Thursday, July 23, 2009

விடுதலைப்புலிகளின் புதிய அரசியற் தலைமையும் மக்களும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் Executive Committee கடந்த செவ்வாய் வெளியிட்ட இருமொழி மூல அறிக்கை ஒன்றில் தமிழீழ விடுதலைக்கான தமது செயற்பாடுகள் எதிர்காலத்தில் செல்வராசா பத்மநாதனால் முன்னெடுக்கப்படும் என்றும் தமது தலைமைச் செயலம் உட்பட பல பிரிவுகள் மீள ஒழுங்கமைப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவுகளை சிறீலங்கா இராணுவத்தினுடனான மோதலை முறியடித்து வெளியேறிய போராளிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் ஆதரவுடன் முன்மொழிவதாகவும் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் பொதுவாக வரவேற்கப்படும் விடயமாக இருக்கின்றது.

தமிழீழ விடுதலைக்கு தேசிய தலைவர் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் வழங்கிய உறுதிமிகு பங்களிப்புப் போன்று எவரும் வழங்கியதில்லை. கிட்டத்தட்ட தமிழீழத்தை அவர்கள் உருவாக்கியே விட்டிருந்தனர். அந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது மக்களுக்கு அவர்கள் தமிழீழத்தை மீட்டுத் தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போதும் இருக்கிறது.

ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் எதிர்கால செயற்பாடுகள் தேசிய தலைவரின் காலத்தில் இருந்தது போன்று உறுதிமிக்கதாக அமையுமா என்பது இன்று மக்களுக்குள் இருக்கும் சந்தேகங்களில் ஒன்று. அதனை தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர்காலத்தில் ஆற்றப் போகும் செயற்பாடுகளே தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் விரும்பியோ விரும்பாமலோ எழுந்துவிட்டுள்ளது.

தமிழ் மக்கள் தமது கொள்கையை அடைய இலட்சியப்பற்றுள்ள ஒரு தலைமையையே அதிகம் விரும்புகின்றனர் என்பதை ஏலவே தேசிய தலைவரின் தலைமைத்துவத்தை ஏக பிரதிநிதிகள் நிலைக்கு அங்கீகரித்ததிருந்ததன் மூலம் வெளிப்படுத்தி விட்டனர்.//செ.பத்மநாதனின் மேற்படி விடுதலைப்புலிகளின் அறிக்கை வெளிவந்ததன் பின்னான நேர்காணல். செவ்வி கண்டது - சனல் 4 பிரித்தானியா. இணைப்பு உதவி: வேல்தர்மா.//

தமிழீழ விடுதலைப்புலிகள் யார்.. தமிழ் மக்களின் பிள்ளைகள் தானே. அதன் பின் ஏன் அவர்கள் மீது அதுவும் இன விடுதலைக்காக இத்தனை தியாகங்களைச் செய்த அந்த அமைப்பின் மீது இப்படியொரு சந்தேகம். இவ்வாறு சந்தேகத்தை வெளிப்படுத்துவது நியாயமா என்பது போன்ற கேள்விகள் கூட முன்வைக்கப்படலாம்.

நாம் மேற்படி காரணங்களைக் காட்டி இன்றைய நிலையில் இப்படி சந்தேகங்களை முன் வைக்க மறந்தாலும் எமது போராட்டத்தை.. எமது போராளிகளின் கனவை.. மாவீரர்களின், மாண்ட மக்களின் கனவை சிதறடிக்க நினைக்கும் எதிரிகளும் அந்நிய சக்திகளும் எழுப்பாமல், குழப்பாமல் இருக்கமாட்டார்கள்.

தேசிய தலைவருக்கு ஒத்து இந்தப் புதிய தலைமையும் தேசிய தலைவரின் வழியில் அவரின் நிழல் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட்டு அதே உறுதிப்பாட்டுடன் அல்லது அதற்கும் மேலான உறுதிப்பாட்டுடன் உலகம் அங்கீகரிக்கும் வகையிலான போராட்ட வடிவங்களில் இராஜதந்திர வழிகளில் தமிழீழ விடிவுக்கான தாயக விடுதலைப் போராட்டத்தை, சமூக விடுதலைக்கான அம்சங்களை மக்களில் பெரும்பாலானோரின் மன நிலையை அறிந்து முன்னெடுக்க வேண்டும் என்பதே அநேக மக்களின் எதிர்பார்ப்பு.

அதை தேசிய தலைவருக்காகவாவது நிறைவேற்ற எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும். போராளிகள் மக்கள் என்ற வேறுபாடுகள் களையப்பட்டு மக்களே போராளிகள் என்ற நிலையை மீண்டும் இந்தப் புதிய தலைமை உருவாக்க வேண்டும். அதுவே தேசிய தலைவருக்கும் மாவீரர்களுக்கும் மாண்டு போன.. துன்பப்படும் மக்களுக்கும் அளிக்கும் மரியாதையாக இருக்கும்.

அதுமட்டுமன்றி சிறீலங்காவின் பிடியில் சிக்கித் தவிக்கும் போராளிகளை மக்களை மீட்கும் இராஜதந்திர நகர்வுகளையும் இந்தத் தலைமை விரைந்து எடுக்க மக்கள் இவர்களுக்கு பூரண ஆதரவளிக்க முன் வரவேண்டும். அதற்கு இந்தத் தலைமை தமது செயற்பாடுகளை மக்களுக்கு சந்தேகங்களை விதைக்கும் வகைக்குச் செய்யாமல்; வெளிப்படையாகச் செய்ய வேண்டிய, சொல்ல வேண்டிய விடயங்களில் மக்களோடு உடனுக்குடன் கருத்துப் பகிர்ந்து கொள்வதும் எதிரிகளின், நாசகாரிகளின் மற்றும் அந்நிய சக்திகளின் நகர்வுகளை சதிகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்தி தெளிவுபடுத்துவதும் இன்றைய நிலையில் அவசியமாகும்.

இவற்றை எல்லாம் கருத்தில் எடுத்து இந்தப் புதிய தலைமையில் செயற்பாடுகள் அமையின் மக்களும் அவர்களின் பின்னால் அணிதிரள்வது காலத்தின் கட்டாயமாக இருக்கும். மக்கள் நிச்சயம் அதைச் செய்வார்கள். எல்லோரும் உடனடியான அணிதிரண்டு வராவிடினும்.. பெரும்பாலான மக்கள் இன்னும் தேசிய தலைவரின் மாவீரர்களின் போராளிகளின் துன்பப்படும் மக்களின் இலட்சியம் வெல்லப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கின்றனர்.

இருந்தாலும் உலகமெங்கும் வாழும் எல்லாத் தமிழ் மக்களையும் தமிழீழம்.. தமிழ் தேசியம் என்ற ஒரே கருத்தியலின் கீழ் ஒன்றிணைக்கப் பாடுபடுவதும் அவசியம். இதை விடுதலைப்புலிகள் இந்தப் புதிய தலைமையும் மக்களும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.செய்தி ஆதாரம்:

படம்: யாழ்.இணையம்

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:20 AM

2 மறுமொழி:

Blogger kuruvikal செப்பியவை...

யாழ் திலீபன் என்ற பதிவரின் கருத்து சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசின் அவர்களின் அரிவருடிகளின் பிரச்சாரங்களைத் தாங்கி வரும் ஒரு வலைப்பூவின் இணைப்பாக வந்ததால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய எந்த ஆதார அடிப்படைகளும் இல்லை என்பதால் அக்கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து பிரசுரிக்க மறுக்கப்பட்டமைக்கு வருந்துகின்றோம்.

குருவிகள். (வலைப்பூ பதிவர்.)

Thu Jul 23, 05:58:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

kuruvikku vanakkam,yaarl thileepan enpavar oru pulluruvi.avarin thalaththirkku orumurai senren.singakkodiyudan varaverkkum avar,"methaku thesiyathalaivar makintha"enru kurippiduv-raavan rajhkumar-jaffnaathilirunthe avar oru singala thanthaikku piranthirukka koodumena ninaikkiren.

Mon Aug 17, 01:00:00 AM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க