Thursday, April 09, 2009

Microsoft வழங்கும் 25ஜி இலவச சேமிப்பு வசதி.



உலகின் முன்னணி கணணி மென்பொருள் நிறுவனமான மைக்குரோ சொவ்ட் (Microsoft) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு (hotmail மற்றும் அது சார்ந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு) இணையம் வழி தரவுகளை மற்றும் கோப்புக்களை சேமித்து வைக்க என்று 25ஜி (GB) சேமிப்பு வசதியை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

இதன் மூலம் கோப்புக்களை மற்றும் தரவுகளை உங்கள் ஹொட்மெயில் ஐடி ஊடாக கீழ் உள்ள இணைப்பில் உள்நுழைந்து உங்களுக்கான ஒரு சேமிப்பு கணக்கை உருவாக்கி அங்கு ஒதுக்கப்படும் 25ஜி சேமிப்பிடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் நீங்கள் எங்கிருந்தும் (இணைய இணைப்பு உள்ள இடங்களில் இருந்து) உங்கள் கோப்புக்களை தரவுகளை தேவைக்கு ஏற்ப பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் கணணி மக்கர் பண்ணினாலோ.. அல்லது கணணி ஹாட் டிஸ்க் திடீர் என்று பழுதானோலோ நீங்கள் உங்கள் தரவுகளை இங்கும் சேமித்து வைப்பின் அவற்றை இழப்பின்றி மீளப் பெற முடியும். அதுமட்டுமன்றி மடிகணணியைக் காவிக் கொண்டு திரியத் தேவையில்லை. போகுமிடத்தில் இணைய வசதியும் ஒரு கணணியும் இருப்பின் தரவுகளை உங்கள் பென் ரைவில் (pen drive) சேமித்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது குறித்த கணணியிலேயே பாவித்துக் கொள்ளலாம்.

மத்திம அளவில் தரவுகளை கோப்புகளை சேமிக்க விரும்பும் மாணவர்களுக்கு அலுவலகம் செல்வோருக்கு மிகவும் உபயோகமான இலவச இணைய வழியான சேமிப்பு வசதி இது என்று சொல்லலாம்.

இதேபோன்று கூகிளும் கூடிய விரைவில் உருவாக்கித்தர இருப்பதாக சொல்லப்படுகிறது.


இப்போ உங்கள் கணக்கை உருவாக்க இங்கு அழுத்துங்கள்...

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:28 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க