Thursday, May 07, 2009

அமெரிக்கா குண்டு வீச்சு - 100 பேர் பலி.; சொறி சொன்னார் கிலாரி.//செப் 11 தாக்குதல்.//

செப் 11 2001 இல் அமெரிக்கா மீது நடந்த தாக்குதலில் 2000 வரை மக்கள் கொல்லப்பட்டார்கள். அதன் பின்னர் 2005 இல் லண்டனில் நடந்த ரயில் குண்டு வெடிப்பில் 57 பேர் கொல்லப்பட்டார்கள். அதற்கிடையில் ஸ்பெயினில் நடந்த ரயில் குண்டு வெடிப்பில் 150 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அடிக்கடி நடக்கும் குண்டு வெடிப்புக்களில், தாக்குதல்களில் மொத்தமாக சில ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறு உலகின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே நடக்கும் ஓரிரு குண்டு வெடிப்புக்களில் மற்றும் தாக்குதல்களில் சில ஆயிரம் மக்கள் கொல்லப்படுவதும்.. அவை பயங்கரவாதச் செயல்கள் என்று பெரிதாக சர்வதேச ஊடகங்களில் வெளிவருவதும் இன்றைய உலகில் சகஜம். இவற்றைத் தடுக்கின்றோம் என்று சொல்லி உலக நாடுகள் கூட்டம் கூடிப் பேசி முடிவுகள் எடுப்பதும் அறிக்கைகள் விடுவதும் சகஜம்.

இந்த உலகில் இப்படி ஒரு நிலை ஏன் வந்தது.. என்று பார்த்தால்.. அமெரிக்கா போன்ற வல்லாதிக்கத்தை நிலை நாட்ட விரும்பும் நாடுகள் இந்த உலகை அமைதியாக வைத்திருக்க விரும்புவதில்லை என்ற காரணத்தினால் என்பது புலப்படும். தமது வல்லாதிக்கத்தனத்தை உலகெங்கும் வியாபிக்க குழப்பங்களும் மரணங்களும் நிறைந்த உலகையே இந்த நாடுகள் விரும்புகின்றன என்பது வெளிப்படை உண்மை. ஆனால் அதை அறிந்திருந்தும் இந்த நாடுகளை எதிர்க்க, இவற்றின் செயற்பாடுகளை தடுக்கக் கூடிய பலம் எவரிடமும் இல்லை என்பது இன்னொரு வெளிப்படை உண்மை. இருந்தும் எதிர்ப்புக் காட்டும் ஒரு சிலரையும் பயங்கரவாதிகள் ஆக்கி அவர்களைத் தண்டிப்பதாகக் கூறிக் கொண்டு தம்மை நோக்கி எதிர்ப்புக்கள் கிளம்பாதிருக்க மக்களை அச்சுறுத்தும் வகையில் கொலை செய்யும் போர்களை தொடுக்கின்றனர்.

செப் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா பிரகடனம் செய்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர் மற்றும் நடவடிக்கைகளால் ஈராக், சூடான், ஏமன், ஆப்கானிஸ்தான் என்று பல நாடுகளில் அப்பாவி மக்கள் அமெரிக்க வான் படை மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் பல ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி அமெரிக்கா தோற்றுவித்துள்ள பலவீனமான அரசியல் சூழல்களால் ஈராக் போன்ற நாடுகளில் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் பெருகி பல ஆயிரம் மக்கள் ஆண்டுதோறும் கொல்லப்படுகின்றனர். அதை அமெரிக்கப் படைகள் தமது இருப்புக்கான காரணிகளாகப் பாவித்து தமது இருப்பைப் பாதுகாத்து வருகின்றன. அங்கு மனித அழிவுகள் எந்தச் "சொறி" களும் இன்றி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
//ஆப்கானிஸ்தானில் போரில் சிக்கியுள்ள மக்கள்.//

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானப்படை நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். வழமையாக இவர்கள் தலிபான்களாக சோடிக்கப்பட்டு விடுவதே நடைபெறுவது. ஆனால் இம்முறை தப்பித்தவறி உண்மை வெளிவந்து விட.. அமெரிக்க வெளிவிவகார மந்திரி கிலாரி கிளிங்டன் இம்மரணங்களுக்கு "சொறி" சொன்னதோடு அடங்கிவிட்டார். உலகமும் அடங்கிவிட்டது.

ஏன் உலகின் பல ஊடகங்கள் இந்த நிகழ்வு பற்றிய செய்தியையே வெளியிடவில்லை என்றால் பாருங்களேன். வல்லாதிக்க நலன்களை காப்பதில் ஊடகங்கள் எவ்வாறு ஒற்றுமையாக செயற்படுகின்றன என்று. ஆனால் அண்மையில் இந்திய மும்பாய் நகரில் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதலை அனைத்துலக ஊடகங்களும் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக நேரடி அஞ்சல் செய்து கொண்டிருந்தன. ஆளாளுக்கு கண்டன அறிக்கைகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்தனர். இவர்களின் பார்வையில் மும்பாயிலும் நியோர்க்கிலும் உள்ளவர்கள் மட்டும் தானா அப்பாவி மக்கள். ஈழத்தில் ஈராக்கில் ஆப்கானிஸ்தானில் பலஸ்தீனத்தில் செச்சினியாவில் உள்ளவர்கள் அப்பாவிகள் இல்லையா..??!//ஈழத்தில் போரில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்.//

அதுமட்டுமல்ல..ஈழத்தில் பல்லாயிரம் தமிழர்கள் கடந்த சில ஆண்டுகளாக கடும் விமான மற்றும் கனரக ஆயுதத்தாக்குதல்களுக்கு இலக்காகியும் சிறீலங்காச் சிங்கள இராணுவத்தின் நேரடிக் கொலை வெறித்தாக்குதல்களுக்கு இரையாகியும் மடிந்து வருகின்றனர். ஐநா குறிப்பின் படியே இவ்வாண்டி கடந்த 5 மாதங்களில் 6500 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய அகோரத்தாக்குதல்களில் சில வாரங்களில் 2000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள்.

இவை எவையும் உலக அளவில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டதாகவோ இத்தனை படுகொலைகளையும் செய்யும் அரசுகள் மீது பயங்கரவாத சொற்பிரயோகம் பிரயோகிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவோ வரலாறில்லை.

உண்மையில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மக்கள் உயிரிழப்பதாகக் கூறிக் கொண்டு உலக அரசுகள் மேற்கொள்ளும் பதில் நடவடிக்கைகளில் அல்லது தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவதை எவரும் காண்பதும் இல்லை.. கண்டிப்பதும் இல்லை அதைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து அந்த நாடுகள் மீது நடவடிக்கை எடுப்பதும் இல்லை.

அரசுகள் மக்களைக் கொன்றால் அதற்கு ஒரு "சொறி - Sorry " போதும் இழப்புக்களை ஈடு செய்ய. ஆனால் ஓசாமாவோ.. தலிபானோ.. இல்லை இதர அமைப்புக்களோ அரசுகளைத் தண்டிக்கும் வகைக்கு சில தாக்குதல்களை மேற்கொண்டு அதில் மக்கள் மடிந்தால் அதற்கான பதில் நடவடிக்கைகளில் பல்லாயிரம் மக்களைக் கொல்லப்படுதலே இழப்புக்கு ஈடாகிறது. இதுதான் இன்றைய உலகில்.. பயங்கரவாதிகளுக்கும் அரசுகளுக்கும் இடையில் உள்ள வேற்றுமை.

இதில் யார் பெரிய பயங்கரவாதி என்று பார்த்தால்.. அல்குவைடாவோ.. தலிபானோ.. கமாஸோ அல்ல. அமெரிக்காவையும்.. இஸ்ரேலையும்.. ரஸ்சியாவையும்.. பாகிஸ்தானையும்.. இந்தியாவையும்.. சிறீலங்காவையும் ஆளும் அரசுகள் என்பதே வெளிப்படை உண்மை. ஆனால் இந்த உண்மையை அறிந்தும் அவர்களை தண்டிக்க.. உலக மக்களால் முடியுமா..??! நிச்சயம் முடியாது. ஏனெனில் ஜனநாயகம் என்ற போர்வையில் தாமே தம் கையால் வாக்குப் போட்டு ஒவ்வொரு 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒவ்வொரு சர்வாதிகார அரசை அமைத்து விட்டு அதில் நசுங்கிச் சாகிறார்கள் உலக மக்கள். இதுவே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை இந்த உலகில்..!

மனித உரிமை பேசுபவர்களே அதை மீறுகின்ற போது.. எப்படி உலகில் மனிதம் இருக்கும்..! அழகான இயற்கை தந்த இந்தப் பூமிப்பந்து மனிதர்களின் பேராசைகளால் நாடுகளாக எல்லைகள் போட்டு பிரிக்கப்பட்டு அவற்றுக்கிடையே பகை மூட்டி.. அதில் தன்னினத்தை தானே அழித்துக் கொண்டு மனித உரிமை காக்கிறார்களாம் மனிதர்கள். காட்டில் வாழும் விலங்கு கூட இப்படி ஒரு சொந்த இன அழிப்பைச் செய்யாது. ஆனால் இவ்வளவு கொடுமைகளையும் தன் இனத்துக்கு தானே செய்யும் மனிதர்களோ தாமே இந்த பிரபஞ்சத்தின் அறிவாளிகள் என்றும் கூறிக் கொள்கின்றனர். என்னே வெட்கக் கேடு..! நாம் உண்மையில் இந்த உலகில் வாழத் தகுதியுள்ள உயிரினங்களா என்பதே இப்போது எம்முன் உள்ள மிக முக்கியமான வினா...!

-------------

US Afghan strikes 'killed dozens'


A Red Cross spokeswoman said they were investigating the deaths

US air strikes in Afghanistan on Tuesday killed dozens of civilians including women and children, officials from the Red Cross have said.

Afghan officials in the western province of Farah told the BBC as many as 100 civilians might have died.

The civilians were said to have been hit while sheltering from fighting.

US Secretary of State Hillary Clinton said at a meeting with the Afghan president that America "deeply, deeply regretted" the reported deaths.

Click here for more details

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:22 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க