Monday, May 11, 2009

தமிழன் காட்டுமிராண்டியே தான்.

அன்னை சோனியா வெள்ளைத்தோலோடு வடக்கில் இருந்து வரும் தானைத் தலைவி என்று அவரைக் காண இலட்சக்கணக்கில் தமிழன் காட்டுமிராண்டிகள் போலத் திரள்கிறான். அன்றும் சரி இன்றும் சரி.. தமிழர்கள் உணர்வற்ற ஜடங்களைப் போலவே.. காந்திகளுக்குப் பின்னால் அலைகின்றனர். தமக்கென்று உறுதியான சிந்தனையும் இல்லை செயற்பாடும் இல்லை அவர்களிடம். (ஒரு சில நூறு மானமுள்ள மனிதமுள்ள தமிழர்கள் மட்டும் கறுப்புக்கொடியோடு நடந்தனர். அவர்களையும் பிடித்து சிறையில் போட்டுவிட்டான் காட்டுமிராண்டித் தமிழன்.)சோனியா தீவுத்திடலில் பேசுகிறார். ஈழத்தில் போர் நிறுத்தம் செய்துவிட்டோம். தமிழ் மக்களுக்கு இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி சம உரிமை வாங்கிக் கொடுத்துவிட்டோம். இதை விட என்ன செய்ய இருக்கிறது. ராஜீவின் இறப்பை கூட மறந்து மன்னித்து நாம் இவ்வளவும் செய்திருக்கிறோம்.(ராஜீவ் ஏதோ ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்த புண்ணியவானாக்கும்.)

ஆனால் இத்தனை அறிவியலும்.. தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்த உலகில் கூட அந்த அம்மையார் பேசிய பச்சைப் பொய்களுக்கு கைதட்டி ஆரவாரிக்கிறான் தமிழன். கூட இருந்து அதனை மொழிபெயர்கிறான் இன்னொரு தமிழன். அதனை சொக்கத்தங்கத்தின் பேச்சென்கிறான் பெரியார் வழியில் வந்ததாகச் சொல்லும் இன்னொருவன்.. அவன் பகுத்தறிவு வாதியாம்.. தானே தமிழனுக்குத் தலைவன் என்றும் சொல்லிக் கொள்கிறான்.

ஆனால் இந்த தமிழனை தவிர, உலகமோ சோனியா மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே ஈழத்தில் பல நூறு தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அதில் 100 க்கும் அதிகமானோர் பச்சிளம் பாலகர்கள் என்றும் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருந்தது.அது இந்தக் காட்டுமிராண்டித் தமிழனைச் சென்றடையவில்லை என்பது வேதனை மேல் வேதனை.

கொல்லப்பட்டவர்களில் அநேகர் கனரக பீரங்கிகள்.. பல்குழல் எறிகணைகள்.. விமானப்படை விமானங்கள் (இவற்றின் அநேகமானவை இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்சியா வழங்கியவை) போன்றவை பொழிந்து தள்ளிய குண்டுகளுக்கு இலக்காகி மடிந்துள்ளனர். இன்னும் பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு அடிப்படை மருத்துவ வசதிகள் இன்றி இறக்கும் நிலையில் உயிருக்காக போராடுகின்றனர்... இருந்தும் இன்னொரு கோடியிலோ... ஈழத்தில் யுத்த நிறுத்தம் அமுலில் என்றதும் தமிழன் கைதட்டி ஆரவாரிக்கிறான். தமிழனைக் கொல்ல வேட்டுத் தந்தவனுக்கே வோட்டும் என்று முழங்குகிறான்.

பாவிகளே பாரத தேச சொக்கத்தங்கங்களே.. தங்கமாக இருக்காதீர்கள்.. மனிதனாக மாறுங்களேன்..! அன்று அமைதிப்படை கொண்டு வந்து ஈழத்தமிழனை அழித்தீர்கள் இன்று ஆயுதங்களை கொடுத்து அழிக்கிறீர்கள். இத்தனையும் செய்துவிட்டு துணிந்து தமிழன் மத்தியில் வந்து நின்று கொண்டே அவனிடம் பொய்யும் பேசுகிறீர்கள். ஆனால் தமிழனோ அன்றும் இன்றும் காட்டுமிராண்டியாக உங்கள் பொய்களைக் கேட்டுக் கைதட்டுகிறானே அன்றி சக மனிதனின் இறப்பை ஏறெடுத்தும் பார்க்கிறானில்லை. இத்தனை துயர் கண்டும் அவன் மனம் கசியவில்லை..! இவனை மனிதன் என்பதா.. மிருகம் என்பதா அல்லது அதனை விடக் கீழ் என்பதா..???!

ஒன்று மட்டும் உண்மை... தமிழன் காட்டுமிராண்டியே தான். காக்கா கூட இறந்த தன் சொந்தத்துக்காக கூடிக் கரையும். ஆனால் அந்த இரக்க உணர்வு கூட இல்லாத காட்டுமிராண்டி தமிழன் தான்...!

--------------//Over 100 children killed-UN//

More than 100 children were among a large number of Tamil civilians killed in a weekend "bloodbath" in Sri Lanka, the United Nations' spokesman in Colombo, Gordon Weiss, said today.

He said the UN had been warning of a bloodbath as tens of thousands of civilians have been trapped in a narrow patch of coastline where the Tamil Tigers are fighting to hold back a massive military assault.

"The large scale killing of civilians, including the death of over 100 children, over the weekend shows that the bloodbath scenario has become a reality," Weiss told

AFP.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:34 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க