Monday, March 08, 2010

ஆப்கானிஸ்தானில் சண்டையிடும் பிரிட்டனின் சிறார் படையணி.



//16,17 வயதில் பிரிட்டன் இராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டு ஆப்கானிஸ்தானின் தீவிர சண்டைக்களத்தில் 18 ,19 வயதானதும் பலியிடப்பட்ட பிரிட்டிஷ் சிறார்கள்.//

ஆப்கானிஸ்தானில் அண்மையில் நடந்த மோதலில் பிரிட்டன் இராணுவத்தைச் சேர்ந்த 18 வயதான ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

உலகெங்கும் சிறுவர் படையணி தொடர்பில் கண்டனங்களைக் கொட்டி தலையீடுகளை மேற்கொண்டு வரும் பிரிட்டன் இன்றைய நாளில் 18 வயதான ஒருவரை எத்தனை வயதில் பயிற்சிக்கு எடுத்து எத்தனை மாதங்கள் பயிற்சி அளித்து அதிதீவிர சண்டைக் களத்திற்கு அனுப்பியது என்பது இப்போ.. புரியாத புதிராக இருக்கிறது.

18 வயதிற்கும் குறைந்தோரை இராணுவத்தில் இணைப்பதை.. சிறுவர் படையணியாக, போராளிகளாக இனங்கண்டு பிரச்சாரம் செய்து வரும் மேற்குலம்.. இந்த பிரிட்டிஷ் சிறுவர்கள் போரில் பலியிடப்பட்டு வருவதை பற்றி எதுவும் பேசாது ஊமையாக இருந்து வருகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இது தொடர்பில் மெளனம் காத்து வருகின்றன.

சிறுவர் போராளிகளைப் பயன்படுத்துவதாகக் கூறி சில போராளி அமைப்புக்களை பயங்கரவாதப் பட்டியலில் கூட பிரிட்டன் போட்டுள்ளது. அந்த அடிப்படையில் நோக்கின் 18 வயதிற்குள் உள்ள ஒருவரை ( 16 வயதில் மேற்படி வீரர்களில் ஒருவர் இராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.) இராணுவத்துள் உள்வாங்கி பயிற்சி அளித்து அவரை போதிய அனுபவமின்றி தீவிர சண்டைக்களத்திற்கு அனுப்பி 18 வயதானதும் பலியிடுவதை என்னென்பது. இதுவும் ஒருவகை பயங்கரவாதமே ஆகும். அதுவும் அரச பயங்கரவாதமாகும்.

----

Both teenagers joined up in 2008

Rifleman Jonathon Allott, 19, was killed in a roadside explosion on Friday, followed by the death of 18-year-old Rifleman Liam Maughan from gunshot wounds. - bbc.co.uk (08-03-2010)

மேலதிக தொடுப்பு-1

தொடுப்பு-2

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:08 PM

2 மறுமொழி:

Blogger பதி செப்பியவை...

மேற்குலத்தினரைப் பொருத்தவரை உபதேசம் என்றுமே ஊருக்குத் தான்.

தனது உரிமைகளுக்கு போராடுபவர்கள் என்று சற்றே கூடுதல் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் உபதேசம் செய்வதி.

Mon Mar 08, 12:54:00 PM GMT  
Anonymous Anonymous செப்பியவை...

Army soldiers

Too young to fight? More young people are joining the Army
By the BBC's Greg Barrow

Britain has been criticised in a new report which identifies countries that routinely recruit child soldiers.

The Child Soldiers Global Report, released on Tuesday, identifies the UK Government as the only country in Europe that still recruits 16-year-olds, and routinely sends soldiers as young as 17 into battle.

The report goes on to name and shame countries which it says are guilty of recruiting child soldiers under the age of 18.
...

Tuesday, 12 June, 2001, 00:45 GMT 01:45 UK - UK 'shamed' over teenage soldiers

http://news.bbc.co.uk/1/hi/world/europe/1383998.stm

Mon Mar 08, 02:22:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க