Thursday, April 16, 2009

நாம் கேட்டதும் நமக்கு கிடைத்ததும்.





தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பான வன்னியில் இருந்து சிறீலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சென்ற மக்களை சிறீலங்கா சிங்கள பயங்கரவாத அரசு அகழிகள், முட்கம்பி வேலிகள் போட்டு திறந்த வெளி சிறையில் அடைத்துள்ளமையையும்.. அதற்கு சிறீலங்கா சிங்களப் படை ஆயுதமுனைப் பாதுகாப்பு வழங்குவதையும்.. உலகில் மனித உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமைப்பான ஐநா திறந்த வெளிச் சிறையில் கொடி பறக்கவிட்டு.. தனது உண்மைத் தோற்றத்தை.. உலகில் வல்லாதிக்க சக்திகளின் நலன்களை காக்கும் தனது பணியை உறுதி செய்து கொள்வதையும் மேலுள்ள படங்களில் காண்கிறீர்கள்.



இந்தச் சிறை வாழ்க்கைக்கு அஞ்சி வன்னியில் தமது சொந்த மண்ணில் இருக்கும் மக்களை புலிகளின் மனிதக் கேடயம் என்று வர்ணித்து அவர்கள் மீது இடைவிடாது குண்டு மழை பொழிய அனுமதிப்போர் சிங்களப் படைகள் ஆயுத முனையில் மக்களை தடுத்து வைத்து அவர்களின் சுதந்திர நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதை கொடி கொடுத்து அங்கீகரித்து நிற்பதன் மர்மம் என்னவோ..?

படங்கள் : டெயிலிமிரர். எல்கே

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:44 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

hello... hapi blogging... have a nice day! just visiting here....

Wed Apr 22, 12:00:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க