Thursday, February 10, 2011

கேர்ள் பிரண்டுண்ணா எப்படி இருக்கனும்..??!



கேர்ள் பிரண்ட் என்றால்.. சும்மா வாங்கிக் கொடுக்கிறதை திண்டு கொண்டு.. தான் நினைக்கிற நேரத்துக்கு மட்டும் கோல் பண்ணிக் கொண்டு.. ஏதோ கடமைக்கு நாலு கதை கதைச்சுக் கொண்டு.. கவிதை கதை எழுதிக் கொண்டு.. வாங்கிக் கொடுக்கிற கிப்டை தடவிக் கொண்டு.. இருக்கிறதெல்லாம்.. செம போர். :lol:

கேர்ள் பிரண்ட் என்றால் நம்மள விட புத்திசாலியா.. திறமைசாலியான.. செயல்வீரியா.. வழிகாட்டியா.. நிரந்தரமான நித்தியமான அன்பு காட்டிறவாவா இருக்கனும்.

குழந்தைகளை படிப்பிக்கிறதுக்கு ரீச்சரா ஒரு கேர்ள் பிரண்டை எதிர்பார்க்கக் கூடாது. அதில நீங்க சிலர் தப்புப் பண்ணுறீங்க என்று நினைக்கிறன். குழந்தைகளுக்கு தாயாகவும்.. ரீச்சராகவும் அவா இருக்கிறான்னா.. நீங்கள் தந்தையாகவும் அந்த ரீச்சருக்கு associate (not assistant)ஆகவும் இருக்கனும்.

குழந்தைகளோட நாங்களும் சமனா நடந்துக்க சந்தர்ப்பம் அளிக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். குழந்தைகளை காட்டி அட்வான்ரேஜ் எடுத்துக்கிற கேர்ள் பிரண்ட் வேணாம்.

கிச்சன் டிப்பாட்மெண்டை நீங்களே குத்தகைக்கு எடுத்து தாஜா பண்ண கூஜா தூக்கிறது கேவலம். அதே நேரம்.. தேவைக்கு அவசியத்துக்கு ஏற்ப இருவரில் எவரும் அதைப் பொறுப்பெடுத்துக் கொள்ளக் கூடிய சூழலை நிறுவனும். அதை விட்டிட்டு மனிசி குசினில சமைக்க.. காலை நீட்டி நெளிவு முறிக்கிறது எல்லாம் ஒரு ஆம்பிளைக்கு அழகல்ல. அதேபோல.. மனிசி சீரியல் பார்க்க மனிசன் கிச்சனில நிற்கிறதும்.. அழகல்ல.

ஒரு நாளைக்கு ஒருவர் அல்லது எல்லா நாளும் இருவரும் என்று சமைச்சுப் பார்க்கிறதுக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணும். அவாக்கு பிடிச்சதை அவா செய்யனும்.. எனக்கு பிடிச்சதை நான் செய்யனும்.. இருவரும் தாங்கள் தங்கள் ரேஸ்ருக்கு சமைச்சதை பரிமாறனும்.. சுவைக்கனும். அப்படி ஒரு கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

இந்த தாஜா.. கூஜா வேலைகள் வேண்டாம். ஒரு செயலை பிடிச்சா செய்யனும் பிடிக்கல்லைன்னா விட்டிடனும். வற்புறுத்தாத கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாம படிக்கிறதுக்கு நம்ம கோம் வேர்க்கில உதவக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். நாங்க படிக்கிறதை விடுப்புப் பார்த்துக்கிட்டு தனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருக்கிறது வேணாம்.

நாங்க உழைக்கிறதில சாப்பிட காரோட நினைக்கிறது வேணாம். தன் உழைப்பையும் சேமிப்பை கடந்து.. நம்மோடு எதிர்பார்ப்பில்லாம இயல்பா பங்கிட்டு என்ஜோய் பண்ணுற.. தன் உழைப்பில நம்ம ரேஞ்சுக்கு அல்லது அதுக்கு மேல கார் வாங்கி ஓடிக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். அதேபோல நம்ம பங்களிப்பை ஈகோ இன்றி இயல்பாக அங்கீகரித்து அதிலும் கூட இருந்து என்ஜோய் பண்ணக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாங்க கொலிடே போகக் கூப்பிட பெட்டியை தூக்கிற கேர்ள் வேணாம். எங்களுக்குப் போட்டியா தானும் தன்ர ரசனைக்கு ஏற்ப எங்களை கொலிடே கூட்டிக் கொண்டு போகக் கூடிய தற்சிந்தனை உள்ள கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாங்க தப்புப் பண்ணினா தட்டிக் கேட்டு வழிகாட்டும் அதேவேளை அவா தப்புப் பண்ணினா நாங்க சொல்லுறதையும் கேட்டு எவருமே மனம் நோகாம வாழ நினைக்கும் கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

ஒரு வீட்டில வாழ்ந்தாலும்.. தனக்கென்று தனி அழகோட ஒரு பகுதி வீட்டை வைச்சிருக்கும் கேர்ள் பிரண்ட் தான் வேணும். அதேபோல எங்களையும் எங்கட பங்கிற்கு எங்க ரேஸ்டுக்கு வீட்டில ஒரு பகுதியை வைச்சிருக்க அனுமதிக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

சொல்லுறதுக்கு எல்லாம் ஆமாப் போடும் கேர்ள் வேணாம். தனக்குள் உதிக்கிற புதிய புதிய ஐடியாக்களை சேர்த்து புதிய கண்டிபிடிப்புக்கு சுவாரசியத்துக்கு இட்டுப் போகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நமக்கென்று ஆன பிறகு.. பிரண்ட்ஸ் கூட பிரண்ட்ஸா (அதுக்கு மேல போகக் கூடாது) பழகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். பிரண்ட்ஸ் கூட ஒப்பிட்டு நோக்கி அவன் உயர்ந்தவன் இவன் அப்படி.. இப்படி என்று சொல்லிக் கொண்டிருக்கிற.. மட்டம் தட்டிற கேர்ள் வேணாம்.

நம்மள சிறிய முயற்சிலும் ஊக்குவிக்கிற உதவி செய்யுற தானும் பங்கெடுக்கிற கேர்ள் தான் வேணும். சந்தர்ப்பத்தை கண்டு பயந்து ஓடுற ஒளியுற.. உதவி செய்திட்டு சொல்லிக் கொண்டு திரியுற கேர்ள் பிரண்ட் வேணாம்.

தனக்குப் பிடிச்ச உடையில நாகரிகமாக இருக்கனும். அப்பப்ப எது பிடிக்கும் என்று கேட்டும் எங்களைக் கொண்டும் வாங்கி அதை அணிஞ்சு நிஜமாவே மகிழ்ந்தும் காட்டனும்.

தானும் சோம்பேறியா இல்லாமல்.. எங்களையும் சோம்பேறியாக்காத சிலிமான.. உடம்பை சிக்கென்று வைச்சிருக்கிற.. எங்களையும் வைச்சிருக்க தூண்டிற.. ஜிம்.. ஜாக்கிங்.. யோகா என்று செய்து.. இருக்கக் கூடிய.. அழகான கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

படிப்பு.. வேலை.. இதுக்கு மேலதிகமாக... ஏதேனும் சுவாரசியமா மாறுதலா மகிழ்ச்சிக்குரியதா.. செய்யக் கூடியவாவா இருக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

மொத்தத்தில.. கேர்ள் பிரண்டா.. ஒரு நல்ல மாற்றங்களை விரும்பக் கூடிய.. புத்திசாலியான.. தற்சிந்தனை.. எப்போதும் மகிழ்ச்சியாக நட்போட அன்போட தன் சுய இயல்போட இருக்கக் கூடிய மனிதப் பெண் தான் வேணும்.

இப்படியே ஒவ்வொரு ஆணுக்குள்ளும் கேர்ள் பிரண்ட் பற்றிய நிறைய சின்னச் சின்ன ஆசைகள்... சொல்லிக் கொண்டு போகலாம். சொல்லி என்ன பயன். அப்படி ஒரு கேர்ள் கிடைக்கிறது.. ரெம்ப கஸ்டம். அதனால.. நாங்களே எங்க விருப்பத்துக்கு தனிச்சு வாழ்ந்திட வேண்டியது தாப்பா. அதுதான் நல்லது நம்மளப் போல பசங்களுக்கு.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:28 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க