Thursday, April 30, 2009

இந்திய - சிறீலங்கா கூட்டு நாசிய வதை முகாம்களில் தமிழ் மக்கள்.





//இராணுவ வாகனங்களில் கொண்டு வரப்படும் உணவு பொட்டலங்கள் சிவில் உடை தரித்த சிங்கள இராணுவத்தினரால் அல்லது சிங்ளப் படைகளுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுதக் குழுக் கூலிகளால் மக்களை நோக்கி வீசப்படும் காட்சி.//

ஜேர்மனிய ஹிட்லரின் நாசியப் படைகள் அல்பேனிய இன மக்கள் மற்றும் யூதர்கள் மீது செய்த கொடூர இன அழிப்பைப் போன்ற ஒன்றை தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் தமிழீழ மக்களாகிய தமிழ் மக்களைக் சித்திரவதை முகாம்களில் அடத்து வைத்து ரகசியமாகவும் சிறுகச் சிறுகவும் கொலை செய்து தமது தமிழின அழிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றன சிறீலங்கா சிங்கள அரசும் அதற்கு சகல வழி உதவி வழங்கும் இந்திய சோனியா காங்கிரஸ் அரசும்.

இந்த வாரத்தில் மட்டும் வவுனியா முகாம்களில் வாழும் மக்களுக்கு உணவு வழங்குகின்றோம் என்ற போர்வையில் இராணுவ வாகனங்களில் எடுத்துவரப்படும் உணவுகள் மக்கள் மத்தியில் கிரமமாக பகிர்ந்தளிக்கப்படாமல் நாய்களுக்கு உணவு போடுவது போல் தூக்கி வீசப்படுவதால் பசியால் வாடும் மக்கள் அந்த உணவுக்கு போட்டிபோட்டு ஏற்படுத்தும் நெருசலால்.. உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளன.அண்மையில் இரண்டு சிறுவர்கள் இவ்வாறான நெருசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.





//மக்கள் வாழும் கூடாரங்கள் நெருக்கமாகவும் சிறிய கொள்ளவோடும் அமைக்கப்பட்டு அங்கு அளவுக்கு அதிகமான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள காட்சி.//

அதுமட்டுமன்றி ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை மிக நெருக்கமாக நீண்ட காலத்துக்கு அடைத்து வைப்பதன் மூலம் பல சுகாதாரக் கேடுகளும் நோய்த் தொற்றுக்களும் ஏற்படுகின்றன.அந்த வகையில் சமீப நாட்களில் மட்டும் பல்வேறு நோய்கள் காரணமாக 60 தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளதுள்ளதாக வவுனியா சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதைத்தவிர மக்களின் சுதந்திர நடமாட்டம் இல்லாமல் செய்யப்பட்டு ஒரே இடத்தில் அவர்களை அடைத்து வைப்பதன் மூலம் சமூகக் கலப்புக்கள் அற்ற தனிமை நிலையை உருவாக்கி அவர்கள் மத்தியில் உளவியல் பாதிப்புக்களை ஏற்படுத்துவதும் திட்டமிட்டு செயற்படுத்தப்படுகிறது.

மேலும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இளம் ஆண்களும் பெண்களும் தனியாகப் பிரிக்கப்பட்டு வேறு ரகசியமான இடத்துக்கு நகர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் 1987 இல் தமிழீழத்தில் இருந்த போது காங்கேசன்துறையில் இவ்வாறான ஒரு வதை முகாமை ஒன்றை இயக்கிப் பல இளைஞர் யுவதிகளைக் கொன்று புதைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதே பாணி இப்போது மீளவும் சிறீலங்காப் படைகளூடு செயற்படுத்தப்படுகிறது.

இதுவரை சுமார் 300 இளையவர்கள் இவ்வாறு கடத்தப்பட்டு தனியாக ரகசிய இடங்களில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதேபோன்று யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள்ளும் உள்ள வதை முகாம்களில் நிகழ்த்தப்படுவதாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன.



//வதை முகாம் இட நெருக்கடியும்.. வெளியில் புழுதியும் அழுக்கும் கூடிய இடத்தில் இருந்து ஒரு தாய் குழந்தைக்குப் பாலூட்டும் காட்சியும்//

சர்வதேச பிரதிநிதிகளும் இந்திய உளவாளிகளும் இந்த முகாம்களுக்கு அடிக்கடி சென்று வருகின்ற போதும் மக்களின் கருத்துக்களை சரியாக உள்வாங்கி மக்களின் நிலைகளை சரியாக மதிப்பிட்டு வெளி உலகுக்குக் கூறாமல் சிறீலங்கா அரசும் அதன் இராணுவமும் நியமித்துள்ள சிலரை மட்டும் பேட்டி கண்டு அவர்களின் செய்திகளை மட்டும் வெளியிட்டு வருவதுடன் வதை முகாம் பேரவலங்களை வெளி உலகின் பார்வையில் இருந்தும் மறைத்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து மக்களை மீட்பதாகக் கூறிக் கொண்டு அந்த மக்களை தமது வதை முகாம்களில் சிறீலங்கா சிங்கள அரசு அடைத்து வைப்பதை இந்தியா உட்பட்ட நாடுகள் மெளனமாக இருந்து அங்கீகரித்து வருகின்றன. அண்மையில் வன்னியில் இருந்து சிறீலங்கா படைகளால் சிறைபிடிக்கப்பட்டு வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவது என்ற போர்வையில் 100 கோடி ரூபாய்களை இந்திய நடுவன் அரசு வழங்கிய போதும், மேற்படி மக்கள் 5 பேர் தங்கக் கூடிய கூடாரங்களுக்குள் 20 பேர் வரை வாழ நிர்பந்திக்கப்படுவதுடன் சரியான மலசல மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் அங்கு செய்து கொடுக்கப்படாமல் நோய் மற்றும் சுகாதாரக் கேடுகளுக்கு இலக்காகி மரணிக்கத் தூண்டப்படும் வகையிலேயே வாழ வைக்கப்பட்டுள்ளனர்.



//இட நெருக்கடி காரணமாக சிறீலங்கா சிங்கள அரச வதை முகாம்களுக்குள் மர நிழல்களில் வாழும் மக்கள்.//

இந்த முகாம்களை நிர்வகிக்க இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்ட இராணுவ மேஜர் ஜெனரல் சந்திர சிறியும் அவருக்கு துணையாக 3 சிங்கள அரசாங்க அதிபர்களும் சில தினங்களுக்கு முன்னர் கொடிய சிங்கள ஜனாதிபதியான ராஜபக்சவால் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாழ 140,000 மக்களைக் கொண்டிருக்கும் இந்த முகாம்கள் தவிர பிற ரகசிய முகாம்களும் கிளிநொச்சி மற்றும் கொடிகாமம், தென்மராட்சிப் பகுதிகளில் இயக்கப்படுவதுடன் அங்குள்ள மக்களை எவரும் பார்க்கவோ.. கணக்கிடவோ சந்தர்ப்பம் அளிக்கப்படுவதும் இல்லை. அதில் பல இளம் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பல இளம் பெண்கள் சர்வதே அளவில் பாலியல் துஸ்பிரயோகக் குற்றம் சுமத்தப்பட்ட சிறீலங்கா சிங்கள இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படக் கூடிய சூழல் வேண்டும் என்றே உருவாக்கித் தரப்பட்டுள்ளது.



//சிங்களப் படைகளால் இளம் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு முட்கம்பி போட்டு சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் காட்சி. படம் - சிறீலங்கா இராணுவச் சிப்பாய்//

அதுமட்டுமன்றி இன்னும் சிங்கள இராணுவம் விடிவிக்காத பகுதியில் இந்திய மற்றும் சிறீலங்கா தரப்புக்கள் 20 ஆயிரம் மக்களே உள்ளனர் என்கின்றனர். ஆனால் அங்கு 150 ஆயிரம் மக்கள் இருப்பதாகத் தெரிகிறது. முன்னர் மொத்தப் பாதுகாப்பு வலயப்பகுதியிலும் 70 ஆயிரம் மக்களே வாழ்வதாக இந்திய மற்றும் சிறீலங்கா தரப்புக்கள் கூறி வந்தன. ஆனால் தற்போது 140 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் பிரத்தியேக வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.



//முட்கம்பி வேலிகளால் எல்லையிடப்பட்ட திறந்த வெளிச் சிறைகளில் தமிழ் மக்கள்..! படம்:timesonline//

இவ்வாறு காலத்துக்குக் காலம் தவறான எண்ணிக்கைகளைக் காட்டி தமது இன அழிப்பை மூடி மறைக்கும் செயலை செய்து வருவதுடன் அண்மையில் மக்களோடு கைதான தயா மாஸ்டர் போன்ற உடல் உபாதைகள் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து விலகி வாழ்ந்து வந்தர்களைப் பிடித்து கொலை அச்சுறுத்தல் வழங்கி அவர்களைக் கொண்டு பொய்ப்பரப்புரைகளையும் தமிழீழ் விடுதலைப்புலிகளுக்கு எதிரான அபகீர்த்தியை உண்டு பண்ணும் வகையிலான கருத்துக்களையும் தமது இன அழிப்புச் செயற்பாடுகளை மூடி மறைக்கும் செயல்களையும் இந்திய மற்றும் சிறீலங்கா அரசுகள் திட்டமிட்டு தமது செல்வாக்குக்கு உட்பட்ட அரச, தனியார் ஊடகங்கள் மூலம் செய்து வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இவ்வாறான ரகசிய மற்றும் பகிரங்க செயற்பாடுகளுடன் கூடிய இந்திய - சிறீலங்கா அரசுகளின் கூட்டு நாசிய கொள்கை ரீதியான தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த உலகத் தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டியது மட்டுமன்றி இந்தக் கொடுமைகளை உலகின் கண்களுக்கு தகுந்த ஆதாரங்கள் சகிதம் வெளிப்படுத்த உழைக்க முன் வருவது உலகின் இன்றும் அழிக்கத்திட்டமிடப்பட்டுள்ள ஒரு இனத்தின் மீட்பில் நீங்கள் அவர்களுக்கு உதவிய வரலாற்றுக் கடமையை செய்ததை என்றும் அந்த இன இருப்போடு சொல்லும்.

எனவே இதற்காக துணிந்து செயற்பட அனைத்துத் தமிழர்களும் பாகுபாடுகளுக்கும் அப்பால் முன் வருவதோடு அப்பாவி ஈழத்தமிழர்களின் உயிர், உரிமை காக்க ஒன்றிணைந்து செயற்படுங்கள்.

படங்கள் மற்றும் செய்திக்கான பல ஆதாரங்கள். தமிழ்நெட்.கொம்

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:35 PM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

தகவல்களை ஆதாரங்களுடன் தருவதற்கு நன்றிகள்.

இந்தக் கொடுமைகளை இந்த உலகம் தானே கற்றுக் கொடுக்கிறது சிங்களப் படைகளுக்கு.

Fri May 01, 08:02:00 AM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க