Wednesday, May 06, 2009

புலிகளின் பெயரில் உலா வந்த எலிகள் தமக்குள் கலகம்.தமிழீழம்... விடுதலைப் போராட்டம்.. போன்ற சொற்களை உச்சரித்து அவை தேவைப்பட்ட மக்களுக்காக உழைத்தார்களோ இல்லையோ அவர் தம் வாழ்க்கையில் பதவிகளை அனுபவித்தவர்கள் அனுபவிப்பவர்கள் பலர்.

அந்த வகையில்.. புலி என்ற பெயரை உச்சரித்துக் கொண்டு.. சொந்த இனத்தை காட்டிக் கொடுத்தற்காக.. சிங்களவன் போட்ட பதவிப் பிச்சைக்கு இனத்தை, இனமானத்தை விற்றுப் பிழைத்துக் கொண்ட எலிகளின் வரிசையும் மிக நீண்டது.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் இப்போ தயா மாஸ்டர் ஏன் தமிழ்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் என்ற ஒரே தகமை கொண்ட ஜோர்ஜ் வரை அது நீள்கிறது.

புலிகளின் குகைக்குள் ஊடுருவி இருந்த இத்தனை எலிகளை தமிழீழத் தேசிய தலைவர் இனங்காணத் தவறி விட்டாரா.. என்ற வினவலும் கூட இந்த நிகழ்வுகளை செய்திகளைக் காண்கின்ற போது, கேட்கின்ற போது எழாமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இந்த எலிகளின் தொல்லைகள் மத்தியிலும் தலைவர் பல ஆயிரக்கணக்கான வீரப் புலிகளை.. மறவர்களை.. இலட்சிய உறுதி மிக்க மக்களை உருவாக்கியதே அதிகம் என்று கூறுவது சிறப்பு.

காலத்துக்குக் காலம் புலிகளின் குகைக்குள் இருந்து இவ்வாறான எலிகள் கிளம்பி வெளியே வருவது தமிழர்களுக்கு சாபக்கேடு என்றாலும்.. எட்டப்பன்.. காக்கவன்னியனுக்கும் இன்னும் பரம்பரைகள் தமிழர் மத்தியில் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன என்பது வருத்தத்திற்குரிய நிதர்சனமாகித் தான் நிற்கிறது.

சிங்களப் பேரினவாதம் பேசும் கொடிய எதிரியிடம் மாட்டி தம் மக்களின் தமிழீழ விடுதலை இலட்சியமும் அதற்கான பயணமும் வேரறக் கூடாது என்று தம்மைத் தாமே மாய்த்து மாண்ட மறவர்கள் சிவக்குமாரனில் இருந்து திலீபன், மில்லர் என்று பல ஆயிரம். ஆனால் அந்த ஆயிரங்கள் மத்தியில் இப்படி ஓரிரு எலிகளும் உருவாகி இருக்கின்றனவே என்பது வேதனைக்குரியனவாகவே இருக்கின்றது.

இன்று எதிரி வீசும் எலிப் பாசாணத்திற்கே அதிலிருக்கும் விசத்தின் தன்மை அறியாமல் இந்த எலிகள் ஒன்றை ஒன்று கடித்துக் குதறுவதைக் காணும் போது நகைப்புத்தான் வருகிறது. இந்த எலிகளே முன்னர் புலிக்குகைக்குள் வாழ்ந்த புலிகள்.. மக்களின் போராளிகள் என்பது வேதனைக்குரியதாக மட்டுமன்றி நம்ப முடியாத.. ஒன்றாவும் கண் முன் விரிந்து கிடக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசிய தலைவரும் உண்மையான இலட்சிய உறுதிமிக்க மக்களும் போராளிகளும் இப்படியான பல எலிகளைக் கண்டுவிட்டனர். ஆனாலும் இப்படியான எலிகளை காலத்துக்குக் காலம் இனங்காண எதிரிகளே அதிகம் எமக்கு உதவியுள்ளனர். அது 1987 க்கும் முன்னராக இருக்கட்டும் இந்திய அமைதிப்படைக் காலமாக இருக்கட்டும் அதற்குப் பின்னராக இருக்கட்டும்.. எதிரிகளே, புலிக்குகைக்குள் வசித்து வந்த இந்த நாசகார எலிகளை புலிக் குகையை விட்டு ஓட்டி வந்து எமக்கு நன்மை செய்துள்ளனர். இன்றேல் உள்ளே இருந்தே இந்த எலிகள் இன்னும் எத்தனை எத்தனை அழிவுகளைச் செய்திருக்குங்களோ..!!! இதற்காக எதிரிகளைப் பாராட்டுதல் தகும்.

இந்த ஆக்கம் தொடர்பான செய்தி:

Karuna throws book at ‘masters’


By Jamila Najmuddin

Minister Vinyagamoorthy Muralitharan who commanded the Tiger cadres in the East said yesterday there was no room for “masters” to join the government as they did not have what it takes to be politicians. Mr. Muralitharan who himself gave up terrorism to enter mainstream politics said there was no way the government could possibly offer seats in parliament to Daya master and George master as they were not frontline LTTE cadres.

“It is not possible to appoint them as members of parliament as they are not hardcore LTTE cadres and especially because they are from Kilinochchi.

People from that area are not strong. Since both the cadres have surrendered, the government is treating them well and after they have been rehabilitated they will be freed and reunited with their families,” Minister Muralitharan said.

Reports that appeared on the internet yesterday speculated on the government discussing the pros and cons of appointing Daya Master to parliament soon.

The reports said the government had been advised that a person who has close connections with the LTTE should be made a member of parliament to help get the northern votes at a future presidential election.

Government advisors had pointed out that by bringing Mr. Muralitharan to parliament, appointing him as a Minister and a vice president of the SLFP and by making Sivanesathurai Chandrakan the Eastern Province Chief Minister was bound to attract more Tamil votes.

They also believe that the appointment of Daya Master to the parliament would act as an incentive for the remaining Tiger cadres to surrender to the armed forces.

If Daya Master is to be made an MP a national list member should resign from the parliament and the government is reported to have held discussions on this matter with several MPs who have entered Parliament through the national list.

It is learnt that anyone resigning his or her seat would be offered various perks and privileges.

dailymirror.lk

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:16 AM

9 மறுமொழி:

Blogger ttpian செப்பியவை...

தலை சுத்துது!
என்ன நடக்குது இங்கே?

Wed May 06, 09:24:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

எதிரிக்கு காட்டிக் கொடுக்கிறதில.. கூட்டிக் கொடுக்கிறதில எவன் பெரிசு என்ற வகைக்கு மக்களின் பிணங்கள் மீது சன நாய் அக, துப்பாக்கி அரசியல் நடக்குது.

இது ஈழத்தமிழருக்குப் பழக்கப்பட்ட ஒன்றுதான். இருந்தாலும்.. பழைய திரைக்கதைகளின் இது புது வரவு..! :(((

Wed May 06, 09:30:00 AM GMT+1  
Anonymous Ramanan செப்பியவை...

Pavam tamilselvan anna

Wed May 06, 09:36:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

சிங்கத்தின் வலையில் சுண்டெலிகள். பொறுத்திருந்து பார்ப்போம் எலிகள் சிங்கத்துக்கு ஆப்படிக்குதா அல்லது சிங்கம் எலிக்கு ஆப்படிக்குதா என்று.

Wed May 06, 12:02:00 PM GMT+1  
Anonymous புதினன் செப்பியவை...

வீரகேசரி இணையம் - தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு தீவிர ஆயுத போராட்டத்தில் பங்கேற்காத தயா மாஸ்டருக்கோ அல்லது ஜோர்ஜ் மாஸ்டருக்கோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக் கூடாது என அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த இருவருமே அரசியலில் பங்கு கொள்ளத் தகுதியற்றவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய போராளிகள் அல்லாத தயா மாஸ்டருக்கோ அல்லது ஜோர்ஜ் மாஸ்டருக்கோ அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களுடன் நெருக்கமுடைய நபர்களை அரசியல் தலைவர்களாக நியமிப்பதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என அரசாங்கம் கருதுவதாகவும், இதன் காரணமாக தயா மாஸ்டரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

தயா மாஸ்டரை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதன் மூலம் எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை சரணடையத் தூண்ட முடியும் என அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாவெறினும் தயா மாஸ்டர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க வேண்டுமானால் ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலக வேண்டும் எனவும், இவ்வாறு பதவி விலகும் நபருக்கு பெருந் தொகையான பணமும் ஏனைய சலுகைகளையும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wed May 06, 12:19:00 PM GMT+1  
Anonymous paris செப்பியவை...

வணக்கம் குண்டுமணி உங்கள் ஆக்கத்தினை எமது தளத்தில் பிரசுரித்துள்ளேன்

Wed May 06, 06:18:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

//வணக்கம் குண்டுமணி உங்கள் ஆக்கத்தினை எமது தளத்தில் பிரசுரித்துள்ளேன்.//

வரவேற்கின்றோம்.

இதர கருத்துப் பகிர்வளித்த வலை உலகச் சொந்தங்களுக்கும் நன்றிகள்.

Wed May 06, 09:40:00 PM GMT+1  
Blogger தங்க முகுந்தன் செப்பியவை...

நீங்கள் எதனை ஆதாரமாகக் கொண்டு எழுதுகிறீர்கள்?

புலி என்ற பெயரை உச்சரித்துக் கொண்டு..

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் இப்போ தயா மாஸ்டர் ஏன் தமிழ்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் என்ற ஒரே தகமை கொண்ட ஜோர்ஜ் வரை அது நீள்கிறது.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் வரலாறு உங்களுக்கத் தெரியுமா?

எழுதுவதை உண்மையாக எழுதுங்கள்!

கலைஞருடைய சில குறிப்புக்களை நீங்கள் பார்வையிடுவது அவசியம்!

Wed May 06, 10:39:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

//நீங்கள் எதனை ஆதாரமாகக் கொண்டு எழுதுகிறீர்கள்?

புலி என்ற பெயரை உச்சரித்துக் கொண்டு..

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் இப்போ தயா மாஸ்டர் ஏன் தமிழ்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் என்ற ஒரே தகமை கொண்ட ஜோர்ஜ் வரை அது நீள்கிறது.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் வரலாறு உங்களுக்கத் தெரியுமா?

எழுதுவதை உண்மையாக எழுதுங்கள்!

கலைஞருடைய சில குறிப்புக்களை நீங்கள் பார்வையிடுவது அவசியம்!//

கலைஞரைப் பற்றியும் தெரியும்.. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தைப் பற்றியும் தெரியும்.

யார் யார் அமிர்தலிங்கத்துக்கு எவ்வளவு கொடுத்தார்கள் அமிர்தலிங்கம் எவருடன் எல்லாம் தொடர்புகளைப் பேணினார்.. எதற்காக தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டு.. இந்திய சிறீலங்கா அரசுகளிடம் சரணடைந்தார் என்பதும் தெரியும்.

இறுதியில் அவர் நம்பிய இந்திய றோவால் கொலை செய்யப்பட்டதும் தெரியும்..!

//Strangely, these details have been deleted in Narayan Swamy’s this Pirabhakaran’s biography. How come? Same author, same theme, same period covered, and same publisher; but between 1994 and 2003, unpalatable details about RAW’s activities in Sri Lankan affairs have vanished like Stalin era erasing of unwanted public records. Few more erasings I found out when reading simultaneously the texts of Tigers of Lanka and this biography Inside an Elusive Mind. The 1994 book names the assassin of TULF leader Amirthalingam as ‘LTTE’s Visu (a right hand of Mahattaya [Mahattaya was a deputy of Prabakaran later discovered to have RAW links])’ in page 222 and as “Suddenly, Visu, one of the gunmen who was earlier based in Madras, whipped out a pistol and shot Amirthalingam through the head. He then shot a stunned Yogeshwaran.” in page 306. The book in review, had erased the name of Amirthalingam’s assassin with a glib, unnamed, ‘three LTTE men’. Why this deletion? Is it to protect the links the assassins of Amirthalingam and Yogeswaran had with the RAW’s manipulators? Why Narayan Swamy had shied away to pry open the RAW’s duplicity of printing the premature obituary of Pirabhakaran in The Hindu newspaper, immediately following the assassinations of Amirthalingam and Yogeswaran?//

மேலும்..

After Chelvanayagam's death in 1976, Amirthalingam became the undisputed leader of the Tamil United Liberation Front (TULF) and was one of the architects of the 1977 TULF General Election manifesto which declared:

"What is the alternative now left to the nation that has lost its rights to its language, rights to its citizenship, rights to its religions and continues day by day to lose its traditional homeland to Sinhalese colonisation? What is the alternative now left to a nation that has lost its opportunities to higher education through "standardisation" and its equality in opportunities in the sphere of employment?"

"What is the alternative to a nation that lies helpless as it is being assaulted, looted and killed by hooligans instigated by the ruling race and by the security forces of the state? Where else is an alternative to the Tamil nation that gropes in the dark for its identity and finds itself driven to the brink of devastation?

"There is only one alternative and that is to proclaim with the stamp of finality and fortitude that we alone shall rule over our land our forefathers ruled. Sinhalese imperialism shall quit our Homeland. The Tamil United Liberation Front regards the general election of 1977 as a means of proclaiming to the Sinhalese Government this resolve of the Tamil nation ...

"The Tamil-speaking representatives who get elected through these votes while being members of the National State Assembly of Ceylon, will also form themselves into the National Assembly of Tamil Eelam which will draft a constitution for the state of Tamil Eelam and establish the independence of Tamil Eelam by bringing that constitution into operation either by peaceful means or by direct action or struggle."


http://www.tamilnation.org/saty/9907amirthalingam.htm

-----------

உண்மைகள் உறங்காது. என்றோ ஒரு நாள் எல்லாம் வெளிக்கும். புலிகளைச் சாட்டி செய்த கொலைகளும்.. அரசியலும்.. வல்லாதிக்க நகர்வுகளும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்தே ஆகும்.

Wed May 06, 11:44:00 PM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க