Thursday, May 21, 2009

புலிகளின் அழிவு: இந்தியாவுக்கு ஆப்புக் கொண்டு அலையும் சீனா.ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்கான பேரம் பேசும் சக்தியாக மற்றும் பாதுகாப்புக் கசவமாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று தோற்றம் காட்டி கூட்டம் கூடி பலவீனப்படுத்திய சிறீலங்காவின் சுற்றயல் அரசுகள் மற்றும் சர்வதேச அரசுகள் இன்று சிறீலங்கா அரசை தமது கட்டுக்குள் எடுக்க முடியாமல் திண்டாடும் நிலை தோன்றி இருக்கிறது.

சிறீலங்கா சிங்கள அரசுடன் அதுவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசுடன் சிறீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் இருந்து நெருக்கம் காட்டி வரும் சீனா தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதில் சிறீலங்காவிற்கு உதவுவதன் பெயரால் தனது ஆதிக்கத்தை அங்கு வலுப்படுத்திக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது.

அதுமட்டுமன்றி இப்போ சீனாவின் நகர்வுகள் இந்தியா குறித்த பிராந்தியத்தில் செல்வாக்கை இழக்கச் செய்யும் வகைக்கு மாறியுள்ளது.

சீனாவின் நகர்வுகளை முறியடிக்க என்றே இந்தியா அடித்துப்பிடித்து சிங்களவர்களின் கால்பிடித்துக் கெஞ்சுகிறது. வலிந்து போய் தமிழர்களை அழிக்க உதவி செய்கிறது. போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீளக் குடியேறவே வாய்ப்பில்லாத கள நிலமையில் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சித் தீர்வு வேண்டும் என்று வேசத்தனமான ஒரு கோரிக்கையை சிறீலங்காவிடம் முன்வைத்து தமிழர்களையும் தாஜா பண்ண நினைக்கிறது. ஆனால் இந்தியாவின் இந்த எளிமையான கணக்கை சீனா தனது வலுவான சமன்பாட்டால் இலகுவாகத் தீர்க்கும் நிலை தோன்றியுள்ளது.

எனி நாராயணனும் மேனனும் சோனியாவும்.. டெல்லியில் தூக்குப் போட வேண்டியதுதான் பாக்கி.. என்ற நிலை இந்தியாவின் சிறீலங்கா தொடர்பான தவறான கொள்கையால் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ராஜபக்ச அரசுக்கு போர் செய்ய வலிந்து போய் உதவிய இந்தியா தான் உதவிய போரில் சிங்களப் படைகள் தமிழர்களைக் கொன்று வெற்றி வாகை சூடிவிட்டது என்றதும் 500 கோடி ரூபாவை பரிசளித்தது. ஆனால் அதற்கு முன்னம் சீனா மில்லியன் டாலர்களை அள்ளிக் கொடுத்துவிட்டது. சில வேறு உதவிகளையும் அனுப்பிவிட்டுள்ளது. இப்போ சிறீலங்காவின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப போகிறதாம் சீனா.

இந்தியா, சீனா போட்டி போட்டு வழங்கிய இந்தக் கோடிகள் வடக்குக் கிழக்கு தமிழர் பகுதிகளுக்குப் போகப் போவதில்லை. அவை தென்பகுதிகளில் சிறீலங்காவின் பொருளாதார நெருக்கடியால் ஏழ்மையில் தவழும் சிங்களவர்களையே அதிகம் போய்ச் சேர இருக்கிறது. இதற்கான அறிவிப்புக்களை சிறீலங்கா (அதன் பிரதமர்) ஏலவே துணிந்து வெளியிட்டும் விட்டது.

அதுமட்டுமன்றி தமிழர்களுக்கு சம அரசியல் உரிமை வழங்குவதாக 1980 களில் ஜே ஆர் அரசு சொல்லி வந்தததையே ராஜபக்சவும் சொல்லி இருக்கிறார். ஆனால் அவரிடம் உண்மையில் தமிழர்களுக்கு வழங்க என்று எந்த அரசியல் தீர்வுத்திட்டமும் இல்லை. அப்படி எதுவும் அவர் உருவாக்கவில்லை. அவர் போரை வைத்தே நிலைமையை சரிக்கட்டி விட்டதால் சிங்கள அரசு தானே வலிந்து போய் தமிழர்களுக்கு சுயாட்சித் தீர்வுத்திட்டம் என்று கூறி புதிய ஒரு சிக்கலில் மாட்டி சிங்கள மக்களைப் பகைக்காது.

இன்றைய நிலையில் சிங்கள மக்கள் தமிழர்களை போரில் மட்டுமன்றி அனைத்து விதத்திலும் வென்று விட்டதாகவே நினைக்கின்றனர். அடிமைப்படுத்தி விட்டதாகவே நினைக்கின்றனர். தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டிய தேவை இன்று சிங்கள மக்களின் எண்ணங்களில் இல்லை. சிறீலங்கா அரசை சில வெளிநாடுகள் தமிழர்களை ஏமாற்ற அரசியல் தீர்வுக்கு உந்துவதாக போக்குக் காட்டலாம். சிறீலங்காவும் அதற்குப் பதிலளிப்பது போல அறிக்கைகளை விடலாம் ஏன் சில நகர்வுகளைக் கூடச் செய்யலாம். ஆனால் ஈழத்தில் கள யதார்த்தம் என்பது தமிழர்களுக்கு நீதியான நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க வழிசெய்யும் வகையில் இல்லை என்பதே உண்மை.//போரின் பாதிப்பில் இருந்தும் மக்கள் விடுபட முதலே அல்லது மக்களை விடுவிக்க முதலே அவர்களுக்கு சுயாட்சி கேட்கும் இந்தியாவின் அக்கறை உண்மையானதா..??! இதுவே போரில் இழப்பை சந்தித்த இந்த மக்களின் கேள்வியும் கூட.//

காரணம் தமிழர்களுக்காக உறுதியாக பேரம் பேசக் கூடிய நிலையில் விடுதலைப்புலிகளும் இல்லை இதர தமிழ் அரசியல்வாதிகளும் இல்லை. சிங்கள அரசுடன் இணைந்துள்ள தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களுக்கு உள்ளூராட்சி சபைகளே போதும் என்ற நிலையில் தமிழர்களுக்கு எப்படி சுயாட்சி அதுவும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு தமிழர் மாகாணங்கள் குறித்த ஒப்பந்தம் சட்டவலுவற்றது என்று கூறி சட்டரீதியாக பிரிக்கப்பட்ட பின் சாத்தியம் என்பதும் புரியாத புதிர்களே.

நிச்சயம் இந்தியாவின் தற்போதைய போருக்குப் பின்னான நகர்வுகள் தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதாகவும் சிங்கள அரசை திருப்திப்படுத்துவதாக அல்லது சிறுக வற்புறுத்துவதாகவும் இருக்கும். ஏனெனில் சிறீலங்காவின் சீனச் சார்பு நிலையை முறியடிக்க அல்லது மாற்ற என்று தான் இந்தியாவின் நகர்வுகள் அமையுமே அன்றி ஈழத்தமிழர்களின் நலனில் இந்தியாவுக்கோ சர்வதேசத்துக்கோ உண்மையில் அக்கறை இல்லை என்பது இன்றைய நிலையில் தெளிவாக உணரப்பட வேண்டும்.

இந்த நிலையில் ஈழத்தமிழர்கள், அவர்கள் புகலிடத்தில் வாழ்ந்தாலும் சரி உள்நாட்டில் வாழந்தாலும் சரி சிறீலங்கா சிங்கள அரசு செய்த போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு அவற்றை சர்வதேசங்களுக்கும் இனங்காட்டிக் கொண்டு, அரசியல் மற்றும் அனைத்துச் சாத்தியமான வழிகளிலும் போராடி கொண்டு, புலிகள் அமைப்பையும் மீளப் பலப்படுத்திக் கொண்டே எனி தமக்கான நியாயபூர்வமான தீர்வைத் தேட முற்பட வேண்டும். பலவீனமான நிலையில் ஈழத்தமிழர்கள் நியாயமான தீர்வை ஒரு போதும் எதிர்பார்க்கவும் கூடாது.. பெறவும் முடியாது.

ஆகவே இந்த நெருக்கடியான நிலையில், சர்வதேச அரசுகளின் அணுகுமுறைகளால் அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை எமக்கு சாதமாக்கும் நகர்வுகளைச் செய்ய வேண்டும். சில அரசுகளின் வார்த்தை ஜாலங்களுக்கு தமிழ் மக்கள் மயங்கிவிடக் கூடாது. தமிழ் மக்கள் தாம் முன்னெடுத்துள்ள எந்தப் போராட்டங்களையும் கைவிடக் கூடாது. மாண்ட மாவீரர்களினதும் மக்களினதும் இலட்சியம் வெல்லும் வரை மன உறுதியோடு தொடர்ந்து போராடவும், அரசியல் இராஜதந்திர நகர்வுகளை ஒற்றுமையுடனும் கூட்டுப்பலத்துடனும் மேற்கொள்ளவும் வேண்டும் என்பதே ஈழத்தமிழரின், உலகத்தமிழர்களின் இன்றைய உசிதமான முடிவாக இருக்க முடியும்.

இக்கட்டுரைக்கான முக்கிய செய்தி அடிப்படைகள்:

-----------


China keeping close eye on developments in Sri Lanka


Spokesman from China's foreign ministry, Ma Zhaoxu, has said that China sincerely hopes the Sri Lankan government can take action to resolve ethnic conflict, keep the peace and boost economic growth.

Ma said China has been keeping a close eye on developments in Sri Lanka adding that the Chinese government had offered one million US dollars in humanitarian aid earlier this month and had sent relief supplies, worth three million dollars. (CCTV)

----------

Government to embark on massive devolopment drive

The Government is embarking on a massive post-conflict development drive which will see the rebuilding of areas not only in the North and East but also in the South, Prime Minister Ratnasiri Wickremanayake told the Daily Mirror.

dailymirror.lk

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:52 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க