Wednesday, July 22, 2009

சாத்திரத்தை உடைத்ததா சூரிய கிரகணம்..?!



இதோ சூரிய கிரகணம் வருகிறது.. கூடவே பூகம்பம் வருகிறது.. சுனாமி வருகிறது.. கூடவே கெட்ட பலனும் வருகிறது என்று ஆளாளுக்கு சாத்திரக் கதையளந்து கொண்டிருந்தார்கள்.. நேற்று வரை.

இன்றோ..(22 யூலை 2009) அது 5 நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டது. சாத்திரங்கள் சொன்ன எதுவும் நடந்தேறியதாக இதுவரை பதிவுகள் இல்லை... இருந்தும்... சாத்திரங்கள் ஒழிந்தனவா என்றால் இல்லை என்பதே பதில்..!

இதோ இவர்கள் அறிவியலின் எச்சரிக்கையையும் தாண்டி.. வெற்றுக்கண்ணால் சூரிய கிரகணத்தைப் பார்த்துக் கொண்டு.. சூரிய கிரகணத்தின் பாதிப்பில் இருந்து தம்மைப் பாதுகாக்க இந்தியா வாரனாசியில் உள்ள கங்கையில் புனித நீராடுகின்றார்களாம்..!

இவர்களை என்னென்பது..??! இப்படியான மக்கள் உள்ளவரை.. இந்த உலகில்.. பொய்களும் பித்தலாட்டகளும் தொடர்ந்து கொண்டே இருக்குமா இல்லையா..??! அறிவியல்.. எங்கே வளர்கிறது.. இவர்களைப் பொறுத்தவரை..?!

படம்: news.bbc.co.uk

மேலும் படங்களுக்கு இங்கு அழுத்தவும்.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 7:06 AM

2 மறுமொழி:

Blogger நிலாமதி செப்பியவை...

விஞ்ஞானத்தை விளங்க தெரியாத வர்கள் இருக்கும் வரை . சாத்திரத்தையும் மூடநம்பிகைகளையும் நம்புபவர்கள் இருக்கும் வரை இக்கட்டுக்கதைகள் வழி வந்து கொண்டு தான் இருக்கும் .இருக்கும்.

Wed Jul 22, 07:16:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

நன்றி நிலாமதி தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு.

Wed Jul 22, 09:42:00 PM GMT+1  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க