Tuesday, May 19, 2009

சிறீலங்காவில் எனி சிறுபான்மை இனமே (தமிழர்களே) இல்லை- ராஜபக்ச சொல்கிறார்.



//தமிழர்களின் இனத்துவ அடையாளத்தை மறுத்து அச்சிடப்பட்டுள்ள சிறீலங்காவின் புதிய தேசியக் கொடி - தமிழர்களுடனான போர் வெற்றியின் பின்.//

சிறீலங்கா சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் இராணுவ ரீதியில் வெற்றி கொண்டு விட்டதாக அறிவித்த பின் இன்று சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை உலகில் இனத்துவத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாக அமைகிறது.

ஈழத்தமிழ் மக்களின் பாரம்பரிய நிலப்பரப்புக்களை இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்சியா, இஸ்ரேல் மற்றும் மேற்குலகத்தின் ஏகோபித்த ஆதரவோடு "பயங்கரவாதத்துக்கு எதிரான" போரின் கீழ் ஆக்கிரமித்துக் கொண்ட சிங்களச் சிறீலங்கா இன்று "சிறீலங்காவில் சிறுபான்மை இனம் அல்லது இனங்கள் என்ற ஒன்றே இல்லை எல்லோரும் ஒருவரே" என்று அனைத்துச் சிறுபான்மை இனங்களின் இனத்துவங்களையும் வலிந்து பறிமுதல் செய்து கொண்டுள்ளதுடன் சிறீலங்கா சிங்கள பெளத்த நாடு அங்கு வாழ்பவர்கள் அனைவரும் சிங்கள பெளத்தர்கள் என்பதை மறைமுகமாக பிரகடனம் செய்துள்ளது.



//சிறீலங்காவின் தேசியக் கொடி - தமிழர்களுடனான போர் வெற்றிக்கு முன்.//

சிறீலங்கா சமீபத்தில் அச்சிட்ட கொடிகளில் வலது புறத்தில் காணப்பட்ட தமிழர்களைப் பிரதிபலிக்கும் செம்மஞ்சள் நிறப்பட்டிகை அகற்றப்பட்டு அது சிங்கள இனத்தைக் குறிக்கும் நிறத்தால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா பல்லின மக்கள் வாழும் நாடு. இதுதான் சிறீலங்கா தொடர்பான ஐநா வாசகம். ஆனால் ராஜபக்சவின் இன்றைய இந்த சிறுபான்மையினரே இல்லை எல்லோரும் ஒருவரே என்ற அறிவிப்பு இலங்கையின் பல்லினத்துவத்தையும் தமிழர்களின் இனத்துவத்தையும் முற்றாக நிராகரிப்பதாக அமைகிறது. இது சிறீலங்காவில் தமிழினத்தின் அடையாளம் சிங்கள பெளத்த பேரினவாதத்தால் இல்லாதழிக்கப்பட்டுள்ளதையே இனங்காட்டுகிறது.

இந்த நிலையை ஈழத்தில் தமிழர்களுக்கு உருவாக்க இந்தியா போன்ற நாடுகளும் சிங்கள பேரினவாதிகளுடன் கரங்கோர்த்து பாடுபட்டனர் என்பதை தமிழர்கள் வரலாற்றில் மறக்கப் போவதில்லை. நிச்சயம் ஒரு இனத்தை இலங்கையில் அழித்ததற்கான பழியை அந்த இனத்தை அழிக்கத் துணை போன அனைவரும் இந்த உலகில் ஒரு நாள் ஏற்கத்தான் போகின்றனர்.

அதுமட்டுமன்றி வார்த்தை அளவில், மயக்கமான வார்த்தைகளூடு தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க வேண்டும் என்று ஐநா அமைப்பு மற்றும் சில உலக நாடுகள் (இந்தியா உட்பட) சிங்களச் சிறீலங்காவைக் கேட்டு வரும் நிலையில் சிறீலங்காவில் சிறுபான்மை இனம் என்ற ஒன்றே இல்லாத அளவுக்கு மக்கள் ஐக்கியமாகி விட்டதால் தமிழர்களுக்கு என்று ஒரு தீர்வு இல்லை என்பதையும் மகிந்த ராஜபக்ச இந்த மாயாஜாலக்காரகளுக்கு பதிலாக வழங்கி இருக்கிறார் என்பதும் இங்கு முக்கியமான செய்தியாகும்.

மகிந்தவின் இன்றைய (19-05-2009) பொன்னான அந்த வாசகங்கள்:

The President appealed to all Sri Lankans who left the country due to war to return to rebuild the nation. He said that the final solution for Sri Lanka will be a home grown one. "There are no more 'minorities' in Sri Lanka and we are all one now" he said.

dailymirror.lk

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:08 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க