Friday, May 08, 2009

ராஜபக்ச மாளிகையில் வாழலாம்; பிரபாகரன் நீச்சல் கூட அடிக்கக் கூடாதாம்.//பிரபாகரனும் நீச்சல் தடாகமும்.//

சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு இப்போ எல்லோம் பிரபாகரனின் குடும்ப அல்பத்தை ஆராய்ச்சி செய்வதையே பிழைப்பாகக் கொண்டிருக்கிறது.

சிறீலங்காவை பாதுகாக்க அது செயற்படுகிறதோ இல்லையோ அண்டை அயலில் இருக்கும் நாடுகள் அதைப் பார்த்துக் கொள்ளும் என்ற துணிவில் குறிப்பிட்ட அமைச்சகம் பிரபாகரன் வீட்டு அல்பத்தை ஆராய்ச்சி செய்வதிலும் அதில் உள்ள படங்களை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இணைப்பதிலுமே இப்போ தீவிர கவனம் செலுத்திச் செயற்பட்டு வருகிறது.//பிரபாகரன் குடும்பத்தினருடன்.//

அது பிரசுரித்துள்ள படங்களில்.. பிரபாகரன் நீச்சல் தடாகத்தில் நீச்சலடிப்பதாகவும்.. பிரபாகரன் புலிச் சீருடையில் குடும்பத்தினரோடு படம் எடுத்திருப்பதாகவும்.. பிரபாகரனின் மகள் படித்துப் பட்டம் பெறுவதாகவும்.. என்று இன்னோரென்ன.. படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அப்படங்கள் உண்மையில் பிரபாகரன் வீட்டுப் படங்களா அல்லது பிரபாகரன் எடுத்தவையா அல்லது சிறீலங்கா பாதுகாப்பமைச்சு வெட்டி ஒட்டி சோடிச்சவையா என்பது சந்தேகங்களுடன் இருக்க.. சிறீலங்கா பாதுகாப்பமைச்சகத்துக்கு பிரபாகரன் உல்லாச வாழ்கை வாழ்வதை மட்டும் இனங்காட்டுவதுதான் தொழிலா.. என்ற கேள்வியும் எழுகிறது.

பிரபாகரன்.. 35 வருட கால தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல தடவைகள் மரணத்தின் வாயில் வரை சென்று பல இடர்களை.. இன்னல் மிகுந்த வாழ்க்கைகளை சந்தித்தவர். அவர் உண்மையில் ஒரு நாட்டு இராணுவத்தில் அன்று இணைந்திருப்பின் இன்று ஒரு இராணுவ ஜெனரலாக உல்லாச குளிரூட்டி அறையில் இருந்து கொண்டு.. குண்டு துளைக்காத வாகனத்தில் பயணித்துக் கொண்டு.. வரும் போகும் வெள்ளைக்காரங்களோடு கைகுலுக்கிக் கொண்டு மாளிகை போலும் வீட்டில் வாழ்ந்திருப்பார். அவரது பிள்ளைகள்.. ஒக்ஸ்பேட்.. கேம்பிரிஷ் என்று போய் படித்துப் பட்டம் பெற்று அங்கு வெள்ளைக்காரிகளோடு, வெள்ளைக்காரன்களோடு உல்லாசம் அனுபவித்திருக்குங்கள்.//உல்லாச வாழ்க்கை வாழும் ராஜபக்ச குடும்பம்.//

பிரபாகரனின் உல்லாச வாழ்க்கை பற்றிப் படங்களைப் போடுவதாகச் சொல்லும் சிறீலங்கா பாதுகாப்பமைச்சு.. இத்தனை ஏழைச் சிங்கள இளைஞர்களையும் பலியிட்டு தமிழ் மக்களையும் கொன்று இன அழிப்பு யுத்தம் செய்யும் சிங்கள இனவெறி தலைவர்கள் வாழும் உல்லாச வாழ்க்கையை படமாக்கிப் போடத்தயாராக இருக்கிறதா..??!

ஜே ஆர் ஜெயவர்த்தன தொடங்கி.. இன்றைய ராஜபக்ச வரை சுமார் 25,000 சிங்கள ஏழை இளைஞர்களை தமிழர்களைக் கொல்ல என்று அனுப்பி பலியிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி 1,50,000 தமிழ் மக்களைக் கொன்று குவித்துள்ளனர்.// ராசபக்ச குடும்பம்.. ராசபக்ச மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில்.//

இந்த தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் என்ன.. இராணுவ முகாம்களில் பதுங்குகுழிகளிலும் காப்பரணிலுமா வாழ்க்கை நடத்துகின்றனர். ஏன் சிறீலங்கா இராணுவத் தளபதிகள் என்ன இராணுவ முகாம்களிலும்.. காவலரணிலுமா நிற்கின்றனர். உல்லாசமாக குளிரூட்டிய மாளிகைகளில் அமெரிக்க கிரீன்காட் விசாக்களையும் எடுத்து வைத்துக் கொண்டு தமது பிள்ளைகளை பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு யுத்தம் என்று அப்பாவி சிங்கள தமிழ் மக்களை கொன்று ஒழிக்கின்றனரே அதை படமாகப் போடத் தயாராக இருக்கிறதா சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சகம்.

இன்றும் கூட பிரபாகரனுக்காக எமது சகோதர சகோதரிகள் யுத்தம் செய்யவில்லை. எமது மண்ணை ஆக்கிரமிக்க நினைக்கும் சிங்களப் படைகளை எமது மண்ணை விட்டு அகற்றி சிங்கள தேசத்திற்கு அவர்களை அனுப்பிவிட்டு சுதந்திர தமிழீழத்தை அமைக்கவே போராடி வருகின்றனர். அதற்காகவே உயிர் விடுகின்றனர். பிரபாகரனின் தலைமையை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அவரின் வழிகாட்டுதலை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அதற்காக பிரபாகரனும் உயிர் விடனும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு போராளி சொந்த இலட்சியத்துக்காக வாழ்கிறான்.. அதற்காக உயிர் விடுகிறான். அவனை வழிநடத்தும் தலைவனை மதிக்கிறான். அந்தத் தலைமை தேச விடுதலைக்கு அவசியம் என்பதை உணர்கிறான். ஒரு போராளியின் தியாகம் அவனின் இலட்சியத்துடன் தொடர்புபட்டதே அன்றி தலைமை பற்றியதல்ல.//சிறீலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குடும்பம் மேற்குல நாகரிக பாணியில் மின்னி மிணுக்கிக் கொண்டு.//

பிரபாகரன் ஒன்றும் சுயநலவாதியல்ல என்பதை அவர் பல தடவைகள் நிரூபித்துவிட்டார். அவர் உல்லாச வாழ்க்கை வாழ நினைத்திருந்தால் அதற்காக அமைந்த பல சந்தர்ப்பங்களை தவற விட்டிருக்கமாட்டார். ஆனால் தனது தலைமைத்துவத்தை அங்கீகரித்து தன் பின்னால் அணிவகுத்து நிற்கும் மக்களை அவர் இன்று வரை தனது சக்திக்கு உட்பட்டு பாதுகாக்கவும்.. வழிநடத்தவுமே செய்கிறார்.

ஒரு தலைவன்.. மக்களோடு மக்களாக வாழ்பவன்.. போர்க்களத்திலேயே வாழ்பவன்.. போர்க்களத்தில் நீச்சல் தடாகம் அமைத்து அதில் நீச்சலடிக்கிறான் என்றால் அது வீரம். பிரபாகரன் ஒன்றும் மக்களின் வரிப்பணத்தில் கட்டிய அலரிமாளிகையில் நீச்சல் தடாகத்தில் குளித்துவிட்டு வந்து.. ரூபவாகினியில் இனவாதம் பேசுவதன் மூலம் யுத்தம் செய்யவில்லை. சண்டித்தன அரசியல் செய்யவில்லை. போர்க்களத்தில் வசதியாக வாழவும் போராளிகளுக்குக் கற்றுக் கொடுக்கிறான். போராளி என்பவன் எப்போதும் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் தான் நடக்க வேண்டும்.. பதுங்கு குழிக்குள் தான் வாழ வேண்டும் என்ற அவசியமில்லை. போராளி என்பவன் அவனுக்குரிய போராட்ட குணத்துடன் ஒழுக்கத்துடன் எப்படியும் வாழலாம். ஆனால் இறுதி இலட்சியத்தை அடைய அவன் இடைவிடாது செயற்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய உலகில் போராட்ட நியாயமாக இருக்க முடியும்.//ஒபாமாவும் குடும்பமும் நாய் குட்டியும்.//

இன்று உலகெங்கும் படைகளை அனுப்பி யுத்தம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதிகள் என்ன போர்க்களத்திலா நிற்கிறார்கள். வெள்ளை மாளிகையில் பிள்ளைகளுக்கு நாய்க்குட்டி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கட்டளைக்குப் பணிந்து பல ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் அப்பாவி அமெரிக்க இளைஞர்கள் யுத்தம் செய்து மடிகிறார்கள். இப்படியாப்பட்ட அமெரிக்க தலைவர்களை ஏன் ஒருவரும் குறை சொல்வதில்லை..??!

அப்பாவிச் சிங்கள இளைஞர்கள் பணத்துக்காக சொந்தக் கிராமங்களை, நகரங்களை விட்டு பல நூறு கிலோமீற்றர்கள் தாண்டி வந்து தமிழர்களைக் கொல்ல கூலிகளாகச் செயற்படுகின்றனரே அவர்களை ராஜபக்ச என்ன வன்னியில் நின்றா வழிநடத்துகிறார். கொழும்பில் உல்லாச மாளிகைகளில்.. கண்டியில் உல்லாச விடுதிகளில் ஓய்வெடுத்துக் கொண்டு மனைவியுடன் கட்டிப் புரண்டு கொண்டு வழிநடத்துகிறார். ஏன் அவரை ஒருவரும் குறை சொல்வதில்லை..??!//லண்டனில் உல்லாச வாழ்க்கை வாழும் சந்திரிக்காவின் மகளும்.. சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமார ரணத்துங்க குடும்பமும்.//

ஆனால் பிரபாகரனும் போராளிகளும் அப்படியன்று. சொந்த மண்ணில்.. சொந்த நிலத்தில் நின்று கொண்டு சொந்த மண்ணில் மக்களை அழிக்க தேடி வரும் எதிரிகளை சந்திக்கின்றனர்.. அவர்களையே அழிக்கின்றனர். சொந்த மண்ணில் போர் முழக்கங்கள் மத்தியிலும் ஒருவன் மக்களுக்கு உல்லாசமாக வாழ வழியிருக்கென்று காட்டுவது அவசியம். நீண்ட போராட்டத்தில் போர் ஏற்படுத்தும் சலிப்பில் இருந்து போராளிகளையும் மக்களையும் ஆறுதல் படுத்த தெம்பு படுத்த வேண்டியது தலைமையின் கடமை. போராளிகளுக்கும் இந்த உலகின் உல்லாச வாழ்க்கையின் பக்கங்களைக் காட்ட வேண்டும். அதை மறைத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை.// கடும் பயிற்சியின் பின் காட்டில் கயிற்றுத் தொட்டியில் ஓய்வெடுக்கும் பிரபாகரன்.//

போராளி என்பவன் எச்சூழலிலும் இலட்சிய உறுதி கொண்டு வாழ்பவனாக இருப்பானே அன்றி.. உல்லாசத்துக்கு அடிபணிபவன்.. போராளியாக இருக்கும் தகுதி அற்றவன். அதேபோல் உல்லாசத்தைக் கண்டு பயப்படவும் கூடாது. அதை அனுபவிக்கிற வேளையில் அனுபவித்துக் கொண்டு இலட்சியப் பயணத்தில் உறுதியாக நிற்பவனே போராளி. அந்த வகையில் பிரபாகரன் உல்லாசத்தை அனுபவித்திருப்பினும் கூட அது போராளி என்பவன் எப்படி இந்த நவீன உலகில் அரசுகள் ஏவும் உல்லாச வாழ்க்கை எனும் மாய அஸ்திரத்தைக் கையாள வேண்டும் என்ற படிப்பினையை படிப்பிக்க என்றே கொள்ள வேண்டும். காரணம்.. உல்லாசத்துக்காக இலட்சியத்தை விடுதலையை தேசத்தைக் காட்டிக் கொடுத்தவனோ.. விட்டுக்கொடுத்தவனோ அல்ல.. பிரபாகரன். அவரின் வழியில் நடக்கும் போராளிகளும் மக்களும்.. இப்படங்களால் எள்ளளவும் சலனப்படப் போவதில்லை. ஆனால் கொழும்பில் இருந்து கொண்டு உல்லாச வாழ்க்கை வாழும் சிங்களத் தலைவர்களும் இராணுவத்தளபதிகளும்.. பாதுகாப்பமைச்சு அதிகாரிகளும்... தங்கள் வாழ்க்கையைப் பற்றிய சுயத்தை படங்களாக வெளியிட்டால் அவர்களின் கூலிக்காக இறக்கும் ஏழைச் சிங்கள இளைஞர்களின் உயிரைக் காக்க முடியும் என்பதற்காக இதனை இங்கு பதிவு செய்கிறோம். இதனை சிங்களவர்களுக்கு வால் பிடித்து வாழும் தமிழ் உல்லாசப் பிரியர்கள், பிபிசி போன்ற சர்வதேச அளவிலான உல்லாசப் பிரியர்கள் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டுகின்றோம்.

இவ்வாக்கத்துக்கான மூலச் செய்தி இங்கு.

Tiger leader's photos on display

The Sri Lankan defence ministry has released what it says are recently captured pictures of the Tamil Tiger leader, Velupillai Prabhakaran.

It says that the images "unravel dark corners of Mr Prabhakaran's duplicitous and pampered life style" and show him to be "smiling psychopath".

The ministry does not say how or when it obtained the images.

There has been no word on the images from the rebels, who are now surrounded by the army in the north-east.

bbc.co.uk

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:30 AM

13 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

//பிரபாகரன் ஒன்றும் சுயநலவாதியல்ல என்பதை அவர் பல தடவைகள் நிரூபித்துவிட்டார். அவர் உல்லாச வாழ்க்கை வாழ நினைத்திருந்தால் அதற்காக அமைந்த பல சந்தர்ப்பங்களை தவற விட்டிருக்கமாட்டார். ஆனால் தனது தலைமைத்துவத்தை அங்கீகரித்து தன் பின்னால் அணிவகுத்து நிற்கும் மக்களை அவர் இன்று வரை தனது சக்திக்கு உட்பட்டு பாதுகாக்கவும்.. வழிநடத்தவுமே செய்கிறார்.//

good

Fri May 08, 12:46:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

http://www.defence.lk/new.asp?fname=20090506_Album2

Fri May 08, 01:06:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

Prabakaran's kids are very goods in academics. Even the government says that. But still after studying abroad, his son came back to Vanni and working with dad. Though he had choices of staying and having a luxury life in abroad, he is in Vanni eating "Thavidu"

Though they are the kids of a rebel leader, they have thier own choice of life. They are individuals. They have the right to study. A government and media cannot understand this simple fact even....

Fri May 08, 02:11:00 PM GMT+1  
Blogger பதி செப்பியவை...

//Prabakaran's kids are very goods in academics. Even the government says that. But still after studying abroad, his son came back to Vanni and working with dad. Though he had choices of staying and having a luxury life in abroad, he is in Vanni eating "Thavidu"//

அதெல்லாம் யாருக்கு தேவை.. கொஞ்ச நாள் பரபரப்புக்கு எழுதுவாங்க.. அவ்வளவே...

புலிகள் பாரிய அளவில் நீச்சல் குளங்களை அமைத்து, கடற்கரும்புலிகளுக்கும், தண்ணீர் அடியில் தாக்குதல் நடத்துவதற்கும் பயிற்ச்சி அளித்த தகவல்களையும் இவர்கள் வெளியிட வேண்டியது தானே...

//போர்க்களத்தில் நீச்சல் தடாகம் அமைத்து அதில் நீச்சலடிக்கிறான் என்றால் அது வீரம்.//

ரசித்த வரிகள்.... !!!!!

//போராளி என்பவன் அவனுக்குரிய போராட்ட குணத்துடன் ஒழுக்கத்துடன் எப்படியும் வாழலாம். ஆனால் இறுதி இலட்சியத்தை அடைய அவன் இடைவிடாது செயற்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய உலகில் போராட்ட நியாயமாக இருக்க முடியும்.//

உண்மை...

Fri May 08, 03:44:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

It's not about whether Prabhakaran can lead a normal (or luxury accrding to SL govt) life with his family, it's actually about how most of the other Tamil fathers are forced to give at least one child to fight with the Tigers, while his kids were educated abroad and are leading relatively sheltered life. How is any one of these fathers less than Prabha? Don't they have love too?

Fri May 08, 04:21:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

ha.ha..haaa...

Who said thalaivar at Vanni?
He & his family already escaped from that region.
I dont knw that they rare living luxary life now.
But they are safe now, that is only true.

Fri May 08, 04:31:00 PM GMT+1  
Anonymous siva செப்பியவை...

இலங்கை அரசு சில போட்டோக்களை பிரசுரிக்கிரார்களாம்,அதை பிபிசி போன்ற ஊடகங்கள் ஒரு செய்தியாக வெளியிடுகிறார்கள். வன்னியில் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுவதை செய்தியாகப் போடுவதற்கு இந்த பிபிசிக்கு எத்தனையோ நாட்கள் சென்றன ,ஒரு காலத்தில் பிபிசி செய்தி நிறுவன கொழும்பு ஊடகர்களை சிலரை, உல்லாசத்தையும் ,நல்ல விருந்தையும் காட்டி இலங்கை அரசு விலைக்கு வாங்கிவிட்டதோ என்ற சந்தேகம் கூட தமிழ் மக்களுக்கு உண்டானது ,அந்த மாதிரியாக ஊடக தர்மத்தை மறந்து ,மிகுந்த பக்க சார்பான செய்திகளை அதுவும் இலங்கை பாதுகாப்புக்கு அமைச்சு வெளியிட்ட செய்திகளை மட்டும் அது வெளியிட்டது.
வாசித்தவுடன் எனக்கு சிரிப்பு வந்தது,,இந்த போட்டோக்கள் தலைவர் பிரபாகரனின் இருண்ட பக்கங்களை காட்டுகிறதாம்.,நீச்சல் அடித்தால் அதில் என்ன பயங்கரம் உள்ளது.,அல்லது குடும்பத்துடன் படம் எடுத்தால் அதில் என்ன இருண்ட சங்கதி இருக்கிறது.போடோவுக்கு போஸ் கொடுக்கும்போது எல்லோரும் சிரித்துக் கொண்டு, கூடிய வரை நன்கு உடுத்துக் கொண்டுதான் காட்சி அளிப்பார்கள்.
அவர் ஒரு பயங்கரவாதி என்று இவர்கள் சொல்லி வந்தபடியால் பயங்கரமான உருவத்தில் இருக்கவேண்டும் எதிர்பார்த்தார்கள் போல் உள்ளது.
சமாதான ஒப்பந்தம் உள்ள காலத்தில் நான் கிளிநொச்சிக்கு போய் இருந்தேன் ,அப்போது ஒரு உணவகத்தில் போய் சாப்பிட்ட போது அதனை எவ்வளவு சுத்தமாக போராளிகள் வைத்திருந்தார்கள் என்பதையும் மேலை நாட்டு உணவகம் போன்று அதனை திறமையுடன் நடத்திஇருந்தார்கள் என்றும் நாங்கள் வியந்து பேசினோம்
பிரபாகரனுக்கு உல்லாச வாழ்க்கை பெரிதாக இருந்திருந்தால், சமாதான காலத்தில் தமிழரின் உரிமை பற்றியும் விடுதலை பற்றியும் கவலைப் படாமல் சரணமாகி இருந்தால் ,இப்போது அவரும் அவரது பிள்ளைகளும் பணத்திலும் உல்லாசத்தில்லும் புரண்டு இருக்கலாம். இப்படி வன்னி காட்டிலும் கடற்கரையிலும் சாவின் விளிம்பிற்கு மத்தியில் இருக்கத் தேவையில்லை.
இந்திய ஒப்பந்த காலத்தில், இந்தியாவுக்கு அவர் அடி பணிந்து இருந்திருந்தால் அவருக்கு பல மில்லியன் டாலர்கள் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். அவரும் அதைப் பெற்றுக் கொண்டு இப்போது 'கருணா' இருப்பது மாதிரி கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு பவனி வந்திருக்கலாம் .
இதை இங்கு போடுபவர்கள் இலங்கை அரசிடம், ஒரு சில சில்லறைப் பணத்துக்காக தமது இனத்தின் அழிப்புக்கு துணை போகும் மனச்சாட்சி அற்றவர்கள், .தாங்கள் ஏதோ பெரிய தன்னலமற்ற தியாகச் செம்மல்கள் மாதிரி இதை போடுகிறார்களாம்.

Fri May 08, 05:15:00 PM GMT+1  
Anonymous Eela Sollan செப்பியவை...

You are correct. U said whatever I thought when I saw that photos.

Sat May 09, 08:39:00 AM GMT+1  
Blogger True Tamil செப்பியவை...

Mahinda enjoying isn't a big thing, because he is a politician. But Prabhakaran is not a politician.
Understand it.
Will you support LTTE, if your father, mother, brother or sister killed by LTTE while escaping?
Why Thuvaraga (Prabhakaran's daughter) didn't fight? Why did she in Europe?
If you are real leader, you should be a role model to others. Not like this.
//ஆனால் தனது தலைமைத்துவத்தை அங்கீகரித்து தன் பின்னால் அணிவகுத்து நிற்கும் மக்களை அவர் இன்று வரை தனது சக்திக்கு உட்பட்டு பாதுகாக்கவும்.. வழிநடத்தவுமே செய்கிறார்.//
You must be kidding...
He is attacking now... He is killing them to keep himself safe.
He is a selfish.He is a betrayer...

Sat May 09, 02:22:00 PM GMT+1  
Blogger True Tamil செப்பியவை...

//Prabakaran's kids are very goods in academics. Even the government says that. But still after studying abroad, his son came back to Vanni and working with dad. Though he had choices of staying and having a luxury life in abroad, he is in Vanni eating "Thavidu"//
My question is, why Charles Antony got the chance to study in abroad?
Is it means that he is brave person in LTTE?
Oops....

Sat May 09, 02:24:00 PM GMT+1  
Blogger வெத்து வேட்டு செப்பியவை...

this post shows the mentality of Praba's worshippers
Srilanka web sites were comparing how Praba made all Vanni Tamil people suffer like parents seeing their kids die of injuries, starvation, or even fighting army..while Praba and his family was enjoying like Mahinda :)

Sun May 10, 01:12:00 AM GMT+1  
Blogger பாலா... செப்பியவை...

ஃபொன்சேகாவும், பக்சேயும் அதிகம் வேண்டாம் 3 நாள் இவனுங்கள் சொல்லுற ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து பார்க்கட்டும். ஒரே நாள்ள நுளம்பு கடிச்சே செத்துப்போவானுகள். இவன் சிப்பாய்க்கும் இவனுக்கும் ஒரே சலுகைதானா? எச்சிலப் பசங்க.

Sun May 10, 06:53:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

vanakkam kuruvi,supperb....ungal vaathangal erppudaiyana...-raavan

Tue Aug 04, 10:44:00 AM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க