Saturday, April 25, 2009

புலி எதிர்ப்பும் காட்டிக் கொடுப்பும் கூலி வாங்குதலும் தானா இவங்களால முடிஞ்சது.முன்னாள் யாழ்ப்பாண சிங்கள இராணுவத் தளபதியும் அங்கு இனச் சுத்திகரிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்ட முக்கிய தளபதிகளில் ஒருவரருமான Maj. Gen. G.A. Chandrasiri.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சாபக்கேடு என்பது அதன் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்திலேயே இந்திய உளவு அமைப்புக்களால் ஏற்படுத்தப்பட்டாயிற்று. தமிழீழ விடுதலை என்ற ஒரே இலட்சியத்தை அடைய 25 அமைப்புக்களை உருவாக்கி தமிழர்களின் பலத்தை பிளவுபடுத்திய போதே அது வெளிப்பட்டுவிட்டது. இருந்தாலும் ஒரு ஆதங்கம்.. அவர்களும் தமிழர்கள் தானே.. இப்பவாவது திருந்தமாட்டார்களா என்ற ஒரு நப்பாசையோடு மக்களின் அவலத்தின் மீது நின்று கொண்டு இதை எழுதுகின்றேன்.

தமது கோடிக்கணக்கான சொத்துக்களை.. விலை மதிக்க முடியாத உயிர்களை.. மீளப் பெற முடியாத உடற்பாகங்களை.. இன்னும் என்னென்னவெல்லாம் இழக்கக் கூடாதோ அத்தனையையும் இழந்து இறுதில் உயிரை விட அதிகம் மதித்த தமிழன் என்ற இனமானத்தையும் இழந்து ஒருவேளை சோற்றுக்கு கொலைக்காரச் சிங்களவனிடமே கையேந்தும் நிலையில் இருக்கின்றனர் ஈழத்தமிழ் மக்கள்.

இந்த நிலையிலும் புலி எதிர்ப்பு என்ற ஒன்றை உச்சரிச்சுக் கொண்டு சொந்த மக்களின், சகோதர சகோதரிகளின் அழிவில் மகிழவும் திருப்திப்படவும் தமிழ் மக்களைத் திட்டமிட்டு கொலை செய்யும் சிங்களப் பயங்கரவாதப் படைகளுக்கும் அதன் அரசுக்கும் முண்டு கொடுக்கும் தமிழர்கள் மற்றும் இந்திய, சிங்கள அரச ஆதரவு தமிழ் ஆயுதக் குழுக்கள் இன்னும் இருக்கின்றன என்பது பலரும் அறிந்த விடயமே.

உண்மையில் சிங்கள அரசு இவர்களை எந்த அளவுக்கு தமிழர்களாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மதிக்கின்றது என்பதற்கு கீழ் வரும் செய்தி சான்றாக அமைகிறது.

வன்னிப் போர் என்பதன் ஊடு விடுதலைப்புலிகளின் தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் பலம் பலவீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எல்லாவற்றையும் இழந்து எப்படியாவது தப்பிப்பிழைப்போம் என்ற ஒரு சிறிய நம்பிக்கையோடு தங்களை குண்டு வீசிக் கொன்று கொண்டிருக்கும் சிங்கள கொலை வெறியனிடத்திலேயே சரணடைந்த அல்லது அவனால் கைது செய்யப்பட்டு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் நிற்கும் தமிழ் மக்களைக் கவனிக்க இன்று யாரும் இல்லை.

இந்த புலி எதிர்ப்பு.. மாற்றுக் கருத்து.. மன்னர்களுக்கு இப்ப கூட அந்த மக்களுக்கு உதவ மனமில்லை அல்லது முடியவில்லை எனும் போது.. இவர்களின் பித்தலாட்டங்களின் பின்னிருக்கும் உண்மைகளும் மக்களுக்கு தூலாம்பரமாகத் தெரிந்து கொண்டே இருக்கின்றன. இந்த மக்கள் ஒருவேளை சிங்களவனை மன்னிப்பினும் இந்த வார்த்தை ஜாலப் பாதகர்களை மன்னிப்பார்களா என்பது கேள்விக் குறியே.

தன்னிடம் சரணடைந்த அல்லது தனது வன்வளைப்பின் போது கைதான தமிழ் மக்களைக் "கவனிக்க" என்று யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட சிங்கள இராணுவத் தளபதியான சந்திர சிறியை நியமித்திருக்கிறார் சிங்களச் சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச. இந்தச் சந்திர சிறி, யாழ்ப்பாணம் சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின் நடத்தப்பட்ட இனச் சுத்திகரிப்பில் முக்கிய பங்காற்றியதோடு தமிழர்கள் மீதான செம்மணிப் படுகொலைகள், புதைகுழிகள் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்னான படுகொலைகளில் நேரடிப் பங்குபற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி இவருக்கு சிவில் நிர்வாக உதவி வழங்க சிங்கள அரசாங்க அதிபர்கள் மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கண்டி அரசாங்க அதிபர் (Gotabhaya Jayarathna). இரண்டாமவர் பொலனறுவ அரசாங்க அதிபர் (Lal Wimal). மூன்றாமவர் அனுராதபுரம் அரசாங்க அதிபர். இவர்கள் அனைவரும் சிங்களவர்கள்.அடிப்படையில் இவர்களுக்கு வன்னி பற்றியோ வன்னி மக்களின் வாழ்வியல் பற்றியோ எந்த அடிப்படை அறிவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்களைக் கொண்டு தமிழ் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் எவ்வாறு திறம்பட அடைத்து வைப்பது என்று சிறீலங்கா அரசு திட்டங்களைத் தீட்டி செயற்பட ஆரம்பித்திருக்கிறது.

இத்தனைக்கும் இந்தச் சிங்களவர்களுடன் ஒரே ஒரு தமிழரான வவுனியா அரசாங்க அதிபர் செயற்பட இருக்கிறார். இவர்கள் மத்தியில் அவரின் பங்களிப்பும் அத்துணை செல்வாக்கு மிகுந்ததாக இருக்கும் என்று நம்ப இடமில்லை.

ஆனால் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி கேட்டவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.. தமிழீழத்துக்கு சுதந்திரம் கேட்டுவிட்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சுதந்திரம் வாங்கப் புறப்பட்டுவிட்ட இன்னொரு இலாக்கா இல்லாத அமைச்சர் முரளிதரன்.. வலதுசாரி மிதவாதி என்ற தோறணைகளோடு பூஞ்சு கட்டிய கண்களோடு இன்னும் பதவி ஆசையோடு அலையும் ஆனந்த சங்கரி மற்றும் அன்று தொட்டு இன்று வரை சோற்றுப்பாசலாலேயே தமிழீழ விடுதலைக்காக தமிழ் மக்களின் விடிவுக்காக உழைக்கும் புளொட் சித்தார்த்தன் போன்றவர்கள் ராஜபக்சவின் காலடியில் வரிசை கட்டி நிற்கின்ற போதும் அவர் இவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இவர்களும் அவரிடம் தமது மக்களுக்கு சேவையாற்ற சந்தர்ப்பம் தரக் கேட்பதாகவும் இல்லை.

ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் என்று எப்போ ராஜபக்ச எப்போ அறிவிப்பார் என்று காத்துக் கிடக்கின்றனர். இராணுவத்தின் உதவியுடன் ஆயுதங்களைக் காட்டி மக்களை அச்சுறுத்தி பதவிகளில் ஒட்டிவிட்டால் பிழைப்பைப் பார்த்துக்கலாமே என்ற ஒரே "உயரிய" எண்ணத்தில்.

இந்த இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே என்று கேட்பவர்களும் இருக்கச் செய்வர். அவர்கள் (த. தே. கூட்டமைப்பினர்) எல்லோரும் புலிகளின் பிரதிநிதிகள் என்று அனைத்து சிங்கள அரச சார்பு நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் சிங்கள அரசு தமிழ் மக்களை பாதுகாக்கும் அல்லது தமிழ் மக்களுக்கு சேவையளிக்கும் உரிமையை வழங்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்பதால் அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிடுவது அநாவசியம் என்பதால் தவிர்த்துக் கொள்கின்றேன்.

இதோ இந்தச் செய்தியை எழுத வைத்த பிரதான செய்தி இங்கு:

Rajapaksa appoints notorious ex-commander to head IDP resettlement

Sri Lankan President and Commander-in-Chief of the armed forces Mahinda Rajapaksa on Friday appointed Chief-of-Staff of the Sri Lanka Army (SLA) Maj. Gen. G.A. Chandrasiri as the Competent Authority Officer in charge of resettlement of Tamils from Vanni in alleged barbed-wire 'internment camps' and 'villages' in the North. Maj. Gen. Chandrasiri was the former chief of the SLA in Jaffna, under whose command Jaffna witnessed hundreds of forced disappearances, extra-judicial killings and other human rights violations in the period from 2006 to 2008. Meanwhile, Colombo has started to seek funds to 'resettle' and 'rehabilitate' civilians who have been captured from the LTTE controlled area.

Three more Sinhalese Government Agents from Kandy, Pollonnaruwa and Anuradhapura districts would assist Maj. Gen. Chandrsiri as Coordinating Officers to handle the affairs of the Tamil IDPs.

The only Tamil official to assist Chandrasiri is Vavuniyaa GA Ms. P.M.S Charles. She would help the former commander to liaise with the displaced, according to reports that appeared in Colombo press Friday.

Kandy GA Gotabhaya Jayarathna was appointed to handle construction, shelter, and lodging, Pollonnaruwa GA Lal Wimal to coordinate food, health and sanitation and Anuradhapura GA to handle water supply, electricity and infrastructure, the reports said.

Chandrasiri’s service was extended for a year when he retired from service in 2008, on the recommendation of Lt. Gen. Sarath Fonseka, the SLA chief.

His military service was extended for a year when he retired from service in 2008, on the recommendation of Maj. Gen. Sarath Fonseka, the SLA chief.


UPDATEs HERE

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:19 AM

4 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

நல்லாச் சொன்னீங்க. ஏன் இந்த ஈனத் தமிழ் சனியன்கள் இன்னும் சிங்கள நாய்களுக்கு கூட்டிக் கொடுத்துக் கொண்டு வாழுதுகளோ :(

Sat Apr 25, 08:00:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி அனானி.

ஈனர்களிடம் ஈரமில்லை தான்.. இருந்தும்.. திருந்தாதுகளா என்ற ஒரு நப்பாசை தான்.

Sat Apr 25, 08:03:00 AM GMT+1  
Blogger வெத்து வேட்டு செப்பியவை...

will Ltte killers allow Karuna, Douglas, A.Sangaree and others to just look after people? because of ltte everyone is surrendering to SL Gov whether it is politicians or people.....
ltte must lay down the arms and leave the scene..then only we can see if your speculations are true or not...
all your article is just speculation..there is no truth in it... you are just supporting ltte and bashing others...
so NO USE... just another whining

so in the end Singalese will be a better solution to voiceless tamils than LTTE, LTTE-OPPONENTS, Tamil politicians, Tamil Nadu Politicians or India
hehehehhee

Sat Apr 25, 08:42:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

\//will Ltte killers allow Karuna, Douglas, A.Sangaree and others to just look after people? because of ltte everyone is surrendering to SL Gov whether it is politicians or people.....
ltte must lay down the arms and leave the scene..then only we can see if your speculations are true or not...
all your article is just speculation..there is no truth in it... you are just supporting ltte and bashing others...
so NO USE... just another whining

so in the end Singalese will be a better solution to voiceless tamils than LTTE, LTTE-OPPONENTS, Tamil politicians, Tamil Nadu Politicians or India
hehehehhee//

Rajapakshae family is able to visit areas where tamils were imprisoned by Sinhala army. why those idiots got security from SL army and their own can't go, because they have scare to go infront of their own people.

If LTTE wants to lay down tamils' arms, SL army should vacate from Tamil Eelam first and LTTE should get permission from its people to do so. because LTTE did it once before at the request of IPKF in 1987. Finally IPKF killed 4000 - 6000 Tamils in Eelam.

LTTE is not only the soul representative of Eelam Tamils but also they are Tamil eelam security force.

LTTE is not group of alien as you some guys think. They are children of Tamil speaking people. They are with their own people.. why others cant be like LTTE. because they did all wrongs to their own people, thats why they scare to come infront of their own people.

This is the real truth in Sri Lanka.

Sat Apr 25, 09:41:00 PM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க