் உள்ள முஸ்லீம்கள் சிங்கள “பெரஹர” காலத்தில் எப்படி சிங்கள மக்களுடன் சேர்ந்து பெரஹர கொண்டாடினார்களோ அதே போல்தான் வடகிழக்கில் உள்ள முஸ்லீம்கள் பொங்கல்,தீபாவழி,சித்திரை காலங்களில் தமிழ் மக்களுடன் சேர்ந்து மோதகம்,அவல்,சக்கரைப்பொங்கல் என உண்டு,உறங்கி வாழ்ந்தோம்.இப்போதும் வாழ்கின்றோம்.

அதுமட்டுமா ?தமிழ் இளைஞர் பேரவை காலத்திலிருந்தே வடகிழக்கில் உள்ள முஸ்லீம்கள் இலைமறை காய்களாக இளைஞர்களும், வியாபாரிகளும் சகல விடுதலை அமைப்புக்களுக்கும் உதவி செய்தார்கள்,

அப்போது நீங்கள் ஆயுதங்கள் வாங்க அல்லாடிய போதும், இந்தியாவுக்கு உங்களை பைபர்கிளாஸ் போட்டுகளில் ஏற்றி இறக்கவும், உங்கள் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தவும் ,உங்கள் உறுப்பினர்கள் பிடிபட்டால் பாதுகாப்பு படையினரிடம் பேரம் பேசி அவர்களை மீட்கவும் உதவினார்கள்.

இப்போது கொழும்புக்கு தமிழர்கள் வர பாஸ் வேண்டும் என அரசு அறிவித்த போதும் கூட வவுனியாவில் உள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து பாஸ_ம் எடுத்து கருவாடு, புகையிலை லொறிகளில் கூட்டி வருபவர்களும் அதே முஸ்லீம்கள்தான்.

ஐரோப்பிய, அவுஸ்திரேலிய,அமெரிக்க நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள 99வீதமான தமிழ் பெண்கள் முஸ்லீம்களின் பாரம்பரிய உடையான பர்தா அணிந்து , முஸ்லீம்களின் துணையுடன்தான் கவுரவமாக வந்து சேர்ந்தனர். வந்துகொண்டும் இருக்கின்றனர்.

இப்போது புதுசாக நாம் வன்னித்தமிழர்களுக்கு குரல்கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கு இல்லை. அந்த அப்பாவி மக்களுக்கு தெரியும் எம்மைப்பற்றி.சிறிலங்காவில் ஒவ்வொரு கிராமத்திலும் சுருட்டுக்கடை, புகையிலைக்கடை ,சில்லறைக்கடை வைத்திருந்த அந்த மக்களுக்கும், எங்களுக்கு எழுத்தறிவித்த அந்த வடமாகாண ஆசிரியர்களுக்கும், கதிர்காமத்திற்கு நடை பயணம் போகும் போது முஸ்லீம் கிராமங்களில் தங்கி நின்று, ஒரு கவளம் தண்ணீர் குடித்துப்போன அந்த வன்னித்தமிழனுக்கும் தெரியும் சிறிலங்கா சோனியின் அன்பும, அரவணைப்பும்.

ஆசிரியர்களாக , பொலீஸ் அதிகாரிகளாக , தபாலதிபர்களாக ,நீதிமான்களாக எங்கள் ஊர்களில் கடமையாற்றி , எங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து ஓய்வு நேரங்களில் எங்களுக்கு ஆங்கிலமும் , பஞ்சதந்திரக் கதைகளும் சொல்லித்தந்த அந்த மாமனிதர்களுக்கு தெரியும் சிறிலங்கா முஸ்லீம்களின் மதமும் , மந்திரமும்.

படித்த பட்டதாரி ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றாராம். கிராமத்தில் ஒரு குடிசைக்கு முன்னால் ஒரு மாடு சூடு மிதித்துக்கொண்டிருந்ததாம். மாட்டிற்குப்பக்கத்தில் யாருமே இல்லையாம். இவர் மாட்டிற்குப்பக்கத்தில் போய் பார்திதிருக்கின்றார்.யாருமே இல்லை. இவர் உடனே குடிசைக்குப்பக்கத்தில் போய் எட்டிப் பார்த்திருக்கின்றார்.அங்கே கிராமத்தான் சாக்குக் கட்டிலில் படுத்து பாட்டுப்பாடிக் கொண்டிருந்திருக்கின்றான். இவர் உடனே அவனை தட்டி கூப்பிட்டு நீ இங்கே படுத்துக்கொண்டிருக்கின்றாயே ! மாடு தனியே சுற்றிக் கொண்டிருக்கிறதே ! அது சுற்றாமல் நின்று விட்டால் வேலை நடக்காதே ! என்றிருக்கிறார்.அதற்கு கிராமத்தான் அதற்காகத்தான் அதன் கழுத்தில் மணிகட்டியுள்ளேன். அது சுற்றாமல் நின்றால் மணிச்சத்தமும் நின்று விடும். நான் எழும்பிப்போய் மாட்டை மீண்டும் சுற்றவிடுவேன் என்றானாம். மாடு ஒரே இடத்தில் நின்று கொண்டு கழுத்தை ஆட்டினாலும் மணிச்சத்தம் கேட்குமே அப்போது என்ன செய்வாய் என படித்தவர் கேட்டுள்ளார். ஐயா அதை நான் அந்த அளவுக்கு படிக்க வைக்கவில்லை.அதற்கு கள்ளம் கபடம் தெரியாது என்றானாம்.

அது போல் அந்த மக்களுக்குத் தெரியும் பாதை திறந்தவுடன் வரும் முதல் வாகனம் முஸ்லீம் களுடையதாகத்தான் இருக்கும் என்று.

மொனறாகலை, பிபிலை ,பதியத்தலாவ,பதுளையிலிருந்து சுருட்டு,புகையிலை,சின்ன வெங்காயம் ,உறுண்டைகிழங்கு வாங்கவும் கண்டி, கொழும்பு, கேகல்லவிலிருந்து வாகனங்கள் வாங்கிவிற்கவும் நீர்கொழும்பு, புத்தளம் ,அனுராதபுரத்திலிருந்து கடலட்டை, நண்டு ,கணவாய் என்பன வாங்கவும் துள்ளித் தெறித்து வந்து அந்த வன்னிமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தப்போகின்றவர்கள் இந்த முஸ்லீம்கள்தான் என்று அந்த வன்னி மக்களுக்குத் தெரியும்.

மீண்டும் அந்த மக்களின் காலைவாரி, வடிவேல் பாணியில் உசுப்பேத்தி, உசுப்பேத்தி அந்த மனிதப்புனிதர்களை கொன்றுவிடாதீர்கள்.

வெள்ளந்திரியான அந்த அப்பாவி வன்னி மக்களை , வேட்டை நாய்களாகப் பாவித்து , வேள்வித் தீ நடத்தி ,இன்று வெட்கித்தலை குனியும் படியாக நாளுக்கு 20,30 என அரசகட்டுப்பாட்டு பகுதிக்கு கண்ணீரும் கம்பலையுமாகவரும் அந்த வன்னிமக்களுக்கு நாம் எப்போதும் துணைநிற்போம்.

ஆனால் அனைத்தையும் , அனைத்தையும் இழந்த அந்த யாழ்மாவட்ட முஸ்லீம்களுக்காக எப்போதாவது எந்த சந்தர்ப்பத்திலாவது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் அல்லது ஒரு உறுப்பினர்.அல்லது ஒரு நாய்.அல்லது ஒரு காக்காய்.அல்லது ஒரு குருவியாவது குரல் கொடுத்ததா ?

Sun Apr 12, 11:02:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

அனானி.. யஹியா வாஸித் அவர்களின் கருத்தை இட்டதற்கு நன்றிகள்.

1983 இல் விடுதலைப்புலிகள் இயக்கம் செயற்பட ஆரம்பித்த போது அதில் தமிழ் பேசும் இஸ்லாமிய இளைஞர்களும் சேர்ந்து போராடினர். காரணம் சிங்கள பெளத்த பேரினவாதம் அவர்களையும் நிம்மதியாக வாழ விடவில்லை.

சிறீலங்காவின் வரலாற்றில் இனங்கலவரங்கள் தமிழ் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகத்தினர் மீதும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தென் தமிழீழ நிலைமைகள்:

ஜிகாத் இயக்கமும் சிங்களப் புலனாய்வாளர்களின் அஷ்ரப் போன்றவர்களின் தமிழ் - தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களின் உறவை நாசம் செய்து அரசியல் வளர்க்கும் அபாய சிந்தனைகளும்.

கிழக்கு மாகாணத்தில் எல்லா மாவட்டங்களிலும் வடக்கே மன்னா வவுனியா மாவட்டங்களில் 1985 இல் இருந்து ஜிகாத் என்ற அழைக்கப்படும் முஸ்லீம் அடிப்படை வாத இயக்கத்தை சிறீலங்கா புலனாய்வுப் பிரிவு உதவி கொண்டு வளர்த்து எடுத்தனர்.

அவர்களின் செயல்களால் மூதூர், அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார் என்று தமிழ் மக்கள் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும் வந்தனர். இது 1985 இல் இருந்தே ஆரம்பித்துவிட்டது.

அதன் பின்னர் திட்டமிட்ட படுகொலைகள் மற்றும் தமிழ் மக்களை அவர்களின் நிலபுலங்களில் இருந்து விரட்டி அடித்தல் போன்ற செயல்களை செய்ய ஆரம்பித்தனர். இன்றும் மூதூர் பகுதியில் தொன்று தொட்டு வாழ்ந்த தமிழ் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு மக்கள் விரட்டி அடிக்கப்பட்ட காட்சிகளைக் காணலாம்.

அதுமட்டுமன்றி செங்கலடியில், கொக்கட்டிச்சோலையில் என்று இயங்கிய அகதி முகாமுக்குள் ஊடுருவி ஜிகாத் மற்றும் முஸ்லீம் வெறிக் கும்பல்கள் வகை தொகையின்றி தமிழ் மக்களை வெட்டிப் போட்டது. இதற்கு சிங்களப் படை பாதுகாப்பு வழங்கியது.

இவையெல்லாம் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களால் தட்டிக் கேட்கப்படவில்லை என்பது மாத்திரமின்றி தமிழ் மக்களின் மீதான தாக்குதல் வெறியை ஊட்டி அதில் அரசியல் செய்ய முற்பட்டனர் முஸ்லீம் காங்கிரஸ் என்றவர்களும் இன்னும் சிலரும்.

1990 இல் நடந்த வடக்கில் இருந்தான வெளியேற்றம் என்பது அதற்கு முன்னர் கிழக்கில் முஸ்லீம் ஜிகாத் மற்றும் சிங்களப் படைகளுடன் சேர்ந்தியங்கிய முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் எழுந்த அச்சுறுத்தலின் பின்னணியில் பிறந்த ஒன்று என்பதுடன் தமிழ் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமிய உறவுகளிடையேயேயான பிட்டும் தேங்காய்பூவும் போன்ற உறவுநிலை மேலும் பாதிக்கப்படக் கூடாது என்பதுடன் இரு சமூகங்களிடையே முரண்களை எடுப்பி அதில் சிங்களம் குளிர்காயக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையே ஆகும்.

1990ம் ஆண்டு கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் விரட்டி அடிக்கப்பட்டனர். அதில் ஜிகாத் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட பல படுகொலைகளை 1985 இல் இருந்து நடத்த ஆரம்பித்தது ஜிகாத் அமைப்பு. அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் அந்த அமைப்பினருக்கு பல எச்சரிக்கைகளை வழங்கி இருந்தனர். ஆனால் சிங்களப் படைகளின் மறைமுக ஆதரவுடன் அவர்கள் அவற்றை உதாசீனம் செய்தனர்.

தமிழ் மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டன. வயல் நிலங்கள் பறிக்கப்பட்டன. சேனைகளில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். 1989/90 களில் நடந்த காட்சிகள் இதற்கு சான்று.

1987-90 காலப்பகுதியில் இந்திய இராணுவம் தமிழ் பேசும் இஸ்லாமியர்களை குறிவைத்து செயற்பட்ட பல சம்பங்களில் தமிழ் மக்கள் அடைக்கலம் தரவில்லையா..??!

1987 இல் யாழ்ப்பாண பவான் நடவடிக்கையின் போது யாழ்ப்பாண முஸ்லீம்கள் இந்தியப்படைகளால் துன்புறுத்தப்பட்ட போது அவர்களை யாழ்ப்பாணத் தீவுப்பகுதிக்கு வர வைத்து விடுதலைப்புலிகல் பாதுகாக்கவில்லையா..???!

வேலணை வெள்ளக்கடற்கரை பள்ளிவாசலை மையமாக வைத்து அகதி முகாம் அமைத்து தேவையான வசதிகளை செய்து தரவில்லையா..??!

கிழக்கில் இந்தியப் படைகளால் எழுந்த நெருக்குவாரங்களின் போது தமிழ் மக்கள் அடைக்கலம் தந்து பாதுகாக்கவில்லையா..??!

ஆனால் இதற்கெல்லாம் பரிகாரமாக கிழக்கில் செங்கலடியில்.. கொக்கட்டிச் சோலையில் தமிழ் மக்கள் வகைதொகையின்றி முஸ்லீம் காடைக்கும்பல்களாலும் சிங்களப் படையினராலும் வெட்டி போடப்பட்டனர். இந்தியப் படைகளின் வெளியேற்றத்தோடு இவை நடக்கவில்லையா..??!

மூதூர் தமிழ் கிராமங்கள் சூறையாடப்பட்டு மக்கள் இரவோடு இரவாக விரட்டி அடிக்கப்படவில்லையா. கிண்ணியாவில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது..??! நிலாவெளியில் தமிழ் மக்கள் விரட்டி அடிக்கப்படவில்லையா..??! அவர்களின் உடமைகள் சூறையாடப்படவில்லையா..??!

இவற்றை செய்ய வேண்டாம் என்று விடுதலைப்புலிகள் எச்சரிக்கை தரவில்லையா..??! அதை எவர் செவி மடுத்தார்கள்...??! எவருமே இல்லை.

இந்த ஒரு சூழல் யாழ்ப்பாணத்திலும் பிரேமதாச அரசால் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில் தான் இஸ்லாமிய சகோதரர்களின் தமிழ் மக்களின் பாதுகாப்புக் கருதி சிங்களவர்களின் சூழ்சியை முறியடிக்க அந்த பிரதேசத்தை விட்டு தற்காலிகமாக வெளியேறக் கேட்டனர் புலிகள்.

கடந்த சமாதான காலத்தில் அதற்கு மன்னிப்பும் கேட்டு மீளக் குடியமர அழைப்பும் விடுத்தனர்.

ஆனால் எந்த முஸ்லீம் கட்டியாவது.. அமைப்பாவது 1985 இல் இருந்து தமிழ் மக்களைக் கொன்றதற்கும் கிராமங்களை ஊர்களை விட்டு விரட்டி அடித்து சிங்களவனின் தயவில் ஒட்டி வாழ்ந்து வருவதற்காகவும் வருத்தப்பட்டதுண்டா..??!

தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டதுண்டா..??!

இறுதியில் விடுதலைப்புலிகளே பிட்டும் தேங்காய் பூவும் போன்றது எமது இரண்டு சமூகங்களினதும் உறவுநிலை என்று அதன் முக்கியத்துவத்தை விளக்கினர். அதன் பின்னராவது.. ஏதாவது நடந்ததா..??!

இந்தியப் படைகளால் நெருக்குவாரங்களை சந்தித்த போது காத்த தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது 1990ல் சிங்களப் படைகள் குண்டு வீச தகவல் கொடுத்ததில் எத்தனை இஸ்லாமிய சகோதரர்கள் சிங்களக் கூலிகளாகச் செயற்பட்டனர்.

கிழக்கில் எத்தனையோ போராளிகள் வடக்கு மன்னார் வவுனியாவில் எத்தனை போராளிகள் காட்டிக் கொடுக்கப்பட்டனர்..??! இதில் முஸ்லீம் கூலிகளின் பங்களிப்பு அளப்பரியது.

ஏன் கிழக்கில் இடமாறி வந்த புலிகளை பிடித்துக் கொடுத்தும் வந்துள்ளனர்.

ஒரு காலத்தில் அடைக்கலம் தந்தவர்கள் பின்னர் எதிரியுடன் உறவாடி தமிழ் மக்களை அழித்தது ஒன்று எளிதில் மறப்பதற்குரிய விடயமல்ல.

இதற்காக அப்பாவி இஸ்லாமிய சகோதரர்கள் ஒரு சில சம்பங்களில் தமிழர் தரப்பால் பாதிப்படைந்ததை நான் நியாயப்படுத்த மாட்டேன். எமது மக்களைப் போன்றே அவர்களும் வலியை சுமந்திருப்பர் என்பதை உணர்கிறேன்.

1990 இல் எனது நண்பனாக அன்று பள்ளியில் என் கூட படித்த உற்ற நண்பனை (அவர் தமிழ் பேசும் இஸ்லாமிய) ஊரை விட்டுப் போகச் சொன்ன போது அழுது துடித்தேன்.

ஆனால் அன்று எனக்குப் புரியவில்லை. கிழக்கு தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை கேட்டும் கண்டும் அறிந்த போது.. அந்த அழுகைக்கு அர்த்தம் இல்லை என்று நினைக்கும் அளவிற்கு ஜிகாத் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினர் செயற்பட்டிருப்பதை அறிந்தேன்.

இல்லை என்று சொல்வீர்களா மறுப்பீர்களா..??!

விடுதலைப்புலிகள் எந்த ஒரு நடவடிக்கைக்கு முன்னும் தகுந்த எச்சரிக்கை வழங்காமல் செயற்பட்டதை உங்களால் சொல்ல முடியுமா.??! எத்தனை தடவைகள் ஜிகாத் மற்று முஸ்லீம் ஊர்காவல் படையின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தக் கோரி இருப்பர்.

அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.

சந்திரிக்கா அம்மையார் காலத்தில் ரத்வத்தை இஸ்லாமிய சகோதர்களை தென்னிலங்கை தாக்கிக் கொன்ற போது முஸ்லீம் ஊர்காவல் படை அமைத்து சிங்களவர்களிமிருந்து பாதுகாப்பைப் பெற்றீர்களா..?! ஜிகாத் அமைப்பை உருவாக்கி சிங்களவர்களை வெட்டினீர்களா.. ஊர்களை விட்டு துரத்தினீர்களா..??1

ஏன் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் ஜிகாத் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படைகளின் றோற்றுவாயும் தமிழ் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமிய உறவுகளிடையே பிணக்கை மூட்டி அதில் அரசியல் குளிர் காய்ந்த நபரான அஸ்ரப் சிங்களவர்களால் திட்டமிட்டு கொல்லப்பட்ட போது சிங்களவர்களை தண்டித்தீர்களா..??!

ஆனால் இதை செய்யாதீர்கள்.. அதை செய்யாதீர்கள்.. அவற்றால் இரண்டு சமூகமுமே பாதிக்கப்படுகிறது சிங்களவன் அதனால் நன்மை அடைகிறான் என்று புலிகள் சொல்லச் சொல்ல தமிழர்களை தாக்கி அழித்தீர்களே.. அடித்து விரட்டினீர்களே.. யாரின் தயவில். அதே சிங்களவனின் தயவில்.

அடைக்கலம் தந்த தமிழ் மக்களை அழித்தீர்களே.. காட்டிக் கொடுத்தீர்களே.. யாருக்காக.. மாவனல்லையில்.. மாத்தறையில்.. பாணந்துறையில் உங்களை அடித்து கொன்று விரட்டிய சிங்களவனுக்காகத்தானே.

மாவனல்ல மறந்து போச்சு.. பாணந்துறை மறந்து போச்சு.. மாத்தளை.. கம்பகா சம்பவங்கள் மறந்து போச்சு மருதானைச் சம்பவங்கள் மறந்து போச்சு.. ஆனால் ஒரே ஒரு பள்ளிவாசல் படுகொலையும்.. மன்னிக் கேட்கப்பட்ட யாழ்ப்பாண இடம்பெயர்வும் மறக்கல்ல.

ஆனால் ஜிகாத்தும்.. முஸ்லீம் ஊர்காவல் படையும் செய்தது மறைஞ்சு போச்சு. செய்து கொண்டிருப்பதும் மறைக்கப்பட்டாயிற்று.

நிச்சயம் இல்லை.

நாங்கள் தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதர்கள் மீதான அத்தனை தாக்குதல்களையும் கண்டிக்கிறோம். தமிழ் மக்கள் தவறு செய்திருப்பின் அதற்காக வருந்துவதோடு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆனால் தமிழ் மக்களை சிங்களவனோடு சேர்ந்து 1985 இல் இருந்து வருத்தி வருவதற்காக ஒரு இஸ்லாமியன் வருத்தம் தெரிவித்திருக்கானா..??!! மன்னிப்புக் கேட்டிருக்கான.

தமிழீழ விடுதலைப்புலிகள் பகிரங்கமாக கேட்ட மன்னிப்பை மதிக்க முடியல்ல.. சிங்களவன் மாவனல்லையில் பாணந்துறையில் அடிச்சதை மன்னிப்பின்றியே மன்னித்தீர்களே மறந்தீர்களே அதெப்படி..??!

நீங்கள் செங்கலடியில் கொட்டட்டிச் சோலையில் வெட்டிப் போட்ட தமிழ் மக்களின் குருதி சொல்லும்.. பள்ளிவாசலில் சிந்தியது என்ன என்று..???!

நாம் எப்போதும் உங்களை தமிழ் பேசும் இஸ்லாமியர்களை அன்புச் சகோதரங்களாகத்தான் பார்கிறோம். இப்போதும் கூட. கடந்த காலங்களை மறப்போம் மன்னிப்போம். பொது எதிரியான சிங்களவனை விட்டு விலகி.. அழகிய தமிழீழத்தில் தமிழ் பேசும் உறவுகள் நாங்கள் நிம்மதியாய் வாழலாம் வாருங்கள்.

சிங்களவனுக்காக தமிழர்களை அடித்த பாவத்தை அல்லா மன்னிக்க வேண்டின் நிச்சயம் நீங்கள் தமிழீழம் மலரவும் அது வளரவும் உதவ வேண்டும். இன்றேல் அல்லா கூட உங்களை மன்னிக்கமாட்டான்..!

Mon Apr 13, 08:55:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

குருவி நீங்கள் சொன்னது சரி..

// இந்த அறிவிப்பு சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களின் போராட்டங்களை ஒடுக்கவும் வன்னி மக்களை சர்வதேச கவனத்தை திசை திருப்பி தாக்கி அழித்தொழிக்கவும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கை ஆகும்.//

SLA steps up ground offensive targeting 'safety zone'

[TamilNet, Monday, 13 April 2009, 08:21 GMT]

Sri Lanka Army (SLA) has begun advancing its fighting formations from Puthukkudiyiruppu targeting Mu'l'livaaykkaal in the early hours of Monday. The SLA launched the fresh move around 12:15 a.m. The offensive, contradicting the announcement by the Sri Lankan President Mahinda Rajapaksa that he had instructed his ground forces to "restrict their operations during the New Year to those of a defensive nature," comes a day after a similar move was reported in the early hours of Sunday.

Rockets and bullets fired by the advancing SLA troops were whizzing over the civilian settlements in Valaignarmadam area inside the so-called safety zone, according initial reports filed by TamilNet correspondent in Vanni.

Heavy exchange of gunfire was continuing.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29029

Mon Apr 13, 10:01:00 AM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க