Saturday, May 02, 2009

ஈழம்: வன்னியில் 3000 தமிழ் இளையவர்கள் காணாமல் போயுள்ளனர்.



தமிழீழத்தின் வன்னி மன்ணில் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு மிக அண்மையில் கைதுசெய்யப்பட்ட (பயணக் கைதிகளை விடுவித்ததாக சிறீலங்கா சிங்கள அரசும் இந்திய சோனியா காங்கிரஸ் அரசும் சொல்லிக் கொண்டன) தமிழ் மக்களில் சுமார் 3000 வரையான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளனர் என்று சிறீலங்காவின் சிங்கள எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறீலங்காவை ஆளும் சிங்கள ராஜபக்ச அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இது சிங்களவர்கள் தமக்கிடையே சொன்ன செய்தி மட்டுமே ஆகும். இதற்குள் உருமறைப்புச் செய்யப்பட்ட விடயங்களும் எண்ணிக்கைகளும் அடங்கும்..! அந்த வகையில் சிங்களப் படைகளிடம் சிக்கிய தமிழ் மக்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளனர் அல்லது போகடிக்கப்படும் நிலையில் இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

வன்னிப் போர்க்களத்தில் தினமும் குண்டு வீசியும் பட்டினி போட்டும் தமிழ் மக்களைக் கொல்லும் சிங்களப் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வரும் தமிழர்களை இப்படியும் முகாம்களில் அடைத்து வைத்தும் கொன்று மிகப் பெரிய இன அழிப்பை தமிழர்கள் மீது செய்து வருகின்றன. இதற்கு சர்வதேசம் வழங்கியுள்ள அங்கீகாரத்துக்கான பெயர் "புலிப் பயங்கரவாத அழிப்பு"

தமிழ்மக்களை புலிகளிடம் இருந்து மீட்கும் மீட்பர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் இந்திய சோனியா காங்கிரஸ் அரசும் இதர வெளிநாடுகளும் இதற்கு என்ன பதில் தரப்போகின்றன..??!

இச்செய்திக்கான பிரதான மூலம்:

சரணடைந்த 3000த்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படாமை மிகவும் மோசமான நிலைமை - ரணில் விக்ரமசிங்க

வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த நிலவரம் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமிருந்து தாம் அதிகம் தெரிந்துகொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடனான சந்திப்பின் போது தமக்கு தெரியாத பல விடயங்களை அவர்கள் கூறியதாக ரணில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதான கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் தலைவன் என்ற ரீதியில் இலங்கை நிலவரத்தை வெளிநாட்டு இராஸதந்திரிகளின் ஊடாக தெரிந்து கொள்ள நேர்ந்துள்ளமை மிகவும் கேவலமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கப் படையினரிடம் சரணடைந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சரணடைந்த 3000த்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படாமை மிகவும் மோசமான நிலைமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்வின்.கொம்

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:05 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க