Thursday, June 04, 2009

சீனப் பயங்கரவாதம் - 20 ஆண்டுகள் நிறைவு.

கடும் போக்கு சோசலிசச் சீனாவில் Tiananmen சதுக்கத்தில் 1989 இல் ஜனநாயக அரசியல் மாற்றம் வேண்டி மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றை சீன அரசு, அரச பயங்கரவாதத்தை ஏவி 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொன்று அடக்கியதன் 20ம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.



இன்றும் (2009) கூட Tiananmen சதுக்கத்தில் சீன அரசபயங்கரவாதத்தின் கொடூரக் கொலை வெறிக்குப் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. அதுமட்டுமன்றி வெளிநாட்டுச் செய்தியாளர்களையும் அவ்விடத்தில் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சீனா மீது அமெரிக்க சார்பு மேற்குலக நாடுகள் எப்போதும் கடும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற போதும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க முடியாத வகைக்கு சீனா பதில் நடவடிக்கைகளை எடுத்து தன்னை அக்குற்றச்சாட்டுகளில் இருந்தும் பாதுகாத்து வருகிறது.

அதுமட்டுமன்றி மோசமான மனித உரிமை மீறல்களைச் செய்யும் அரசுகளையும் சீனா தனது ஐநா அதிகாரத்தால் பாதுகாத்து வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

அண்மையில் ஈழத்தில் 20,000 க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை சீன ஆதரவு சிங்களப் பயங்கரவாத அரசு ஒரே நாளில் கொன்று குவித்ததை சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு மறைத்ததும் அன்றி சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்காக ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தோற்கடிக்கவும் இவ்விரண்டு நாடுகளும் பெரும் பாடுபட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா மீதும் அதன் படைகள் காஷ்மீரில் மனித உரிமைகளை மோசமாக மீறி வருவதான குற்றச்சாட்டு பலமாக இருக்கின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மேலதிக தகவல்களும் காணொளிகளும்.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:36 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க