Wednesday, May 12, 2010

பிரிட்டனின் புதிய அரசியல் பாதை- நமக்கும் நல்ல பாடம்



கடந்த மே 6 இல் நடந்த தேர்தலில் பிரிட்டிஷ் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு அமைய எந்தக் கட்சிக்கும் மக்கள் தம்மை ஆள பெரும்பான்மை வழங்க மறுத்துவிட்டதால் புதிய அரசியல் பாதை ஒன்றை எதிர் நிலையில் நின்ற கட்சிகளான பழமைவாதக் கட்சியும் லிபரல் ஜனநாயகக் கட்சியும் நாட்டின் பொதுநன்மை கருதி உருவாக்கி அதன் கீழ் பிரிட்டனை ஆளவும் முன்னேற்றவும் முடிவு செய்துள்ளன.

இதன் கீழ் பழமைவாதக் கட்சியின் தலைவரும் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழக அரசியல் பட்டதாரியுமான டேவிட் கமரோன் (வயது 43) பிரதமராகவும் கேம்பிரிஷ் பல்கலைக்கழக பட்டதாரியான நிக் கிளக் (வயது 43) துணைப் பிரதமராகவும் பெறுப்பேற்று நாட்டை சிநேகிதபூர்வமான முறையில் ஆளவும் அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர்.

உலக காலனித்துவத்தில் கொடிக்கட்டிப் பறந்த பிரிட்டனின் தலைவர்களே நாட்டுக்காக இணைகின்ற போது உலகில் ஒரு குட்டி இனமான ஈழத்தமிழினத்தின் அரசியல் தலைமைகள் மக்களின் நலன் கருதி தேசத்தின் நலன் கருதிக் கூட இணைய முடியாமல் பதினாறுக்கும் மேற்பட்ட கட்சிகளாக பிரிந்து நிற்கும் நிலை காணும் போது.. அவர்களின் அறியாமையை கண்டு மனம் வேதனையே படுகிறது.

எமது மக்களிடையேயும் இப்படியான சிநேகித பூர்வ தலைவர்கள் உருவாகி மக்களின் தேசத்தின் பணிக்காக கரங்கோர்க்கமாட்டார்களா என்று ஏங்கவே முடிகிறது.

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் தவறுகளை மறந்து எல்லோரும் ஒருங்கிணைந்து பணியாற்ற அழைத்த அந்த அழைப்பை இதனோடு இணைத்துப் பார்க்கின்ற போது அந்தத் தலைவரின் அன்றைய வேண்டுகோளை தமிழ் அரசியல் தலைவர்கள் என்போர் ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று எமது இனமும் மரியாதைக்குரிய நிலையில் சொந்த நிலத்தில் வாழ முடிந்திருக்கலாம். எனியாவது சிந்திப்பார்களா..??! அல்லது ஜனநாயகச் சாக்கடையில் மிதக்கும் இந்தியாவின் சதியில் சிக்கி.. அதன் அரசியல் நாகரிமற்ற கட்சி முறைக்களை பின்பற்றி சீரழிவார்களா..??!

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:24 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க