Wednesday, July 14, 2010

சில அற்புத கண்டுபிடிப்புக்கள்


கண்டுபிடிப்பு 1.

ஒவ்வொரு நாளும் சூரியன் வெளிச்சம் தருகிறது.. அதற்காக ஏன் யாரும் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில்லை..!


கண்டுபிடிப்பு 2.


நான் காரில பள்ளிக்கூடம் போகலாம்.. ஆனால் பள்ளிக்கூடம் காரில போகுமா..??! ஏன் இந்த பாரபட்சம்.


கண்டுபிடிப்பு 3.


உலோக குத்தியை வட்டமா வெட்டினா நாணயம்.. நாணயத்தை இரண்டா வெட்டினா அதை ஏன் ஏத்துக்கிறாங்க இல்ல...!

கண்டுபிடிப்பு 4.

பலியாட்டையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க.. மாப்பிள்ளையையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க... இருந்தும் மக்கு மாப்பிள்ளைங்க இதுக்கு ஏன் ஒத்துக்கிறாங்க.

கண்டுபிடிப்பு 5.

பொண்ணுக்கு நகை பிடிக்கும் நகைக்கு பொண்ணைப் பிடிக்குமா என்று ஏன் பார்க்கிறதில்லை. இது ரெம்ப ரெம்ப அநியாயம்.

கண்டுபிடிப்பு 6.


காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. அப்போ கோழிக்கு தன் குஞ்சு என்ன பித்தளைக் குஞ்சா..?!


கண்டுபிடிப்பு 7


சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. அப்போ சுடிதார் போடும் பெண்ணுக்கு இன்னொரு வாசமா இருக்கும்..!

கண்டுபிடிப்பு 8


பெண்களின் கூந்தலில் ஈர் இருக்கலாம்.. ஆனால் ஈரம் இருக்காது. ஏன்னா அவங்க தானே றையர் பாவிக்கிறாங்களே.

கண்டுபிடிப்பு 9.


காலால விளையாடிற பந்தை கால்பந்து என்றாங்க.. பிறகேன் அதை தலையால விளையாடுறாங்க.

கண்டுபிடிப்பு 10

பெண்கள புத்திசாலிங்கண்ணு சொல்லுறாங்க.. அப்ப புத்தியில்லாத பெண்களை எப்படிச் சொல்வாங்க..!

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:32 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க