Friday, May 01, 2009

சைபர் போர் - Cyber War.



ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா சிங்கள அரசு; இந்திய சோனியா காங்கிரஸ், பாகிஸ்தான் மற்றும் சீன ஆதரவுடன் முன்னெடுக்கும் இன அழிப்புப் போர் தமிழர் தாயக நிலப்பரப்பில், கடற்பரப்பில் மற்றும் ஆகாயப்பரப்பில் இருந்து இணைய வலைப் பரப்பிற்கு வியாபித்து விட்டது.



அண்மையில் தமிழ் இணையத்தளங்களான *சங்கதி* *தமிழ்க்கதிர்* *வக்தா* போன்ற இணையத்தளங்கள் சிறீலங்கா அரச சைபர் கிரைம் குழுவினரால் செயலிழப்புச் செய்யப்பட்டன. (பாதிக்கப்பட்ட இத்தளங்கள் தற்போது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறுசீரமைக்கப்பட்டுள்ளன.)

அண்மையில் சிறீலங்காவுக்கு விஜயம் செய்த பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார மந்திரிகள் *தமிழ்நெட்* இணையத்தளச் செய்திகளை ஆதாரம் காட்டி சிறீலங்காச் சிங்களப் படை நடவடிக்கைகளின் கொடூரத்தை மெய்ப்பித்ததை அடுத்து ஆத்திரம் கொண்ட சிறீலங்கா, சீன மற்றும் இந்திய அரசுகள் சார் உளவு அமைப்புக்களுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சிறீலங்காவினதும் இந்திய சோனியா காங்கிரஸினதும் தமிழர் விரோத வெறித்தனமே அவர்களின் அரச பயங்கரவாத நடவடிக்கைகள் அரச சைபர் பயங்கரவாதமாக வியாபிக்கக் காரணமாகி இருக்கிறது. அதுமட்டுமன்றி இணைய வழிதான் இவ்வரசுகள் கூட்டாகப் புரியும் அநேக ஈழத்தமிழர்களின் பாதிப்புப் பற்றிய விபரங்கள் வெளி உலகையும் தமிழகம் உட்பட உலகத்தமிழனச் சொந்தங்களையும் அடைவதுடன் அவர்களை கிளர்ச்சி கொள்ளச் செய்துள்ளது.

இந்தக் கிளர்ச்சிகள் இந்திய தேர்தல் களத்திலும் (குறிப்பாக தமிழகத்தில் சோனியா காங்கிரஸ் மற்றும் திமுக விற்கு தேர்தல் தோல்வி பற்றிய பயத்தை உண்டு பண்ணியுள்ளது.) பலமான தாக்கம் செய்துவரும் நிலையிலேயே இந்த சைபர் போர் தமிழ் இணையத்தளங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சிறீலங்கா வான்படை கண்மூடித்தனமாக, தானே வலிந்து அறிவித்த தாக்குதலற்ற பகுதில் நடத்திய தாக்குதல் ஒன்றின் ஒளிப்பதிவு கூட இணையம் வழி முழு உலகையும் எட்டி இருந்ததுடன் சிறீலங்கா அரசும் இந்திய சோனியா அரசும் கூறி வந்ததற்கு எதிர்மாறாக தாக்குதலற்ற வலயப்பகுதியில் கனரக மற்றும் விமானத்தாக்குதல்கள் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டமையும் அதனால் சிறீலங்கா அரசுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தாம் திட்டமிட்டு செயற்படுத்தும் இந்த சைபர் போரை மறைக்கும் பொருட்டு சிறீலங்காவின் இராணுவ மற்றும் செய்தித்தாபன (லங்காபுவத்) இணையத்தளங்கள் இணையப் புலிகளால் தாக்கிச் சீரழிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா பிரச்சாரம் செய்து வருகிறது. இந்திய ஊடகங்களும் தமிழ் இணையத்தளங்கள் பாதிக்கப்பட்ட செய்திகளை வெளியிடாமல் சிறீலங்கா அரச இராணுவ இணையத்தளங்கள் பாதிக்கப்பட்டதை மட்டும் முன்னிலைப்படுத்தி செய்தி விட்டு வருகின்றன.

சங்கதி மற்றும் தமிழ்கதிர் இணையத்தளங்கள் பாதிக்கப்பட்ட செய்தி இங்கு.

பிபிசி செய்தி நிறுவனமும் இவை தொடர்பில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அது இங்குள்ளது.

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:14 AM

1 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

nicely say. Thanks.

Fri May 01, 05:19:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க