Wednesday, May 06, 2009

திடீர் திருப்பம்: சோனியா தமிழகம் வந்தார் - கருணாநிதியுடன் பேசினார்.06-05-2009 அன்று திட்டமிட்டபடி சோனியா காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தேர்தல் பொய்ப் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்து கருணாநிதியுடன் சந்திப்பொன்றை நடத்தியதாக தி மு க வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருணாநிதி அவர்களின் உண்ணா நோன்புக்குப் பிறகு ஈழத்தில் சிங்கள ராஜபக்ச அரசு செய்த யுத்த நிறுத்தம் அமுலில் இருப்பதாலும் அங்கு தமிழ் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதாலும் சோனியா - கருணாநிதி அவர்களின் இன்றைய சந்திப்பு மிகவும் நெருக்கமாக இருந்ததாக சன் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு தெரியப்படுத்தியது.

அதுமட்டுமன்றி சோனியா அன்னை தீவுத்திடலில் பிரச்சார மேடையில் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவரை மேலும் குசிப்படுத்த குஸ்பு அவர்களை நடுவராகக் கொண்ட மானாட மயிலாட நிகழ்ச்சி போன்று கலாநிதி மாறனை நடுவராகக் கொண்டு ஜெயா ஆட.. ராமதாஸ் ஆட நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் அதில் மெய் மறந்து சோனியா அன்னையும் சேலை கழன்று விழுவது கூடத் தெரியாமல் அரசியல் குத்தாட்டம் ஆடியதாகவும் கலைஞர் தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பு தெரியப்படுத்தியது.

ஆனால் சர்வதேச செய்தி ஊடகங்களோ சோனியா அம்மையார் இன்று தமிழகத்துக்கு செய்ய இருந்த விஜயத்தை தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போட்டு விட்டது உண்மைதான் என்று தெரிவிக்கின்றன.

ஓஓ.. ஈழத்தில் தமிழன் சாகச் சாக.. யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கிறது என்று பொய் பிரச்சாரம் செய்தது போல.. கலைஞர் குடும்பம்.. இது விடயமாகவும் கதையளந்திட்டாங்க போல.. பழக்க தோசத்தில...!

தி.மு.க, சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் வெளியிட்ட தவறான செய்திகளை இங்கு இட்டதற்கு வருந்துகின்றோம். எப்படி சோனியாவின் வரவு இன்று தமிழகத்தில் நிகழவில்லையோ அப்படியே ஈழத்திலும் இன்னும் போர் ஓயவும் இல்லை கனக ரக ஆயுதங்களின் விமானக் குண்டு வீச்சுக்களின் பாவனையும் ஓயவில்லை.ஈழத்தில் வன்னியில் 05-05-2009 அன்றும் விமானங்கள் மூலமும் பல்குழல் வெடிகணை செலுத்திகள் மூலமும் எரிகுண்டுகள் வீசி சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில் பல தமிழ் மக்கள் எரிந்து உடல்கருகி மாண்டுள்ளனர். ஆனால் தி.மு.க தலைவரோ ஈழத்தில் போர் நிறுத்தம் அமுலில் உள்ளதாக வழமை போன்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.New Sri Lanka heavy weapons row


By Charles Haviland
BBC News, Colombo


The rebels say they is heavy damage from air strikes

Tamil Tiger rebels in the northern Sri Lankan war zone have accused government troops of intensifying heavy weapons attacks, killing dozens every day.

The government dismissed the allegations as propaganda, saying the rebels were lying to gain international sympathy.

Reports from the north-eastern battle cannot be independently verified.

Separately, the government has invited the UN secretary-general to visit camps for displaced people.

Red Cross

The Tamil Tigers allege that the armed forces are using artillery, mortar and aerial attacks on the war zone, where the UN believes some 50,000 civilians are trapped.


http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8035765.stm

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:49 PM

5 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

good sense

Wed May 06, 03:25:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

நக்கல் இது ரெம்ப ஓவர், கிழவருக்கு காச்சலுடன் வயிற்றேட்டமும் ஆரம்பித்து விட்டதாம்.

Thu May 07, 02:25:00 AM GMT+1  
OpenID pukalini செப்பியவை...

பயந்திட்டன்.

Thu May 07, 08:46:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

புலிகளைப் பிடித்து ஒழித்து விட்டால் எல்லாம் சரியாகும்

Thu May 07, 11:32:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

//புலிகளைப் பிடித்து ஒழித்து விட்டால் எல்லாம் சரியாகும்//

புலிகள் மட்டும் அல்ல ஒழியப் போறது. ஒளியுறவையும் ஒழிக்கிறவையும் சேர்ந்துதான். இந்த உலகில் எவர் தான் ஒழியாமல் வாழப் போகிறார்கள். :)

Thu May 07, 11:45:00 AM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க